திருவோணம் தொடர்ச்சி




 பொதுவான குணங்கள்

திருவோண நட்சத்திர அதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள். அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வள்ளலார் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இதமாகப் பேசி பழகுவார்கள். ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் பெயர் புகழை பெறுவார்கள். எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொறுத்து கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளை விரும்பி அணிவார்கள்

குடும்ப வாழ்க்கை

வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பார்கள். வாழ்க்கை துணைக்கு பயந்து நடப்பார்கள் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள். அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுவார்கள். எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சாதனை படைப்பார்கள். செல்வத்துக்கும் அந்தஸ்துக்கும் குறைவேயில்லை என்று சொல்லும்படி அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெறுவர்கள். தாயின் மீதும் அதிக பாசம் இருக்கும். பழி பாவத்திற்கு அஞ்சுவார்கள்.

நண்பர்கள்

நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். நல்ல நண்பர்களை தேர்ந்து எடுப்பதில் கவனம் தேவை.

நட்பு நட்சத்திரங்கள்

அவிட்டம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த ஆறு நட்சத்திரக்காரர் நண்பர்களும் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வார்கள். எந்த பிரதிபலனும் பாராமல், குடும்ப நலன் பேசுபவர்களாகவும், பொருளாதார உதவிகளை செய்பவர்களாகவும், சுக துக்கங்களில் பக்கத் துணையுடனும் இருப்பார்கள். நீங்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் உங்களுக்கு உதவி செய்வதை அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் இந்த நட்சத்திரங்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். கார்த்திகை (மேஷம்) உத்திரம் (கன்னி) உத்திராடம் (தனுசு) மிருகசீரிடம் (மிதுனம்), சித்திரை(துலாம்) அவிட்டம் (கும்பம்) இந்த நட்சத்திரங்களையும் தவிர்க்க வேண்டும்.

தொழில்

பொதுவாக இவர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்கள் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் நிச்சயமாக தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அதில் கூட்டு தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். கூட பணிபுரிபவர்கள், நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்கள் என யாருடனாவது கூட்டாக தொழில் செய்வார்கள். மற்றவர்கள் வியக்கும் படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர், வங்கி பணி, எழுத்தாளர் பேராசியர்களாகவும் ஜொலிப்பார்கள்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள். மக்களை நேசிப்பவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர் களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஓவியம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள்.

தசா பலன்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை முதல் தசையாக வரும். சந்திரன் தசை மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சந்திர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சந்திரன் தசை:


இந்த தசை காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகள், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.


செவ்வாய் தசை:


இரண்டாவதாக வரும் செவ்வாய் தசை மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.


ராகு தசை:


மூன்றாவதாக வரும் ராகு தசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.


குரு தசை:


நான்காவதாக வரும் குரு தசை காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதார மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள்


சனி தசை:


ஐந்தாவதாக வரும் சனி தசை காலங்கள் சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயர் உண்டாகும்.

பொது பரிகாரம்

திருவோண நட்சத்திரத்தின் தலவிருட்சம் பாலுள்ள எருக்கு மரம். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிடுதல், மொட்டையடித்து காது குத்துதல்,புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு தொடங்குதல் மாடு ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசக்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல் கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்க தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், உத்திரட்டாதி ஆகும்.

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. திருவாதிரை வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்
ச்ரவண நட்சத்திர வல்லடம்
விஷணும் கமலபத்ராஷம்
தீயா யேத் கருட வாகனம்


 

நட்சத்திரம் -திருவோணம்

திருவோணம் -Shraavan/Thiruvonam


திருவோணம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 22 வது பிரிவு ஆகும். திருவோண நட்சத்திர பிரிவு அக்கிலா விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட திருவோணத்தின் (α, β and γ அக்குயிலய்) பெயரைத் தழுவியது. திருவோணத்தின் சமஸ்கிருதப் பெயரான ஷ்ரவன (Shravana) என்பது "கேட்டல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காது" ஆகும். ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளாவில் வாமன அவதாரத்திற்கு காரணமான மகாபலியை போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரில் மற்றும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, மகாவிஷ்ணு அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்த அசுர சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு. திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சுரப்பி, முட்டிகள்

பார்வை

மேல்நோக்கு

பாகை

280.00 - 293.20

தமிழ் மாதம்

தை

நிறம்

கருமை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

தேவ கணம்

குணம்

மென்மை

மிருகம்

பெண் குரங்கு

பறவை

நாரை

மரம்

பாலுள்ள எருக்கு மரம்

மலர்

ஜாதி பூ

தமிழ் அர்த்தம்

படிப்பறிவு உடையது, காது

தமிழ் பெயர்

முக்கோல்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 சரம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

சிவப்பு அரிசி

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

பால் ஏடு - அக்காரஅடிசில்

தேவதை

அம்பிகை, வெங்கடேச பெருமாள், ஸ்ரீமகாவிஷ்ணு.

அதி தேவதை

கருடவாகனத்தில் எழுந்தருளி இருக்கும் திருமால்.

அதிபதி

சந்திரன்

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

அம்பு போன்ற வடிவில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பு.

மற்ற வடிவங்கள்

பூங்கொத்து,மூலிகைகொத்து

மற்ற பெயர்கள்

சோனம், உலக்கை, சித்ரம், ரஷகன், மால், மாயன், மாதவன்

வழிபடவேண்டிய தலம்

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள், திருப்பாற்கடல், திருப்பதி, திங்களூர்

அதிஷ்ட எண்கள்

2, 6, 8

வணங்க வேண்டிய சித்தர்

அத்ரி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஜு, ஜே, ஜோ, கா

அதிஷ்ட நிறங்கள்

மயில் நீலம், வெளிர்ச் சிவப்பு

அதிஷ்ட திசை

மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

புதன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

முத்து, வைரம்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

பொய்கையாழ்வார், விபீஷணன், சுவாமி நரசிம்ம பாரதி, வேதாந்தாசார்யர், பிள்ளை லோகாசார்யர், விக்ரம் சாராபாய், கார்ல்மார்க்ஸ்.

குலம்

நீச்ச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்


உத்திராடம் தொடர்ச்சி


 
பொதுவான குணங்கள்

உத்திராடத்தின் நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடையவர்கள். இந்த உலகத்தில் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பேச்சில் பதிலடி தர தயங்க மாட்டார்கள். மனத்தில் பட்டதை சட்டென்று வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிடுவர். அறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை, வாய்மை மிகுந்தவர்கள்.நல்ல தோற்றம், பேச்சுத் திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை இவர்களின் பொதுவான குணங்கள்.

சமூக நலனுக்காக பாடுபடும் குணம் உடையவர்களாதலால் விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பாடுபடுவார்கள். நல்ல அறிவாளி, கோபித்தும் கொஞ்சியும் தனது காரியங்களை சாதித்து கொள்வார்கள். மன வலிமையும், வைராக்கியமும் உடையவர்கள். வீண் விவாதத்துக்கு வந்தால், கொஞ்சம் கூட சளைக்காமல் அவர்களுக்கு பதிலடி தருவர்கள். செய்த நன்றியை மறக்க மாட்டார்கள். கண்ணால் கண்ட உண்மைகளை மறக்காமல் பேசுவார்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்பதற்கேற்ப நிலம், பூமிகளை வாங்கி சேர்ப்பார்கள். வயோதிக வயதிலும் இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள். நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். வாழ்க்கைத் துணையிடம் அளவுக்கதிகமான பாசம் கொண்டிருப்பார்கள். அடிமட்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எப்படியாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்து விடுவார்கள்

உற்றார் உறவினர்களால் நற்பலன் கிட்டும். அனைவருக்கும் உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர். சகிப்பு தன்மையும் விட்டு கொடுக்கும் சுபாவமும் இளமையிலேயே இருக்கும். அகங்காரம் அதிகம் இருப்பதால் சில நேரங்களில் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். தன்னுடைய தவறுகளை சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள் ஒரே நேரத்தில் பலவிதமாக யோசிப்பதால் மதில் மேல் பூனை போல மனம் அலை பாயும். குடும்பத் தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். அனைவரும் மெச்சும்படி வாழ்வார்கள்.

நண்பர்கள்

எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். நண்பர்களுடன் அடிக்கடி விவாதங்களில் ஈடுபடுவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மூலம் ஆகியவை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

புனர்பூசம், உத்திரம், விசாகம், கார்த்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்ப்பது நல்லது.

தொழில்

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல கலைகளையும் கற்றுக் தேர்ந்திருப்பார்கள். சமூகநலப் பற்று உடையவர்கள். மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியம் போன்ற துறைகளில் சாதிப்பார்கள். பூமியை ஆதாரமாகக் கொண்ட தொழில், மந்திர தந்திரம், நாடகத்துறை, நடிப்பு, திரைப்பட தயாரிப்பு போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். நீச்சல் போட்டிகளிலும் மிளிர்வார்கள். ராணுவத்தில் படை தலைமை வகிப்பார்கள் பலருக்கும் பயிற்சி அளிப்பார்கள். நீதி மன்றங்களில் திறமையாக வாதாடும் வக்கீல் களாகவும் இருப்பார்கள். பொருளாதார ரீதியாக எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. நாட்டில் எங்கு தவறு நேர்ந்தாலும் அதை தயங்காமல் கேட்கும் குணம் கொண்டவர்கள்.

தசா பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் தசை முதல் தசையாக வரும். சூரியன் தசை மொத்தம் 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சூரியன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூரியன் தசை:


சூரியன் பலம் பெற்றிருந்தால் தந்தைக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு உண்டாகும்.


சந்திரன் தசை:

இரண்டாவதாக வரும் சந்திர தசை 10 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பலமிழந்திருந்தால் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படும்.

செவ்வாய் தசை:


மூன்றாவதாக வரும் செவ்வாய் தசை 7 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

 
ராகு தசை:


அடுத்து வரும் நான்காவது தசை ராகு தசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பல வகையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

 
குரு தசை:


ஐந்தாவதாக வரும் தசை குரு தசை. இந்த தசையில் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.
அடுத்து வரும் சனி தசையும் குரு தசை போல் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.

பொது பரிகாரம்

உத்திராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள பலாமரமாகும் இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

உத்திராட நட்சத்திரத்தில் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், குழந்தையைத் தொட்டிலிடுதல் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துதல், பெயர் சூட்டுதல் அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். புது மனை புகுதல், வீடு வாகனம் வாங்குதல், வாஸ்து படி வீடு கட்டுதல் வான், நீர், நில வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், வங்கி கணக்கு தொடங்குதல், வியாபாரம், புது வேலையில் சேருதல், நாட்டிய அரங்கேற்றம் பத்திர பதிவு, உயில் எழுதுதல் போன்ற நல்ல காரியங்களை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, மிருகசீரிஷம், அஸ்தம், பூராடம் ஆகியவை பொருத்தமான நட்சத்திரங்கள் ஆகும்.

பொருந்தா நட்சத்திரங்கள்:

புனர் பூசம், உத்திரம், விசாகம், கிருத்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. புனர்பூசம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத் 

நட்சத்திரம் - உத்திராடம்

 உத்திராடம்/Uthra Ashaada-Uthraadam


உத்திராடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 21 வது பிரிவு ஆகும். உத்திராடம் தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்திராடத்தின் (ζ மற்றும் σ சாகிட்டேரீ) பெயரைத் தழுவியது. உத்திராடத்தின் சமஸ்கிருத பெயரான உத்தர ஆஷாட (Uttara Ashadha) என்பது "பிந்திய வெற்றி" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "யானைத் தந்த"மும் "கட்டில் பலகை"கள் ஆகும்.

நான்கு கால்களைக் கொண்ட கட்டிலில் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை ‘முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்கள் செய்ய உகந்தது என்பதால், ‘மங்கள விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். இதன் முதல் பாதம் தனுசிலும் மற்ற மூன்றும் மகர ராசியிலும் அமைகின்றன.

உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்ற பழமொழி உத்திராடத்தின் பெருமையை கூறுகிறது 

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

1-ம் பாதமானது உடல் உறுப்பில் தொடை, தொடை எலும்பு  2, 3, 4- ம் பாதங்கள் தோள், முட்டிகள்

பார்வை

மேல்நோக்கு

பாகை

266.40 & 280.00

தமிழ் மாதம்

தை

நிறம்

சிவப்பு

இருப்பிடம்

வெட்டவெளி, வண்ணான் துறை

கணம்

மனுஷ கணம்

குணம்

ஸ்திரம்

மிருகம்

மலட்டு பசு

பறவை

வலியன்

மரம்

பாலுள்ள பலா மரம்

மலர்

சம்மங்கி, 5 வகை புஷ்பங்கள்

தமிழ் அர்த்தம்

பிந்தைய வெற்றி

தமிழ் பெயர்

கடைகுளம்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

சிலேத்தும நாடி(சமான நாடி)

ஆகுதி

அரக்கு பொடி

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

5 வகை அன்னம்

தேவதை

விஸ்வம் என்னும் விஸ்வே தேவர்கள் (பத்து விசுவதேவர்கள்)

அதி தேவதை

சூரியபகவான், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ விநாயகர்

அதிபதி

சூரியன்

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

பாம்பு வடிவத்தில் உள்ள எட்டு நட்சத்திரங்களின் தொகுப்பு

மற்ற வடிவங்கள்

கட்டில்கால்

மற்ற பெயர்கள்

ஊர்தி, மனிதானம், முடி, முதம், மூர்க்கம்

வழிபடவேண்டிய தலம்

பிரம்மபுரீஸ்வரர், சிவகங்கை, சூரியனார்கோவில், ஆலங்குடி

அதிஷ்ட எண்கள்

 1,3, 4

வணங்க வேண்டிய சித்தர்

கஸ்யபா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

பே, போ, ஜ, ஜி

அதிஷ்ட நிறங்கள்

வெளிர்நீலம், வெளிர் மஞ்சள்

அதிஷ்ட திசை

தென்கிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

எமிதிஸ்ட்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

சல்லியன், ஏனாதி நாயனார், ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஆளவந்தார்

குலம்

 சூத்திர குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்


பூராடம் தொடர்ச்சி


பொதுவான குணங்கள் (Common 
Characteristics)

பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். ஆடை ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். பூராடம் போராடும் என்ற கூற்றிற்கேற்ப எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்படாமல் எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள். எந்த வொரு விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட ஒரு நளினம் இருக்கும். பூராடத்தில் நூலாடாது என்ற பழமொழி இருந்தாலும் இது தவறானதாகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாட நூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும்.

குடும்ப வாழ்க்கை (Family Life)

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் மீது அதிக பாசம் இருக்கும். அவர்களுக்காக வாழ்க்கை துணையையே ஒதுக்கி விடுவார்கள். சுவையான உணவை விரும்பி உண்பார்கள். எல்லோரிடமும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பழகுவர்கள். உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் பேசுவர்கள். பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பார்கள். அவர்களின் விருப்பங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவர்கள். குறிப்பாக தாயிடம் அதிக அன்பு செலுத்துவர்கள்.

நண்பர்கள் (Friends)

பல வருடங்கள் பழகிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மணிக்கணக்காகப் பேசினாலும் சொந்த விஷயங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர். சிலர், உங்களைப் பற்றி புறம் பேசுவார்கள். பிள்ளைகளையும் வாழ்க்கை துணையையும் நண்பராகவே நினைப்பார்கள். மேலும் நண்பர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள்.

நட்பு நட்சத்திரங்கள் (Benefit Stars)

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்(Disbenefit Stars or Stars to Avoid)

பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்கார்களின் நடப்பை தவிர்க்கலாம்

தொழில் (Business)

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளில் ஆர்வம் இருக்கும். கணக்கு வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலை தொடர்பு, சுற்று சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். எந்த வேலையில் ஈடுபட்டால் உங்கள் திறமை முழுவதையும் பயன்படுத்தி மிகச் சிறப்பாகச் செய்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவர்கள்.

சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்ப வராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகி அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். அயல் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு. அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும்.

தசா பலன்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் தசை முதல் தசையாக வரும். சுக்கிரன் தசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சுக்கிரன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


சுக்கிரன் தசை:

சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வாழ்வில் சுபிட்சம், கல்வியில் மேன்மை, சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சுக வாழ்வு பாதிப்படையும்.

 
சூரியன் தசை:


இரண்டாவதாக வரும் சூரிய தசை காலங்கள் 6 வருடமாகும். இந்த தசையில் சிறு சிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். பேச்சாற்றல் ஏற்படும்.

 
சந்திரன் தசை:


மூன்றாவதாக வரும் சந்திர தசையில் குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.

செவ்வாய் தசை:


அடுத்து வரும் நான்காவது செவ்வாய் தசை முன்னேற்றத்தை தரும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்று இருக்க வேண்டும்

ராகு தசை:


ஐந்தாவதாக வரும் ராகு தசை 18 வருடங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் முற்பாதி முன்னேற்றத்தையும், பிற்பாதியில் கண்டங்களையும் உண்டாக்கும்.மாரக தசை என்பதால் எதிலும் கவனம் தேவை

பொது பரிகாரம்

பூராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள வஞ்சி அல்லது நாவல் மற்றும் மா மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

ஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்களை பேசி தீர்த்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பூரட்டாதி, புனர்பூசம், உத்திரம், ரேவதி, உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, அஸ்தம் ஆகும்

பொருந்தா நட்சத்திரங்கள்:


பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. பூசம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் பஸ்சிமேசாய வித்ம ஹே
பாசஹஸ்தாய தீமஹி
தந்நோ வருண ப்ரசோதயாத்!! 

நட்சத்திரம் - பூராடம்

 பூராடம்  Poorva Ashaada/ Pooraadam



பூராடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 20 வது பிரிவு ஆகும். டி பூராட நட்சத்திர பிரிவு தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூராடத்தின் (δ மற்றும் ε சாகிட்டேரீ) பெயரைத் தழுவியது. பூராடத்தின் சமஸ்கிருத பெயரான பூர்வ ஆஷாடா (Purva Ashadha) என்பது "தொடக்க வெற்றி" அல்லது "வெல்ல முடியாதது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "விசிறி" அல்லது "முறம்" ஆகும். "பூர்வாஷாடா" என்றும் அழைக்கப்படும்.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

1, 2, 3-ம் பாதங்கள் - கணுக்கால்கள். 4-ம் பாதம் - கால், முன்னங்கால்.

பார்வை

கீழ்நோக்கு

பாகை

253.20 - 266.40

தமிழ் மாதம்

மார்கழி

நிறம்

கருமை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

மனுஷ கணம்

குணம்

உக்கிரம்

மிருகம்

ஆண் சிங்கம்

பறவை

உள்ளான்

மரம்

வஞ்சி அல்லது நாவல் மரம் (பாலுள்ள மாமரம்)

மலர்

எருக்கம் பூ

தமிழ் அர்த்தம்

 முந்தைய வெற்றி

தமிழ் பெயர்

உடைகுளம்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 ஸ்திரம்

நாடி

தட்சிண பார்சுவ நாடி

ஆகுதி

பூசணித் துண்டு

பஞ்சபூதம்

ஆகாயம்

நைவேத்யம்

தயிர், நெய் சாதம்

தேவதை

அஜைகபாதன் -  11 ருத்ரர்களில் ஒருவர்

அதி தேவதை

ஸ்ரீ லக்ஷ்மி குபேரன்

அதிபதி

 சுக்கிரன்

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

சதுர வடிவில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட தொகுப்பு

மற்ற வடிவங்கள்

கட்டில்கால்

மற்ற பெயர்கள்

நீர், புனல், பயம், அறல், கோ, பொய்வாவி,  உடைகுளம்

வழிபடவேண்டிய தலம்

ஆகாசபுரீஸ்வரர், தஞ்சாவூர்

அதிஷ்ட எண்கள்

2, 3, 7

வணங்க வேண்டிய சித்தர்

ஹரிதா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஸே, ஸோ, தா, தீ

அதிஷ்ட நிறங்கள்

ஊதா, கிரீம்

அதிஷ்ட திசை

வடகிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

மார்கா (மஞ்சள்)

அதிஷ்ட உலோகம்

வெண்கலம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், விசாகம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

குபேரன், கின்னரன், ராமகிருஷ்ண பரமஹம்சர்,நாராயண குரு, மறைமலையடிகள், காமராசர், கலிலியோ

குலம்

 பிரம்ம குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்



மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

மூலம் தொடர்ச்சி

நட்சத்திரம் - மூலம்



பொதுவான குணங்கள்

தனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். நல்லவர்கள்; வல்லவர்கள். அதேநேரம் கர்வமும் மிகுந்திருக்கும். போராடுவதற்குத் தயங்காதவர்கள். இந்த நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. ஆதலால், இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். "யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல்" எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். கேது சாரத்தில், குரு பகவான் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்கள், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்ற பழமொழி அல்ல. வீண் பழிமொழி என்று சொல்லாம். ஆனி மூலம் அரசாளும் அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனை பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது. எனவே மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல உடல் வாகும் பேச்சு திறமையும் சிறப்பாக இருக்கும் .

குடும்ப வாழ்க்கை

சிறு வயதில் கேது தசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு குடும்பத்தில் பிரச்சனைகளும் உண்டாகும் என்றாலும் வளர வளர குடும்பம் செழிக்கும் பெரியோர் தாய் தந்தை போன்றவர்களிடம் மரியாதை பாசமும் அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாடும். பிள்ளைகளை திட்டமிட்டு வளர்த்து படிக்க வைப்பார்கள். சுக்கிர தசை இளம் வயதில் வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் இளமையிலே திருமணம் நடைபெறும்.

பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தர் பீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள். 

நண்பர்கள்

மூல நட்சத்திரக்காரர்கள் அரசனுக்கு நண்பராக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. எதிரிகளை கூட மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நண்பர்களுக்கும் கொடுப்பார்கள் 

நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

ரோகிணி,திருவோணம், அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக இருந்தால், உங்கள் தொழிலுக்கும், உத்தியோகத்திற்கு நல்ல துணையாக இருப்பார்கள்.

பரணி, பூரம், பூராடம், திருவாதிரை, சுவாதி, சதயம் உண்மையான வர்களாகவும், முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் இருப்பார்கள்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்கள் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கிடைப்பது அதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் இவர்கள் கை உதவிக்கொண்டே இருக்கும். நீங்கள் உயர்வு அடையும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள். நல்ல நட்பின் அடையாளம் இவர்கள்தான். 

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்ப்பது நல்லது ஆகும்.

தொழில்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், சட்டம், ஆர்க்கிடெக்சர், கட்டிடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர் இராணுவம், காவல்துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களை கையாள்வதில் கை தேர்ந்தவர்கள். நாட்டை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று மூல நட்சத்திர காரர்களை கூறலாம். ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், ஷிப்பிங் கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருந்து கம்பெனி ஆகியவற்றால் பெருத்த லாபம் ஈட்டுவார்கள்.

கொடி நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் என வந்து விட்டால் மனதில் உற்சாகம் கொள்வார்கள். பணிபுரியும் நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மூத்த அதிகாரிகளுக்கு, கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக விளங்குவார்கள். தனது பதவிகளுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவார்கள். நல்ல அதிகாரமிக்க பதவிகளை வகிப்பார்கள். ஓய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். 

தசா பலன்கள் 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் திசையாக வரும். கேது தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேது தசை:

இந்த தசை காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலையும், தாய்க்கு பிரச்சனைகளும் உண்டாகும். 

சுக்கிரன் தசை:

இரண்டாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருடங்கள் நடைபெறும். இளம் வயதில் சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு உண்டாகும். இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் செல்வம் செல்வாக்கும் பெருகும். 

சூரியன் தசை: 

மூன்றாவதாக வரும் சூரியன் தசை 6 வருடங்கள் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். உடலில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். 

சந்திரன் தசை: 

அடுத்து வரும் நான்காவது தசை சந்திர தசை அதுவும் சூரிய தசை போல் தான் இருக்கும். அதாவது நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற முடியும். 

செவ்வாய் தசை:

ஐந்தாவதாக வரும் செவ்வாய் தசை 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் இது மாரக தசை ஆகும். செவ்வாய் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு உண்டாகும். 

பொது பரிகாரம்

மூல நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பாலுள்ள மாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மூல நட்சத்திரத்தில் திருமணம் செய்தல், கிரகப்பிரவேசம், வண்டி வாகனம் வாங்குதல், பயணம் மேற்கொள்வது, விதை விதைப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது, பரிகார பூஜை செய்வது, மருந்து உண்ணுதல் தானியம் வாங்குவது நல்லது.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது 

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. 

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.) 

சொல்ல வேண்டிய மந்திரம்


ஓம் தத் புருஷாய வித்மஹே

வாயு புத்ராய தீமஹி

தன்னோ மாருதி ப்ரசோயாத்