Showing posts with label மீனம். Show all posts
Showing posts with label மீனம். Show all posts

சனி பெயர்ச்சி- 2025- மீன ராசி


மீன ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பம் ...கவனம் தேவை!!

ஜென்ம சனி என்றால் என்ன?

  • ஜோதிடத்தில் ஒரு ராசியில் சனி பகவான் அமர்ந்திருந்தால், அதாவது ராசிக்கு 1ம் வீட்டில் சனி அமர்ந்து இருப்பதை ஜென்ம சனி என்பார்கள்.
  • ஏழரை சனியை விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என்று முன்று வகையாக பிரிப்பார்கள். அதிகமாக தொல்லைகள் தரும் சனி  என்றால் அது ஜென்ம சனி தான் என்று சொல்ல்வார்கள்.
  • இந்த ஜென்ம சனி காலத்தில் சனி தன து, 3ம் பார்வையாக 3ம்  வீட்டை பார்ப்பதால் சகோதர, சகோதரிகள், உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினையும், பகையும் வளர்த்துக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும்.
  • மேலும் சனி 7ம் பார்வையாக 7ம்   வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, வாழ்க்கைக்துணையுடன் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும்.
  • பத்தாம் வீட்டையும் சனி பார்ப்பதால் தொழில் பல தொல்லைகளை சந்திக்கும் நிலை வரும் . மேலும் சிலருக்கு வேலை இழப்பு, வியாபாரத்தில் நஷ்டம் என்று வரலாம்
  • பல்வேறு வகையில் விரயம் ஏற்படும் . சிலருக்கு விபரீத எண்ணங்கள் ஏற்படும். என்றாலும் வாழ்க்கையில் எது உண்மை என்று பல சோதனைக்கு சனி பகவான் பிறகு புரிய வைப்பா.
  • மேலும் இது 2 மற்றும் 3 ம் சுற்று எனில் சற்று பிரச்சனை குறைந்து இருக்கும். மேலும் சிலருக்கு பொங்கு சனியாக வந்து பல அதிஷ்டங்க்களை வாரி வழங்குவார் என்றும் சில ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது

பொது  கண்ணோட்டம்

  • உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி. அதிக கவனம் அவசியம். 12வது வீட்டில் இருந்த சனியால் வாழ்க்கையில் மந்தநிலை இருந்தது என்றாலும் சமாளிக்கக்கூடியதாகவே இருந்தது.
  • சனி இந்த பெயர்ச்சிக்கு பிறகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் பல வகையான சவால்களை சந்திக்க நேரிடும்.
  • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும்.
  • இந்த பெயர்ச்சியை பொறுத்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் வேகத்தை விட விவேகம் முக்கியம் என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.
  • சனி உங்கள் ராசியில் நிலைபெறுவதால் மனதில் குழப்பம் மற்றும் பதற்றம் ஏற்படக்கூடும். குடும்ப உறவுகளில் எதையும் நேரடியாக எடுத்துக்கொள்ளாமல் புரிதலுடன் அணுகுவது சிறந்தது.
  • தொழில் மற்றும் புதிய முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் அவசியம்.
  • பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். கடந்த கால நிகழ்வுகளை நினைத்து மனதை வருத்திக்கொள்ளாமல் எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும்.
  • உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
  • வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கணக்கு முறைகளை சரிவர பரிசோதிக்க வேண்டும்.
  • ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காணப்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
  • யாரிடமும் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவேண்டும்.
  • இந்த சோதனைக் கட்டத்தில் தேவையற்ற மற்றும் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
  • புதிய திட்டங்களை தள்ளிப் போடவேண்டும். ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.
  • ஜென்ம சனி என்ற போதும் நிதி நிலைமையில் முன்னேற்றம் காணக்கூடும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வருகிற ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு சற்று பிரச்சனை அளவு குறையும்.
  • ஜூலை 2026 முதல் ஜூன் 2027 வரை, சற்று நன்றாக இருக்கும் என்று சொல்லாம். தொழில் மற்றும் நிதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்.
  • ஆகஸ்ட் 2027 முதல் பிப்ரவரி 2028 வரையிலான சனிப் பெயர்ச்சி சுழற்சியின் கடைசி ஆறு மாதங்கள் சராசரியாக இருக்கும். இந்தக் காலம் கடுமையான சோதனைக் காலமாகவும் இருக்காது. அதிர்ஷ்டகரமானதாகவும் இருக்காது.

குடும்ப வாழ்க்கை

  • வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கணக்கு முறைகளை சரிவர பரிசோதிக்க வேண்டும்.
  • ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காணப்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
  • யாரிடமும் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவேண்டும்.
  • இந்த சோதனைக் கட்டத்தில் தேவையற்ற மற்றும் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
  • புதிய திட்டங்களை தள்ளிப் போடவேண்டும். ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.
  • ஜென்ம சனி என்ற போதும் நிதி நிலைமையில் முன்னேற்றம் காணக்கூடும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வருகிற ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு சற்று பிரச்சனை அளவு குறையும்.
  • ஜூலை 2026 முதல் ஜூன் 2027 வரை, சற்று நன்றாக இருக்கும் என்று சொல்லாம். தொழில் மற்றும் நிதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்.
  • ஆகஸ்ட் 2027 முதல் பிப்ரவரி 2028 வரையிலான சனிப் பெயர்ச்சி சுழற்சியின் கடைசி ஆறு மாதங்கள் சராசரியாக இருக்கும். இந்தக் காலம் கடுமையான சோதனைக் காலமாகவும் இருக்காது. அதிர்ஷ்டகரமானதாகவும் இருக்காது.
  • அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும், அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவை வலுப்படுத்தலாம். துணையிடம் ஒளிவு மறைவின்றி பேசு வேண்டும்.
  • காதலர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலக் கட்டம். அடுத்த கட்ட காதல் வாழ்க்கை எடுத்து செல்லவதில் சிரமம் இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் கருத்தைக் கட்டாயம் கேட்டாக வேண்டும். மேலும் வாக்கு வாதங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • சனி 7ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்திலும், தொழில் கூட்டாளி வகையிலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்கும்.
  • ஜூலை 13 முதல் நவம்பர் 28 வரை சனி வக்ர நிலையில் இருக்கும். இந்த நேரத்தில் மீன ராசிக்காரர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
  • வீண் ரோஷம் மற்றும் அலட்சியம் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எதிரியின் பலத்தை குறைவாக மதிப்பிட கூடாது.
  • பயப்பட வேண்டாம். அமைதியும், முன் யோசனையுடன் செயல்பட்டால் இந்த ஜென்ம சனி கடப்பதில் சிரமம் சற்று குறைவாகும்.
  • பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். கடந்த நிகழ்வுகளை நினைத்து மனதை வருத்திக்கொள்ளாமல் எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும்.

ஆரோக்கியம்

  • ஜென்ம ராசியில் சனியால் பதற்றம் உண்டாகும்  வயிறு, பித்தப்பை மற்றும் பிற செரிமானப் பகுதிகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
  • இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆரோக்கியத்தில் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு.
  • மேலும் சிலருக்கு  பரம்பரை உபாதைகள், ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் முதுகுப் பிரச்சினைகள் வரலாம்.
  • மருத்துவ செலவு ஏற்படும் இருப்பினும் பயப்பட வேண்டியதில்லை. பாதித்து பிறகு சரியாகும். வீட்டில் பெரியவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தாய் தந்தையின் உடல் நலம் பாதித்து சரியாகும்.
  • ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஆகஸ்ட் 2027 முதல் பிப்ரவரி 2028 வரை, உடல்நலம் சராசரியாக இருக்கும்சோதனையான கட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு அதிர்ஷ்டமான காலகட்டமாகவும் இருக்காது .
  • ஜென்ம சனி காலகட்டத்தில் ஆரோக்கியத்திற்கு  முன்னுரிமை கட்டாயம் கொடுக்க வேண்டும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கவனித்து கொள்ளவது சவாலாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்

தொழில் மற்றும் நிதி நிலை

  • சனி ஒரு கர்ம கிரகம் அது உங்கள் முதல் வீடான ஜென்ம ராசியில் நுழையும்போது  மிகவும் கடினமாக உழைக்க வைப்பார்.
  • மாணவர்கள் பாடங்களை படிக்க தெளிவான அட்டவணை அமைத்து கொண்டு அதன்படி செயல் பட வேண்டும். விடாமுயற்சி மற்றும் தெளிவான திட்டத்துடன் இந்த சனி பெயர்ச்சியில் வரும் தடைகளையும் கடந்து கல்வியில் வெற்றி பெறலாம்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் தாங்கள் பணி செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் வழங்கப்படலாம். அதனால் பணிகள் மலை போல குவியலாம். அதன் காரணமாக நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரலாம்.
  • உத்தியோகத்தில் முன்னேற்றம் மந்தமாக இருக்கலாம். என்றாலும்  உங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கும்,  அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கும் இது  ஏற்ற  நேரம் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். சக பணியாளர்களால்  பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.
  • 10ம் வீட்டை சனி பார்ப்பதால், செய்யும் தொழிலில் தேக்கமும், சிக்கலும் உண்டாகும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காது. மேலும் எதிர்பாராத பெரிய செலவுகள் வரும். மேலும் எதிர்பாராத இடமாற்றமும் ஏற்படலாம்.
  • வேலையில் மேலதிகாரிகளால் சில பிரச்சனைகளை அனுபவிக்க வேண்டி வரும். பொய்யான குற்றச்சாட்டுகளும் இந்த நேரத்தில் உங்கள் மீது சுமத்தப்படலாம். வீண் ரோஷம் தவிர்த்தால் நல்லது.
  • அலுவலகத்தில் அனுகூலக்காற்று வீசத்தொடங்கும். பணியிடத்து ரகசியங்களைப் பிறரிடம் பகிர வேண்டாம்.
  • வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் தடைபடலாம். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சந்தை நிலவரங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவது முக்கியம். கூட்டாளிகளுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது சிறந்தது.
  • விவசாயம் தொடர்பான பணிகளில் சிரமம் இருக்கலாம். ஆனால் வருமானத்தில் தடங்கல்கள் இருக்காது.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருகிறது என்று சொல்லாம். திறமைகளை பல வழிகளில் வெளிப்படுத்தி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
  • அரசியல் மற்றும் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சி உயர்நிலையர்களுடன் சமரசமாக செயல்படுவது நல்லது.
  • இந்த சனி பெயர்ச்சியில் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரலாம். முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். கடன் வாங்கும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள். நிதி முடிவுகளை எடுப்பதில் கவனம் அவசியம்.
  • புதிய வணிக முயற்சிகள், முதலீடுகள் அல்லது விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்தும் முன், சந்தை நிலவரங்களை ஆராய்ந்து அதில் உள்ள அபாயங்களைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

பரிகாரம்

  • சனிக்கிழமையும் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும். விநாயகர் வழிபாடு விசேஷ நன்மைகள் தரும்.
  • சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை கட்டாயம் தவிர்க்க வேண்டும். முடிந்தால் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.
  • முடிந்தவர்கள் திருநள்ளாறு சென்று, நள தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட ஜென்ம சனியின் தாக்கம் குறையும்.
  • குச்சனூர் சுயம்பு சனீஸ்வரரை வழிபட்டால் மனதளவில் அமைதி பெறலாம். இந்த வழிபாடு மனக்குழப்பங்களை நீக்கி தெளிவை அளிக்கும்.
  • சனி காயத்ரீ மந்திரத்தை 7 முறை உச்சரிப்பத்தின் மூலம் ஜென்ம சனியால் உண்டாகும் பிரச்சனைகள் நீங்கும்

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மீனம்

மீனம்   ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தனவாக்கு ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இரண்டாம் வீட்டில், சுப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு, இந்த ஆண்டு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்துக்கு செல்கிறார். அவர்  சப்தம ஸ்தானம் (7ம் வீடு ), பாக்கிய ஸ்தானம் (9ம் வீடு ), லாப ஸ்தானம் (11ம் வீடு ) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • ராசிக்கு உப ஜெய ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி நடப்பதால், ள் பல விஷயங்களில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். 
  • கோபத்தை குறைத்துக் கொண்டு, பொறுமையாக, நிதானமாக பேசுவதும் அவசியம்.  
  • சிறப்பாக செயல்பட்டாலும், எதிர்பார்க்கும் ஆதாயங்கள் கிடைப்பதில் தாமதமாக நடக்கும்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும், பூர்வீக சொத்து சேரும், வரவு சீராக இருக்கும். அதேசமயம்  தலைகனம் தவிர்ப்பது அவசியம். 
  • அலுவலகத்தில் நன்மைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். 
  • பிறரைக் குறைகூறுவதும் கூடாது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். 
  • தவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், பொறுமை முக்கியம். 
  • வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வார்த்தையில் கவனம் இல்லை என்றாலும்  ஒற்றுமை காணமல் போகும். கவனம் அவசியம் . 
  • வாரிசுகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். வரவு சீரானாலும் செலவுகளும் சேர்ந்து வரும். 
  • வீண் ஆடம்பரம்வேண்டாம். 
  • கடன் தருவது, பெறுவதில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம்.
  • கடின முயற்சிகளின்  முலம்  வெற்றி உண்டாகும்.
  • சிறு தூர பயணங்கள்  செல்லும் சூழல் உண்டாகும்
  • எதிர்பார்க்கும் மாறுதல்கள் தாமதமாக கிடைத்தாலும், நல்ல பதவிகள், கௌரவமான பதவிகள் கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும். 
  • பல வகையான நெருக்கடிகள் இருந்தாலும், குருவின் பார்வை நல்ல முடிவுகளைத் தரும். 
  • அரசு வழி அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். அரசியலில் இருப்போர்க்கு தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்படும்.
  • மாணவர்கள் எதிர்கால நன்மைக்கு இப்போதே உத்தரவாதம் கிட்டும்.
  • அரசுப்பணி புரிவோர், திறமைக்கு ஏற்ப உயர்வுகள் கிட்டும். 
  • பெண்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. கடன் வாங்கவோ, குடுக்கவோ வேண்டாம்
  • பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் மாற்றங்கள் கிடைக்கும். 
  • வேற்று மொழி தொடர்பு, கமிஷன், ஏஜென்சி, போன்ற வேலைகளில் இருப்பவர்கள் நல்ல லாபம் பெற முடியும். 
  • வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். 

 பூரட்டாதி 4ம் பாதம் 

  • இந்த குரு பெயர்ச்சியால் புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். 
  • குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். 
  • கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். 
  • குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.
  • பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது

உத்திரட்டாதி 

  • இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
  • பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் யோகம் உண்டு. மனநிம்மதி கிடைக்கும். 
  • காரிய வெற்றி உண்டாகும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். 
  • மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். 
  • புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. 
  • வியாபாரிகளுக்கு காரிய தடை ஏற்படலாம். கவனம் தேவை.  காரியங்கள்  தாமதப்படும் என்றாலும் காரிய அனுகூலம் உண்டு.
  • எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும்.
  • கூட்டுத் தொழில் லாபம் அடையும். 
  • கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும். 
  • வெளியூர் சென்றுவர நேரிடலாம்.

ரேவதி 

  • இந்த குரு பெயர்ச்சியால் மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். 
  • எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும். 
  • அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. 
  • பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும் என்றாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். 
  • தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். 
  • புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.
  • குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். 
  • குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு 

பரிகாரம்

மாரியம்மனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும் 
சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை தரும் 

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 -மீனம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் மீன ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு, சூரியன், ஏழாம் இடத்தில் கேது, ராசியில் பன்னிரெண்டில் சனி, செவ்வாய், ராசியில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது, இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு தலைகனம் தவிர்த்தால், தலை உயர்ந்து நடக்கும் ஆண்டு.



  • ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். பொறுமையை கையாள்வது அவசியம்.



New Year - Love and marriage horoscope 2023 - 4

மகரம் - Capricorn

இந்த ஆண்டில் மகர ராசிக்காரர்கள் தொடக்கத்தில் காதல் விவகாரங்களில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். செவ்வாய் பகவான் வக்ர நிலையில் ஐந்தாவது வீட்டில் இருப்பதால் உங்கள் காதல் இதயத்தை உடைக்க முடியும் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் காதலி/காதலரின் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் நீங்கள் அவருடைய கோபத்திற்கு பலியாகிவிடுவீர்கள். அவர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் 

ஆனால் பிப்ரவரி முதல் மே வரை உங்கள் காதல் உறவு வலுவாக இருக்கும். உங்களுக்குப் பிடித்தவர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும். 

காதலுக்கான வாய்ப்புகள் இருக்கும் மற்றும் எதிர்கால கனவுகளை ஒருவருக்கொருவர் அலங்கரிக்கும் ஒருவருக்கொருவர் தங்கள் இதயங்களை பகிர்ந்து கொள்வார்கள். இந்த ஆண்டு ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக வரும். 

ஜனவரி மற்றும் ஜூலை,ஆகஸ்ட்  நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதன் போது உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்.

ஜூன் மற்றும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் உங்கள் காதல் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. நீங்கள் விரும்பியவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இன்னும் தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்ல துணை கிடைக்கும்.

திருமணம் ஆன மகர ராசிகார்களின் திருமண வாழ்க்கை மிகவும் சாதகமாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ஏழாம் வீட்டில் சனி மற்றும் சுக்கிரனின் பார்வையால் திருமண வாழ்க்கையில் காதல் மற்றும் ஈர்ப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும். ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வு உணர்வு உங்கள் உறவை வலுப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும்.

ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள், உங்கள் மூன்றாவது வீட்டில் மீனத்தில் தங்கியிருக்கும் குரு பகவான் உங்கள் ஏழாவது வீட்டை முழு ஐந்தாம் பார்வையுடன் பார்க்கிறார். இதனால் திருமண வாழ்வில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். நீங்கள் உங்கள் திருமண வாழ்க்கையை அனுபவிப்பீர்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும் மற்றும் சில சுப காரியங்கள் முடிவடையும்.

இருப்பினும் ஏப்ரல் 22 க்குப் பிறகு சூரியன் குரு மற்றும் ராகு மூன்றும் உங்களின் நான்காவது வீட்டில் இருக்கும் மே மற்றும் ஆகஸ்ட் இடையே குரு சண்டால் தோஷத்தின் பலனைப் பெறுவீர்கள். இது குடும்ப அமைதியை சீர்குலைப்பதோடு உங்கள் திருமண வாழ்க்கையையும் பாதிக்கும். இந்த ஆண்டு குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் கவனமாக இருக்க வேண்டும். மே 10 ஆம் தேதி செவ்வாய் உங்கள் ஏழாவது வீட்டில் நுழைவதால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கை துணையுடன் சண்டையிடும் சூழ்நிலை ஏற்படலாம். 

அதன்பிறகு ஜூலை 1-ம் தேதி சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஆகஸ்டு 18-ம் தேதி வரை நீடிப்பதால்,  இந்த நேரத்தில் கவனமாக இருங்கள், அதன் பிறகு படிப்படியாக அது மேம்படும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிரச்சனைகள் குறையும் மற்றும் உங்கள் திருமண வாழ்க்கையில் நிம்மதி அடைவீர்கள்.

கும்பம் - Aquarius

இந்த  ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள்  தொடக்கத்தில் தங்கள் காதல் உறவுகளில் இணக்கத்தை உணருவார்கள். ஐந்தாவது வீட்டில் சூரியன் மற்றும் புதன் செல்வாக்கின் காரணமாக உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையே நல்ல உரையாடல் இருக்கும் மற்றும் ஒருவருக்கொருவர் காதலில் ஈர்க்கும். 

ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் மார்ச் மாதத்தில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் 13 ஆம் தேதி பெயர்ச்சிக்கும் போது ​​அந்த நேரம் உறவில் இறுக்கத்தை அதிகரிக்கும். 

குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலைமை சீராகும். மே மாதத்தில், நீங்கள் மிகவும் ரொமான்டிக் உணர்வீர்கள் மற்றும் ஒருவரையொருவர் நெருங்கி வருவீர்கள். நெருங்கிய உறவுகளில் அதிகரிப்பு இருக்கலாம். 

ஜூலை, ஆகஸ்ட் இடையே உங்கள்  திருமணத்தை பற்றி யோசிப்பிர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்கள் அன்பான தருணங்களைக் கழிக்கவும் சூழ்நிலை அமையும்

திருமணமான கும்ப ராசிச்கார்கள் இந்த ஆண்டில் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்னிரண்டாம் வீடு பாதிக்கப்படுவதால் ஆண்டின் தொடக்க மாதம் பலவீனமாக இருக்கும். சனியும் சுக்கிரனும் பன்னிரண்டாம் வீட்டில் அமைந்து வக்ர செவ்வாய் நான்காம் வீட்டில் அமர்ந்து ஏழாம் வீட்டைப் பூரண பார்வையுடன் பார்ப்பார்கள். இதனால் திருமண வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு இருக்காது.

ஜனவரி 17-ம் தேதி முதல் வீட்டிற்கு வரும் சனி மற்றும் ஏழாம் வீட்டைப் பார்ப்பதாலும் சனி உங்கள் ராசிக்கு வருவதாலும் திருமண வாழ்வில் சில தேக்க நிலை ஏற்படும். ஒருவருக்கொருவர் நேரம் கொடுப்பீர்கள். ஒருவருக்கொருவர் பார்வையை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உறவில் அன்பு மற்றும் விசுவாசம் இரண்டும் அதிகரிக்கும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை அதிகரித்து உண்மையைப் பேசத் தொடங்கும். இது உங்கள் உறவை சாதகமாக மாற்றும் மார்ச் மாதம் முதல் நிலைமை சீரடையத் தொடங்கும்.

இருப்பினும், ஜூலை மாத தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ஏழாவது வீட்டிற்கு வருவதால் மீண்டும் டென்ஷன் அதிகரிக்கும் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 18 முதல் அக்டோபர் 3 வரை குறிப்பாக கவனமாக இருக்கவும் இந்த நேரத்தில் எந்த வகையான விவாதமும் இருக்க வேண்டும். 

அதன் பிறகு நிலைமை நன்றாக இருக்கும். ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நிரப்பும் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான இடைவெளியும் முடிவுக்கு வரும். அன்பும் ஈர்ப்பும் அதிகரிக்கும் மற்றும் நெருக்கமான உறவுகளும் அதிகரிக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உல்லாசமாகச் சென்று அவர்களுக்கு போதுமான நேரத்தை வழங்குவீர்கள். 

மீனம் - Pisces

இந்த  ஆண்டில் மீன ராசிக்காரர்கள் தொடக்கத்தில் தங்கள் காதல் உறவுகளில் இணக்கத்தன்மையை உணருவார்கள். சனி மற்றும் சுக்கிரனின் கூட்டுப் பலன் காரணமாக ஐந்தாவது வீடு சுறுசுறுப்பாக இருக்கும் எனவே உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் இடையேயான இடைவெளி உருவாகும் மற்றும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் உறவில் நேர்மையைப் பேண உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். இந்த ஆண்டு உங்கள் உறவை முன்னோக்கி எடுத்துச் செல்வதிலும் நீங்கள் வெற்றி பெறலாம். 

ஏப்ரல் 22, 2023 க்குள், குரு உங்கள் சொந்த ராசியில் இருந்து உங்கள் ஐந்தாவது, ஏழாவது மற்றும் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பார். எனவே நீங்கள் யாரையாவது விரும்பினால் அல்லது யாரையாவது காதலித்தால் அல்லது திருமணம் செய்ய விரும்பினால் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

 மே 10 மற்றும் ஜூலை 1 க்கு இடையில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் இங்கே செவ்வாய் பலவீனமான ராசியில் இருப்பதால் உங்கள் காதல் உறவுகளில் சிதைவு ஏற்படும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு உங்கள் உறவில் விரிசல் ஏற்படலாம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்

ஆகஸ்ட் மாதம் சாதகமாக இருக்கும் மற்றும் காதல் உறவுகள் வலுவடையும். மறுபுறம், செப்டம்பர் முதல் நவம்பர் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதம் உங்கள் உறவை முதிர்ச்சியடையச் செய்யும்.

இந்த  ஆண்டில் திருமணமான மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் தரும். ஆண்டின் தொடக்கத்தில் பதினோராம் வீட்டில் சனியும் மற்றும் பத்தாம் வீட்டில் சூரியனும் மற்றும் முதல் வீட்டில் குருவும் பெயர்ச்சிப்பது உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக மாற்றும். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே நல்ல இணக்கம் இருக்கும். உங்களுக்கிடையில் காதல் இருக்கும் மற்றும் ஈர்ப்பும் இருக்கும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் சக்தியும் இருக்கும். இருவருமே ஒருவரையொருவர் பிரச்சினைகளை ஒன்றாக தீர்த்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். செய்வோம் இது உங்கள் உறவை வலுப்படுத்தும்.

ஆனால் குரு 2ம் வீட்டில் சனியும் மற்றும் பன்னிரண்டாம் வீட்டில் சனியும் பெயர்ச்சித்த பிறகு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே உள்ள அந்தரங்க உறவில் சில பிரச்னைகள் ஏற்படும். ஒருவருக்கிடையே புரிதல் இல்லாததால் உங்களுக்குள் இடைவெளி ஏற்படலாம். நீங்கள் அதை கருத்தில் கொள்ளவில்லை என்றால் அது ஒரு பெரிய பிரச்சனையாக மாறும். 

ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் உங்கள் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எந்த வகையிலும் சர்ச்சையைத் தவிர்க்க வேண்டும். 

நவம்பர் மாதத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக புனித யாத்திரை செல்லலாம் அவ்வாறு செய்வது உங்கள் உறவில் மகிழ்ச்சியை நிரப்பும்.

12 லக்கினத்தின் பொது பலன்கள்-4



மகரம் லக்கினம்:

அதிபதி  சனி
யோககாரகர்கள்  சுக்கிரன், புதன், செவ்வாய்
யோகமில்லாதவர்கள்  சந்திரன், குரு
மாரக அதிபதி  சந்திரன், குரு
நோய்  சுரம், விஷம் , ஜலம் இவைகளால் பீடை
ஆயுள்  சுபர் பார்க்க 67 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

துர் ஆசை உடையவர், திடபுத்திமான், கோபக்காரன், மனைவியிடத்தில் பிரியமுள்ளவன்



கும்பம்லக்கினம்::

அதிபதி     சனி
யோககாரகர்கள்     சுக்கிரன், புதன், சனி
யோகமில்லாதவர்கள்     சந்திரன், குரு, செவ்வாய்
மாரக அதிபதி     சந்திரன், செவ்வாய்
நோய்     ஜுரம், பித்த சரீரம் , மிகுந்த சன்னி, 
    வாதசுரம், பித்தசுரம்
ஆயுள்     சுபர் பார்க்க 80 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

பெண்களிடத்தில் பிரியமுடையவன், அகன்ற வயிறுடையவன், தன்னையே புகழ்ந்து பேசுபவன் , பிறர் செய்யும் உதவியை உடனே மறப்பவன் , அற்ப கல்வியுடையவன்



மீனம் லக்கினம்:

அதிபதி    குரு
யோககாரகர்கள்    சந்திரன், செவ்வாய்
யோகமில்லாதவர்கள்    சுக்கிரன், சூரியன், புதன், சனி
மாரக அதிபதி    சூரியன்
நோய்    உஷ்ண ரோக பிரச்சனை , ஜுரம், இருமல்
ஆயுள்    சுபர் பார்க்க 100 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

ஞானி, பிராமணர், பெரியாரிடத்தில் மரியாதையுடையவன், சத்தியவான், பரிமளபிரியன் , இரக்கமுடையவன் , குளிர்ச்சியான கண்கள் உடையவன்