மகரம் (Capricorn)



ராசியின் தன்மைகள் : 

பெண் ராசி அல்லது இரட்டை ராசி
நில ராசி
சர ராசி ( நிலையில்ல தன்மையை குறிக்கும்)
தெற்கு ராசி (South)
அதிபதி : சனி
உச்சம் : செவ்வாய்
நீசம் : குரு
தூர அளவு : 270" to 300"
நட்சத்திரங்கள் : உத்திராடம் பாதம் - 2, 3, 4
நான்கு கால் ராசி
ஜாதி : சூத்திர ஜாதி
உருவம் : முதலை
நிறம் : கருப்பு

 உடல் அமைப்பு (Type of Body or structure of Body):

மகர ராசியில் பிற்ந்தவர்கள் நடுத்தர உயரம் உடையவர்களாகவும் கழத்தும் தலையும் சற்று நீண்டதாகவும் இருக்கும். கொழு கொழு என்று இருக்க மாட்டார்கள். 16 வயதுக்கு மேல் நன்கு வளர்வார்கள். புருவங்கள் அடர்ந்து வளைந்து காணப்படும். காதுகள் நீண்டும், தோள்கள் விரிந்தும் அமைந்திருக்கும். இவர்களின் எலும்புகளும் மூட்டி பாகங்களும் எடுப்பாக தோற்றம் அளித்தாலும் அழகானதாக இருக்கும். 

குணங்கள் (General Characteristics):

கல்வி கேள்விகளில் சிறந்ததும்  தெய்விக வழிபாடுகள் அறிந்தவராக இருப்பார்கள். வாசனை திரவியங்களில் பிரியமும்  ஆடை ஆபரணங்களில் பிரியமும், அந்தஸ்துக்கு ஏற்ற இடங்களில் ஆகாரம்  கொள்வதும்  யாரையும் லட்சியம்  தன் இஷ்டத்திற்கு காரியங்கள் செய்வார்கள். கள்ளம் கபடமில்லாத உள்ளம் கொண்டவர்களாகவும் அழுத்தம் திருத்தமாக பேசுபவராகவும் இருப்பார்கள். பேச்சில் முன்கோபமும், உறுதியும் இருக்கும். இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும். மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் இரண்டு வித ஆதாயங்களை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள் என்பதால் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி எதையும் சாதிப்பார்கள். சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்டவர்கள். வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடுவார்கள். தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற நோக்கத்துடன் இருப்பார்கள்

மணவாழ்க்கை (Marriage Life):

மண வாழ்க்கையை பொறுத்தவரை இவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே நடக்கும். காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகளே மிக அதிகம். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் மன ஒற்றுமையுடன் இணை பிரியாத குடும்ப நிர்வாகத்தை சிறப்பாகவும் சிக்கனமாகவும் செய்வார். வாழ்க்கை துணையிடம் அதிக பிரியமும் அவர்களின் போக்கின்படி நடந்து கொள்ளும் சுபாவம் உடையவர்கள். மேலும் வாழ்க்கைத் துணை கலாரசனை மிக்கவராக இருப்பார். இவர்களைவிடவும் நிதானமாக யோசித்துச் செயல்படுபவராக இருப்பார். உங்களின் வேகமான செயல்பாடுகளை விவேகத்துடன் சமாளிப்பார். வாக்கு சாதுர்யம் பெற்றிருப்பார்.

பொருளாதாரம் (Economy):

இவர்களுக்கு பண வரவுகள் தேவைக்கேற்ப அமையும். உழைப்பாற்றலால் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவார்கள். பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் இவர்களுக்கு பயன்படாது. ஆடம்பர செலவுகளை செய்வார்கள். இதனால் அவர்களுக்கு சேமிப்பதென்பது இயலாத காரியமாகும். பிறக்கும் பொது செல்வத்துடனும், நடுத்தர வயதில் சில சிரமங்களையும் அனுபவித்து பிற்காலத்தில் சொத்து சுகங்களுடன் சந்தோஷமாக குடும்பத்தை நடத்துவார்கள்

புத்திரபாக்கியம் (Children):

குழந்தை பாக்கியம் தாமதப்படும். பெண் குழந்தகளால் ஆதாயம் உண்டு. ஆண் குழந்தகளால் எந்த ஒரு ஆதாயம் கிடைக்காது. கடைசி காலத்தில் கூட ஆண் பிள்ளைகள் வைத்து காப்பாற்றுவார்கள் என்று கூறமுடியாது. அப்படியே இருந்தாலும் மன வேற்றுமைகளும், கருத்து வேறுபாடுகளும் நிறைந்து மனநிம்மதியின்றி வாழ நேரிடும். (தனக்கென சிறு சேமிப்பையாவது சேர்த்து வைப்பதுதான் சிறந்தது.)

தொழில்கள் (Business Jobs):

பலருக்கு வேலை கொடுக்கும் ஆற்றலை பெற்றவர்கள். எந்தவொரு துறையிலும் புகழோடும் பெயரோடும் தங்கள் லட்சியங்களிலும் படிப்படியாக முன்னேற்றமடைவார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். வாழ்வின் முற்பாதியில் கடமை தவறாது கடின உழைப்பினை மேற்கொண்டாலும் வாழ்வின் பிற்பாதியில் எல்லா சுகபோகங்களையும் சிறப்புடன் பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். மேலாளர், நிர்வாகி, பத்திரிக்கை ஆசிரியர், வங்கியில் வேலை புரிவோர், ஐடி, மற்றும் அறிவியல் சார்ந்த எதாவது ஒரு வேலை ஆகியவை சிறந்த வேலைகள் எனலாம்.

நோய்கள்:

தோல் சம்மந்தப் பட்ட பாதிப்புகள், அஜீரணத் தொந்தரவு, ரத்த கோளாறுகள், நரம்பு வலி, மன அழுத்தம், பித்த நீர் பையில் கோளாறு, சுவாசக் கோளாறு, கண் பார்வைக் கோளாற போன்ற வியாதிகளால் வர வாய்ப்பு உள்ளது.