அஸ்தம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி சந்திர பகவான் என்பதால் அழகான முகமும் வசீகரமான உடலமைப்பும் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும், சிறந்த நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள். அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருப்பதால் சட்டென கடினமான வார்த்தைகளை உபயோகிப்பார்கள். என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய கூடிய பரோகார சிந்தனை பெற்றவர்கள்.

நல்ல அறிவு, விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, அளவு கடந்த தன்னம்பிக்கை இவர்களின் குணாதிசயங்கள். பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிப்பவர்கள். ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற வாசகத்திற்கு ஏற்ப பணிந்து நடந்து, பெரிய பதவிகளை பெறுபவர்கள். அன்பு, காதல், இரக்கம் போன்ற குண சிறப்புகள் இவர்களுக்கு உண்டு. மனம் லயிக்காத (ஏற்றுக்கொள்ளாத) காரியத்தைச் செய்ய மாட்டார்கள். வெகுளியான குணமிருக்கும். மிகவும் சிக்கனமாக செயல்படுவார்கள். அதிக சுயநலமும் இருக்குமாதலால் பண விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பார்கள். இயற்கையை ரசிப்பார்கள்.


குடும்ப வாழ்க்கை

சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் மத்திய வயதிலிருந்து வசதி வாய்ப்புகள் பெருகும். தாய் சொல்லை மதித்து நடப்பவர்கள். காதல் வயப்பட கூடியவர்கள். வாழ்க்கை துணையின் சொல்லே மந்திரம் என நினைப்பார்கள். எந்த முடிவாக இருந்தாலும் வாழ்க்கை துணையை கலந்தாலோசித்தே முடிவெடுப்பார்கள். அளவான குடும்பத்தை பெற்றவர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தேவையின்றி தலையிட மாட்டார்கள். ஆண்களாக இருந்தால் இனிப்பாக பேசி பெண்களை கவர்ந்திழுத்து விடுவார்கள். பிற மதத்தினர் கூட மதிக்கும் பண்பு, உற்றார் உறவினர்களுக்கும் உதவி செய்யும் ஆற்றலும் கொண்டவர்கள். தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றும் இரக்க சுபாவம் உடையவர் என்பதால் பாவ புண்ணியம் பார்த்து உதவுவார்கள். உணவுப் பிரியர்கள்.


நண்பர்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் நண்பராகவோ அல்லது வாழ்க்கை துணையாகவோ வந்தால் மிகவும் நல்லது. மேலும் கார்த்திகை (ரிஷபம்), உத்திரம்(கன்னி), உத்திராடம்(மகரம்) இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பராகவோ அல்லது வாழ்க்கை துணையாகவோ அமைந்தால் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் என குதூகலம் நிறைந்த இருக்கும். விசாகம், பூரட்டாதி,ஆயில்யம்,கேட்டை,ரேவதி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்கார்களும் நன்மைகள் செய்வார்கள்


நட்பு நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம், உத்திராடம் இவை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த நட்சத்திர நண்பர்கள் அமைந்தால் அவர்களால் துயரங்களைச் சந்திக்க வேண்டியது வரும்.

அஸ்வினி, மகம், மூலம் இந்த நட்சத்திரக்காரர்களை நண்பர்களாக அமையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி அமைந்தால் அவமானத்தைச் சந்திக்க வேண்டியது வரும்


தொழில்

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களை முடித்தே தீர வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்களாகவும், சிறந்த நகைச்சுவையாளர் களாகவும் பல துறைகளில் அனுபவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். சித்தர் பீடாதிபதி, அறிவியல் அறிஞர், வரலாற்று பேராசிரியர், கல்வெட்டு ஆய்வாளர் போன்ற துறைகளில் சாதனை செய்வார்கள். வெளியூர் பயணங்கள் என்றால் தடையின்றி மேற்கொள்வார்கள்.

இசை ஆர்வம் மிக்கவர்களாக இருக்கும் இவர்கள், எப்போதும், எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் பாட்டு பாடிக்கொண்டே, பாடலைக் கேட்டுக் கொண்டே அந்த வேலையைச் செய்வார்கள். அவ்வப்போது அயல்நாடு சென்று வருவார்கள்.

எதிரிகளை தோல்வியுற செய்வதில் வல்லவர்கள். எந்த துன்பம் வந்தாலும் தடையின்றி உழைத்து கொண்டே இருப்பார்கள். சில நெருக்கடி காலங்களில் பிறரின் மேலேறி சவாரி செய்து முன்னேறவும் தயங்க மாட்டார்கள். கொள்கைகளில் சற்று அழுத்தமானவர்கள் என்பதால் ஆறு மாதத்திற்கொரு முறை பணியாளர்களை மாற்றி கொண்டேயிருப்பார்கள். செய்வது தொழில் அல்லது உத்தியோகமோ அதில் சாதனைகள் பல படைப்பார்கள்.


தசா பலன்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை முதல் தசையாக வரும். சந்திர தசை மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சந்திர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


சந்திரன் தசை:
இந்த தசை காலங்களில் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தாய்க்கு சிறு சிறு சோதனைகள் தோன்றி மறையும்.
செவ்வாய் தசை:
இரண்டாவதாக வரும் தசை செவ்வாய் தசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். இந்த தசை காலங்களில் செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் இல்லையெனில் கல்வியில் மந்த நிலையும், உடல் ரீதியாக ஆரோக்கிய பாதிப்பும் உண்டாக்கும்.
ராகு தசை:
மூன்றாவதாக வரும் ராகு தசை காலங்கள் 18 வருடங்களாகும். இத்தசை காலங்களில் கல்வியை தொடர முடியாத நிலை, குடும்பத்தில் பிரச்சனை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற நட்புகளாலும் பிரச்சனைகள் உண்டாகும். ராகு சிறப்பாக இருந்தால் பல நல்லவைகள் நடைபெறும்
குரு தசை:
அடுத்து வரும் நான்காவது தசை குரு தசை ஆகும் குரு தசை சாதிக்க வைக்கும். நல்ல தொழில் யோகத்தையும் பொருளாதார மேன்மையையும் கொடுக்கும்.
சனி தசை:
ஐந்தாவதாக வரும் சனி தசை காலங்கள் யோகத்தை அள்ளி தரும் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். பொருளாதாரம் உயர்வடையும் பூமி, மனை, வண்டி வாகனம், ஆடை ஆபரணம் யாவும் சேரும்


பொது பரிகாரம்

அஸ்த நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் அத்திர மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலனை அடையலாம்..


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

அஸ்த நட்சத்திரத்தில் உபநயனம், தாலிக்கு பொன் உருக்குதல், மஞ்சள் நீராட்டுதல், சீமந்தம், காதணி விழா, கல்வி கற்க தொடங்குதல், யாத்திரை செல்லுதல் ஆடை ஆபரணம், வண்டி வாகனம் வாங்குதல், புது மனை புகுதல் கடல் பயணம் மேற்கொள்ளுதல், விதை விதைத்தல், களஞ்சியத்தில் தானியம் சேர்த்தல் மந்திரம் கற்றல், நோய்க்கு மருந்து உண்ணுதல் புதிய வேலைக்கு விண்ணப்பித்தல் வியாபாரம் தொடங்குதல், கிணறு வெட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்,விசாகம், பூரட்டாதி, ஆயில்யம்,கேட்டை,ரேவதி, பரணி, பூரம், புனர்பூசம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, சுவாதி, திருவோணம், சதயம் போன்ற ஆண் பெண் நட்சத்திரங்களை அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்ய கூடாது. சதயம் வேதை ஆகும்

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் பூர்புவஸ்ஸீவ தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோ ப்ரசோதயாத்!!