சிம்மம் (Leo)
ராசியின் தன்மைகள் :

  • ஆண் ராசி அல்லது ஒற்றை ராசி
  • ஸ்திர ராசி ( நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும்)
  • நெருப்பு ராசி (Fiery Signs)
  • வடக்கு ராசி (North)
  • நான்கு கால் ராசி (சிங்கம்)
  • அதிபதி : செவ்வாய்
  • தூர அளவு : 120" to 150"
  • நட்சத்திரங்கள் : மகம், பூரம், உத்திரம் பாதம் -1
  • பாவிகள் : புதன்(Mercury), சுக்கிரன் (Venus), சனி(Saturn)
   (குரு சுக்கிரன் சம்பந்தப் பட்டால் சுகம் உண்டாகும்)
  • நல்லவர்கள் : செவ்வாய் (Mars)
   (குரு உடன் செவ்வாய் சேர்ந்தால் மிக நல்ல சுகத்தை தருவார்)
  • உருவம் : சிங்கம்
  • நிறம் : சிவப்பு
  • ஜாதி : க்ஷத்திரிய ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல உடல் பருமனாகவும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள். உடல் பருமனாக இருந்தாலும் அழகு ஆற்றவராக இருக்க மாட்டார்கள். நன்கு வளர்ச்சியடைந்த எலும்புகளும் அகன்ற தோள் மற்றும் நெற்றியும் இருக்கும். முன்கோபகாரர்கள்

குணங்கள்(General Characteristics):
தைரியமும், வாக்குவன்மையும், தெய்வ வழிபாடு, ஆசார அனுஷ்டானங்களில் ஆர்வம், கல்வியில் ஊக்கம் ஆகியவை பெற்று இருப்பார்கள். வீண் சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விடாமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். இவர்களுக்கு நியாயமாக தோன்றும் எல்லாமும் மற்றவர்களுக்கு நியாயமாக தோன்றவேண்டிய அவசியமில்லை என்பதால் நிறைய பேரின் பகைமையை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவமும் சிறிய விஷயங்களை பெரிதாக்கும் குணமும் உடையவர்கள். தன்னைவிட அந்தஸ்து குறைவானவர்களிடம் சற்று கர்வம் கொண்டவர்கள் போல் நடந்து கொள்வர் . கோபமும், படபடப்பும் தலையெடுக்கும்

மணவாழ்க்கை (Marriage Life):
பொதுவாக திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. இவர்களுக்கு சொந்தத்தில் வாழக்கை துணை அமைவதைவிட அந்நியத்தில் அமையும். வாழ்க்கை துணையுடன் மன வேற்றுமைகளுடன்தான் வாழ்க்கையை நடத்துவார்கள். சிலர் திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார்.

பொருளாதாரம் (Economy):
வருமான நிலை சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் அதிக செலவுகள் ஏற்படும் ஆடம்பரமான உடைகளை நவீன பொருட்களையும், உயர் தரமான பொருட்களையே வாங்க விரும்புபவர்கள் என்பதால் செலவுகளைப் பற்றி கவலைப்படாதவர்கள். மிகுந்த செலவாளிகளாகவும் இருப்பார்கள்.

புத்திரபாக்கியம்(Children)
பொதுவாக இவர்களுக்கு ஆண் குழந்தைகள் தான் பிறக்கும். சிவபெருமான் அருளை பெறுவார்கள் எனவே புத்திர வழியில் அனுகூலமானப் பலனையே அடைவார்கள். புத்ர பாக்கியத்துடன் வாழ்வார்கள்

தொழில்கள்(Business or Jobs):
பெரிய மனிதர்களின் நட்பும், சகவாசமும் கிடைத்து உன்னதமான பதவியில் அல்லது அரசாங்க உத்தியோகத்தில் இருப்பார்கள். படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. அரசியல் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டாலும் நல்ல பெயர் லாபம் கிட்டும். வழக்கறிஞர் பணி, சங்கீதம், கவிதை இயற்றுதல், உணவு தானியங்கள் தயாரித்தல், மூலிகை, மருந்து செய்தல் போன்றவற்றில் லாபம் கிட்டும். சற்று முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப்போவது கடினமாகும்.

நோய்கள்:
ரத்த வாந்தி, இதயம் வேகமாக துடித்தல் , மயக்கும் அல்லது சோர்வு , ரத்த சோகை ஆகியவை உண்டாக வாய்ப்புகள் அதிகம். சிறுவயதில் குறைவான உணவும் , பிறகு அதிகமான உணவுகளை உட்க்கொள்வார்கள். எனவே வேதனை தரும் இதய நோய் ஏற்படும். ஆனால் இவர்கள் சிவன் அருள் பெற்று இருப்பார்கள். பொதுவாக நல்ல கிரகங்களின் பலத்தில் இருந்தால் 80 வயது வரை சுகமாக வாழ்வார்கள்

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது