துலாம் (Libra)
ராசியின் தன்மைகள் :

  • ஆண் ராசி அல்லது ஒற்றை ராசி
  • சர ராசி (நிலையில்ல தன்மையை குறிக்கும்)
  • ஜலராசிகள் (Watery Signs)
  • தெற்கு ராசி (South)
  • நன்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs)
  • அதிபதி : சுக்கிரன் (Venus)
  • தூர அளவு : 180" to 210"
  • ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : சுக்கிரன் (Venus)
  • உச்சம் பெறும் கிரகம் : சனி (Saturn)
  • நிச்சம் பெறும் கிரகம் : சூரியன்(Sun)
  • பாவிகள் : செவ்வாய் (Mars), சூரியன் (Sun), குரு (Jupiter)
  • நல்லவர்கள் : புதன் (Mercury), சனி (Saturn)
   (சனி ஒருவனே ராஜ யோகத்தை தருவார். சந்திரன், புதனும் சேர்ந்தால் ராஜயோகம் தருவார்கள் மேலும் குரு சேர்ந்த செவ்வாய் மாரகம் தருவார் )
  • உருவம் : தராசு
  • நிறம் : வெண்மை
  • ஜாதி : வைசிய ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
இயற்கையாகவே அழகுடன் செயற்கை அழகையும் சேர்த்து மிகவும் அழகாக தோற்றமளிப்பார்கள். மூக்கு தண்டு உயர்ந்தும், துவாரங்கள் அகன்றும் இருக்கும். இவர்களின் முகம் கவர்ச்சியாக இருக்கும். வயதான காலத்தில் தலையின் பின்புறம் வழுக்கை விழும்

குணங்கள்(General Characteristics):
துலா ராசியின் அதிபதியும், 8ம் வீட்டு அதிபதியும் சுக்கிரன் என்பதால் இவர்களின் பிரச்னைக்கு இவர்களே காரணம் ஆவார்கள். பேச்சில் ஆணித்தரமாகவும் வியாபார நோக்கங்கள் கொண்டதாக இருக்கும். பேச்சில் இவைகளை வெற்றிப் பெறுவது மிகவும் கடினம். எதற்கும் சலைக்காமல் பாடுபட்டவர்கள் என்பதால் தோல்விகளை கண்டு துவண்டு விட மாட்டார்கள். நெருங்கிவர்களை தவிர மற்றவர்களிடம் பழக மாட்டார்கள்
நீதியையும், நேர்மையையும் இவர்கள் விரும்புவதைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம், கோபம் அடைவார்கள்

மணவாழ்க்கை (Marriage Life):
விருப்பத்திற்கேற்றவாறே வாழ்க்கை துணை அமையும். திருமணத்திற்குப் பின் சுபிட்சம் நிறைந்ததாக இருக்கும். துலா ராசி ஆண்கள் சிலருக்கு 2 மனைவிகள் இருக்கலாம்.
பொருளாதாரம் (Economy):
நல்ல ஐஸ்வரியத்துடன் வீடு , பூமி போன்ற சொத்துக்களையும், வண்டி வாகனங்களையும் பெற்று இருப்பர் . ஆனால் பண வரவுகள் ஏற்றத்தாழ்வுடையதாகத்தான் இருக்கும். பலர் சிறு வயதில் கஷ்டங்களை சந்திதிருந்தாலும் பின்னர் தன்னுடைய வசதிக்காகவும், குடும்பத்தினருக்காகவும் வீடு, மனை, வண்டி வாகன வசதிகளை தன் உழைப்பால் ஏற்படுத்திக் கொள்வார்கள். நடு வயது வரை இவர்களது வாழ்க்கை போராட்ட கரமானதாகதான் இருக்கும். செலவுகள் அதிகம் இருக்கும்.
புத்திரபாக்கியம்(Children)
பொதுவாக இவர்களுக்கு புத்திர பாக்கியம் சற்று தாமதமாகப்படும் அதிகம் பெண் குழந்தைகள் யோகமே இருக்கும். பிள்ளைகளால் இவர்களுக்கு மருத்துவ செலவுகளும் கடன்களும் ஏற்பட்டு பிற்காலத்தில் அது சரியாகும்
தொழில்கள்(Business or Jobs):
மற்றவர்களின் கை கால் பிடித்து கால் பிடித்து முன்னேறுவது என்பது இவர்களுக்கு பிடிக்காது. தன் சொந்த முயற்சியாலேயே முன்னேறி விடுவார்கள். தொழில், வியாபாரம் செய்வதற்காக கடன்கள் வாங்க நேரிட்டாலும் அது கிடைக்கப் பெற்று அந்த கடனை கட்டாயம் அடைப்பார்கள். மேலும் இவர்கள் ராஜ தந்திரிகள். இவர்களுக்கு சிறந்த தொழில் நடன கலைஞர், விற்பனையாளர், தொகுப்பாளர் , பேச்சாளர், பயண முகவர், மேற்பார்வையாளர், தூதுவர் போன்றவையே சொல்லாம்
நோய்கள்:
இயற்கையாக இவர்களுக்கு சிறுநீர் கழித்தில் சிரமம், நீர்க்கட்டு, தோல் வியாதி போன்றவை இருக்க வாய்ப்பு உண்டு. கிட்னி பிரச்சனை உண்டு.
இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது