Showing posts with label Tamil New year 2024. Show all posts
Showing posts with label Tamil New year 2024. Show all posts

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 -மீனம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் மீன ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு, சூரியன், ஏழாம் இடத்தில் கேது, ராசியில் பன்னிரெண்டில் சனி, செவ்வாய், ராசியில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது, இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு தலைகனம் தவிர்த்தால், தலை உயர்ந்து நடக்கும் ஆண்டு.



  • ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். பொறுமையை கையாள்வது அவசியம்.



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - கும்பம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் கும்ப ராசிக்கு முன்றாம் இடத்தில் குரு, சூரியன், எட்டாம் இடத்தில் கேது, ராசியில் சனி, செவ்வாய் இராண்டாம் இடத்தில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு சுகமும் சந்தோஷமும் அதிகமாக கிடைக்கும்.



  • அடக்கமாகச் செயல்பட்டால், அனைத்திலும் நன்மை கிட்டும் ஆண்டு இந்த ஆண்டு எனலாம்



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - மகரம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் குரு, சூரியன், ஓன்பதாம் இடத்தில் கேது, இரண்டாம் இடத்தில் சனி, செவ்வாய் முன்றாம் இடத்தில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு மகர ராசிகாரர்களுக்கு வெற்றிகளை தேடித்தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது



  • கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வருமானம் பல வழிகளிலும் அதிகரிக்கப்போகிறது





தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - தனுசு

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு, சூரியன், பத்தாம் இடத்தில் கேது, முன்றாம் இடத்தில் சனி, செவ்வாய் நான்காம் இடத்தில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு தனுசு ராசிகாரர்களுக்கு கவனமாகச் செயல்பட்டால் கணிசமான நன்மைகள் கிட்டும்



  • இந்த குரோதி புத்தாண்டு அறிவுசார் மற்றும் செயல்திறன் கூடக்கூடிய காலமாக இருக்கும்.





தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - விருச்சிகம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு,சூரியன், பதினேன்னாம் இடத்தில் கேது, நான்காம் இடத்தில் சனி, செவ்வாய் ஐந்தாம் இடத்தில் ராகு,புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு விருச்சிக ராசிகாரர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் ஆண்டு.



  • குரு பெயர்ச்சிக்கு பின்பு தற்போது இருக்கும் சூழ்நிலை அனைத்து மாறி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் ஆண்டு எனலாம்



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - துலாம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு,சூரியன், பன்னிரண்டாம் இடத்தில் கேது, ஐந்தாம் இடத்தில் சனி, செவ்வாய் ஆறாம் இடத்தில் ராகு,புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு துலா ராசிகாரர்களுக்கு பொறுமைக்குப் பரிசாக பெருமைகளைத் தரக்கூடியதாக இருக்கும்.



  • எந்த சமயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு நிம்மதி, நிரந்தரமாகும்



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - கன்னி

  • இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கன்னி ராசிக்கு எட்டாமிடத்தில் குரு, சூரியன், ஜன்ம ராசியில் கேது, ஆறாம் இடத்தில் சனி, ஏழாம் இடத்தில் ராகு, புதன் சுக்கிரன் கிரக நிலை அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பின் படியும், மேலும் அடுத்து வரும் குரு பெயர்ச்சியின் படி இந்த ஆண்டு கன்னி ராசிகாரர்களுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.



  • மேலும் கன்னி ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு மிக மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும்



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - சிம்மம்



குரோதி வருடம் - 2024-    சிம்மம் 

சிம்ம ராசிக்கு ஓன்பதில் சூரியன், குரு, இரண்டாம் வீடாயாகிய கன்னியில் கேது, ஏழாம் வீடாயாகிய கும்பத்தில் சனி, செவ்வாய், எட்டாம் வீடாயாகிய மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். 



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - கடகம்



குரோதி வருடம் - 2024-  கடகம்  

கடகம் ராசிக்குப் பத்தாம் இடத்தில் சூரியன் , குரு, மூன்றாம் இடத்தில் கேது, ஒன்பதாம் இடத்தில் புதன் சுக்ரன் ராகு சேர்க்கை, எட்டாம் இடத்தில் சனி, செவ்வாய் என்ற கிரக நிலை அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பை வைத்து பார்க்கும் பொதுவாக அற்புதமான பலன்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு  அமைகிறது


குடும்பத்தில் நிம்மதியும், தம்பதியர் இடைய அன்யோன்னியமும் உருவாகும். திருமணத்திற்கு காத்திருப்போருக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு, குழந்தைப் பேறும் அமையும் 

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - மிதுனம்


குரோதி வருடம் - 2024- மிதுனம் 

  • புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டு அதிரடி மாற்றங்களைத் தரப்போகிறது. 
  • ராசிக்குப் பதினோராம் இடத்தில் குரு, நான்காம் இடத்தில் கேது, பத்தாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஏழாமிடத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சனி, பத்தாம் இடத்தில் ராகு என்ற கிரக நிலை அமைப்பு பெற்று இந்த வருடம் ஆரம்பிக்கிறது

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - ரிஷபம்

 


குரோதி வருடம் - 2024- ரிஷபம்

  • ஆண்டு ஆரம்பமாகும் நாளில் ரிஷப ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் குரு, ஐந்தாமிடத்தில கேது, ஏழாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, எட்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பத்தாம் இடத்தில் சனி, பதினோராம் இடத்தில் ராகு என்ற கிரஹ நிலை அமைப்பு காணப்படுகிறது. 

  • இந்த அமைப்பின் அடிப்படையிலும், இந்த வருடத்தில் ஏற்படக்கூடிய கோசார மாற்றங்களின் அடிப்படையிலும் முயற்சிகளுக்குப் பலன் தரும் வருடமாக இருக்கும்

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 பொது பலன்கள்

குரோதி வருடம் - 2024- மேஷம்

  • வருடம் தொடங்கும் சமயத்தில் மேஷத்தில் குரு, ஆறாமிடத்தில் கேது, எட்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பதினோராம் இடத்தில் சனி, பன்னிரண்டாம் இடத்தில் ராகு என்ற கோசார அமைப்பு காணப்படுகிறது. மேலும் குரு பெயர்ச்சி மற்றும் அதன் பின் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய கிரஹ மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த  வருடம்  மேஷ ராசிகாருக்கு ஏற்றமான ஆண்டாக இருக்கும்.
  • புத்தாண்டு ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும்.

Tamil New year 2024 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 பொது பலன்கள்

 


 

குரோதி வருடம் - 2024

குரோதி என்றால் பகை மற்றும் கேடு என்று பொருள். 60 தமிழ் வருடங்களில் 38வதாக வரக்கூடியது குரோதி ஆண்டு ஆகும்

இடைக்காட்டாரின் குரோதி வருடம் வெண்பா

கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்