திருவாதிரை

நம் தமிழ் - திருவாதிரை

நட்சத்திரம் -திருவாதிரை


திருவாதிரை என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம் ஆகும். இதனுடைய அறிவியல் பெயர் . மேற்கத்திய உலகத்தில் வழக்கிலிருக்கும் பெயர் பீட்டல்கியூஸ் (Betelgeuse) ஆகும். இந்திய வானியலின் பழைய மரபு படியும் ஜோதிட மரபு படியும் இது மிதுன ராசியில் கணக்கிடப்படுகிறது.

27 நட்சத்திரங்களில் 'திரு' என்ற சிறப்புடன் அழைக்கப்படும் இரண்டு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் இது. இரண்டாவது நட்சத்திரம் திருவோணம். ஒன்று சிவபெருமானின் நட்சத்திரம். மற்றொன்று திருமாலுக்கு ஆனாது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாள் சிவனை வணங்குபவர்களுக்கு சிவன் கோயில்களிலும் ஒரு முக்கியமான பண்டிகை நாள். தில்லையில் தான் சிவபெருமான் பிரபஞ்ச நடனமாடி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற இரு முனிவருக்கும் மற்றும் தேவர்களுக்கும் தரிசனம் கொடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. தில்லையில் திருவாதிரை விழாவை ஒரு 10-நாள் விழாவாக கொண்டாடுவார்கள். இவ்விழாவுக்கு ஆருத்ரா தரிசன விழா எனப்பெயர். ஆருத்ரா என்பது ஆர்த்ரா (= ஆதிரை) என்ற வடமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்.

ஆருத்ரா தரிசனத்தன்று ஆயிரக்கணக்கான அன்பர்களும் சிவனடியார்களும் தில்லையில் குழுமியிருந்து ஆண்டவனை வணங்குவர். அன்று தில்லை ஈசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வைத்து பூஜைகள் செய்வர். திருவாரூரில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா தேவாரத்தில் பாடப்பட்டிருக்கிறது. திருமயிலையில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா திருஞான சம்பந்தருடைய பூம்பாவைப் பதிகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதிரை திருவிழா சங்க தமிழர்களால் சிவனுடைய நட்சத்திரமாகக் கொண்டாட பட்டதை பரிபாடல் (71-78) சிறப்பாக பாடல் வடிவில் விளக்கபடுகிறது.

திருவாதிரை குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:
                       ஆதிரை ஒரு மணி ஆயிழை ஒன்றரை.



பொருள்: ஒரே நட்சத்திரமான திருவாதிரை உச்சத்தில் வரும்போது கன்னிராசியில் ஒன்றரை நாழிகையாகியிருக்கும் என்பது தான் பாடல் வரியின் பொருள்.வட மொழியிலுள்ள வாய்பாடும் கிட்டத்தட்ட இதேபொருள்பட உள்ளது: ஆர்த்ரா கன்யாயுதா என்பது தான் அது.

ஆளும் உறுப்புகள்

தொண்டை, தோள், கைகள்

பார்வை

மேல் நோக்கு

பாகை

66.40 - 80.00

தமிழ் மாதம்

ஆனி

நிறம்

கருப்பு

இருப்பிடம்

தேரடி

கணம்

மனுஷ கணம்

குணம்

தாமசம்

மிருகம்

ஆண் நாய்

பறவை

அன்றில் பறவை, சிட்டுக்குருவி

மரம்

செங்கரு(பாலில்லா மரம் )

மலர்

வில்வம்

தமிழ் அர்த்தம்

மூதிரை

தமிழ் பெயர்

மூதிரை

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

பார்சுவ வாத நாடி

ஆகுதி

 தேன், நெய்.

பஞ்சபூதம்

நீர்

நைவேத்யம்

வெல்லம், நெய்

தேவதை

சிவன், துர்கை, மகாவிஷ்ணு

அதி தேவதை

சிவபெருமானால் சிருஷ்டிக்கப்பட்ட 11 பேரில்  சிவ அம்சம் கொண்ட ருத்ரன்.

அதிபதி

ராகு

நட்சத்திரம் தன்மைகள்

அலி நட்சத்திரம், மிருது நட்சத்த்ரம், அபசவ்வியம் (இடது பாகமாக சஞ்சரிப்பது)

உருவம்

ரத்தினம் போலவும் தாமரை மொட்டு போலவும் வடிவமுடைய ஒரே நட்சத்திரம்.

மற்ற வடிவங்கள்

மனிததலை,வைரம்,கண்ணீர்துளி

மற்ற பெயர்கள்

செங்கை, மார்கழி, யாழ், வீணை, உருத்திரன், சிவன்

வழிபடவேண்டிய தலம்

ஸ்ரீ அருணாசலேஸ்வர், திருவண்ணாமலை, சிதம்பரம், பட்டீஸ்வரம்

அதிஷ்ட எண்கள்

1, 4, 6.

வணங்க வேண்டிய சித்தர்

பார்கவா,  சித்தர் இடைக்காடார்

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

கு, க, ங, ச.

அதிஷ்ட நிறங்கள்

கருமை கலந்த மஞ்சள்

அதிஷ்ட திசை

தென்மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

வெள்ளி, சனி.

அணியவேண்டிய நவரத்தினம்

கோமேதகம்

அதிஷ்ட உலோகம்

பித்தளை

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

ருத்ரன்,கருடன்,ஆதிசங்கரர், ராமானுஜர்

குலம்

இராட்சச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்

மேலும் விவரமாக அறிய அமுக்கவும்