ஜோதிடம் பாடம் -4 பக்கம் -12

பன்னிரண்டாம் வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள்


1ம் வீட்டில் இருந்தால்:

 • ஜாதகன் மெலிந்த தேகத்துடன் அழகான தோற்றதுடனும் மனதில் துணிவின்றி இருப்பர் .
 • சிலருக்கு  நல்ல உணவு, நல்ல நித்திரை,  நல்ல செலவு செய்து வசதி வாய்ப்புகள்  பெற்று வாழ்வர் 
                                                                                                                                   மேலும் படிக்க..

ஜோதிடம் பாடம் -4 பக்கம் -11

பதினொன்றாம் வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள்1ம் வீட்டில் இருந்தால்:

 • அதிகம் படித்தவராகவும், சாதுர்யமாகப் பேசும் திறனுடையவராகவும் செல்வத்துடனும், செல்வாக்கு இருப்பர்.
 • எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவர்
 • நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்


                                                                                                                                மேலும் படிக்க..

ஜோதிடம் பாடம் -4 பக்கம் -10

    பத்தாவது வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள்
1 ம் வீட்டில் இருந்தால்:

 •  சுயமுயற்சியால் கடின உழைப்பாளியால்  தீவிரமாக தொழில் செய்து  முன்னேற்றம் காண்பர். 
 • சொத்துக்கள் கல்வி தான தருமங்களுடன் அரசாங்கத்தில் உயர்பதவிகளில் இருப்பர்.இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு  கிடைக்க பெறுவர் 
   

                                                                                                                               மேலும் படிக்க..

ஜோதிடம் பாடம் -4 பக்கம் -9

ஒன்பதாவது  வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள்


1  ல் இருந்தால்:

 • பெரியவர்களிடமும், குரு, தெய்வம் ஆகியோரிடம் நம்பிக்கையுடையவராக இருப்பர். 
 • தெய்வ நம்பிக்கையோடும் ,தான தருமங்கள் செய்பவராகவும் இருப்பர். 

                                                                                                                               மேலும் படிக்க..

ஜோதிடம் பாடம் -4 பக்கம் -8

எட்டாம்  வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள்


1ம் வீட்டில் இருந்தால்:

 •  கடன் தொல்லையால் அவதிப் படுவர்.
 •  துரதிஷ்டசாலியாகவும், . உடல் மிகவும் பலகீனமாகவும் கடன் வறுமை வியாதிகளுடன் இருப்பர் 

                                                                                                                                   மேலும் படிக்க..

ஜோதிடம் பாடம் -4 பக்கம் -7


ஏழாம்  வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள்
1ல் இருந்தால்:
 • நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.
 • பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவும்  பெண்கள் அன்பு வைத்துவராகவும்  இருப்பர். 

                                                                                                                                  மேலும் படிக்க

ஜோதிடம் பாடம் -4 பக்கம் -6

ஆறாம் வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள்


1 ஆம் வீட்டில் இருந்தால்:

 •  சதா வியாதிகளும் நோய் நொடிகளுடன்   தைரியமில்லாதவராகவும் இருப்பர் . 
 • தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்த குடும்ப வாழ்கை வாழ்வர் 
 • எதிரிகளால் பண இழப்புக்கள் ஏற்படும்.

ஜோதிடம் பாடம் -4 பக்கம் -5

ஐந்தாம்  வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள் விவரம் :

  1 ஆம் வீட்டில் இருந்தால்:
  • சுப பலனாக இருந்தால் குழந்தை பாக்கியம் பெற்றவனாகவும் அந்த குழந்தைகள் நல்ல பெயர் பெற்று நலமுடன் வாழ்வர்
  • தெய்வ அனுக்கிரகம்,  தலைமைப் பதவி சிலருக்கு அரசங்க பதவி,  நிறைய வேலை ஆட்கள் பெற்று சிறப்புடன் வாழ்வர்.
  • தீய கிரங்கங்களின் சேர்கைபார்வை  இருந்தால்  எதிர்மறையான பலன்கள் மற்றும் துர்தேவதைகளை வசியம் செய்பவராக இருப்பர்.

  ஜோதிடம் பாடம் -4 பக்கம் -4

  நான்காம்  வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள் விவரம் :
  1 ஆம் வீட்டில் இருந்தால்:

  • மிகுந்த படித்தவராக இருப்பர்.
  • சுப பலன் பெற்று இருந்தால் உயர்ந்த அந்தஸ்துடன் கூடிய பதிவி  அமைய பெற்று இருப்பர

                                                                                                                                    மேலும் படிக்க..

  ஜோதிடம் பாடம் -4 பக்கம் -3  மூன்றாம் வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள் விவரம் :

  1ம் வீட்டில் இருந்தால்:
  • இளைய சகோதர சகோதிரி   விருத்தி, ஆதரவு  ஏற்படும்
  • பல வேலையாட்களை  வைத்து வேலை வாங்கும்படியான அதிகாரம் யோகம்  கிடைக்கும்
  • சங்கீதம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும். 
  • பொன் , வைரம்  முதலான நகைகளை   பெறுவார்களாக  இருப்பர் 

                                                                                                                                   மேலும் படிக்க..

  2ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்  இரண்டாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :


  1ம் வீட்டில் இருந்தால்:
   • நன்றான குடும்ப வாழ்க்கை அமையும் சுயமாக சம்பாதித்து முன்னுக்கு வருவார்.
   • வாக்குவன்மையுடன் , செல்வமும் செல்வாக்குயுடன், அறிவாளியாகவும் நீண்ட ஆயுளுடன், நல்ல கண் பார்வையுடனும் இருப்பர்
  2ம் வீட்டில் இருந்தால்:
   • குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும்.
   • பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மொத்தத்தில் கொடுத்துவைத்தவர்.
   • சத்திய வாக்கு வன்மையுடன் கண்டிப்பாக பேசுபவராகவும் இருப்பர்(வாக்குக்கு கட்டுப்பட்டவர்)

  மேலும் படிக்க...

  இலக்கினாதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்  சென்ற பாடத்தில் 9 கிரகங்களின் காரகத்துவத்தையும் , 12 ராசிகளும் எதைக் குறிக்கிறது என்பதையும் பார்த்தோம்.
  இந்த பாடத்தில் ஒவ்வொரு வீட்டின் அதிபதிகள் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம்


  லக்கினம்:

  ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம் .

  1. லக்கினாதிபதி 1ம் வீட்டில் (லக்கினத்திலே) இருந்தால்:

   • லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதோவது லக்னத்திலே இருந்தோல் அவர் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கிறார் என்று பொருள்
   • ஜாதகர் சுதந்திர மனப்பான்மையுடனும் தன் விருப்பம் போல் வாழ்பவராகவும் இருப்பர். யாருடைய உபசாரணையும் கேட்க மாட்டார்.
   • நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர்
   • சொத்துக்*கள், புகழ், வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வர். தெய்வ
   • நம்பிக்கையும் கொண்டவராக இருப்பர். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நன்கு பழக கூடியவராக இருப்பர்.
  2. லக்கினாதிபதி 2ம் வீட்டில் இருந்தால்:
   • 2-ம் வீட்டில் அதாவது வாக்குஸ்தானத்தில் லக்கினாதிபதி இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் ,சுய சம்பாத்தியம் பெற்று இருப்பார்
   • நல்ல குடும்பத்தில் பிறந்தவராகவும் குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர்.
   • சபையில் அவருக்கென்று தனி மரியாதையை இருக்கும்.
   • தனது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். செல்வமும் செல்வாக்கும் மிகுந்தவர்.
   • மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்தவராக வாழ்வார்.

  மேலும் படிக்க...


  ஜோதிடம் பாடம் -3 பக்கம் -3
  ஒன்பதாம் வீடு(Nineth House):
  1. இதை தகப்பனர் ஸ்தானம் என்பர்
  2. போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது
  பத்தாம் வீடு (Tenth House):
  1. இந்த வீட்டை தொழில் ஸ்தானம் (அ ) ஜீவன ஸ்தானம் என்பர்.
  2. ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல முடியும்
  3. மேலும் இந்த வீட்டை கர்மஸ்தானம் என்பர் (தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும்)
  4. மேலும் ஒருவரின் எஜமானர், அரசாங்கம் நிலை(அரசியல் நல்லபடியாக இருக்குமா?) இந்த வீட்டை வைத்துதான் சொல்வர்கள் .
  பதின்னென்றாம் வீடு (Eleventh House):
  1. இந்த வீட்டை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் பற்றி அறிய உதவும் வீடு .
  2. மூத்த சகோதரத்தைப் பற்றியும் மற்றும் நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். (7ம் வீடு நண்பர்களையும் குறிக்கும் வீடு )
  பத்திரண்டாம் வீடு (Twelveth House):
  1. இந்த வீட்டை மோட்ச ஸ்தானம் என்என்பர் .
  2. மேலும் இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும்.
  3. துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், , மறைமுக எதிரிகளையும் , ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.
  4. கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை .ஆகியவையும் இந்த வீட்டை சொல்ல வேண்டும்.

  நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும்.
  மற்றவை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.  ஜோதிடம் பாடம் -3 பக்கம் -2
  ஐந்தாம் வீடு(Fifth House) :

  1. இதை புத்திர ஸ்தானம் (குழந்தை பாக்கியம் ) என்பர் .
  2. மேலும் இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் (சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அரிதல் ) என்றும் கூறலாம் .
  3. மாமன்மார்கள் மற்றும் மாமன்மார்களின் உறவு பற்றியும் அறியலாம் .
  4. ஆன்மீக வாழ்க்கையையும் மற்றும் கலை துறையில் நாட்டம் உள்ளதா என்பதை பற்றி அறியவும் எந்த வீடு உதவும்.
  5. ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம்.
  ஆறாம்வீடு (Sixth House):
  1. ஆறாம்வீட்டை ரோகஸ்தானம் அல்லது பகைஸ்தானம் என்பர்.
  2. கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள், கவலைகள், துக்கங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம்.
  ஏழாம்வீடு (Seventh House):
  1. இந்த வீட்டை களத்திர ஸ்தானம் என்பர்
  2. திருமணம், வியாபாரம் மற்றும் மரணத்தை குறிக்கும் வீடு இதுதான் .
  3. பிரயாணத்தை இந்த வீட்டை கொண்டும் குறிக்கலாம்
  எட்டாம் வீடு (8th House):
  1. இந்த வீட்டை "துஸ்தானம்" என்பர் .
  2. ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம்.
  3. அவமானம், கண்டம், மரணம், கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம்.,பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான்.
  4. துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான்.


  ஜோதிடம் பாடம் - 3
  இனி எப்படி ஜாதகத்தை வைத்து பலன் சொல்வது என்பதை இனி வரும் படங்களில் பார்ப்போம் .
  இலக்கினம் தான் (ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான்)முதல் வீடு எனப் படும். உதாரணத்திற்கு ஜாதகத்தில் கும்பம் தான் லக்கினம் என்றால் அதுதான் முதல் வீடு ஆகும் .. அடுத்த வீடு மீனம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் மகரம் தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு.அதைப்பற்றி இப்போது பார்ப்போம் .

  முதல் வீடு (First House)(லக்கினம்):

   1. உடல்வாகு - நிறம், உருவம், உயரம், உடல் தோற்றம் ( color, figure, height, physical appearance)
   2. குணாதிசயங்கள் (Characteristics)
   3. குழந்தைப் பருவம் (Childhood)
   4. உடல்நலம் (உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடுதான்) (Heath)
   5. சுற்றுச்சூழல் (ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும்)

   6. மன வலிமை,வெற்றி, புகழ் & அவதூறு, ஆளுமை (Mental strength, Success, Slander, Personality)

  முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.


  இரண்டாவது வீடு (Second House):
   1. இது (Family) குடும்பத்தைக் குறிக்கிறது.
   2. பொருளாதாரம் (Economy)( பணவரவு, செலவு போன்றவை ,அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் , வங்கியில் உள்ள பண நிலைமை போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.) இதை தனஸ்தானம் என்பர் .

   3. இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.
    ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும்.


  மூன்றாம் வீடு :
   1. சகோதர ஸ்தானம் (இளைய உடன்பிறப்புகள்)(Younger siblings)
   2. தைரியம்(Courage)(எதிரியை வெற்றி கொள்ளும் திறமை)
    இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.

   3. அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்து பலன் கூறலாம்.

   4. உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது.
  நான்காம் வீடு(Fourth House) :
   1. இது தாயார் ஸ்தானம் (Mother)என்பர் .
   2. அசையா சொத்து மற்றும் வாகனம் (Immovable property and vehicle) (ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் )

   3. உயர் கல்வி (Higher Education)
   4. சிலர் பெண்களின் கற்பு (Chastity)மற்றும் தாயின் ஒழுக்கம் பற்றியும் குறிக்கும் என்பர்.  ஜோதிடம் பாடம் -2 பக்கம் -2
  தசாபுத்தியை பற்றி இந்த படத்தில் பார்ப்போம் .

  நமது இந்து (Hindu) மதம் மறு பிறவியை (Rebirth) வலியுறுத்துகிறது. உடலுக்குத்தான் (body)அழிவே தவிர ஆன்மாவிற்கு (Soul)இல்லை. உடலில் இருந்து உயிர்போன பின்பு உடல் அழிக்கப் படுகிறது.ஆனால் ஆன்மாவோ வேறு வடிவம் எடுக்கிறது. இது தான் நமது இந்து மத தர்மம் (Hindu Dharama). இந்தப் பிறவியில் நாம் வாழ்வதோ தாழ்வதோ போனபிறப்பில் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்தே அமைகிறது. நாம் அனுபவிக்கும் நல்லது, கெட்டதை தான் ஊழ்வினை என்பர்.

  ஒரு ஜாதகர் பிறக்கும் நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசை தான் அந்த ஜாதகரின் ஆரம்ப தசை ஆகும் பிறகு தசை சில ஆண்டுகள் அல்லது மாதங்களில் அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் . ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்


  போன பிறவியில் (Before this birth) ஒருவர் சூரிய திசையில் இறந்தால் மறுபிறவில் அதே திசையில் பிறந்து இந்த பிறவியின் பிரயாணத்தைத் தொடருவார் என்பது ஒரு ஆதிகம் . எனவே திச-புத்தி மிக முக்கியம் ஆகும்.அதே போன்று போனஜென்மத்தில் செய்த நற்காரியங்களுக்கு இப்பிறவியில் நல்ல பிறப்பு , நற்பயன்கள் எற்படும் . போன ஜென்மத்தில் ந்ல்லது செய்தோமா இல்லையா என்பதை ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லிவிடலாம்.
  பிறப்பு இருப்பு திசை என்று உங்கள் ஜாதகத்தில் குறித்து இருப்பார்கள்
  ஜோதிடம் பாடம் -2
  சூரியன் (Sun) முன்பு பூமி(Earch) சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு லக்கினம் (Laginam)எனப்படும்.
  ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

  லக்கினம் எப்படி கணிப்பது என்பது பெரிய கணிதம். நாம் அவற்றை பின்னால் பார்க்கலாம். நமது ஜாதகத்தை எடுத்தல் "ல" என்று போட்டு இருப்பதுதான் லக்கினம்.

  லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால் ஒவ்வொரு ராசியும் 2, 3, 4 ,5 ,6, 7, 8, 9, 10, 11, 12 என்று வரிசைப்படி வரும். லக்கினத்தை வைத்துதான் ஜாதகம் கணிக்கப் படுகிறது

  ராசி (Rasi)கட்டம் :

  எந்த ஜாதகத்தை கையில் எடுத்துப் பார்த்திர்கள் என்றால் அதில் பொதுவாக இரண்டு கட்டங்கள் போடப்பட்டிருக்கும் அவற்றில் ஒன்று ராசிகட்டம் (Rasi) மற்றொன்று அம்சம் கட்டம் (அம்சம் என்பது நவாம்சம்) (Amsam or NavaAmsam) என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
  இந்த ராசிச் கட்டத்தில் "ல" என்று குறிப்பிடப்பட்டு குறுக்கு வாக்கில் ஒரு கோடு போட்டிருப்பார்கள் இதைத்தான் லக்கினம் என்று குறிப்பிடப்படுகிறது.
  மேஷம் (Mesham) முதல் மீனம் (Meenam) வரையில் எங்கு சந்திரன் (Moon) இருக்குகிறாரோ அதுதான் ராசியாகும் . உதாரணத்திற்கு ஒரு ராசி (Zodiac) கட்டம் பார்க்கவும் .


  நவாம்ச (Nava Amsam)கட்டம் :

  ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம். குறிப்பாக திருமணத்தின் (For Marriage Time) போது இந்த கட்டத்தை பார்ப்பார்கள் அதாவது இது கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்.

  நவாம்சம் இல்லாமல் ஜோதிடரால் துல்லியம்மாகப் பலன் சொல்ல முடியாது. எனவே ராசி கட்டத்திற்கு அடுத்தபடி நவாம்ச கட்டம் மிக முக்கியம் .
  கட்டத்தை சக்கிரம் என்று ஜோதிடத்தில் சொல்வார்கள் .மேலும் ஜோதிடத்தை மிக துல்லியமாக சொல்வதற்கு மேலும் சில கட்டங்கள் (சக்கிரங்கள்) உள்ளன .

   • பாவம்
   • திரேக்காணம்
   • ஓரை
   • திரிசாம்சம்
   • சப்தாம்சம்
   • சஷ்டியாம்சம்.