அனுஷ நட்சத்திர அதிபதி சனி பகவான் என்பதால் எப்பொழுதும் மாறுபட்ட மனநிலை கொண்டிருப்பார்கள். எறும்புக்கும் தீமை நினைக்க மாட்டார்கள் என்றாலும் கொண்ட கொள்கைக்காக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டார்கள். பலருக்கு சுமை தாங்கியாக விளங்கினாலும், தங்களுடைய மனக்குறைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். யார் தவறு செய்தாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என தயங்காமல் எடுத்துரைப்பார்கள்.
பெற்றோரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்கள். கடைசிவரை அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். தெய்வபக்தி மிகுந்தவர்களாக காணப்படுவார்கள். சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பார்கள். அப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று தங்கள் குடும்பத்தினரையும் வலியுறுத்துவார்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு. ஆனால், ஆழ்ந்த அறிவு உண்டு.
சட்டென கடின வார்த்தைகளை பேசினாலும் உடனே அதை சரி செய்து விடுவார்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். பசியை பொறுக்க மாட்டார்கள். இரவு பகல் பாராது உழைப்பார்கள். ஜாதி, மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்து அனைவரிடத்திலும் அன்பாக பழகுவார்கள் கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து இழுப்பார்கள்.. பேச்சில் வித்தகர்கள். தெளிவாக பேசுவார்கள். தாம்பூல பிரியர்கள்.
குடும்ப வாழ்க்கை
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர்கள். வாழ்க்கை துணைக்கு மரியாதை கொடுப்பார்கள். பெற்றோரை பேணி காப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்கு எதையும் விட்டுக் கொடுப்பார்கள். பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். வாழ்க்கைத் துணைக்கு சம உரிமை கொடுப்பார்கள்
ஆண்களாக இருந்தால் பெண்களாலும், பெண்களாக இருந்தால் ஆண்களாலும் விருப்பப்படுவார்கள். இவர்களின் குணநலன்களில் தொடர்ந்து முரண்பாடுகளும், ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இவர்களுக்கு காதலில் நம்பிக்கை அதிகம் இருக்கும் அதற்காக எதையும் தியாகம் செய்வார்கள். காதலில் இவர்களுக்குள் எப்பொழுதும் மறைமுக ஆர்வம் அதிகம் இருக்கும்
நண்பர்கள்
இந்த நட்சத்திரக்காரர்கள் நிரந்தர நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அமையாது. பல நேரங்களில் தான் நினைப்பது போல் நடப்பதால் அடுத்தவர்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது இல்லை.
நட்பு நட்சத்திரங்கள்
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம் ஆகியவை நட்பு நட்சத்திரம் ஆகும்.
தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்
பரணி, பூசம், பூராடம், உத்திரட்டாதி, பூரம் நட்சத்திரக்காரர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.
தொழில்
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்கு இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். பலர் நாட்டிய பேரொளி களாகவும், சிறந்த பாடகர் மற்றும் வசன கர்த்தாவாகவும் இருப்பார்கள். வாய் பேச்சில் வித்தகர்கள். மருத்துவம், வங்கி, காவல்துறை, தீயணைப்பு துறை, உளவுத்துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். ஒரு சிலர் கட்டிடக்கலை, காண்ட்ராக்ட் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். அடுத்தவரிடம் வேலை செய்வதை விரும்ப மாட்டார்கள்.
தசா பலன்கள்
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தசை முதல் திசையாக வரும். சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சனி தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சனி தசை:
சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் மேன்மை, பெற்றோருக்கு உயர்வு, அசையா சொத்து சேர்க்கை அமையும். பலமிழந்திருந்தால் குடும்பத்தில் சோதனையும் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடும் கல்வியில் மந்த நிலையும், சோம்பல் உண்டாகும்.
புதன் தசை:
இரண்டாவதாக வரும் புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும், கல்வியல் மேன்மையும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.
கேது தசை:
மூன்றாவதாக வரும் கேது தசை காலங்களில் அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உடல் நிலையில் பாதிப்பு, திருமண வாழ்வில் பிரச்சனை வாழ்வில் முன்னேற்றம் இல்லதா நிலை உண்டாகும்.
சுக்கிரன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சுக்கிரன் தசை. இந்த தசை நடக்கும் 20 வருட காலங்களில் நல்ல மேன்மைகளை அடைய முடியும். பொருளாதார உயர்வு அசையும் அசையா சொத்து சேர்க்கையும் உண்டாகும். பொன் பொருள் சேரும்.
சூரியன் தசை:
ஐந்தாவதாக வரும் சூரிய தசை 6 வருட காலங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தந்தைக்கு சோதனைகள் ஏற்படும்.
பொது பரிகாரம்
இந்த நட்சத்திர காரர்களின் ஸ்தல மகிழம்பூ மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
அனுஷ நட்சத்திர நாளில் மஞ்சள் நீராட்டுதல், திருமணம், சீமந்தம் வாஸ்து படி வீடு கட்ட தொடங்குதல், புது ஆடை ஆபரணம் அணிதல் உபநயனம் செய்தல், கல்வி கற்க தொடங்குதல், புது மனை புகுதல், தானியம் சேர்த்தல், விதை விதைத்தல், கதி வறுத்தல், தெய்வ பிரதிஷ்டை செய்தல் வாசற் கால் வைத்தல் போன்றவற்றை செய்யலாம்
பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:
திருமணம் பொருத்தம் பார்க்கும் போது
பொருந்தும் நட்சத்திரங்கள்:
உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம், கேட்டை, சதயம், ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம்,சுவாதி ஆகும்
பொருந்தா நட்சத்திரங்கள்:
பரணி, பூசம், பூராடம்,உத்திரட்டாதி, பூரம் ஆகிய ஆண் பெண் நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. பரணி வேதை ஆகும்.
(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)
சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு பிரசோதயாத்