சுவாதி - தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

சுவாதி நட்சத்திர அதிபதி ராகு பகவான் என்பதால் முன்கோபம் அதிகம் இருந்தாலும் நல்ல அறிவுள்ள திறமைசாலிகள். நற்பண்புகள் உடையவர். மனித உரிமைகளைப் பற்றி அடிக்கடி சட்டம் பேசுவார்கள். பிறருக்காக அதிகம் உதவி செய்வார்கள். அனைவரையும் தன் வசம் இழுத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்கள். சில நேரங்களில் தான் சொல்வது தான் சரி என தவறான வழியையும் காட்டி விடுவார்கள். திடமான புக்தி உடையவர்கள் என்றாலும் அடிக்கடி தன் புக்தியை மாற்றி கொள்வார்கள். எளிதல் பயப்படும் குணம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரிடமிருந்தும் வித்தியாசப் படுவார்கள் எல்லா நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். விளையாட்டு குணம் அதிகம் இருக்கும். சுயமரியாதையை இழக்க விரும்ப மாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் தனக்கு சரியெனப் பட்டதை மட்டுமே செய்வார்கள். அதில் தவறுகள் நேர்ந்தால் பகிங்கிரமாக மன்னிப்பையும் கேட்பார்கள்.

அழகும், தெய்வ பக்தியும் மிகுந்தவர்கள். கூரிய அறிவு, ஞாபக சக்தி, கலைகளில் ஆர்வம், தன்னம்பிக்கை, தாராள மனப்பான்மை, இரக்க சிந்தனை கொண்டவர்கள். ஓரளவு தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அதேநேரம் கோபம், பாசம், சுயநலமும் இவர்களிடம் உண்டு. துலாக்கோல் போல நல்லது, கெட்டதை சீர்தூக்கிப் பார்த்து, தீயதை அகற்றி நல்லதைக் கடைப்பிடித்து, வாழ்வில் உயர்வார்கள். வயதான பிறகும் கூட விளையாட்டுப் பிள்ளையாக நடந்து கொள்வார்கள். குழந்தைகளுடன் இருப்பதை விரும்புவார்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளைக் கூட கவர்ந்து விடுவார்கள்.


குடும்ப வாழ்க்கை

பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு இரவு பகல் பாராமல் உழைப்பர்கள். உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். சுவையான உணவு வகைகளை ரசித்து சாப்பிடுவார்கள். உங்கள் சுதந்திரத்தில் வெளி நபர்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டார்கள்

உற்றார் உறவினர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். மண வாழ்க்கை சற்று தாமதமாகத்தான் அமையும். அதிக பிள்ளைகளை பெற்று கொள்ள விட்டால் பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை தாராளமாக செய்து கொடுப்பார்கள். முன் கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் கணவன் மனைவியிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.


நண்பர்கள்

நண்பர்கள் அதிகம் இல்லாவிட்டாலும் அனைவரிடமும் சமமாக பழகுவார்கள். சுவாதி நட்சத்திரக்காரர்கள் இனிமையாக பழகினாலும் கோபம் வரும் சமயம் துர் வார்த்தைகள் உபயோகிப்பார்கள். அது பல நேரங்களில் நட்பை கெடுத்து விடும்.


நட்பு நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தொழில்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகல விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் கற்றது கைமண் அளவு என்பதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகளாகவும், மார்கெட்டிங் துறையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். எப்பொழுதும் சுதந்திரமாகவே செயல்படுவார்கள். சகல சாஸ்திரங்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார்கள்.


தசா பலன்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை முதல் திசையாக வரும். ராகு தசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ராகு தசை:
இளம் வயதில் ராகு தசை நடைபெறும் என்பதால் ராகு நின்ற வீட்டின் அதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். அதுவே ராகு பாவ கிரக சேர்க்கை உடன் இருந்தால் பேச்சில் வேகம், கல்வியில் மந்த நிலை பிடிவாத குணம், பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
குரு தசை:
இரண்டாவதாக வரும் குரு தசை காலங்களில் வாழ்வில் முன்னேற்றம், கல்வியில் ஈடுபாடு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி. பெற்றோர் பெரியோர்களிடம் ஒற்றுமை குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, பணவரவுகள் தாராளமாக இருக்கும் யோகம் கொடுக்கும்.
சனி தசை:
மூன்றாவதாக வரும் சனி தசை 19 வருட காலங்கள் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் யோகமும் முன்னேற்றமும், சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.
புதன் தசை:
அடுத்து வரும் நான்காவது புதன்தசை எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
கேது தசை:
ஐந்தாவதாக வரும் கேது தசை 7 வருட காலங்கள் ஆகும். பொதுவாக கேது தசை யாருக்கு நல்லது செய்வது கிடையாது. உடல் மற்றும் மனதில் பிரச்சினைகள் வரும்.


பொது பரிகாரம்

சுவாதி நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் மருத மரமாகும். இம்மரம் அமைந்துள்ள திரு ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மாங்கல்யம் செய்தல், திருமணம் செய்தல், பெயர் சூட்டுதல், பூ முடித்தல், முடி களைதல், வீடு வாகனம் வாங்கல், கல்வி ஜோதிடம் மருத்துவம் கற்றல், அன்னதானம் ஆயுத பிரயோகம், சமுத்திர யாத்திரை செய்தல், பயிடுதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

புனர்பூசம், துலாம், விசாகம், பூரட்டாதி, கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. ரோகிணி வேதை ஆகும். (குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

உக்ரம் வீரம் மகாவிஷணும்
ஜீவலந்தம் ஸர்வதேமுகம்
ந்ருஸிம்ஹம் பிஷனம் பத்ரும்
ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம்!