- ராசியின் தன்மைகள் (or) இயற்கைகள் :
- பெண் ராசி அல்லது இரட்டை ராசி
- ஸ்திர ராசி (நிலையான தன்மையை குறிக்கும்)
- ஜலராசிகள்(Watery Signs)
- தெற்கு ராசி (South)
- அதிபதி : சுக்கிரன் (Venus)
- முரட்டு ராசி (செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் ஆகும்)
- தூர அளவு : 210" to 240"
- நட்சத்திரங்கள் : விசாகம் -4 பாதம், அனுஷம் , கேட்டை
- ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : செவ்வாய்(Mars)
- உச்சம் பெறும் கிரகம் : ராகு
- நிச்சம் பெறும் கிரகம் : சந்திரன்(Moon)
- பாவிகள் : புதன்(Mercury), சனி (Saturn), சுக்கிரன்(Venus)
- நல்லவர்கள் : சூரியன், சந்திரன்(Moon)
- உருவம் : தேள்
- நிறம் : பச்சை
- ஜாதி : பிராமண ஜாதி
உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைகள் முடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டவர்கள். உடல் நல்ல விகித சாரத்தில் இருக்கும் . அகன்ற நெற்றி, அதிகாரம் செய்யும் தோற்றம், அமைதியான உருவ அமைப்பு ஆகியவை பெற்று இருப்பார்கள். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.
குணங்கள்(General Characteristics):
நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். பயந்த சுபாவம் இருக்காது. எதையும் நேருக்கு நேராக செய்வார்கள். பரந்த நோக்கங்களுடன் கொண்ட பேச்சுக்களாடு தந்திரங்களினாலும் உபாயங்களையும் கொண்டு பெரிய காரியத்தை சாதிப்பார்கள். நல்ல குணத்துடன் பழகுவார்கள் தேளின் குணம் கொண்டவர்கள் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள். நல்ல குணத்துடன் பழகுவார்கள்
மணவாழ்க்கை (Marriage Life):
இவர்கள் தன வாழ்க்கை துணையுடன் பேச்சுக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள் வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். ஆனால் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும். பொதுவாக மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
பொருளாதாரம் (Economy):
பண வசதியை பொறுத்தவரை தேவையான அளவுக்கு அமையும். இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் படி படியாக முன்னுக்கு வருவதுடன் வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள். ஆடம்பர வசதிகளுக்கு ஆசைபடுபவர்கள். பொதுவாக இவர்களின் பொருளாதாரம் நிலையான தாராள தன வரவு.பெற்றதாக இருக்கும்
புத்திரபாக்கியம்(Children)
இவர்களுக்கு புத்திர பாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். பிள்ளைகள் குறைவாக இருக்கும். இவர்களின் பிள்ளைகளால் இவர்களுக்கு நற்பலன்களும், சமுதாயத்தில் பெயர், புகழும் ஏற்படும்
தொழில்கள்(Business or Jobs):
சிறு வயதிலிருந்தே சமூக சேவைகளில் ஈடுபாடு இருக்கும். எதிரிகள் தன்னை கண்டால் அஞ்சி நடுங்கும்படி கிடுக்கிபிடி போட்டு வைத்திருப்பார்கள். பிடிவாதகார்கள். சுறுசுறுப்பும்,ஊக்கமும் கொண்டவர்களாக எடுத்த காரியங்களில் திறமையும் வெற்றியும் பெற தீவிரமாக முனைவார்கள். இவர்களுக்கு சிறந்த வேலை துப்பறிவாளன், வக்கீல், கல்வியாளர், விஞ்ஞானி , அறுவை சிகிச்சை நிபுணர், இயற்பியலாளர், அரசாங்கள் வேலை போன்றவை சொல்லாம்
நோய்கள்:
சிறு நீர்ப் பிரச்னை , மலக்குடல் பிரச்னை, மூக்கு அடைப்பு, மூக்கில் நீர்க் கோத்தல், ஒழுங்கற்ற மாதவிடா மற்றும் வெண்கசிவு போன்ற கர்ப்பப்பை பிரச்னைகள் , முத்திரக்கல் போன்ற பிரச்னை வர வாய்ப்பு உள்ளது
இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது