மீனம் (Pisces)


 

ராசியின் தன்மைகள் :

பெண் ராசி அல்லது இரட்டை ராசி
நீர் ராசி
உபய ராசி ( மந்தமான தன்மையை குறிக்கும்)
தெற்கு ராசி (South)
அதிபதி : குரு
ஊமை ராசி
தூர அளவு : 330" to 360"
நட்சத்திரங்கள் : புரட்டாதி 4 பாதம் , உத்திரட்டாதி , ரேவதி
ஜாதி : பிராமண ஜாதி
உருவம் : மீன்
நிறம் : பச்சை
உடல் அமைப்பு (Type of Body or structure of Body):

அழகிய அங்கலட்சணத்துடனும், தோற்றத்துடனும் இருப்பார்கள். நடுத்தர உயரம் உடையவர்கள். ஏர் நெற்றி, நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். கண்கள் மீன் போன்று புருவங்கள் வில் போன்றும் அழகாக இருக்கும். கனிந்த பார்வையுடனும் மலர்ந்த முகத்துடனும் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள்.

குணங்கள் (General Characteristics):

தான் செய்த காரியங்கள், செய்ய போகும் காரியங்கள் எதையும் வாய்விட்டு சொல்ல மாட்டார்கள். எவரிடமும் மனம் விட்டு பழக மாட்டர்கள். பயந்த சுபாவம் உடையவர்கள். கல்வி அறிவு, தெய்வ வழிபாடுகள், ஆசார அனுஷ்டங்கள் ஆகியவை பற்றி நன்கு அறிந்து இருப்பர், என்றாலும் அதை வாழ்க்கையில் கடைபிடிக்க மாட்டார்கள். பிறர் பொருள்களை அபகரிக்கும் குணம் உடையவர்கள். கற்பனை உலகில் மிதப்பவர்கள். மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைப்பார்கள். கெட்ட பழக்கங்கம், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகி விடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஓருவரிடம் அன்பாக பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகி விடவும் செய்வார்கள்.

மணவாழ்க்கை (Marriage Life):

விருப்பத்திற்கேற்றவாறே மணவாழ்க்கையும் அமையும். திருமணம் நடைபெற சற்று தாமதமாகும். தாமதப்பட்ட மணவாழ்க்கை நல்லது. பெரும்பாலான இந்த ராசி ஆண்களுக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

பொருளாதாரம் (Economy):

நல்ல செல்வம், செல்வாக்கு சந்தோஷங்கள் பெற்று இருந்தாலும் எதிர்பாராதவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டு சிரமமான வாழ்க்கையை வாழ நேரிடும். புகழ்ச்சிக்கு இவர்கள் அடி பணிவதால் இவரை புகழ்ந்தால் போதும். மற்றவர்களுக்கு அள்ளி கொடுத்துவிடுவார்கள். எத்தகைய துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தம் வாழ்வின் வசதிகளை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களையே விரும்பி அணிவார்கள். நடனம், நாடகம், லாட்டரி, ரேஸ் முலம் லாபம் கிட்டும். இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகவே எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்றாலும் கடன்களாலும் அடிக்கடி தொல்லைகளை எதிர்கொள்வார்கள்.

புத்திரபாக்கியம் (Children):

குழந்தை பாக்கியம் குறைவாக இருக்கும். சிலருக்கு பெண் குழந்தைகள் பிறக்கும். புத்திரர்களால் பேரும், புகழும், செல்வம், செல்வாக்கும், மீன ராசிக்காரர்கள் பெற்றிடுவார்கள். சிலர் பிள்ளையே பிறக்காத நிலையால் தத்து பிள்ளைகளை எடுத்து வளர்ப்பதும் உண்டு.

தொழில்கள் (Business or Jobs):

இவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்கலாம். தெய்வீக, ஆன்மீக காரியங்களில் ஈடுபாட்டுடன் செயல்படுவதால் அதன் மூலமும் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். பேங்க், வட்டிக்கடை, நகை வியாபாரம், அரசு அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். ஜோதிடர்கள் பெரும்பாலும் மீன ராசியினராக இருப்பார்கள். இரக்கம் மற்றும் பச்சாதாபம் தேவைப்படும் துறைகளில் இவர்களின் உள்ளுணர்வு உதவுகிறது. கலைஞர், செவிலியர், உடல் சிகிச்சை, வள்ளல், கால்நடை மருத்துவர், உளவியலாளர் சிறந்த வேலைகள் எனலாம்.

நோய்கள்:

நோய் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள், சித்த பிரமை, குடிபழக்கத்தால் வரும் நோய்கள் ஆகியவை உண்டாகும்.

கும்பம் (Aquarius)


 

ராசியின் தன்மைகள் :

ஆண் ராசி அல்லது ஒற்றை ராசி
காற்று ராசி
ஸ்திர ராசி ( நிலைத்திருக்கும் தன்மை யை குறிக்கும்)
தெற்கு ராசி (South)
அதிபதி : சனி
தூர அளவு : 300" to 330"
நட்சத்திரங்கள் : உத்திராடம் பாதம் - 2, 3, 4 , சதயம், புரட்டாதி 1, 2, 3 பாதங்கள்
ஜாதி : வைசிய ஜாதி
உருவம் : குடம்
நிறம் : பச்சை


உடல் அமைப்பு (Type of Body or structure of Body):
மெலிந்த தேகத்துடன் குறைந்த உயரத்துடன் இருப்பார்கள். உருவ அமைப்பில் புருவங்கள் அழகாகவும், வளைந்து, நெற்றி நடுப்பக்கம் சாய்ந்து, உதடுகள் மூடியும், மூக்கு அகன்றும் காணப்படும். எப்பொழுதும் முகத்தில் புண் சிரிப்போடு சரளமாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள். கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியாகவும் இருக்கும்.

குணங்கள்(General Characteristics):
மற்றவர்களிடம் காணும் சிறு குறைகளை அடிக்கடி இழிவாக பேசி, பிரசாரம் செய்து வருவார்கள். தன்னை பற்றி பெருமையாக அவர்களே பேசிக் கொள்வார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள். புதுமையான விஷயங்களை ஆராய விரும்புவார்கள். மேலும் துணிச்சலான செயல்களில் ஈடுபட விரும்புவார்கள். மற்றவர்கள் செய்யும் உதவியை உடனே மறந்து விடுவார்கள் மேலும் பரபட்ஷம் பார்க்காமல் உடனே உதவி செய்தவர்க்கு தீங்கு செய்வார்கள். பொது ஜனங்களின் நட்பை எளிதில் பெறுவார்கள்

மணவாழ்க்கை (Marriage Life):
மணவாழ்க்கையப் பொறுத்தவரை வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் நல்ல உயர்வுகளைப் பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும. என்னதான் சொத்துக்களும் வசதிகளும் ஏற்பட்டாலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற பூசல்களும் உண்டாகும். இருவருக்குமே விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்காது. இதனால் குடும்பத்தில் நிம்மதி என்பது குறைவாகவே இருக்கும்

பொருளாதாரம் (Economy):
எவ்வளவு படித்தாலும், மேதையாக இருந்தாலும் பிரபலமாக இருப்பது என்பது மிக கடினம். பண வரவுகள் போதுமென்ற அளவிற்கு தாராளமாக கிடைக்கும். பண பற்றாக்குறை ஏற்படாது என்றாலும் சேமிக்கும் அளவிற்கு இருக்காது. யாருடைய பணமாவது இவர்களது கையில் புழங்கி கொண்டுதான் இருக்கும் வரவுக்கு மீறிய செலவுகளோ, ஆடம்பரமான செலவுகளோ செய்யமாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நியாயமான செலவுகளையே செய்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் பணத்தை பாடுபட்டு சேர்த்திடுவார்கள். வாழ்க்கையில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் அவற்றை பற்றி பெரிய அளவில் காட்டி கொள்ளாமல் வாழ்வார்கள்.

புத்திரபாக்கியம் (Children):
புத்திர பாக்கியம் குறைவு மற்றும் பெண்குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளால் இவர்கள் மேம்மையும் புகழும் அடைவார்களே தவிர பிள்ளைகளால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

தொழில்கள் (Business or Jobs):
வழக்கத்திற்கு மாறான ஒரு வேலையைச் செய்ய விரும்புவார்கள். சிந்தனை மற்றும் இயக்கத்தின் சுதந்திரம் தேவை என்ற கருத்தைக் கொண்டிருப்பார்கள். உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. எங்கு இருந்தாலும் இருந்த இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். விஞ்ஞானி (அவர்கள் புதிய கோட்பாடுகளை ஆராய முடியும் என்பதால்), கண்டுபிடிப்பாளர், கரிம விவசாயி, விமானி, வடிவமைப்பாளர், இசைக்கலைஞர் போன்றவை சிறந்த தொழில் எனலாம்.

நோய்கள்:
கை, கால்கள் பாதிப்பு, இருதய இயக்கத்தில் ஒழுங்கின்மை, மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு, நரம்பு தளர்வு போன்ற நோய்கள் வரக்கூடும்

மகரம் (Capricorn)



ராசியின் தன்மைகள் : 

பெண் ராசி அல்லது இரட்டை ராசி
நில ராசி
சர ராசி ( நிலையில்ல தன்மையை குறிக்கும்)
தெற்கு ராசி (South)
அதிபதி : சனி
உச்சம் : செவ்வாய்
நீசம் : குரு
தூர அளவு : 270" to 300"
நட்சத்திரங்கள் : உத்திராடம் பாதம் - 2, 3, 4
நான்கு கால் ராசி
ஜாதி : சூத்திர ஜாதி
உருவம் : முதலை
நிறம் : கருப்பு

 உடல் அமைப்பு (Type of Body or structure of Body):

மகர ராசியில் பிற்ந்தவர்கள் நடுத்தர உயரம் உடையவர்களாகவும் கழத்தும் தலையும் சற்று நீண்டதாகவும் இருக்கும். கொழு கொழு என்று இருக்க மாட்டார்கள். 16 வயதுக்கு மேல் நன்கு வளர்வார்கள். புருவங்கள் அடர்ந்து வளைந்து காணப்படும். காதுகள் நீண்டும், தோள்கள் விரிந்தும் அமைந்திருக்கும். இவர்களின் எலும்புகளும் மூட்டி பாகங்களும் எடுப்பாக தோற்றம் அளித்தாலும் அழகானதாக இருக்கும். 

குணங்கள் (General Characteristics):

கல்வி கேள்விகளில் சிறந்ததும்  தெய்விக வழிபாடுகள் அறிந்தவராக இருப்பார்கள். வாசனை திரவியங்களில் பிரியமும்  ஆடை ஆபரணங்களில் பிரியமும், அந்தஸ்துக்கு ஏற்ற இடங்களில் ஆகாரம்  கொள்வதும்  யாரையும் லட்சியம்  தன் இஷ்டத்திற்கு காரியங்கள் செய்வார்கள். கள்ளம் கபடமில்லாத உள்ளம் கொண்டவர்களாகவும் அழுத்தம் திருத்தமாக பேசுபவராகவும் இருப்பார்கள். பேச்சில் முன்கோபமும், உறுதியும் இருக்கும். இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும். மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் இரண்டு வித ஆதாயங்களை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள் என்பதால் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி எதையும் சாதிப்பார்கள். சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்டவர்கள். வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடுவார்கள். தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற நோக்கத்துடன் இருப்பார்கள்

மணவாழ்க்கை (Marriage Life):

மண வாழ்க்கையை பொறுத்தவரை இவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே நடக்கும். காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகளே மிக அதிகம். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் மன ஒற்றுமையுடன் இணை பிரியாத குடும்ப நிர்வாகத்தை சிறப்பாகவும் சிக்கனமாகவும் செய்வார். வாழ்க்கை துணையிடம் அதிக பிரியமும் அவர்களின் போக்கின்படி நடந்து கொள்ளும் சுபாவம் உடையவர்கள். மேலும் வாழ்க்கைத் துணை கலாரசனை மிக்கவராக இருப்பார். இவர்களைவிடவும் நிதானமாக யோசித்துச் செயல்படுபவராக இருப்பார். உங்களின் வேகமான செயல்பாடுகளை விவேகத்துடன் சமாளிப்பார். வாக்கு சாதுர்யம் பெற்றிருப்பார்.

பொருளாதாரம் (Economy):

இவர்களுக்கு பண வரவுகள் தேவைக்கேற்ப அமையும். உழைப்பாற்றலால் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவார்கள். பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் இவர்களுக்கு பயன்படாது. ஆடம்பர செலவுகளை செய்வார்கள். இதனால் அவர்களுக்கு சேமிப்பதென்பது இயலாத காரியமாகும். பிறக்கும் பொது செல்வத்துடனும், நடுத்தர வயதில் சில சிரமங்களையும் அனுபவித்து பிற்காலத்தில் சொத்து சுகங்களுடன் சந்தோஷமாக குடும்பத்தை நடத்துவார்கள்

புத்திரபாக்கியம் (Children):

குழந்தை பாக்கியம் தாமதப்படும். பெண் குழந்தகளால் ஆதாயம் உண்டு. ஆண் குழந்தகளால் எந்த ஒரு ஆதாயம் கிடைக்காது. கடைசி காலத்தில் கூட ஆண் பிள்ளைகள் வைத்து காப்பாற்றுவார்கள் என்று கூறமுடியாது. அப்படியே இருந்தாலும் மன வேற்றுமைகளும், கருத்து வேறுபாடுகளும் நிறைந்து மனநிம்மதியின்றி வாழ நேரிடும். (தனக்கென சிறு சேமிப்பையாவது சேர்த்து வைப்பதுதான் சிறந்தது.)

தொழில்கள் (Business Jobs):

பலருக்கு வேலை கொடுக்கும் ஆற்றலை பெற்றவர்கள். எந்தவொரு துறையிலும் புகழோடும் பெயரோடும் தங்கள் லட்சியங்களிலும் படிப்படியாக முன்னேற்றமடைவார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். வாழ்வின் முற்பாதியில் கடமை தவறாது கடின உழைப்பினை மேற்கொண்டாலும் வாழ்வின் பிற்பாதியில் எல்லா சுகபோகங்களையும் சிறப்புடன் பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். மேலாளர், நிர்வாகி, பத்திரிக்கை ஆசிரியர், வங்கியில் வேலை புரிவோர், ஐடி, மற்றும் அறிவியல் சார்ந்த எதாவது ஒரு வேலை ஆகியவை சிறந்த வேலைகள் எனலாம்.

நோய்கள்:

தோல் சம்மந்தப் பட்ட பாதிப்புகள், அஜீரணத் தொந்தரவு, ரத்த கோளாறுகள், நரம்பு வலி, மன அழுத்தம், பித்த நீர் பையில் கோளாறு, சுவாசக் கோளாறு, கண் பார்வைக் கோளாற போன்ற வியாதிகளால் வர வாய்ப்பு உள்ளது.

தனுசு (Sagittarus)


ராசியின் தன்மைகள் :


ஆண்  ராசி அல்லது ஒற்றை    ராசி

உபய ராசி ( மந்தமான தன்மையை குறிக்கும்)

ஜலராசிகள்(Watery Signs)

தெற்கு ராசி (South)

அதிபதி : குரு 

நெருப்பு ராசி 

தூர அளவு : 240" to 270"

நட்சத்திரங்கள் : முலம் , பூராடம் , உத்திராடம் பாதம் - 1 

ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : குரூ(Jupiter)

உருவம் : வீல் 

நிறம் : சிகப்பு 

ஜாதி :   க்ஷத்திரிய ஜாதி


உடல் அமைப்பு (Type of Body or structure of Body):

நல்ல விகித சாரத்தில் நல்லபடியான வளர்ச்சி உடைய உடல் இருக்கும். பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். நடக்கும் போதும், நிற்கும்போதும் ஒரு பக்கம் சாய்ந்திருப்பார்கள். நீண்ட அகன்ற நெற்றி நீண்டமூக்கு, வாசிகரத் தோற்றம் ஆகியவை இருக்கும் 

குணங்கள் (General Characteristics):

பேசும் போதும் சத்தமாக பேசும் குணம் படைத்தவர்கள் என்பதால் பேசுவது மற்றவர் பார்வைக்கு கட்டளையிடுவது போல இருக்கும். பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். தனக்கு சமமாகவும் அல்லது உயர் அங்தஸ்து, பதவி, செல்வம் உடையவர்களின் நட்பை கொள்ளுவார்கள். அதே போல் தங்களுக்கு கீழோரிடம் வெறுப்பை பெறுவார்கள். வெளியே சுற்றும் பழக்கம் இருக்கும்.

மணவாழ்க்கை (Marriage Life):

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாக அமைவதுதான் நல்லது. சீக்கிரமாக மண வாழ்க்கை அமைந்தால் பலவகையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் அடிக்கடி பாதிப்படையும். இதனால் குடும்பத்தில் பிரிவும் துயரமும் ஏற்படும். வாழ்க்கை துணையால் துன்பமும் தொல்லையும் அதிகம் ஏற்படும். 

பொருளாதாரம் (Economy):

நடுத்தர வயது அடையும் போது சில சிரமங்களை அனுபவிக்க நேரிடும். ஆனால் பிந்திய வயதில் அபார கீர்த்தி சந்தோசம், செல்வ செல்வாக்குடன் பூமி வீடு, வண்டி போன்ற சொத்துக்களுடன் ஆனந்தமாக வாழ்வார்கள்

புத்திரபாக்கியம் (Children):

குறைந்த புத்திரர்கள் தான் இருக்கும்.  ஆனால் பிள்ளைகளால் நற்பலன்களும், இறுதி வரை பாசம் நேசமும் பெற்றவராக இருப்பார்கள். பிள்ளைகளால் சமுதாயத்தில் நற்பலன்களையே பெறுவார்கள். 

தொழில்கள் (Business or Jobs):

இவர்கள் தங்களுது கல்வி, அறிவு, திறமையால் உயர்பதவி, அரசாங்க பதவி பெறுவார்கள். மந்திரி, விலங்கு பயிற்சியாளர், ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், மக்கள் தொடர்பு, பயிற்சியாளர், பயணத்துடன் சமந்தப்பட்ட எதாவது ஒரு வேலை போன்றவை சொல்லாம்

நோய்கள்:

இருப்பு பாதிப்புகள் (இடுப்பு பகுதியில் சதை ), கை கால் இயங்கும் தசைகளில் இணக்கம் இன்மை, நுரையீரல் சம்மந்த பட்ட தொந்தரவுகள், தோள்பட்டை எலும்பு முறிவு போன்ற பிரச்னை வர வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்(Scorpio)




ராசியின் தன்மைகள் :

    • ராசியின் தன்மைகள் (or) இயற்கைகள் :
    • பெண் ராசி அல்லது இரட்டை ராசி
    • ஸ்திர ராசி (நிலையான தன்மையை குறிக்கும்)
    • ஜலராசிகள்(Watery Signs)
    • தெற்கு ராசி (South)
    • அதிபதி : சுக்கிரன் (Venus)
    • முரட்டு ராசி (செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் ஆகும்)
    • தூர அளவு : 210" to 240"
    • நட்சத்திரங்கள் : விசாகம் -4 பாதம், அனுஷம் , கேட்டை
    • ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : செவ்வாய்(Mars)
    • உச்சம் பெறும் கிரகம் : ராகு
    • நிச்சம் பெறும் கிரகம் : சந்திரன்(Moon)
    • பாவிகள் : புதன்(Mercury), சனி (Saturn), சுக்கிரன்(Venus)
    • நல்லவர்கள் : சூரியன், சந்திரன்(Moon)
    • உருவம் : தேள்
    • நிறம் : பச்சை
    • ஜாதி : பிராமண ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைகள் முடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டவர்கள். உடல் நல்ல விகித சாரத்தில் இருக்கும் . அகன்ற நெற்றி, அதிகாரம் செய்யும் தோற்றம், அமைதியான உருவ அமைப்பு ஆகியவை பெற்று இருப்பார்கள். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.

குணங்கள்(General Characteristics):
நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். பயந்த சுபாவம் இருக்காது. எதையும் நேருக்கு நேராக செய்வார்கள். பரந்த நோக்கங்களுடன் கொண்ட பேச்சுக்களாடு தந்திரங்களினாலும் உபாயங்களையும் கொண்டு பெரிய காரியத்தை சாதிப்பார்கள். நல்ல குணத்துடன் பழகுவார்கள் தேளின் குணம் கொண்டவர்கள் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள். நல்ல குணத்துடன் பழகுவார்கள்

மணவாழ்க்கை (Marriage Life):
இவர்கள் தன வாழ்க்கை துணையுடன் பேச்சுக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள் வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். ஆனால் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும். பொதுவாக மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும்.

பொருளாதாரம் (Economy):
பண வசதியை பொறுத்தவரை தேவையான அளவுக்கு அமையும். இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் படி படியாக முன்னுக்கு வருவதுடன் வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள். ஆடம்பர வசதிகளுக்கு ஆசைபடுபவர்கள். பொதுவாக இவர்களின் பொருளாதாரம் நிலையான தாராள தன வரவு.பெற்றதாக இருக்கும்

புத்திரபாக்கியம்(Children)
இவர்களுக்கு புத்திர பாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். பிள்ளைகள் குறைவாக இருக்கும். இவர்களின் பிள்ளைகளால் இவர்களுக்கு நற்பலன்களும், சமுதாயத்தில் பெயர், புகழும் ஏற்படும்

தொழில்கள்(Business or Jobs):
சிறு வயதிலிருந்தே சமூக சேவைகளில் ஈடுபாடு இருக்கும். எதிரிகள் தன்னை கண்டால் அஞ்சி நடுங்கும்படி கிடுக்கிபிடி போட்டு வைத்திருப்பார்கள். பிடிவாதகார்கள். சுறுசுறுப்பும்,ஊக்கமும் கொண்டவர்களாக எடுத்த காரியங்களில் திறமையும் வெற்றியும் பெற தீவிரமாக முனைவார்கள். இவர்களுக்கு சிறந்த வேலை துப்பறிவாளன், வக்கீல், கல்வியாளர், விஞ்ஞானி , அறுவை சிகிச்சை நிபுணர், இயற்பியலாளர், அரசாங்கள் வேலை போன்றவை சொல்லாம்

நோய்கள்:
சிறு நீர்ப் பிரச்னை , மலக்குடல் பிரச்னை, மூக்கு அடைப்பு, மூக்கில் நீர்க் கோத்தல், ஒழுங்கற்ற மாதவிடா மற்றும் வெண்கசிவு போன்ற கர்ப்பப்பை பிரச்னைகள் , முத்திரக்கல் போன்ற பிரச்னை வர வாய்ப்பு உள்ளது
இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது

துலாம் (Libra)




ராசியின் தன்மைகள் :

    • ஆண் ராசி அல்லது ஒற்றை ராசி
    • சர ராசி (நிலையில்ல தன்மையை குறிக்கும்)
    • ஜலராசிகள் (Watery Signs)
    • தெற்கு ராசி (South)
    • நன்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs)
    • அதிபதி : சுக்கிரன் (Venus)
    • தூர அளவு : 180" to 210"
    • ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : சுக்கிரன் (Venus)
    • உச்சம் பெறும் கிரகம் : சனி (Saturn)
    • நிச்சம் பெறும் கிரகம் : சூரியன்(Sun)
    • பாவிகள் : செவ்வாய் (Mars), சூரியன் (Sun), குரு (Jupiter)
    • நல்லவர்கள் : புதன் (Mercury), சனி (Saturn)
      (சனி ஒருவனே ராஜ யோகத்தை தருவார். சந்திரன், புதனும் சேர்ந்தால் ராஜயோகம் தருவார்கள் மேலும் குரு சேர்ந்த செவ்வாய் மாரகம் தருவார் )
    • உருவம் : தராசு
    • நிறம் : வெண்மை
    • ஜாதி : வைசிய ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
இயற்கையாகவே அழகுடன் செயற்கை அழகையும் சேர்த்து மிகவும் அழகாக தோற்றமளிப்பார்கள். மூக்கு தண்டு உயர்ந்தும், துவாரங்கள் அகன்றும் இருக்கும். இவர்களின் முகம் கவர்ச்சியாக இருக்கும். வயதான காலத்தில் தலையின் பின்புறம் வழுக்கை விழும்

குணங்கள்(General Characteristics):
துலா ராசியின் அதிபதியும், 8ம் வீட்டு அதிபதியும் சுக்கிரன் என்பதால் இவர்களின் பிரச்னைக்கு இவர்களே காரணம் ஆவார்கள். பேச்சில் ஆணித்தரமாகவும் வியாபார நோக்கங்கள் கொண்டதாக இருக்கும். பேச்சில் இவைகளை வெற்றிப் பெறுவது மிகவும் கடினம். எதற்கும் சலைக்காமல் பாடுபட்டவர்கள் என்பதால் தோல்விகளை கண்டு துவண்டு விட மாட்டார்கள். நெருங்கிவர்களை தவிர மற்றவர்களிடம் பழக மாட்டார்கள்
நீதியையும், நேர்மையையும் இவர்கள் விரும்புவதைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம், கோபம் அடைவார்கள்

மணவாழ்க்கை (Marriage Life):
விருப்பத்திற்கேற்றவாறே வாழ்க்கை துணை அமையும். திருமணத்திற்குப் பின் சுபிட்சம் நிறைந்ததாக இருக்கும். துலா ராசி ஆண்கள் சிலருக்கு 2 மனைவிகள் இருக்கலாம்.
பொருளாதாரம் (Economy):
நல்ல ஐஸ்வரியத்துடன் வீடு , பூமி போன்ற சொத்துக்களையும், வண்டி வாகனங்களையும் பெற்று இருப்பர் . ஆனால் பண வரவுகள் ஏற்றத்தாழ்வுடையதாகத்தான் இருக்கும். பலர் சிறு வயதில் கஷ்டங்களை சந்திதிருந்தாலும் பின்னர் தன்னுடைய வசதிக்காகவும், குடும்பத்தினருக்காகவும் வீடு, மனை, வண்டி வாகன வசதிகளை தன் உழைப்பால் ஏற்படுத்திக் கொள்வார்கள். நடு வயது வரை இவர்களது வாழ்க்கை போராட்ட கரமானதாகதான் இருக்கும். செலவுகள் அதிகம் இருக்கும்.
புத்திரபாக்கியம்(Children)
பொதுவாக இவர்களுக்கு புத்திர பாக்கியம் சற்று தாமதமாகப்படும் அதிகம் பெண் குழந்தைகள் யோகமே இருக்கும். பிள்ளைகளால் இவர்களுக்கு மருத்துவ செலவுகளும் கடன்களும் ஏற்பட்டு பிற்காலத்தில் அது சரியாகும்
தொழில்கள்(Business or Jobs):
மற்றவர்களின் கை கால் பிடித்து கால் பிடித்து முன்னேறுவது என்பது இவர்களுக்கு பிடிக்காது. தன் சொந்த முயற்சியாலேயே முன்னேறி விடுவார்கள். தொழில், வியாபாரம் செய்வதற்காக கடன்கள் வாங்க நேரிட்டாலும் அது கிடைக்கப் பெற்று அந்த கடனை கட்டாயம் அடைப்பார்கள். மேலும் இவர்கள் ராஜ தந்திரிகள். இவர்களுக்கு சிறந்த தொழில் நடன கலைஞர், விற்பனையாளர், தொகுப்பாளர் , பேச்சாளர், பயண முகவர், மேற்பார்வையாளர், தூதுவர் போன்றவையே சொல்லாம்
நோய்கள்:
இயற்கையாக இவர்களுக்கு சிறுநீர் கழித்தில் சிரமம், நீர்க்கட்டு, தோல் வியாதி போன்றவை இருக்க வாய்ப்பு உண்டு. கிட்னி பிரச்சனை உண்டு.
இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது

கன்னி (Virgo)




ராசியின் தன்மைகள் :

    • பெண்ராசி அல்லது இரட்டை ராசி
    • உபய ராசி ( மந்தமான தன்மையை குறிக்கும்)
    • நிலராசி (Earthy Signs)
    • வடக்கு ராசி (North)
    • வறண்ட ரசிகள் (Barren Signs)
    • மலட்டு ராசி
    • அதிபதி : புதன் (Mercury)
    • தூர அளவு : 150" to 180"
    • நட்சத்திரங்கள் : உத்திரம் -2, 3, 4 பாதங்கள்,அஸ்தம், சித்திரை -1, 2 பாதங்கள்
    • ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : சுக்கிரன் (Venus)
    • உச்சம் பெறும் கிரகம் : புதன் (Mercury)
    • நிச்சம் பெறும் கிரகம் : சுக்கிரன்(Venus)
    • பாவிகள் : சந்திரன்(Moon), செவ்வாய்(Mars), குரு (Jupiter), சுக்கிரன்(Venus)
    • நல்லவர்கள் : புதன் (Mercury)
      ( சுக்கிரன் தனியாக இருந்தால் சுபன். சுக்கிரன் புதன் சேர்ந்தால் ராஜயோகம், செவ்வாய் மாரகத்தை தருவார் . சூரியன் கொல்லான் )
    • உருவம் : பெண்
    • நிறம் : கருப்பு
    • ஜாதி : சூத்திர ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
சற்று பெண்மை கலந்த கூச்சமும் அச்சமும் இருக்கும். சுமாரான உயரமும் ஒல்லியான உடல் அமைப்பும் இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். நடை அழகுவும் வேகமாவும் இருக்கும் . கருத்த தலை முடியையும், கண்களையும் , வளைந்த புருவங்களில் அடர்த்தியான முடியையும் பெற்றிருப்பார்கள். வயதைவிட இளமையாக தோற்றம் பெற்றிருப்பார்கள்

குணங்கள்(General Characteristics):
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். தெய்வீக வழிபாடு, நீதி, நேர்மையுடைவராகவும், எக்காரியமானாலும் எத்தொழிலானாலும் செய்யும் அறிவு பெற்றவராகவும் எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவாராகவும் இருப்பார்கள் உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும் பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள்.

மணவாழ்க்கை (Marriage Life):
இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும் விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு உடையவராக இருப்பார்கள். இல்லற வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள். மெதுவான சுபாவத்தாலும் அன்பு கலந்த பேச்சு பேச்சினாலும் சிறப்பான எதிர்காலத்தை பெறுவார்கள்

பொருளாதாரம் (Economy):
போதுமான அளவு தன வரவு தாராளமாக அமையும். ஒய்வு எடுக்க விரும்பமாட்டார்கள். இல்லாத பொருளுக்கு ஏங்க மாட்டார்கள். வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். ஆனால் இவர்களின் உறவினர்களும், நண்பர்களும் இவர்களை ஏமாற்றி செல்வத்தையும், பொருட்களயும் அவகரிப்பார்கள். ஆனாலும் பொறுமை குணத்துடன், அன்பு கலந்த பேச்சிலும் எதிர்காலத்தில் சிறப்புகளை பெறுவார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது இவர்களுக்கு மிகவும் நல்லது.

புத்திரபாக்கியம்(Children)
புத்திரபாக்கியத்தை பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் . இவர்களுக்கு ஆண் குழந்தை இருந்தாலும் பெண் குழந்தைகளே அதிகம். பிறக்கும் பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்

தொழில்கள்(Business or Jobs):
இவர்களுக்கு தெரியாத கலையே இல்லை அதிலும் கலைத்துறை மீது ஈடுபாடு இருக்கும் ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள். பத்திரிக்கை ஆசிரியர் (அ) எழுத்தாளர், ஆசிரியர், விமர்சகர், தொழில்நுட்ப வல்லுநர், மொழி பெயர்ப்பாளர், துப்பறியும் வல்லுநர், புள்ளியியல் நிபுணர். ஆகியவை தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்

நோய்கள்:
சத்துக் குறைவான உணவை உட்கொள்ளவர்கள் எனவே வயிற்றில் புழுக்கள் உருவாகும். செரிமான பிரச்னை, குடல் சம்மந்த பட்ட வியாதிகள் வர வாய்ப்பு அதிகம். பொதுவாக நல்ல கிரகங்களின் பலத்தில் இருந்தால் 70 வயது வரை சுகமாக வாழ்வார்கள்

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது


சிம்மம் (Leo)




ராசியின் தன்மைகள் :

    • ஆண் ராசி அல்லது ஒற்றை ராசி
    • ஸ்திர ராசி ( நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும்)
    • நெருப்பு ராசி (Fiery Signs)
    • வடக்கு ராசி (North)
    • நான்கு கால் ராசி (சிங்கம்)
    • அதிபதி : செவ்வாய்
    • தூர அளவு : 120" to 150"
    • நட்சத்திரங்கள் : மகம், பூரம், உத்திரம் பாதம் -1
    • பாவிகள் : புதன்(Mercury), சுக்கிரன் (Venus), சனி(Saturn)
      (குரு சுக்கிரன் சம்பந்தப் பட்டால் சுகம் உண்டாகும்)
    • நல்லவர்கள் : செவ்வாய் (Mars)
      (குரு உடன் செவ்வாய் சேர்ந்தால் மிக நல்ல சுகத்தை தருவார்)
    • உருவம் : சிங்கம்
    • நிறம் : சிவப்பு
    • ஜாதி : க்ஷத்திரிய ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல உடல் பருமனாகவும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள். உடல் பருமனாக இருந்தாலும் அழகு ஆற்றவராக இருக்க மாட்டார்கள். நன்கு வளர்ச்சியடைந்த எலும்புகளும் அகன்ற தோள் மற்றும் நெற்றியும் இருக்கும். முன்கோபகாரர்கள்

குணங்கள்(General Characteristics):
தைரியமும், வாக்குவன்மையும், தெய்வ வழிபாடு, ஆசார அனுஷ்டானங்களில் ஆர்வம், கல்வியில் ஊக்கம் ஆகியவை பெற்று இருப்பார்கள். வீண் சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விடாமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். இவர்களுக்கு நியாயமாக தோன்றும் எல்லாமும் மற்றவர்களுக்கு நியாயமாக தோன்றவேண்டிய அவசியமில்லை என்பதால் நிறைய பேரின் பகைமையை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவமும் சிறிய விஷயங்களை பெரிதாக்கும் குணமும் உடையவர்கள். தன்னைவிட அந்தஸ்து குறைவானவர்களிடம் சற்று கர்வம் கொண்டவர்கள் போல் நடந்து கொள்வர் . கோபமும், படபடப்பும் தலையெடுக்கும்

மணவாழ்க்கை (Marriage Life):
பொதுவாக திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. இவர்களுக்கு சொந்தத்தில் வாழக்கை துணை அமைவதைவிட அந்நியத்தில் அமையும். வாழ்க்கை துணையுடன் மன வேற்றுமைகளுடன்தான் வாழ்க்கையை நடத்துவார்கள். சிலர் திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார்.

பொருளாதாரம் (Economy):
வருமான நிலை சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் அதிக செலவுகள் ஏற்படும் ஆடம்பரமான உடைகளை நவீன பொருட்களையும், உயர் தரமான பொருட்களையே வாங்க விரும்புபவர்கள் என்பதால் செலவுகளைப் பற்றி கவலைப்படாதவர்கள். மிகுந்த செலவாளிகளாகவும் இருப்பார்கள்.

புத்திரபாக்கியம்(Children)
பொதுவாக இவர்களுக்கு ஆண் குழந்தைகள் தான் பிறக்கும். சிவபெருமான் அருளை பெறுவார்கள் எனவே புத்திர வழியில் அனுகூலமானப் பலனையே அடைவார்கள். புத்ர பாக்கியத்துடன் வாழ்வார்கள்

தொழில்கள்(Business or Jobs):
பெரிய மனிதர்களின் நட்பும், சகவாசமும் கிடைத்து உன்னதமான பதவியில் அல்லது அரசாங்க உத்தியோகத்தில் இருப்பார்கள். படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. அரசியல் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டாலும் நல்ல பெயர் லாபம் கிட்டும். வழக்கறிஞர் பணி, சங்கீதம், கவிதை இயற்றுதல், உணவு தானியங்கள் தயாரித்தல், மூலிகை, மருந்து செய்தல் போன்றவற்றில் லாபம் கிட்டும். சற்று முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப்போவது கடினமாகும்.

நோய்கள்:
ரத்த வாந்தி, இதயம் வேகமாக துடித்தல் , மயக்கும் அல்லது சோர்வு , ரத்த சோகை ஆகியவை உண்டாக வாய்ப்புகள் அதிகம். சிறுவயதில் குறைவான உணவும் , பிறகு அதிகமான உணவுகளை உட்க்கொள்வார்கள். எனவே வேதனை தரும் இதய நோய் ஏற்படும். ஆனால் இவர்கள் சிவன் அருள் பெற்று இருப்பார்கள். பொதுவாக நல்ல கிரகங்களின் பலத்தில் இருந்தால் 80 வயது வரை சுகமாக வாழ்வார்கள்

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது


கடகம் (Cancer)




ராசியின் தன்மைகள் :

    • பெண் ராசிஅல்லது இரட்டை ராசி
    • சர ராசி ( நிலையில்ல தன்மையை குறிக்கும்)
    • ஜலராசிகள்(Watery Signs)
    • வடக்கு ராசி (North)
    • ஊமை ராசி
    • அதிபதி : சந்திரன் (Moon)
    • தூர அளவு : 90" to 120"
    • நட்சத்திரங்கள் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம் , ஆயில்யம்
    • ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : செவ்வாய் (Mars)
    • பாவிகள் : புதன்(Mercury), சுக்கிரன் (Venus), சனி (Saturn)
    • நல்லவர்கள் : செவ்வாய் (Mars), குரு (Jupiter)
    • உருவம் : நண்டு
    • நிறம் : வெண்மை
    • ஜாதி : பிராமண ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
நடுத்தர உயரம்உடையவர்கள். சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து குண்டான உடல் அமைப்பு உடையவர்கள் . பொதுவாக சிவந்த மேனியுடன் நல்ல அங்கலக்ஷணங்களுடனும் இருப்பர்

குணங்கள்(General Characteristics):
கல்வியில் திறமை, தெய்வ வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள் ஆகியவைகளை அறிந்து இருப்பர். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஜலாராசி என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. பேச்சில் சாமர்த்தியமும், பணவிஷயத்தில் சுயநலவாதிகளாகவும், தன்னைத்தானே புகழ்ந்துக் கொள்பவராகவும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தே பிரியமில்லாமல் ஆனால் பிரியம் இருப்பது போல் பழகும் சுபாவமும் உடைவார்கள்.

மணவாழ்க்கை (Marriage Life):
சலிப்பில்லாமல் உழைக்ககக்கூடிய நல்ல வாழ்க்கைத்துணை அமையும். ஆனால் கடக ராசிகாரர்கள் தங்கள் குறை கூறுதல் மற்றும் அதிகாரம் செலுத்துவார்கள். இல்வாழ்க்கை உற்சாகத்திற்கு பஞ்சம் இருக்காது. சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். தன் வாழ்நாளில் ஆடம்பர வசதியுடன் சுகபோக வாழ்க்கையை வாழ்வார்கள். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார்கள்.

பொருளாதாரம் (Economy):
4-ம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் கட்டடக்காரகராக இருப்பதால், அதிநவீனமாக வீடு கட்ட விரும்புவீர்கள். சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது. பணத்தால் நெருங்கிய பழகுபவர்களிடம் கூட பிரச்சினைகள் உண்டாகும். சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, வாசல், வண்டி, வாகனங்கள் யாவும் சிறப்பாக அமைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். கடன் வாங்க விரும்பமாட்டர்கள்.சுபகாரியங்களுக்காகவும் பொது நல காரியங்களுக்காகவும் செலவு செய்வார்கள்

புத்திரபாக்கியம்(Children)
பெண் குழந்தை யோக தான் அதிகமாக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு இருக்கும். சிலர் ஆண் வாரிசுக்காக தத்தெடுத்து வளர்ப்பார்கள். தன் குழந்தையுடன் தனி அன்பு இருக்கும். ஆனால் மற்ற குழந்தைகளிடமும் பேச்சுக்கு (மேலுக்கு) தான் அன்பு காட்டுவார்கள்

தொழில்கள்(Business or Jobs):
10-ம் இடத்துக்கு உரிய ஜீவன ஸ்தானத்துக்கு அதிபதியாக மேஷம் அதிபதி செவ்வாய் வருவதால் பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் விளங்கிறது. பெரிய பதவியிலும், வியாபாரத்திலும சிறந்து விளங்குவார்கள். மேலும் காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, சமையல், நடிப்பு, ஓவியம் தீட்டுதல், போன்ற துறைகளில் சிறந்து விளங்கிவார்கள். லாட்டரி, ரேஸ், போட்டி, பந்தயம் லாபம் கட்டாயம் கிடைக்காது.

நோய்கள்::
8-ம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி ஆதலால் தீர்க்காயுள் உண்டு. வயிற்று சம்மந்தப்பட்ட நோய்கள் , அஜீரணம், சளி, மனம் சோர்வு அடையும் மனநோய் , மஞ்சள் காமாலை , பித்தநீர்க் கற்கள் .

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது


மிதுனம் (Jemini)




ராசியின் தன்மைகள் :
    • ஆண் ராசிஅல்லது ஒற்றை ராசி
    • உபய ராசி ( மந்தமான தன்மையை குறிக்கும்)
    • காற்று ராசி (Airy sign)
    • வடக்கு ராசி (North)
    • வறண்ட ராசிகள் (Barren Signs)
    • அதிபதி : புதன் (Mercury)
    • தூர அளவு : 60" to 90"
    • நட்சத்திரங்கள் : மிருகசீரிஷம் -1, 2 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1 ,2, 3 பாதங்கள்
    • ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : புதன் (Mercury )
    • பாவிகள் : சூரியன் (Sun), குரு (Jupiter), செவ்வாய் (Mars)
    • நல்லவர்கள் : சுக்கிரன் (Venus)(சுக்கிரன் ஒருவனே நல்லவன் )
    • உருவம் : ஸ்திரீ புருஷன்
    • நிறம் : கருப்பு
    • ஜாதி : வைசிய ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
மிக அழகான மீன் போன்ற கண்கள் உடைவார்கள் கண்களாலேயே கதை பேசுவார்கள். உயரமான மேல்நோக்கி வளர்ந்த வளையாத உடம்பை உடைவர்ஆனாலும் ஒல்லியான தேகம், கால்கள் இருக்கும். மூக்கு கொஞ்சம் பெரியதாகவும், கூர்மையாகவும் இருக்கும். சுமாரான நிறம் அல்லது கருப்பாக இருப்பர் (லக்கினத்தை பொறுத்து மாறும்)

குணங்கள்(General Characteristics):
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். அதிக எண்ணங்களையும், நோக்கங்களையும் பெற்று கல்வியில் தேர்ச்சியும், கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்தியமும், சதா சிரித்து பேசும் குணமும் சுயநலவாதியாகவும் இருப்பர். பிறரை எளிதில் நம்பமாட்டார்கள். எளிதில் நட்பு வைத்துக் கொள்ளவும் அதேபோல் தொடர்பை துண்டிக்கவும் தயங்கமாட்டார்கள். சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடு இருக்கும்.

மணவாழ்க்கை (Marriage Life):
திருமண வாழ்க்கையை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட சாலிகள்தான். வாழ்க்கை துணை அழகும், அந்தஸ்தும் பெற்றவர்களாக இருப்பார்கள். இடையிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைந்து விடுவார்கள். உள்ளே பிரச்சினை இருந்தாலும் வெளிபார்வைக்கு ஒற்றுமையாகவே இருப்பார்கள்.

பொருளாதாரம் (Economy):
ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் அதிக பிரியமுள்ளவர்கள் எனவே இவர்களை சுகவாசிகள் எனலாம். வீடு, மனை, வசதியும், வண்டி,விலை உயர்ந்த நவீன பொருட்களையும், ஆடை அணிகலன்களையும் விரும்பி வாங்குவார்கள். வாகன வசதிகளும் இவர்களின் விருப்பத்திற்கேற்றவாரே அமையும். சிலர் கடன் வாங்க மற்றும் அதனால் வரும் பிரச்னைகளுக்கு கவலைப் படமாட்டார்கள்

புத்திரபாக்கியம்(Children)
சிலருக்கு குழந்தை பாக்கியம் தாமதப்படும்.சிலருக்கு பிள்ளைகளால் வீண் தொல்லைகளும், கடன்களும், வம்பு வழக்குகளும் ஏற்படும். மேலும் சிலருக்கு வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை அமையும். அவசர முடிவு எடுக்கமால் நிதானத்தை கடைபிடித்தாலே எல்லா உறவுகளை தக்கவைத்துக் கொள்ள முடியும்

தொழில்கள்(Business or Jobs):
தான் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கறாரும் கண்ணியமும் நிறைந்து இருக்கும், செல்வத்துடனும் செல்வாக்குடனும் தங்களது திறமையால் முன்னேறுவார்க்ள. எழுதுவதிலும் , கலைத்துறையிலும் ஆர்வமும், திறமையும் இருக்கும். மேலும் தொழில்நுட்ப ஆதரவு, ஆசிரியர், இயந்திர ஆபரேட்டர், மீட்பு பணியாளர், பங்குசந்தை (Share Market) போன்றவைகள் சிறந்த தொழில்கள். வெளி வட்டாரங்களில் தங்களுடைய பேச்சு திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர் என்பதால் எந்த தொழிலும் செய்த்தாலும் சிறப்பாக செய்வார்கள்.

நோய்கள்:
நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள், வறட்டு இருமல் , காய்ச்சல், காச நோய் ஆனால் ஆயுள் 70 வரையில் தீர்க்கம் என்று சொல்லாம்

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது



ரிஷபம் (Tarus)




ராசியின் தன்மைகள் :
    • பெண்ராசி அல்லது இரட்டை ராசி
    • ஸ்திர ராசி ( நிலைத்திருக்கும் தன்மை யை குறிக்கும்)
    • நிலராசி (Earthy Signs)
    • வடக்கு ராசி (North)
    • நான்கு கால் ராசி (எருது)
    • நன்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs)
    • அதிபதி : சுக்கிரன் (Venus)
    • தூர அளவு : 30" to 60"
    • நட்சத்திரங்கள் : கிருத்திகை -2, 3 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் -1, 2 பாதங்கள்
    • ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : சுக்கிரன் (Venus)
    • உச்சம் பெறும் கிரகம் : சந்திரன் (Moon)
    • நிச்சம் பெறும் கிரகம் : கேது (Kethu)
    • பாவிகள் : சூரியன் (Sun ), குரு (Jupiter)
    • நல்லவர்கள் : சுக்கிரன் (Venus ), சனி (Saturn ) (சனி ஒருவனே ராஜ யோகத்தை தருவார் )
    • உருவம் : எருது
    • நிறம் : வெண்மை
    • ஜாதி : சூத்திர ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
பருத்த உடல், நடுத்தர உயரம், அகன்ற மார்பு, கம்பிரமான மற்றும் வசீகரமான தோற்றம்

குணங்கள்(General Characteristics):
மெதுவான செயல்களையும், மந்தமான குணமும், உறுதி, பொறுமை, நேர்மை, சரியான போக்கு, சுமாரான கல்வி, கணித அறிவு உடையவர்கள். சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும் பேசும் ஆற்றல் பெற்றவர்கள்.ஆனாலும் பழக்கமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும், புதிதாக பழக்க ஏற்படுத்திக் கொள்ள சங்கடப் படுவார்கள். தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாதவர்கள். நன்னலமற்றவர்கள். குதர்க்கமாகவும்,பரிகாசமாகவும் பேசி வேண்டாதவர்களை அவமானப்படுத்துவார்கள். வேடிக்கையாகப் பேசும் குணம், புத்திரர்களிடாத்திலும், மற்றும் குழந்தகளிடத்திலும் ( children ) பிரியமாகப் பேசி பழகும் குணம் உடையவர்கள். தான் செலவு செய்யாமல் பிறரை செய்யும்படி செய்து அதில் பலன் காண்பர் . இவர்களின் பகைவர்கள் இவர்களின் பேச்சுதான். அவ்வப்போது பழைய விஷயங்களை அசைபோடுவது உங்களுக்குப் பிடிக்கும்.

மணவாழ்க்கை (Marriage Life):
சிற்றின்ப பிரியர்களாக இருப்பார்கள். திருமணம் சற்று தாமதமானாலும் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். இவர்களின் வாழ்க்கைத் துணைவர் இவர்களைவிட வேகமாக இருப்பார். நிர்வாகத் திறமையில் அதீத திறமையுடன் திகழ்வார். ஆனாலும் சில சில விஷயங்களில் இவர்களைப் புரிந்து கொள்ளாமல் வாக்குவாதம் செய்வார். வாழ்க்கை துணை எது செய்யதாலும் நம்மைக்காக தான் இருக்கும். உற்றார், உறவினர் எல்லோரையும் நேசிப்பீர்கள் மேலும் அவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

பொருளாதாரம் (Economy):
இளம் வயதில் பணத்திற்காக கஷ்டப்பட்டாலும், வளர வளர தனது சொந்த முயற்சியாலோயே தனக்கேற்ற பணத் தேவைகளை தாங்களே சரி செய்து கொள்வாரகள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள், சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, எதிர்பாராத திடீர் தன வரவுகளால் உயர்வுகள் போன்றவை உண்டாகும். எதையும் புதிதாகத்தான் வாங்குவார்கள்.

புத்திரபாக்கியம்(Children)
சிலருக்குபுத்திர பாக்கியம் சற்று தாமதமாகத்தான் அமையும். பிள்ளைகளால் வீண் கவலைகளும், தொல்லைகளும், செலவுகளும் ஏற்படுமே தவிர அனுகூலப்பலனை அடைய முடியாது பெண்குழந்தைகளாக இருந்தால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டு. பிற்காலத்தில் பெண் குழந்தைகள் ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள்.

தொழில்கள்(பிசினஸ் or Jobs ) :
சிறு வயதிலிருந்தே சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவே சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு உழைத்து படிப்படியாக உயர்வார்கள். அறிவிப்பாளர், பொது பேச்சாளர் (Public speaker), வரவேற்பாளர் (Receptionist), கணக்காளர் (Accountant, கல்வியாளர், என்ஜினியர் (Engineering), வக்கீல்(Lawyer), வடிவமைப்பாளர் (Designer), நிலம் தொடர்பான வேலை, சமையல் தொழில்(culinary profession) ஆகியவை சிறப்பாக இருக்கும். பெண்கள் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் பூமி,மனை போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில், பணம், கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் லாபம் சிறப்பாக அமையும் என்றாலும் கூட்டாளிகளை நம்பி எதையும் ஒப்படைப்பது கூடாது (நல்ல கூட்டாளிகள் அமைப்பு இல்லை)

நோய்கள்:
ரிஷப ராசியும் விருச்சிக ராசியம் நேர் இருப்பதால் பால்வினை நோய்கள், மூலம். புரைப்புண் , மலச்சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவுகள் இருக்கும் . மேலும் புளிப்பு, காரம் பிரியம் அதிகமாக இருப்பதால் குரல் வளைவில் வீக்கம், தொண்டை சம்மந்தப்பட்ட நோய்கள், வலிப்பு நோய் உண்டாகும். ஆனால் பொதுவாக 80 வயதுக்கு மேலும் சரீர சுகத்துடன் இருப்பார்கள்

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது



மேஷம் (Aries)





ராசியின் தன்மைகள் (or) இயற்கைகள் :
    • ஆண் ராசி அல்லது ஒற்றை ராசி
    • சர ராசி ( நிலையில்ல தன்மையை குறிக்கும்)
    • நெருப்பு ராசி (Fiery Signs)
    • வடக்கு ராசி (North)
    • வறண்ட ரசிகள் (Barren Signs)
    • நான்கு கால் ராசி (ஆடு)
    • முரட்டு ராசி (செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் ஆகும்)
    • மலட்டு ராசி
    • அதிபதி : செவ்வாய்
    • தூர அளவு : 0" to 30
    • நட்சத்திரங்கள் : அஸ்வனி, பரணி , கிருத்திகை பாதம் -1
    • உச்சம் பெறும் கிரகம் : சூரியன்
    • நிச்சம் பெறும் கிரகம் : சனி
    • பாவிகள் : புதன், சுக்கிரன், சனி
    • நல்லவர்கள் : குரு, சூரியன்
      (மாரக அதிபதி சுக்கிரன் கொல்லான். சனி புத்தியில் மார்கத்தை கொடுப்பான் என்று சொல்வர் )
    • உருவம் : ஆடு
    • நிறம் : சிவப்பு
    • ஜாதி : க்ஷத்திரிய ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
நடுத்தர உயரம் , ஒல்லியான தசைப்பிடிப்பு உள்ள உடல் , நீண்ட கழுத்து , அடர்ந்த நீண்ட புருவம் , கம்பிர தோற்றம்

குணங்கள்(General Characteristics):
அற்ப ஆசைகள் இல்லாதவர் வாக்கு வன்மை, கோபம், முரட்டு சுபாவம், வேடிக்கையாகப் பேசும் குணம், வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவது , பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தீர்காயுளும், தெய்வ பக்தி, எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் தன்மை,கவலைகலை உடனுக்குடன் மறந்து போவது, ஆற்றலும் நல்ல திறமையும் இருந்தாலும் அகங்கார குணமும் சுயேச்சையாக முடிவு எடுக்கும் சுபாவத்தால் மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிப்பர். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள்

மணவாழ்க்கை (Marriage Life):
எப்பொழுதும் குடும்பத்தில் சிக்கல்கள் இருந்துக் கொண்ட இருக்கும். வாழ்கை துணையுடன் அனுசரித்து போவது கடினம். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்காது. வாழ்க்கை துணைக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ செலவுகள்ஏற்படும். வாழ்க்கை துணை வழி உறவுகளும் பிரச்சனை இருக்கும்.

பொருளாதாரம் (Economy):
தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது.கடன் வாங்கினால் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் அவமானம் வந்து சேரும். செலவுகள் அதிகமாக இருக்கும் எதிர்பாராத இன்பங்கள் தேடி வந்தாலும் இவரது கவனக்குறைவினால் அதை நழுவ விட்டு விடுவர். வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப, துன்பங்கள் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டு இருப்பர்

புத்திரபாக்கியம்(Children)
5-ம் இடம் சிம்ம ராசி ஆகும் அதற்கு அதிபதி சூரியன். எனவே, மேஷ ரசிகர்களின் குழந்தைகள் புத்திக்கூர்மையும், செல்வவளமும், நல்ல குணமும் பெற்றிருப்பர்.மேலும் தாய், தந்தையை ஆதரிப்பவர்களாகவும், பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பர். மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமில்லை என்றாலும் புத்திரர்களால் அனுகூலமுண்டு என்று ஜோதிட நூல் சொல்கிறது

தொழில்கள்(பிசினஸ் or Jobs ) :
மேஷ ராசியினரின் தைரியம் மற்றும் துணிச்சாலும் இருப்பதால் மீட்பு பணியாளர், காவல்துறை அதிகாரிகள் (police) ஆகிய தொழில்களில் அமையும். வெளிப்படை தன்மை காரணமாக மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத் துறையில் நல்ல பெயர் கிடைக்கும். அரசாங்கம், அரசியல், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை செய்யலாம். .

நோய்கள்:
தலைவலி , நரம்பு வலி, உணர்விழந்த முழுமயக்கம் (கோமா Coma Stage ), முளை சார்ந்த மயக்க வகை நோய்கள் மற்றும் ரத்த போக்கு, தூக்கமின்மை

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது