Showing posts with label தகப்பனர் ஸ்தானம். Show all posts
Showing posts with label தகப்பனர் ஸ்தானம். Show all posts

ஜோதிடம் பாடம் -3 பக்கம் -3


ஒன்பதாம் வீடு(Nineth House):

  1. இதை தகப்பனர் ஸ்தானம் என்பர்
  2. போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது
பத்தாம் வீடு (Tenth House):

  1. இந்த வீட்டை தொழில் ஸ்தானம் (அ ) ஜீவன ஸ்தானம் என்பர்.
  2. ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல முடியும்
  3. மேலும் இந்த வீட்டை கர்மஸ்தானம் என்பர் (தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும்)
  4. மேலும் ஒருவரின் எஜமானர், அரசாங்கம் நிலை(அரசியல் நல்லபடியாக இருக்குமா?) இந்த வீட்டை வைத்துதான் சொல்வர்கள் .
பதின்னென்றாம் வீடு (Eleventh House):

  1. இந்த வீட்டை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் பற்றி அறிய உதவும் வீடு .
  2. மூத்த சகோதரத்தைப் பற்றியும் மற்றும் நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். (7ம் வீடு நண்பர்களையும் குறிக்கும் வீடு )
பத்திரண்டாம் வீடு (Twelveth House):

  1. இந்த வீட்டை மோட்ச ஸ்தானம் என்என்பர் .
  2. மேலும் இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும்.
  3. துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், , மறைமுக எதிரிகளையும் , ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.
  4. கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை .ஆகியவையும் இந்த வீட்டை சொல்ல வேண்டும்.

நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும்.
மற்றவை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.

முன்புறம்,     1,       2,      3