மேஷம் (Aries)





ராசியின் தன்மைகள் (or) இயற்கைகள் :
    • ஆண் ராசி அல்லது ஒற்றை ராசி
    • சர ராசி ( நிலையில்ல தன்மையை குறிக்கும்)
    • நெருப்பு ராசி (Fiery Signs)
    • வடக்கு ராசி (North)
    • வறண்ட ரசிகள் (Barren Signs)
    • நான்கு கால் ராசி (ஆடு)
    • முரட்டு ராசி (செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் ஆகும்)
    • மலட்டு ராசி
    • அதிபதி : செவ்வாய்
    • தூர அளவு : 0" to 30
    • நட்சத்திரங்கள் : அஸ்வனி, பரணி , கிருத்திகை பாதம் -1
    • உச்சம் பெறும் கிரகம் : சூரியன்
    • நிச்சம் பெறும் கிரகம் : சனி
    • பாவிகள் : புதன், சுக்கிரன், சனி
    • நல்லவர்கள் : குரு, சூரியன்
      (மாரக அதிபதி சுக்கிரன் கொல்லான். சனி புத்தியில் மார்கத்தை கொடுப்பான் என்று சொல்வர் )
    • உருவம் : ஆடு
    • நிறம் : சிவப்பு
    • ஜாதி : க்ஷத்திரிய ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
நடுத்தர உயரம் , ஒல்லியான தசைப்பிடிப்பு உள்ள உடல் , நீண்ட கழுத்து , அடர்ந்த நீண்ட புருவம் , கம்பிர தோற்றம்

குணங்கள்(General Characteristics):
அற்ப ஆசைகள் இல்லாதவர் வாக்கு வன்மை, கோபம், முரட்டு சுபாவம், வேடிக்கையாகப் பேசும் குணம், வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவது , பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தீர்காயுளும், தெய்வ பக்தி, எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் தன்மை,கவலைகலை உடனுக்குடன் மறந்து போவது, ஆற்றலும் நல்ல திறமையும் இருந்தாலும் அகங்கார குணமும் சுயேச்சையாக முடிவு எடுக்கும் சுபாவத்தால் மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிப்பர். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள்

மணவாழ்க்கை (Marriage Life):
எப்பொழுதும் குடும்பத்தில் சிக்கல்கள் இருந்துக் கொண்ட இருக்கும். வாழ்கை துணையுடன் அனுசரித்து போவது கடினம். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்காது. வாழ்க்கை துணைக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ செலவுகள்ஏற்படும். வாழ்க்கை துணை வழி உறவுகளும் பிரச்சனை இருக்கும்.

பொருளாதாரம் (Economy):
தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது.கடன் வாங்கினால் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் அவமானம் வந்து சேரும். செலவுகள் அதிகமாக இருக்கும் எதிர்பாராத இன்பங்கள் தேடி வந்தாலும் இவரது கவனக்குறைவினால் அதை நழுவ விட்டு விடுவர். வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப, துன்பங்கள் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டு இருப்பர்

புத்திரபாக்கியம்(Children)
5-ம் இடம் சிம்ம ராசி ஆகும் அதற்கு அதிபதி சூரியன். எனவே, மேஷ ரசிகர்களின் குழந்தைகள் புத்திக்கூர்மையும், செல்வவளமும், நல்ல குணமும் பெற்றிருப்பர்.மேலும் தாய், தந்தையை ஆதரிப்பவர்களாகவும், பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பர். மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமில்லை என்றாலும் புத்திரர்களால் அனுகூலமுண்டு என்று ஜோதிட நூல் சொல்கிறது

தொழில்கள்(பிசினஸ் or Jobs ) :
மேஷ ராசியினரின் தைரியம் மற்றும் துணிச்சாலும் இருப்பதால் மீட்பு பணியாளர், காவல்துறை அதிகாரிகள் (police) ஆகிய தொழில்களில் அமையும். வெளிப்படை தன்மை காரணமாக மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத் துறையில் நல்ல பெயர் கிடைக்கும். அரசாங்கம், அரசியல், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை செய்யலாம். .

நோய்கள்:
தலைவலி , நரம்பு வலி, உணர்விழந்த முழுமயக்கம் (கோமா Coma Stage ), முளை சார்ந்த மயக்க வகை நோய்கள் மற்றும் ரத்த போக்கு, தூக்கமின்மை

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது