நட்சத்திரம் -புனர்பூசம்
புனர்பூசம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஏழாவது நட்சத்திரம் ஆகும். Castor மற்றும் Pollux என்று மேற்கத்திய உலகத்தில் வழக்கிலிருக்கும் பெயர்களால் அறியப்படும் இந்த இரண்டு நட்சத்திரங்களை புனர்பூசம் என்று இந்திய மரபில் சொல்லப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயர் மற்றும் Geminorum ஆகும்.
இந்திய வானியலின் மரபுப்படியும் ஜோதிட மரபுப்படியும் புனர்பூச நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்கள் மிதுன ராசியிலும், 4ம் பாதம் மட்டும் சந்திரனின் ராசியான கடகத்திலும் உள்ளது.
புனர்பூசம் நட்சத்திரம் ஶ்ரீராமபிரானின் அவதார நட்சத்திரம் இதன் சிறப்பு. புனர்பூசம் நட்சத்திரத்தை புனர்வஸு என்றும் சொல்வார்கள். ‘புனர்’ என்றால் ‘மீண்டும்’ என்று பொருள். ‘வஸு’ என்பது ‘சிறப்பு’ அல்லது ‘நல்லது’ என்பதை குறிக்கும். ‘மீண்டும் சிறப்பு’ என்பதே இந்த நட்சத்திரத்தின் பொருள்.
அதனில் புனர்பூசம் குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:
பொருள்: புனர்பூசம் உச்சவட்டத்திற்கு வரும்போது கோலில், அதாவது, துலாராசி, உதித்து அரை நாழிகை ஆகிறது என்பது பாட்டின் பொருள்
நட்சத்திர காரத்துவம்
ஆளும் உறுப்புகள் |
1,2,3ம் பாதங்கள்:- காது தொண்டை, தோள் மார்பு, 4ம் பாதம்:- நுரையீரல் மார்பு, வயிறு கல்லீரல் |
பார்வை |
சம பார்வை (திரியங்கமுக நட்சத்திரம்) |
பாகை |
80.00 - 93.20 |
தமிழ் மாதம் |
ஆனி ( 1, 2, 3 பாதங்கள்), ஆடி (4 பாதம்) |
நிறம் |
மஞ்சள் |
இருப்பிடம் |
நெற்குதிர், பட்டினம். |
கணம் |
தேவ கணம் |
குணம் |
சாத்விகம். |
மிருகம் |
பெண் பூனை |
பறவை |
அன்னபட்சி |
மரம் |
பாலில்லாத மூங்கில் மரம் |
மலர் |
மல்லிகை |
தமிழ் அர்த்தம் |
திரும்ப கிடைத்த ஒளி |
தமிழ் பெயர் |
கழை |
சராதி நட்சத்திரப்பிரிவுகள் |
சரம் |
நாடி |
தட்சிண பார்சுவ நாடி. |
ஆகுதி |
தேன், நெய் |
பஞ்சபூதம் |
நீர் |
நைவேத்யம் |
வெல்ல சாதம் |
தேவதை |
ஸ்ரீ ராமன் |
அதி தேவதை |
அதிதி, தேவதைகள் |
அதிபதி |
குரு |
நட்சத்திரம் தன்மைகள் |
ஆண் நட்சத்திரம், சவ்விய நட்சத்திரம், |
உருவம் |
வில் |
மற்ற வடிவங்கள் |
வில், இரட்டை நட்சத்திரம் |
மற்ற பெயர்கள் |
கரும்பு, புனர்தம்பாலை, ஆவனம், மூங்கில், வேய், கண், திகிரி, கடை |
வழிபடவேண்டிய தலம் |
திருந்து தேவன் குடி - கும்பகோணம், திருவெண்ணெய் - நல்லூர் |
அதிஷ்ட எண்கள் |
1, 3, 7. |
வணங்க வேண்டிய சித்தர் |
வாத்ஸாயனா, சித்தர் தன்வந்தரி |
பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் |
வே, வோ, கா, சீ |
அதிஷ்ட நிறங்கள் |
பொன்னிறம், ஆரஞ்சு |
அதிஷ்ட திசை |
வடக்கு |
அதிஷ்ட கிழமைகள் |
வியாழன், ஞாயிறு |
அணியவேண்டிய நவரத்தினம் |
கனகபுஷ்பராகம் |
அதிஷ்ட உலோகம் |
தங்கம் |
வெற்றி தரும் நட்சத்திரங்கள் |
சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம். |
நட்சத்திரங்களில் தோன்றியவர்கள் |
ஸ்ரீராமன், வசிஷ்ட மகரிஷி, ஸ்ரீமுதலியாண்டார், ஸ்ரீஎம்பெருமாள், குலசேகராழ்வார் |
குலம் |
வைசியகுலம் |
புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள் |
ஆர்த்தம் |