கும்பம் (Aquarius)


 

ராசியின் தன்மைகள் :

ஆண் ராசி அல்லது ஒற்றை ராசி
காற்று ராசி
ஸ்திர ராசி ( நிலைத்திருக்கும் தன்மை யை குறிக்கும்)
தெற்கு ராசி (South)
அதிபதி : சனி
தூர அளவு : 300" to 330"
நட்சத்திரங்கள் : உத்திராடம் பாதம் - 2, 3, 4 , சதயம், புரட்டாதி 1, 2, 3 பாதங்கள்
ஜாதி : வைசிய ஜாதி
உருவம் : குடம்
நிறம் : பச்சை


உடல் அமைப்பு (Type of Body or structure of Body):
மெலிந்த தேகத்துடன் குறைந்த உயரத்துடன் இருப்பார்கள். உருவ அமைப்பில் புருவங்கள் அழகாகவும், வளைந்து, நெற்றி நடுப்பக்கம் சாய்ந்து, உதடுகள் மூடியும், மூக்கு அகன்றும் காணப்படும். எப்பொழுதும் முகத்தில் புண் சிரிப்போடு சரளமாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள். கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியாகவும் இருக்கும்.

குணங்கள்(General Characteristics):
மற்றவர்களிடம் காணும் சிறு குறைகளை அடிக்கடி இழிவாக பேசி, பிரசாரம் செய்து வருவார்கள். தன்னை பற்றி பெருமையாக அவர்களே பேசிக் கொள்வார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள். புதுமையான விஷயங்களை ஆராய விரும்புவார்கள். மேலும் துணிச்சலான செயல்களில் ஈடுபட விரும்புவார்கள். மற்றவர்கள் செய்யும் உதவியை உடனே மறந்து விடுவார்கள் மேலும் பரபட்ஷம் பார்க்காமல் உடனே உதவி செய்தவர்க்கு தீங்கு செய்வார்கள். பொது ஜனங்களின் நட்பை எளிதில் பெறுவார்கள்

மணவாழ்க்கை (Marriage Life):
மணவாழ்க்கையப் பொறுத்தவரை வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் நல்ல உயர்வுகளைப் பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும. என்னதான் சொத்துக்களும் வசதிகளும் ஏற்பட்டாலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற பூசல்களும் உண்டாகும். இருவருக்குமே விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்காது. இதனால் குடும்பத்தில் நிம்மதி என்பது குறைவாகவே இருக்கும்

பொருளாதாரம் (Economy):
எவ்வளவு படித்தாலும், மேதையாக இருந்தாலும் பிரபலமாக இருப்பது என்பது மிக கடினம். பண வரவுகள் போதுமென்ற அளவிற்கு தாராளமாக கிடைக்கும். பண பற்றாக்குறை ஏற்படாது என்றாலும் சேமிக்கும் அளவிற்கு இருக்காது. யாருடைய பணமாவது இவர்களது கையில் புழங்கி கொண்டுதான் இருக்கும் வரவுக்கு மீறிய செலவுகளோ, ஆடம்பரமான செலவுகளோ செய்யமாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நியாயமான செலவுகளையே செய்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் பணத்தை பாடுபட்டு சேர்த்திடுவார்கள். வாழ்க்கையில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் அவற்றை பற்றி பெரிய அளவில் காட்டி கொள்ளாமல் வாழ்வார்கள்.

புத்திரபாக்கியம் (Children):
புத்திர பாக்கியம் குறைவு மற்றும் பெண்குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளால் இவர்கள் மேம்மையும் புகழும் அடைவார்களே தவிர பிள்ளைகளால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

தொழில்கள் (Business or Jobs):
வழக்கத்திற்கு மாறான ஒரு வேலையைச் செய்ய விரும்புவார்கள். சிந்தனை மற்றும் இயக்கத்தின் சுதந்திரம் தேவை என்ற கருத்தைக் கொண்டிருப்பார்கள். உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. எங்கு இருந்தாலும் இருந்த இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். விஞ்ஞானி (அவர்கள் புதிய கோட்பாடுகளை ஆராய முடியும் என்பதால்), கண்டுபிடிப்பாளர், கரிம விவசாயி, விமானி, வடிவமைப்பாளர், இசைக்கலைஞர் போன்றவை சிறந்த தொழில் எனலாம்.

நோய்கள்:
கை, கால்கள் பாதிப்பு, இருதய இயக்கத்தில் ஒழுங்கின்மை, மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு, நரம்பு தளர்வு போன்ற நோய்கள் வரக்கூடும்