குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மிதுனம்

 


மிதுன ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • விரைய ஸ்தானத்திற்கு வரப்போகும் குருவால்  சில சோதனைகள் நடந்தாலும் நன்மைகளும் அதிகம் நடைபெறும்.

  • வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும், புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

  • குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றி கொள்ள வேண்டும் 

  • விரைய ஸ்தானத்திற்கு வரப்போகும் குரு, இந்த அமைப்பில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 4,6,8ம் இடங்களை பார்க்கறார். 

  • இதனால் முன்னேற்றத் தடைகள் நீங்கும், மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அதேசமயம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

  • அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். 

  • எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்று கொள்ளங்கள். நல்லதே நடக்கும்.

  • பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது 

  • வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். 

  • கடன் தருவது, பெறுவதை மிக கவனம் தேவை. சீனிமாத்துறையினர் வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள். 

  • பெண்கள் சமையலறையில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம். 

  • அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். 

  • தொழிலமைப்பில் லாபம் சீராகும்,பணிபுரியும் யாரிடமும் வீண் தகராறு வேண்டாம்.

  • தொழிலில், வியாபாரம் தொய்வின்றி செல்லும், பெயரும், புகழும் கிடைக்கும் 

  • அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே நல்லது. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு.

  • அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்கு  சீரான நன்மைகளை கிடைக்கும்.

  • முதலிட்டில் கவனம் தேவை, உழைப்பு கான பலன் உடனடியாக கிடைக்காது 

  • தூக்கம் பாதிக்கும், உடல் நலனில் அக்கரை தேவை 

  • மாணவர்கள் நன்கு படித்து , அவர்களின் மதிப்பெண் உயரும்.

  • கலைஞர்கள், சிறிய பயணத்தில்  கவனம் தேவை .

  • காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம்.

மிருகசீரிஷம்  3,4 ம் பாதங்கள்

மிருகசீரிஷம் 3,4 ம் பாதங்களில்  பிறந்த   மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

  • சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும்.

  • பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். 

  • விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வார்கள். 

  • உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவார்கள்.

  • உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பார்கள்.
  

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த   மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

  • தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.

  • பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

  • எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

  • மனதிருப்தியுடன் செயலாற்றுவார்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். 

  • கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
  •   

புனர்பூசம்  1,2,3 ம் பாதங்கள்

புனர்பூசம்  1,2,3 ம் பாதங்களில்  பிறந்த   மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • இந்த குரு பெயர்ச்சியால் பாராட்டு கிடைக்கும். ஆனாலும் மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். 

  • ஆன்மீக நாட்டமும், மன தைரியமும்  உற்சாகத்தைக் கொடுக்கும்.

  • தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவார்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். 

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.

  • புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

  • குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். 


பரிகாரம் 

புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மதுரை மீனாட்சி,  விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.


Full Video 



குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - ரிஷபம்

ரிஷப ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • தற்போதைய பெயர்ச்சியில் குருவானவர், சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்கு அதாவது ஜன்ம ராசியான ரிஷபத்திற்கு வருகிறார்.

  • 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சோதனை மிகுந்த காலம், மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும், ஆனாலும் பயப்பட தேவை இல்லை . குருவின் விசேஷ  பார்வையான 5,7,9ம் வீடுகளின் மீது விழுகிறது.

  • எனவே ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார், வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும்,எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், ஊதிய உயர்வும் உண்டு.

  • மேலும் குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும்.

  • குருவின் விசேஷ  பார்வையால், பூர்வ புண்ணிய பலம் அதிகரிக்கும்,பூர்வீக சொத்துகள் சேரும்

  • தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும், அதேசமயம் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது, வீண் ரோஷம் தவிர்ப்பது மிக அவசியம்

  • அலுவலகத்தில் உங்கள் திறமையால் முன்னேற்றங்களைக் காணலாம்

  • உயரதிகாரிகளிடம் பேசும்போது தர்க்கத்தைவிட தன்னடக்கமாக இருப்பது  நல்லது

  • பிறர் குறையை பெரிதுபடுத்து வேண்டாம், இந்த சமயத்தில் வேண்டாத கோபத்தால்  பெரும் சங்கடத்தை உருவாக்கிவிடலாம்

  • புதிய முதலீடுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது , அயல்நாட்டு ஒப்பந்தத்தில் அவசரம் வேண்டாம், வரவை சேமிக்கப் பழகுங்கள்

  • சுபகாரியங்களில் பெற்றோர், பெரியோர் ஆலோசனைகலைக் கேளுங்கள்

  • பிறமொழி நபர்களிடம் கவனமா பழகுங்கள், தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்

  • பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும், கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள்

  • அரசியலில் இருப்போர் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது

  • அரசாங்க ஊழியர்கள் வளர்ச்சி அதிகரிக்கும்

  • மாணவர்கள் படிப்பில் கவனச் சிதறலைத் தவிருங்கள்

  • சினிமா, கலைத்துறையினர் ரகசியங்களைப் பொது இடத்தில் பகிர வேண்டாம்

  • கழுத்து,மூட்டு, ரத்த அழுத்த மாற்றம், அலர்ஜி உபாதைகள் வரலாம்

கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள்

கார்த்திகை 2,3,4 ம் பாதங்களில்  பிறந்த  ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். 

  • உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவார்கள். 

  • உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து  சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். சக ஊழியர்களால் நன்மை அடைவார்கள்.  

  • பொதுவாக படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். 

  • வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். 

  • வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.


ரோகிணி 

ரோகிணி  நட்சத்திரத்தில்   பிறந்த  ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். 

  • உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவார்கள். 

  • உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து  சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். சக ஊழியர்களால் நன்மை அடைவார்கள்.  

  • பொதுவாக படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். 

  • வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். 

  • வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.



மிருகசீரிஷம் - 1,2 பாதங்கள்

மிருகசீரிஷம் - 1,2 பாதங்கள் பாதங்களில்  பிறந்த ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. 

  • குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 

  • வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். கணவன். மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகளுக்கு  தேவையானவற்றை மகிழ்ச்சி உடன் செய்வார்கள். 

  • சந்தோஷமான காரியங்கள் நடக்கும். ஆனாலும் மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். 

  • உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். 

பரிகாரம் 

அருகில் உள்ள  அம்மன் கோவில் உள்ள அம்மனுக்கு மல்லிகை பூ சாரம் அல்லது  மாலையை அணிவித்து வணங்கி வர மன கவலை நீங்கும்


Full Video 



குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மேஷம்



மேஷ ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், மேஷம் ராசிக்கு இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்திற்குச் செல்கிறார், இதனால்  மேஷ ராசிக்காரர்களின் வாக்கின், செல்வாக்கு அதிகரிக்கும், 

  • குருவின் விசேஷப் பார்வைகள்  மேஷ ராசிக்கு முறையே 6, 8, 10ம் இடங்களில் பதிகின்றன, இதனால் எதிரிகள் பயம் நீங்கும், ஆயுள் ஆரோக்யம் சீராகும், பணி, தொழிலமைப்பில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாகும், 

  • அலுவலகங்களில்  மேஷ ராசிக்காரர்களின் பெருமை பேசப்படும், மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும், பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும், பேச்சுக்கு மதிப்பு கூடும், 

  • ஜன்ம குருவில் இருந்து விடுதலை கிடைக்கும்  கடந்த காலத்தில் நடந்த பிரச்னைகள் தீரும் ,

  • வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும், மனம்  நிம்மதி அடையும் 

  • வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும், 

  • பணவரவு சீராகும், பழைய கடன்கள் சுலபமாக அடைபடும், 

  • வாரிசுகளால் பெருமை உண்டாகும், 

  • வீடு, வாகன யோகம் உண்டாகும்,

  • பொறுமையாக காரித்தை சாதிக்கலாம், 

  • பெண்கள் கட்டாயம் அடுத்தவர் விசயங்களில் தலையிட வேண்டாம் 

  • பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய  குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது, 

  • குருவின் பயணமும் பார்வையும் மேஷ ராசிகாரர்களுக்கு  அஷ்டலட்சுமி யோகத்தை தேடி தரப்போகிறது, பொதுவாக மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி   ஒரு பொன்னான காலகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும் , 

  • வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும், புதிய ஒப்பந்தங்களில் நிதானம் முக்கியம், அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம், 

  • அரசாங்கப் பணிபுரிபவர்கள் திறமைக்கு உரிய ஏற்றம் பெறுவார்கள், 

  • அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு அதிகரிக்கும், 

  • மாணவர்கள் சோம்பலை தவிர்க்கவும் 

  • பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் உண்டு,

  • சினிமா, இசை, படைப்புத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும், 

  • அடிவயிறு, முதுகு, அஜீரணம், நரம்பு உபாதைகள் வரலாம், 


அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 

  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் காரணமில்லாமல் மனதில் தைரியம் அஸ்வினி நடசத்திரக்காரர்களுக்கு குறையும். ஆனாலும்  தன்னம்பிக்கை உயரும். 

  • வாழ்க்கையில் முன்னேற, வேகம் காட்டுவது நல்லது. பண வரவுக்குக் குறைவு ஏற்படாது.

  • மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவார்கள். 

  • மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவார்கள். 

  • ஆனாலும் சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். 

  • எந்தக் காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.

வீடியோவில் பார்க்க 


பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 

  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் எல்லா காரியங்களிலும் அதிக கவனம் செலுத்துவதால்  வெற்றி இவர்களை தேடித் தரும். 

  • தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும், சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும், அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும்.

  • குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம், எனவே சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது,.

  • கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.

வீடியோவில் பார்க்க 



கார்த்திகை 1ம் பாதம் 

கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில்  பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம்

  • இந்தக் குரு பெயர்ச்சியின் மூலம் பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும், அது நல்லதாக தான் இருக்கும்.

  • எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம், அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

  • வாழ்க்கை துணையின்  உடல்நலத்தில் கவனம் தேவை. 

  • இவர்களின்  புத்திக்கூர்மை  வெற்றியைத் தேடித் தரும்.

  • வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பார்கள்.

  • இவர்கள் தங்கள் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து எளிதாக தப்பித்துக்கொள்வார்கள்.

    வீடியோவில் பார்க்க 



பரிகாரம் 

செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும், முடிந்தால் அரளிப்பூ  மாலை, முருக உடைய  வேலுக்கு சாத்தி வணங்கி வருவது நல்லது 


Full Video 




12 ராசிகளுக்கு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024

 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்) பொது பலன்கள்






 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்) பொது பலன்கள்- மேஷம்(Aries)






 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்) பொது பலன்கள்- ரிஷபம்(Taurus)






 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்) பொது பலன்கள்- மிதுனம்(Gemini)






 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்) பொது பலன்கள்- கடகம்(Cancer)






 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்)சிம்மம் (Leo)




 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்)கன்னி(Virgo)




 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்)துலாம் (Libra)






 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்)விருச்சிகம்(Scorpio)






 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்)தனுசு(Saggitarius)






 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்)மகரம்(Capricorn)






 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்)கும்பம்(Aquarius)






 2024 தமிழ் வருட ராசி பலன் (குரோதி வருடம்)மீனம் (Pisces)




தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 -மீனம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் மீன ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு, சூரியன், ஏழாம் இடத்தில் கேது, ராசியில் பன்னிரெண்டில் சனி, செவ்வாய், ராசியில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது, இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு தலைகனம் தவிர்த்தால், தலை உயர்ந்து நடக்கும் ஆண்டு.



  • ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். பொறுமையை கையாள்வது அவசியம்.



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - கும்பம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் கும்ப ராசிக்கு முன்றாம் இடத்தில் குரு, சூரியன், எட்டாம் இடத்தில் கேது, ராசியில் சனி, செவ்வாய் இராண்டாம் இடத்தில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு சுகமும் சந்தோஷமும் அதிகமாக கிடைக்கும்.



  • அடக்கமாகச் செயல்பட்டால், அனைத்திலும் நன்மை கிட்டும் ஆண்டு இந்த ஆண்டு எனலாம்



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - மகரம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் குரு, சூரியன், ஓன்பதாம் இடத்தில் கேது, இரண்டாம் இடத்தில் சனி, செவ்வாய் முன்றாம் இடத்தில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு மகர ராசிகாரர்களுக்கு வெற்றிகளை தேடித்தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது



  • கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வருமானம் பல வழிகளிலும் அதிகரிக்கப்போகிறது





தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - தனுசு

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு, சூரியன், பத்தாம் இடத்தில் கேது, முன்றாம் இடத்தில் சனி, செவ்வாய் நான்காம் இடத்தில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு தனுசு ராசிகாரர்களுக்கு கவனமாகச் செயல்பட்டால் கணிசமான நன்மைகள் கிட்டும்



  • இந்த குரோதி புத்தாண்டு அறிவுசார் மற்றும் செயல்திறன் கூடக்கூடிய காலமாக இருக்கும்.





தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - விருச்சிகம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு,சூரியன், பதினேன்னாம் இடத்தில் கேது, நான்காம் இடத்தில் சனி, செவ்வாய் ஐந்தாம் இடத்தில் ராகு,புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு விருச்சிக ராசிகாரர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் ஆண்டு.



  • குரு பெயர்ச்சிக்கு பின்பு தற்போது இருக்கும் சூழ்நிலை அனைத்து மாறி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் ஆண்டு எனலாம்



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - துலாம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு,சூரியன், பன்னிரண்டாம் இடத்தில் கேது, ஐந்தாம் இடத்தில் சனி, செவ்வாய் ஆறாம் இடத்தில் ராகு,புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு துலா ராசிகாரர்களுக்கு பொறுமைக்குப் பரிசாக பெருமைகளைத் தரக்கூடியதாக இருக்கும்.



  • எந்த சமயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு நிம்மதி, நிரந்தரமாகும்



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - கன்னி

  • இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கன்னி ராசிக்கு எட்டாமிடத்தில் குரு, சூரியன், ஜன்ம ராசியில் கேது, ஆறாம் இடத்தில் சனி, ஏழாம் இடத்தில் ராகு, புதன் சுக்கிரன் கிரக நிலை அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பின் படியும், மேலும் அடுத்து வரும் குரு பெயர்ச்சியின் படி இந்த ஆண்டு கன்னி ராசிகாரர்களுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.



  • மேலும் கன்னி ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு மிக மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும்



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - சிம்மம்



குரோதி வருடம் - 2024-    சிம்மம் 

சிம்ம ராசிக்கு ஓன்பதில் சூரியன், குரு, இரண்டாம் வீடாயாகிய கன்னியில் கேது, ஏழாம் வீடாயாகிய கும்பத்தில் சனி, செவ்வாய், எட்டாம் வீடாயாகிய மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். 



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - கடகம்



குரோதி வருடம் - 2024-  கடகம்  

கடகம் ராசிக்குப் பத்தாம் இடத்தில் சூரியன் , குரு, மூன்றாம் இடத்தில் கேது, ஒன்பதாம் இடத்தில் புதன் சுக்ரன் ராகு சேர்க்கை, எட்டாம் இடத்தில் சனி, செவ்வாய் என்ற கிரக நிலை அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பை வைத்து பார்க்கும் பொதுவாக அற்புதமான பலன்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு  அமைகிறது


குடும்பத்தில் நிம்மதியும், தம்பதியர் இடைய அன்யோன்னியமும் உருவாகும். திருமணத்திற்கு காத்திருப்போருக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு, குழந்தைப் பேறும் அமையும் 

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - மிதுனம்


குரோதி வருடம் - 2024- மிதுனம் 

  • புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டு அதிரடி மாற்றங்களைத் தரப்போகிறது. 
  • ராசிக்குப் பதினோராம் இடத்தில் குரு, நான்காம் இடத்தில் கேது, பத்தாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஏழாமிடத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சனி, பத்தாம் இடத்தில் ராகு என்ற கிரக நிலை அமைப்பு பெற்று இந்த வருடம் ஆரம்பிக்கிறது

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - ரிஷபம்

 


குரோதி வருடம் - 2024- ரிஷபம்

  • ஆண்டு ஆரம்பமாகும் நாளில் ரிஷப ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் குரு, ஐந்தாமிடத்தில கேது, ஏழாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, எட்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பத்தாம் இடத்தில் சனி, பதினோராம் இடத்தில் ராகு என்ற கிரஹ நிலை அமைப்பு காணப்படுகிறது. 

  • இந்த அமைப்பின் அடிப்படையிலும், இந்த வருடத்தில் ஏற்படக்கூடிய கோசார மாற்றங்களின் அடிப்படையிலும் முயற்சிகளுக்குப் பலன் தரும் வருடமாக இருக்கும்

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 பொது பலன்கள்

குரோதி வருடம் - 2024- மேஷம்

  • வருடம் தொடங்கும் சமயத்தில் மேஷத்தில் குரு, ஆறாமிடத்தில் கேது, எட்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பதினோராம் இடத்தில் சனி, பன்னிரண்டாம் இடத்தில் ராகு என்ற கோசார அமைப்பு காணப்படுகிறது. மேலும் குரு பெயர்ச்சி மற்றும் அதன் பின் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய கிரஹ மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த  வருடம்  மேஷ ராசிகாருக்கு ஏற்றமான ஆண்டாக இருக்கும்.
  • புத்தாண்டு ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும்.

Tamil New year 2024 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 பொது பலன்கள்

 


 

குரோதி வருடம் - 2024

குரோதி என்றால் பகை மற்றும் கேடு என்று பொருள். 60 தமிழ் வருடங்களில் 38வதாக வரக்கூடியது குரோதி ஆண்டு ஆகும்

இடைக்காட்டாரின் குரோதி வருடம் வெண்பா

கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்

எண் ஜோதிடம் என்றால் என்ன?

 


ஜோதிடம் கலை (Tamil Astrology) போல் எண் ஜோதிடமும் மிகவும் பழமை வாய்ந்தே.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்"  என்பது தமிழ் மொழி. எண் கணிதம் நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சமஸ்கிருத மொழியில் ஆரம்ப காலத்தில் இருந்தே எண் கணித முறை காணப்படுகிறது. இதனை கடபயாதி ஸம்க்ஞை என்பர். எண்களுக்கும் கோள்களுக்கும் சம்பந்தம் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் “கீரோ” என்னும் மேல் நாட்டறிஞர் எண்களுக்குரிய கோள்களை அமைத்தார். இதற்கு நியூமராலாஜி என்று பெயரிட்டார்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழுமுயிர்க்கு"

இது குறள் நெறி கூறும் அறிவுரை.

எண்ணும் எழுத்தும் மனித வாழ்க்கையின் நிலைகளைப் பிரதிபலித்துக் காண்பிக்க உதவுகின்றன.  அல்லது மனித வாழ்க்கைத் தொடர்பான தொலைவிலுள்ள ஏதோ ஓர் அம்சத்தை நெருக்கத்தில் காண்பிக்க உதவுகின்றன.

மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் ஏதோ ஒரு வகையில ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது மேற்சொன்ன முன்னோர்களின் வாக்கு மூலம் நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.  எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்.  அதை மனிதன் அறிந்து கொண்டது தாமதமாகத்தான் என்றாலும், எண்கள் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்.  எவ்வாறெனில் ஒரே ஒரு நெருப்புக் கோளத்திலிருந்து இவ்வுலகம் தோன்றியிருக்கிறது என அறிந்துள்ளோம்.  எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கிறது..

மேலும் எண் கணித ஜோதிடத்தை,  நமது நாட்டில் தற்போது பலரும்  பின்பற்றுகிறார்கள். குறிப்பாக எண் கணிதத்தின் நிபுணராகக் கருதப்படும் பண்டிட் சேதுராமன் அவர்கள் இந்த முறையையே சிறந்த முறையாகக் கொண்டு எண் கணிதத்தைப் பற்றி நூலை எழுதியுள்ளார். பெயர் எண், விதி எண், உயிர் எண் என மூன்று எண்களைக் கொண்டு நியூமரலாஜி பலன்களைக் காண இயலும்.

சில வரலாற்று குறிப்பில் எண் சோதிடம் பல கிரேக்க அறிஞர்களால் ஆராய்ந்து எழுதபட்டது என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஆதராமாக புத்தகமும் இருக்கிறது

எண் ஜோதிடம், தமிழ் ஜோதிடத்தில் ஒரு அங்கமாக இல்லையெனிலும் தமிழ் ஜோதிடர்கள் கடந்த சில வருடங்களாக எண் ஜோதிடம் பற்றி ஆலோசனை வழங்குகிறார்கள்.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த கிரேக்க நாட்டுக் கணித மேதையான பிதாகரஸ் என்பவரையும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து மறைந்த ஜுரோ என்பவராலும் தான் இந்த எண் கணித சாஸ்திரமானது உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது..

எண் கணிதம்

 

 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே !!

 

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.

நம்முடைய பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து சில அந்த எண்களின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன்கள் கணித்துள்ளனர். அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். இது ஆங்கிலத்தில் ‘Numerology’ என அழைக்கபடுகிறது.

எண் ஜோதிடம்  (Numerology) என்பது எண்களுக்கும் வாழ்வின் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் வருங்காலத்தைக் கணிக்கும் ஜோதிடம்   ஆகும்.

எண் கணிதம் 3 வகையில் கணித்து சொல்லப்படுகிறது

v  பிறந்த தேதி எண்

v  கூட்டு எண்

v  பெயர் எண்

இந்த மூன்று எண்களில் பிறந்த தேதி எண் மற்றும் கூட்டு எண்களை நம்மால் மாற்ற இயலாது. ஆனால், பெயர் எண்ணை இந்த இரண்டு எண்களுக்கும் நட்பு விகிதத்தில் வரும்படி அமைத்துக் கொள்ளலாம்.

பிறந்த தேதி எண்

ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் மட்டும் கூறுவது பிறந்த எண் அல்லது பிறவி எண் அல்லது உடல் எண் என்று அழைக்கப்படுகின்றது.

அதாவது எண் கணித சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு ஜாதகரின் பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு அவர் பிறந்த ஆங்கில தேதி முக்கிய அங்கம் வகிக்கிறது.



மேற்கண்ட அட்டவணைப்படி கிரகங்களுக்கான எண்கள் நிர்ணயிக்கப்படுகிறது.  மேலும் மேற்கூறப்பட்ட எண்களுக்கு நட்பு, பகை எண்களை அறிந்துகொள்வோம்.

எண்

ஆட்சிக்கிரகம்

நட்புஎண்

பகை எண்

1

2

3

4

5

6

7

8

9

சூரியன்

சந்திரன்

குரு

இராகு

புதன்

சுக்கிரன்

கேது

சனி

செவ்வாய்

4

7

9

1

9

9

2

5

5, 6

8

8

6

8

6

3, 5

8

8

2

ஜோதிடத்தில் சூரியனுக்கு இராகுவும், சந்திரனுக்குக் கேதுவும் பகை என்று சொல்வார்கள். எண் கணிதத்தில் நட்பு எனக் குறிப்பிட்டுள்ளோம்.  சூரிய சந்திரர்களின் நிழலே இராகு, கேதுக்களாகும்.  எனவே தான் இவர்கள் எண் கணித சாஸ்திரத்தில் நட்பாக வருகிறார்கள்.

கூட்டு எண்

ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற எண்ணே கூட்டு எண் அல்லது உயிர் எண் என்று அழைக்கப்படுகின்றது.

அதாவது ஒரு ஜாதகரின் எண் என்ன என அறிய அவர் பிறந்த ஆங்கிலத் தேதியில் தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் மொத்த கூட்டுத் தொகையே அந்த ஜாதகரின்  கூட்டு எண்ணாகும்.

ஒருவர் 20-12-1967 அன்று பிறந்தார் என்றால் அவர் பிறந்த எண்   2 + 0 = 2 .

2+0+1+2+1+9+6+7  =>28 => 2+8 => 10 => 1+0=1

அவருடைய கூட்டு எண் 1 ஆகும்

அதாவது அவர் உடல் எண் 2 கூட்டு எண் 1 ஆகும். தனித்தனியாகவும், இரண்டும் சேர்த்தும் பலன் சொல்லாம்.

 

பெயர் எண்

ஒருவருடைய பெயரில் வருகின்ற அனைத்து எழுத்துக்களின் மதிப்பெண் அடிப்படையில் அமைவது பெயர் எண் ஆகும்.

ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒரு எண் உண்டு. ஆனால் எண் 9 மட்டும் ஆங்கில எழுத்துக்கள் இல்லை

தமிழ் எண்கணிதம் என்பது தமிழில் எழுதப்பட்ட ஆங்கில எண்கணித முறை அல்ல. முழுக்க முழுக்கத் தமிழ் முறைப்படி எழுதப்பட்ட எண்கணிதம் ஆகும். இதை பற்றி விரிவாக பிறகு பார்க்கலாம்

பிரமிடு மூலம் பெயரெண் காணல்

ஒரு ஜாதகரின் பெயருக்கான ஆங்கில எழுத்துக்களின் எண்களைக் கொண்டு பெயரெண் அமைக்கும்போது, அந்த எண்களில் இரண்டு, இரண்டு எண்களாகக்கூட்டி பிரமிடு மாதிரி அமைக்க வேண்டும். இது ஒருவகையில் மிக துல்லியமாக பெயர் வைக்க உதவும்.



ஜாதகருக்கான பெயரை ஆங்கிலத்தில் எழுதி, அதற்கான  இரண்டு, இரண்டு எண்களாகக்கூட்டி முடிவாக ஒரே ஒரு எண் வரும்வரை கூட்டிக்கொண்டு வரவும்.  ஜாதகரின் விதியெண்ணும் பெயரெண்ணும் ஒரே எண்ணாகவோ அல்லது விதியெண்ணுக்கு நட்பு எண்ணாகவோ அமைவது மிக உத்தமம்.  பிரிமிடின் முடிவாக வரும் எண்ணும், விதியெண்ணும் பெயரெண்ணும் ஒரே எண்ணாகவோ அல்லது ஒன்றுக்கொன்று நட்பு எண்ணாகவோ அமையும்பொழுது மிக உன்னதமான பலன்களைத் தரும்.

மேற்கூறிய ஜாதகியின் விதியெண்  எட்டு, எட்டாம் எண்ணில் பெயர் வைப்பது சிறப்பில்லை என்பதற்காக எட்டாம் எண்ணின் நட்பு எண்ணான ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தோம்.  ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தால் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக்கொள்ளமுடியும்.  அதற்குப்பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் ஐந்தாக வருவதால்  நிச்சயம் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக் கொள்ள முடியும்.  ஆனால் ஐந்தாம் எண்ணின் அதிபதியான புதன் ஜாதகத்தில் வலிமையுடையவராக இருந்து, அந்த ஜாதிக்கு இலக்ன சுபராகவும் இருந்தால் மிகமிக உன்னதமான பலனைத் தரும்.

மேலும் ஒரு ஜாதகருக்கு அவரின் நட்சத்திரத்திற்கான நாம் எழுத்துக்களின் பெயரைத் தேர்ந்தெடுப்பதும் சிறப்பாகும். 

ஒரு ஜாதகருக்குப்பிறந்த தேதியின் எண்ணும் விதியெண்ணும் ஒன்றாக அமைவது சிறப்பு.  அல்லது ஒன்றுக்கொன்று நட்பாக அமைவதும் சிறப்பு.  மேலும் அந்த ஜாதகருக்குப் பெயரெண்ணும் அதே எண்ணாகவோ அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும்.  அதற்குப் பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் அதே எண்ணாகவோ அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும்.