-
இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு,சூரியன், பதினேன்னாம் இடத்தில் கேது, நான்காம் இடத்தில் சனி, செவ்வாய் ஐந்தாம் இடத்தில் ராகு,புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு விருச்சிக ராசிகாரர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் ஆண்டு.
-
குரு பெயர்ச்சிக்கு பின்பு தற்போது இருக்கும் சூழ்நிலை அனைத்து மாறி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் ஆண்டு எனலாம்
-
பணியிடத்தில் பதவி, பொறுப்பு, ஊதியம் உயரும். அனுபவம் மிக்கவர்கள் ஆதரவு கிடைக்கும். மேலிடத்தால் உங்களின் திறமை உணரவார்கள். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் அவை ஆதாயமே தரும்.
-
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும் விலகி இருந்த உறவுகள் தேடிவந்து அன்புகாட்டும்.
-
சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும். ஆடை, ஆபரணம், பொருட்சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்து சேரும்.
-
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றும். குடும்பத்தை விட்டு விலகி சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கான சூழல் ஏற்படும்
-
செய்யும் தொழிலில் வளர்ச்சி உண்டு. பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும்
-
அர்த்தாஷ்டம சனியால் வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும்
-
நீண்ட நாட்களாக வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.
-
அரசியல், அரசுத்துறை சார்ந்தவர்களுக்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்பு வந்து சேரும்.
-
கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தேடி வரும். சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றமான ஆண்டு எனலாம் நல்லது.
-
பெண்களுக்கு புதிதாக தொழில் தொடங்கவும், நண்பர்கள் மூலம் ஆதாயம், ஆதரவு பெறக்கூடிய நிலை இருக்கும்.
-
மாணவர்கள், பொறுப்பு உணர்வுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்கள் வழிகாட்டலை அலட்சியப்படுத்த வேண்டாம்.
-
பொதுவாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு லாபம் ஆண்டு எனலாம் என்றாலும் உங்களது மற்றும் வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை
-
அயல்நாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கனரக தொழிலில் இருப்போர்க்கு கவனச் சிதறல் கூடாது.
-
பெண்களுக்கு புதிதாக தொழில் தொடங்கவும், நண்பர்கள் மூலம் ஆதாயம், ஆதரவு பெறக்கூடிய நிலை இருக்கும்.
-
மாணவர்கள், பொறுப்பு உணர்வுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்கள் வழிகாட்டலை அலட்சியப்படுத்த வேண்டாம்.
-
பொதுவாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு லாபம் ஆண்டு எனலாம் என்றாலும் உங்களது மற்றும் வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை
-
அயல்நாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கனரக தொழிலில் இருப்போர்க்கு கவனச் சிதறல் கூடாது.
-
புதிய அறிமுகங்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்
-
இந்த புத்தாண்டில் சற்று மனக் கவலை, மன குழப்பம், சஞ்சலங்கள் இருக்கும். இருப்பினும் . படிப்படியாக இந்த பிரச்னைகள் கட்டாயம் குறையும்
-
முகஸ்துதி செய்யும் நபர்களிடம் ஒதுங்கி இருக்கவும்
-
உடனிருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்.
-
ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, அஜீரணம், அடிவயிறு, கால்வலி உபாதைகள் வரலாம்.
நட்சத்திர பலன்கள்
-
விசாகம் 4ம் பாதத்தில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் நல்ல ஒரு சுப பலன்களையே அதிகளவில் பெறக்கூடியதாக அமைகிறது. விசாக நட்சத்திரத்திற்கு பெரியளவில் எந்த ஒரு பாதிப்புகள் இல்லை என்று சொல்லலாம். நற்பலன்களே அதிகம் நடக்கும்.
-
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரோதி தமிழ் புத்தாண்டு, மிகவும் அதி அற்புதமானதாக அமையப் போகிறது என்றே சொல்லலாம். எடுக்கக்கூடிய காரியத்தில், தங்கு தடையின்றி வெற்றி அடைய கூடிய காலமாக அமையப் போகிறது.
-
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லாமே சிறப்பாக இருக்கும். இருப்பினும் உடல் நிலையில் மட்டும் சிறிது கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுப்பது, வாங்காமல் இருப்பது நல்லது.
பரிகாரம்
-
பழனி ராஜ அலங்கார முருகனை வணங்குவது, பரிபூரண நன்மை தரும்.
-
ராமாயண கதைகளை படிப்பது அல்லது கேட்பதும், ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு மூலம் பிரச்னைகள் தீர்ந்து நற்பலன்களைப் பெற்றிடலாம்.
-
ஞாயிறு மாலை 4.30 to 6 மணி, அதாவது ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் தொடர்ந்து ஏற்றி வழிபாட்டு வர சகலமும் காரியமும் வெற்றியை தரும்.