கன்னி (Virgo)
ராசியின் தன்மைகள் :

  • பெண்ராசி அல்லது இரட்டை ராசி
  • உபய ராசி ( மந்தமான தன்மையை குறிக்கும்)
  • நிலராசி (Earthy Signs)
  • வடக்கு ராசி (North)
  • வறண்ட ரசிகள் (Barren Signs)
  • மலட்டு ராசி
  • அதிபதி : புதன் (Mercury)
  • தூர அளவு : 150" to 180"
  • நட்சத்திரங்கள் : உத்திரம் -2, 3, 4 பாதங்கள்,அஸ்தம், சித்திரை -1, 2 பாதங்கள்
  • ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : சுக்கிரன் (Venus)
  • உச்சம் பெறும் கிரகம் : புதன் (Mercury)
  • நிச்சம் பெறும் கிரகம் : சுக்கிரன்(Venus)
  • பாவிகள் : சந்திரன்(Moon), செவ்வாய்(Mars), குரு (Jupiter), சுக்கிரன்(Venus)
  • நல்லவர்கள் : புதன் (Mercury)
   ( சுக்கிரன் தனியாக இருந்தால் சுபன். சுக்கிரன் புதன் சேர்ந்தால் ராஜயோகம், செவ்வாய் மாரகத்தை தருவார் . சூரியன் கொல்லான் )
  • உருவம் : பெண்
  • நிறம் : கருப்பு
  • ஜாதி : சூத்திர ஜாதி

உடல் அமைப்பு ( Type of Body or sturcture of Body)
சற்று பெண்மை கலந்த கூச்சமும் அச்சமும் இருக்கும். சுமாரான உயரமும் ஒல்லியான உடல் அமைப்பும் இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். நடை அழகுவும் வேகமாவும் இருக்கும் . கருத்த தலை முடியையும், கண்களையும் , வளைந்த புருவங்களில் அடர்த்தியான முடியையும் பெற்றிருப்பார்கள். வயதைவிட இளமையாக தோற்றம் பெற்றிருப்பார்கள்

குணங்கள்(General Characteristics):
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். தெய்வீக வழிபாடு, நீதி, நேர்மையுடைவராகவும், எக்காரியமானாலும் எத்தொழிலானாலும் செய்யும் அறிவு பெற்றவராகவும் எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவாராகவும் இருப்பார்கள் உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும் பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள்.

மணவாழ்க்கை (Marriage Life):
இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும் விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு உடையவராக இருப்பார்கள். இல்லற வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள். மெதுவான சுபாவத்தாலும் அன்பு கலந்த பேச்சு பேச்சினாலும் சிறப்பான எதிர்காலத்தை பெறுவார்கள்

பொருளாதாரம் (Economy):
போதுமான அளவு தன வரவு தாராளமாக அமையும். ஒய்வு எடுக்க விரும்பமாட்டார்கள். இல்லாத பொருளுக்கு ஏங்க மாட்டார்கள். வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். ஆனால் இவர்களின் உறவினர்களும், நண்பர்களும் இவர்களை ஏமாற்றி செல்வத்தையும், பொருட்களயும் அவகரிப்பார்கள். ஆனாலும் பொறுமை குணத்துடன், அன்பு கலந்த பேச்சிலும் எதிர்காலத்தில் சிறப்புகளை பெறுவார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது இவர்களுக்கு மிகவும் நல்லது.

புத்திரபாக்கியம்(Children)
புத்திரபாக்கியத்தை பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் . இவர்களுக்கு ஆண் குழந்தை இருந்தாலும் பெண் குழந்தைகளே அதிகம். பிறக்கும் பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்

தொழில்கள்(Business or Jobs):
இவர்களுக்கு தெரியாத கலையே இல்லை அதிலும் கலைத்துறை மீது ஈடுபாடு இருக்கும் ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள். பத்திரிக்கை ஆசிரியர் (அ) எழுத்தாளர், ஆசிரியர், விமர்சகர், தொழில்நுட்ப வல்லுநர், மொழி பெயர்ப்பாளர், துப்பறியும் வல்லுநர், புள்ளியியல் நிபுணர். ஆகியவை தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்

நோய்கள்:
சத்துக் குறைவான உணவை உட்கொள்ளவர்கள் எனவே வயிற்றில் புழுக்கள் உருவாகும். செரிமான பிரச்னை, குடல் சம்மந்த பட்ட வியாதிகள் வர வாய்ப்பு அதிகம். பொதுவாக நல்ல கிரகங்களின் பலத்தில் இருந்தால் 70 வயது வரை சுகமாக வாழ்வார்கள்

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது