மிதுனம் (Jemini)
ராசியின் தன்மைகள் :
  • ஆண் ராசிஅல்லது ஒற்றை ராசி
  • உபய ராசி ( மந்தமான தன்மையை குறிக்கும்)
  • காற்று ராசி (Airy sign)
  • வடக்கு ராசி (North)
  • வறண்ட ராசிகள் (Barren Signs)
  • அதிபதி : புதன் (Mercury)
  • தூர அளவு : 60" to 90"
  • நட்சத்திரங்கள் : மிருகசீரிஷம் -1, 2 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1 ,2, 3 பாதங்கள்
  • ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : புதன் (Mercury )
  • பாவிகள் : சூரியன் (Sun), குரு (Jupiter), செவ்வாய் (Mars)
  • நல்லவர்கள் : சுக்கிரன் (Venus)(சுக்கிரன் ஒருவனே நல்லவன் )
  • உருவம் : ஸ்திரீ புருஷன்
  • நிறம் : கருப்பு
  • ஜாதி : வைசிய ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
மிக அழகான மீன் போன்ற கண்கள் உடைவார்கள் கண்களாலேயே கதை பேசுவார்கள். உயரமான மேல்நோக்கி வளர்ந்த வளையாத உடம்பை உடைவர்ஆனாலும் ஒல்லியான தேகம், கால்கள் இருக்கும். மூக்கு கொஞ்சம் பெரியதாகவும், கூர்மையாகவும் இருக்கும். சுமாரான நிறம் அல்லது கருப்பாக இருப்பர் (லக்கினத்தை பொறுத்து மாறும்)

குணங்கள்(General Characteristics):
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். அதிக எண்ணங்களையும், நோக்கங்களையும் பெற்று கல்வியில் தேர்ச்சியும், கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்தியமும், சதா சிரித்து பேசும் குணமும் சுயநலவாதியாகவும் இருப்பர். பிறரை எளிதில் நம்பமாட்டார்கள். எளிதில் நட்பு வைத்துக் கொள்ளவும் அதேபோல் தொடர்பை துண்டிக்கவும் தயங்கமாட்டார்கள். சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடு இருக்கும்.

மணவாழ்க்கை (Marriage Life):
திருமண வாழ்க்கையை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட சாலிகள்தான். வாழ்க்கை துணை அழகும், அந்தஸ்தும் பெற்றவர்களாக இருப்பார்கள். இடையிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைந்து விடுவார்கள். உள்ளே பிரச்சினை இருந்தாலும் வெளிபார்வைக்கு ஒற்றுமையாகவே இருப்பார்கள்.

பொருளாதாரம் (Economy):
ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் அதிக பிரியமுள்ளவர்கள் எனவே இவர்களை சுகவாசிகள் எனலாம். வீடு, மனை, வசதியும், வண்டி,விலை உயர்ந்த நவீன பொருட்களையும், ஆடை அணிகலன்களையும் விரும்பி வாங்குவார்கள். வாகன வசதிகளும் இவர்களின் விருப்பத்திற்கேற்றவாரே அமையும். சிலர் கடன் வாங்க மற்றும் அதனால் வரும் பிரச்னைகளுக்கு கவலைப் படமாட்டார்கள்

புத்திரபாக்கியம்(Children)
சிலருக்கு குழந்தை பாக்கியம் தாமதப்படும்.சிலருக்கு பிள்ளைகளால் வீண் தொல்லைகளும், கடன்களும், வம்பு வழக்குகளும் ஏற்படும். மேலும் சிலருக்கு வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை அமையும். அவசர முடிவு எடுக்கமால் நிதானத்தை கடைபிடித்தாலே எல்லா உறவுகளை தக்கவைத்துக் கொள்ள முடியும்

தொழில்கள்(Business or Jobs):
தான் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கறாரும் கண்ணியமும் நிறைந்து இருக்கும், செல்வத்துடனும் செல்வாக்குடனும் தங்களது திறமையால் முன்னேறுவார்க்ள. எழுதுவதிலும் , கலைத்துறையிலும் ஆர்வமும், திறமையும் இருக்கும். மேலும் தொழில்நுட்ப ஆதரவு, ஆசிரியர், இயந்திர ஆபரேட்டர், மீட்பு பணியாளர், பங்குசந்தை (Share Market) போன்றவைகள் சிறந்த தொழில்கள். வெளி வட்டாரங்களில் தங்களுடைய பேச்சு திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர் என்பதால் எந்த தொழிலும் செய்த்தாலும் சிறப்பாக செய்வார்கள்.

நோய்கள்:
நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள், வறட்டு இருமல் , காய்ச்சல், காச நோய் ஆனால் ஆயுள் 70 வரையில் தீர்க்கம் என்று சொல்லாம்

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது