ரிஷபம் (Tarus)




ராசியின் தன்மைகள் :
    • பெண்ராசி அல்லது இரட்டை ராசி
    • ஸ்திர ராசி ( நிலைத்திருக்கும் தன்மை யை குறிக்கும்)
    • நிலராசி (Earthy Signs)
    • வடக்கு ராசி (North)
    • நான்கு கால் ராசி (எருது)
    • நன்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs)
    • அதிபதி : சுக்கிரன் (Venus)
    • தூர அளவு : 30" to 60"
    • நட்சத்திரங்கள் : கிருத்திகை -2, 3 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் -1, 2 பாதங்கள்
    • ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : சுக்கிரன் (Venus)
    • உச்சம் பெறும் கிரகம் : சந்திரன் (Moon)
    • நிச்சம் பெறும் கிரகம் : கேது (Kethu)
    • பாவிகள் : சூரியன் (Sun ), குரு (Jupiter)
    • நல்லவர்கள் : சுக்கிரன் (Venus ), சனி (Saturn ) (சனி ஒருவனே ராஜ யோகத்தை தருவார் )
    • உருவம் : எருது
    • நிறம் : வெண்மை
    • ஜாதி : சூத்திர ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
பருத்த உடல், நடுத்தர உயரம், அகன்ற மார்பு, கம்பிரமான மற்றும் வசீகரமான தோற்றம்

குணங்கள்(General Characteristics):
மெதுவான செயல்களையும், மந்தமான குணமும், உறுதி, பொறுமை, நேர்மை, சரியான போக்கு, சுமாரான கல்வி, கணித அறிவு உடையவர்கள். சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும் பேசும் ஆற்றல் பெற்றவர்கள்.ஆனாலும் பழக்கமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும், புதிதாக பழக்க ஏற்படுத்திக் கொள்ள சங்கடப் படுவார்கள். தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாதவர்கள். நன்னலமற்றவர்கள். குதர்க்கமாகவும்,பரிகாசமாகவும் பேசி வேண்டாதவர்களை அவமானப்படுத்துவார்கள். வேடிக்கையாகப் பேசும் குணம், புத்திரர்களிடாத்திலும், மற்றும் குழந்தகளிடத்திலும் ( children ) பிரியமாகப் பேசி பழகும் குணம் உடையவர்கள். தான் செலவு செய்யாமல் பிறரை செய்யும்படி செய்து அதில் பலன் காண்பர் . இவர்களின் பகைவர்கள் இவர்களின் பேச்சுதான். அவ்வப்போது பழைய விஷயங்களை அசைபோடுவது உங்களுக்குப் பிடிக்கும்.

மணவாழ்க்கை (Marriage Life):
சிற்றின்ப பிரியர்களாக இருப்பார்கள். திருமணம் சற்று தாமதமானாலும் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். இவர்களின் வாழ்க்கைத் துணைவர் இவர்களைவிட வேகமாக இருப்பார். நிர்வாகத் திறமையில் அதீத திறமையுடன் திகழ்வார். ஆனாலும் சில சில விஷயங்களில் இவர்களைப் புரிந்து கொள்ளாமல் வாக்குவாதம் செய்வார். வாழ்க்கை துணை எது செய்யதாலும் நம்மைக்காக தான் இருக்கும். உற்றார், உறவினர் எல்லோரையும் நேசிப்பீர்கள் மேலும் அவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

பொருளாதாரம் (Economy):
இளம் வயதில் பணத்திற்காக கஷ்டப்பட்டாலும், வளர வளர தனது சொந்த முயற்சியாலோயே தனக்கேற்ற பணத் தேவைகளை தாங்களே சரி செய்து கொள்வாரகள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள், சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, எதிர்பாராத திடீர் தன வரவுகளால் உயர்வுகள் போன்றவை உண்டாகும். எதையும் புதிதாகத்தான் வாங்குவார்கள்.

புத்திரபாக்கியம்(Children)
சிலருக்குபுத்திர பாக்கியம் சற்று தாமதமாகத்தான் அமையும். பிள்ளைகளால் வீண் கவலைகளும், தொல்லைகளும், செலவுகளும் ஏற்படுமே தவிர அனுகூலப்பலனை அடைய முடியாது பெண்குழந்தைகளாக இருந்தால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டு. பிற்காலத்தில் பெண் குழந்தைகள் ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள்.

தொழில்கள்(பிசினஸ் or Jobs ) :
சிறு வயதிலிருந்தே சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவே சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு உழைத்து படிப்படியாக உயர்வார்கள். அறிவிப்பாளர், பொது பேச்சாளர் (Public speaker), வரவேற்பாளர் (Receptionist), கணக்காளர் (Accountant, கல்வியாளர், என்ஜினியர் (Engineering), வக்கீல்(Lawyer), வடிவமைப்பாளர் (Designer), நிலம் தொடர்பான வேலை, சமையல் தொழில்(culinary profession) ஆகியவை சிறப்பாக இருக்கும். பெண்கள் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் பூமி,மனை போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில், பணம், கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் லாபம் சிறப்பாக அமையும் என்றாலும் கூட்டாளிகளை நம்பி எதையும் ஒப்படைப்பது கூடாது (நல்ல கூட்டாளிகள் அமைப்பு இல்லை)

நோய்கள்:
ரிஷப ராசியும் விருச்சிக ராசியம் நேர் இருப்பதால் பால்வினை நோய்கள், மூலம். புரைப்புண் , மலச்சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவுகள் இருக்கும் . மேலும் புளிப்பு, காரம் பிரியம் அதிகமாக இருப்பதால் குரல் வளைவில் வீக்கம், தொண்டை சம்மந்தப்பட்ட நோய்கள், வலிப்பு நோய் உண்டாகும். ஆனால் பொதுவாக 80 வயதுக்கு மேலும் சரீர சுகத்துடன் இருப்பார்கள்

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது