மிருகசீரிஷம்

நட்சத்திரம் -மிருகசீரிஷம்


மிருகசீரிடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். இதனுடைய அறிவியல் பெயர் (பொதுவாக வழங்கப்படும் பெயர் Meissa). தற்கால வானியல் படி இது Orion என்ற விண்மீன் குழுவின் தலைப்பக்கம் காணப்படுகிறது. இந்திய வானியலின் பழைய மரபு படியும் ஜோதிட மரபுப்படியும் இது ரிஷப ராசியிலும் உள்ளது என்று கணக்கிடப்படுகிறது. மானின் தலை போலத் தோற்றமளிப்பதால் மிருகசீரிசம் எனப் பெயர் பெற்றது. அதாவது ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.


ஆளும் உறுப்புகள்

பாதம் -1,2 - முகம், கன்னம், நாக்கு பாதம் -3, 4 - தொண்டை, தோள், காது, நெஞ்செலும்பு

பார்வை

சம நோக்கு பார்வை( திரியங்முக நட்சத்திரம்)

பாகை

53.20 - 66.40

நிறம்

இளஞ்சிவப்பு

இருப்பிடம்

நகரம்

கணம்

தேவ கணம்

குணம்

தாமசம், மென்மை

மிருகம்

பெண் சாரை பாம்பு

பறவை

கோழி

மரம்

பாலில்லாத கருங்காலி மரம்

மலர்

வெள்ளை அல்லி

தமிழ் அர்த்தம்

மான் தலை

தமிழ் பெயர்

மான்றலை

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

ஸ்திரம்

நாடி

மத்திம நாடி

ஆகுதி

பயிறு, எள்

பஞ்சபூதம்

பூமி

நைவேத்யம்

பாயசம்

தேவதை

 நாக தேவதைகள்

அதி தேவதை

சோமன், சந்திர ஸூடேஸ்வரன்

அதிபதி

செவ்வாய்

நட்சத்திரம் தன்மைகள்

அலி நட்சத்திரம்,  அபசவ்விய நட்சத்திரம்

உருவம்

மானின் தலை வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள் சேர்ந்த நட்சத்திரக் கூட்டம்.

மற்ற வடிவங்கள்

மான்தலை,தேங்கைக்கண்

மற்ற பெயர்கள்

மான்றலை, தேங்காய், ஐந்தானம், மும்மீன், மிருகவதனம்

வழிபடவேண்டிய தலம்

ஆதிநாராயணப் பெருமாள் கோவில், முகூந்தனூர்

அதிஷ்ட எண்கள்

3, 7, 9

வணங்க வேண்டிய சித்தர்

ஸ்வேதயி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

வே, வோ, கா, சீ

அதிஷ்ட நிறங்கள்

மஞ்சள், பழுப்பு

அதிஷ்ட திசை

கிழக்கு, தெற்கு

அதிஷ்ட கிழமைகள்

செவ்வாய், வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

பவளம்

அதிஷ்ட உலோகம்

வெண்கலம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

கண்ணப்பர், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சேந்தமங்கலம் சுவாமிகள், புருஷமிருகம்

குலம்

வேடர் குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்


பொதுவான குணங்கள்

இதில் 1, 2 ம் பாதங்கள் சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும் 3, 4ம் பாதங்கள் புதனின் ராசியான மிதுனத்தில் அடங்கும். அதாவது முதல் இரண்டு பாதங்களில் பிறப்பவர்கள் ரிஷப ராசி காரர்களாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசி காரர்களாகவும் இருப்பார்கள்.
ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். மொழி, இனப்பற்று அதிகம் உடையவர்கள். கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தாய் நாட்டை மறக்காதவர்கள். யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுய சிந்தனையோடு எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். முன் கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும், தவறை கண்டால் தயக்கமின்றி தட்டி கேட்டுகும் தைரியம் இருக்கும். எப்பொழுதும் இளமையாக இருப்பவர்கள், உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள், புத்திக்கூர்மை, அளவுகடந்த ஊக்கம், பேச்சுத்திறமை உள்ளவர்கள். அன்பு, நட்பு, பாசம் உள்ளவர்கள். தனக்கென ஒரு தனிவழியைத் தேர்ந்தெடுத்து நடப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மேலும் தன்னை தானே வழி நடத்திக் கொள்ளும் திடமான நம்பிக்கை கொண்டவர்கள். எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பேச்சு ஆற்றலால் பகைவரையும் நண்பராக்கிக் கொள்வார்கள்

குடும்ப வாழ்க்கை

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் குடும்பத்தில் விட்டு கொடுக்கும் பண்பில்லாதவர்களாக இருப்பார்கள். இதனால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவாகவே இருக்கும் அடிக்கடி மன சஞ்சலங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். அதனால் மனக்கசப்பு ஏற்படும். வெளி நபர்களிடம் விட்டுக் கொடுக்கும் பண்பிருக்கும் அளவிற்கு வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடக்க மாட்டார்கள். உரிய வயதிலேயே திருமணம் முடியும். பிள்ளைகளுக்காக சொத்து சேர்ப்பார்கள். வீட்டில் அதாவது வாழக்கை துணை மற்றும் பிள்ளைகளிடம் கறாராக நடந்துகொள்வார்கள். வாழ்க்கை துணை வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார்

நண்பர்கள்

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டு இருப்பதாலும், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணத்தாலும் அதனால் உங்களைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் எப்போதும் இருப்பார்கள்.

நட்பு நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த நட்சத்திரக்காரர்கள் நட்பு வைத்துக் கொள்ளவும், திருமணம் செய்து கொள்வதும் நல்லது. அதே போல் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் காரியங்கள் செய்தால் வெற்றி பெறலாம்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம். சித்திரை நட்சத்திரக்காரர்கள் டென்ஷனை உருவாக்குவதுடன் மனம் சங்கடப்படும் நிலை உருவாக்குவார்கள். அவர்களுடன் பழகுவது, திருமணம் செய்து கொள்வதை தவிர்த்தல் நல்லது.

தொழில்

விவசாய இயந்திரத் தொழில், பூமி தொடர்பான இயந்திரங்கள் (பொக்லைன்) தொழில், விவசாய இடு பொருள் வியாபாரம், பதிப்பகம், அச்சுத்தொழில், பத்திரிகைத் தொழில், பேச்சுத் தொழில், நம்பிக்கை மற்றும் உற்சாகம் தரும் பேச்சு மற்றும் எழுத்துத் தொழில். உயர்தர உணவகங்கள், பெண்கள் விடுதிகள், உயர்தர மது விடுதிகள், மனமகிழ் மன்றம் போன்ற தொழில்கள் இவர்களுக்கு ஏற்றது எனலாம்

தசா பலன்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை முதல் திசையாக வரும். செவ்வாய் தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் செவ்வாய் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


செவ்வாய் தசை:
செவ்வாய் திசையில் எதிலும் துடிப்பு, ரத்த சம்பந்தபட்ட பாதிப்பு, கழுத்து மற்றும் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள் உண்டாகலாம். பொன் மற்றும் ஆடை சேர்க்கை உண்டாகும்
ராகு தசை:
அடுத்து வரும் 2வது தசையாக ராகு தசையாகும். இது மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். இளமை காலத்தில் ராகு தசை வருவதால் ராகு பலம் பெற்றிருந்தால் மட்டும் நல்ல கல்வி அறிவை பெற முடியும். ராகு பலம் இல்லாமல் இருந்தால் அல்லது கெட்ட கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் கல்வியில் மந்த நிலை, முன் கோபம் முரட்டு சுபாவம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் அவ பெயர்கள், பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடு ஆகியவை உண்டாகும்.
குரு தசை:
மூன்றாவதாக வரும் குரு தசை 7 மற்றும் 10 க்குடைய தசை என்பதால் இந்த காலங்களில் சற்று உயர்வுகளைப் பெற முடியும். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு குரு நன்மை தராது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் பொதுவாக இந்த தசையில் இவர்கள் பூமி மனை வாங்கும் யோகம் பொருளாதார மேன்மையும் செய்யும் உத்தியோகத்தில் உயர்வு ஆகிய நன்மைகள் உண்டாகும்.
சனி தசை:
நான்காவதாக வரும் சனி தசை மாரக தசை என்றாலும் சனி பலம் பெற்று அமைந்து விட்டால் சமுதாயத்தில் நல்ல உயர்வையும், வாழ்வில் அதிஷ்டத்தையும் அள்ளித் தருவார். வயிறு, கண் சம்மந்தப்பட்ட வியாதிகள் வர வாய்ப்பு உள்ளது. சனி நன்றாக இருப்பவருக்கு இரும்பு சம்மந்தப்பட்ட தொழில்களால் நன்மையையும், உடனிருக்கும் தொழிலாளர்களால் உயர்வும் உண்டாகும். நல்ல செல்வந்தர்களாக வாழக் கூடிய ஆற்றல் இருக்கும்.

பொது பரிகாரம்

மிருகசீரிஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் கருங்காலி மரமாகும். இம்மரத்தை வழிபடுவதால் நல்ல பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும் நாளில் அதாவது மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நட்சத்திரத்தில் திருமணம், காது குத்துதல், சீமந்தம் செய்தல் ஆபரணங்கள் செய்தல், தானியம் வாங்குதல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், யாத்திரை செல்லுதல், கல்வி கற்க தொடங்குதல் கால் நடைகள் வாங்குதல் போன்ற நல்ல காரியங்கள் செய்யலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி, ரேவதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, பரணி

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

விச்வேச்வராய நரகார்வை தாரணாய
கர்ணாம்ருதாய சசிகேகர தாரணாய
கர்பூரகந்தி தவளாய ஜடாதராய
தாரித்திய துக்க தஹணாய நமச் சிவாய.


4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

மிருகசீரிஷம்1ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சூரியன்

செல்வத்துடனும், திறமையுடனும், விசாலமான புத்தியுடனும், அழகுடனும் இருப்பார்கள். மன அழுத்தம் கொண்டவர்கள். பிறர் பொருட்களை அபகரிக்கும் குணம் இருக்கும் உடலில் சிரங்கு போன்ற வியாதிகள் வர வாய்ப்பு உண்டு. வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளை மிகவும் நேசிப்பார்கள். தாத்தா, பாட்டியின் மீது அதிக பாசம் இருக்கும்.

மிருகசீரிஷம்2ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி புதன்

உண்மை பேசுவதுடன், உண்மையாக அனைவரிடமும் பழகுவார்கள். சத்தியவான்கள். மிகவும் திறமை இருந்தாலும் முன்கோபம் அதிகம். ஆண்களாக இருந்தால் பெண்களிடம் அற்ப ஆசையோடு இருப்பார்கள். இரக்க சுபாவம் மிகுந்தவராக இருப்பார்கள். பகைவர்க்கும் அருளும் உள்ளம் கொண்டிருப்பார்கள். சுய முயற்சியால் முன்னேற விரும்புவார்கள். ஏழை மற்றும் பணக்காரன் என்கிற வர்க்க பேதம் பார்க்காமல் மனிதர்களின் நல்ல குணத்தையும், உள்ளத்தையும் மட்டுமே பார்த்து உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள். உலகின் விஷயங்களை பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருப்பார்கள்.

மிருகசீரிஷம்3ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி புதன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சுக்கிரன்

வாழ்க்கையை யதார்த்தமாகவும் சந்தோஷமாகவும் கழிப்பார்கள். சண்டை என்றாலே காத தூரம் ஓடுவீர்கள். எப்போதும் சமாதானத்தையே விரும்புவீர்கள். வாழ்வில் எத்தகைய கடினமான சூழ்நிலைகளை சந்தித்தாலும் சிறிதும் மனம் கலங்க மாட்டார்கள். இறைவழிபாடு ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு இருக்கும். பெற்றோர், மனைவி, பிள்ளைகளை மிகவும் நேசிப்பார்கள். அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்

மிருகசீரிஷம்4ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி புதன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி செவ்வாய்

திறமை உள்ளவராகவும், சாதுவாகவும், பிறர் மனதை புரிந்து கொண்டு அதன்படி நடப்பவராகவும் இருப்பார்கள். காம குணம், நெஞ்ச அழுத்தம், பிடிவாத குணம் இருக்கும். நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதால் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள். அதனால், மற்றவர்களால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள். வாழ்க்கைத்துணை தங்களிடம் அதிக பாசம் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பிள்ளைகளை மிகவும் கட்டுப்பாட்டுடனும் பொறுப்பு உணர்வுடனும் வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.