குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி 2026 | குரு உச்சம் – முழு விவரம்



நவக்கிரகங்களின் அமைச்சராகவும், முழு சுப கிரகமாகவும் விளங்கும்  குரு பகவான்  ஜூன் இரண்டாம் தேதி  அதிகாலை 2:25 மணிக்கு மிதுன ராசியில் இருந்து  கடக ராசியில் பெயர்ச்சியாகிறார். . ஜோதிடத்தில் கடக ராசியில் குரு உச்சம் பெறுகிறார். குரு பகவானுடைய இந்த இடமாற்றமானது அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கும். அதன் பிறகு சிம்ம ராசிக்கு அவர் நகர்கிறார்.


25 ஜனவரி 2027 அன்று சிம்ம ராசியில் இருந்து வக்ர நிலையில்  கடக ராசிக்கு திரும்புவார். இந்த வக்ர பெயர்ச்சி காலத்தில், கடகத்தில் உச்சம் பெற்று 25 ஜனவரி 2027 முதல் ஜூன் 2027 வரை கடக ராசியில் இருப்பார்.


மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 

🔥 மேஷ ராசிக்கு GOLDEN GURU TRANSIT 2026! | வீடு • வேலை • வெளிநாடு யோகம்💥

மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2026 


👉 மேஷ ராசிக்காரர்களே…

இந்த குரு பெயர்ச்சியில் உங்களுக்கு அட்வான்டேஜ் இருக்கா?
👉 சுருக்கமாக சொன்னா — YES… நல்ல முன்னேற்ற காலம்! 🚀

நவக்கிரகங்களின் அமைச்சராகவும், முழு சுப கிரகமாகவும் விளங்கும் குரு பகவான் பெயர்ச்சி நிலவரத்தை பார்போம் 

📅 ஜூன் 2, அதிகாலை 2:25 மணிக்கு
👉 மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் அக்டோபர் 30ஆம் தேதி வரை கடகத்தில் இருப்பார். அதன் பிறகு சிம்ம ராசிக்கு அவர் நகர்கிறார்.

📅 25 ஜனவரி 2027 அன்று சிம்ம ராசியில் இருந்து வக்ர நிலையில் கடக ராசிக்கு திரும்புவார்.
👉 மீண்டும் கடகத்தில் உச்சம் பெற்று 25 ஜனவரி 2027 முதல் ஜூன் 2027 வரை அங்கு இருப்பார்.

✨ ஜோதிடத்தில்:
👉 கடகத்தில் குரு உச்சம் பெறுகிறார்

👉 இந்த powerful பெயர்ச்சி
👉 மேஷ ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தரப் போகுது?
பார்ப்போம் 👇

👉 குரு உங்கள் ராசிக்கு நாலாம் இடத்தில் (சுக ஸ்தானம்) இருக்கிறார்

இதனால்:
✔️ வீடு, சொத்து சேர்க்கை
✔️ வாகனம் வாங்கும் வாய்ப்பு
✔️ குடும்ப அமைதி

👉 உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்
👉 confidence உயரும்

👉 குருவின் பார்வைக்கு பலன் அதிகம் என்பது ஜோதிட கூற்று

👉 குரு தனது:
✔️ 5ம் பார்வை → 8ம் வீடு
✔️ 7ம் பார்வை → 10ம் வீடு
✔️ 9ம் பார்வை → 12ம் வீடு

இதனால்:
✔️ 8ம் வீடு → தடைப்பட்ட காரியங்கள் நடக்கும்
✔️ 10ம் வீடு → தொழில் உயர்வு
✔️ 12ம் வீடு → வெளிநாட்டு வாய்ப்பு

✨ இதுதான் இந்த பெயர்ச்சியின் big advantage!

👉 வெளிநாடு செல்வது, வேலை கிடைப்பது, settle ஆகுவது
👉 இவை எல்லாம் இப்போ possible!

💼 தொழில் & Career பலன்கள்


👉 வேலை செய்பவர்களுக்கு:
✔️ பதவி உயர்வுக்கு  chance உண்டு
✔️ எதிர்பார்த்த job change கட்டாயம் கிடைக்கும்

👉 ஆனால்…
⚠️ சற்று delay இருக்கலாம்

👉 business செய்பவர்களுக்கு :
✔️ புதிய idea start பண்ண நல்ல time தான் 

✔️ பிசினஸ் loan கிடைக்கும்
✔️ பழைய கடன் அடைக்க முடியும்
✔️ நல்ல staff கிடைப்பார்கள் 

👉 முக்கியமாக:
👉 குரு சனியை பார்ப்பதால்
👉 உங்கள் career ல் solid improvement! 💥

என்றாலும் 

👉 ஏழரை சனி நடக்கிறதால:
❗ முடிவுகளை அவசரமாக எடுக்காதீங்க
❗ over confidence வேண்டாம்

👉 patience இருந்தா → double success! 🔥 

💸 பொருளாதார பலன்கள்


📈 Money flow improve ஆகும்!

👉 இந்த பெயர்ச்சிக்கு பிறகு
👉 குரு உங்கள் ராசிக்கு நாலாம் வீட்டிற்கு வருவதால் 


👉  10ம் வீட்டு அதிபதி சனியை, குரு பார்ப்பதால்
👉 உங்கள் career ல் solid improvement! 💥 இருக்கும் 

இதனால்:
✔️ வீடு வாங்கும் வாய்ப்பு
✔️ பழைய வீட்டை புதுப்பிக்கும் வாய்ப்பு
✔️ சொத்து சேர்க்கை
✔️ வாகனம்  யோகம் 
உண்டாகும் 

👉 வருமானம் கூடும்
👉 சேமிப்பு அதிகரிக்கும்
👉 பழைய கடன் பிரச்சனைகள் குறையும்

⚠️ என்றாலும் 

👉 தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் 
👉 வீடு / நிலம் வாங்கும் போது document ஐ   கவனமாக பார்க்கவும்

👨‍👩‍👧 குடும்பம் & உறவுகள்


👉 இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு
✔️ குடும்பத்தில் இருந்து வந்த  பிரச்சனைகள் தீரும்
✔️ மேலும் கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்

💖 இல்லற வாழ்க்கை smooth போகும் 
👉 life partner மூலம் லாபம் வரும்

🎓 மாணவர்கள் 

👉 மாணவர்களுக்கு இது golden period
👉 இந்த குரு பெயர்ச்சி , மேஷ ராசி மாணவர்களுக்கு  நல்ல பலன்களை தர உள்ளது 
✔️ நல்ல marks
✔️ examsல் success
✔️ போட்டிகளில் வெற்றி
✔️ உயர்கல்வி வாய்ப்பும் உண்டாகும் 
✔️ abroad education எதிர்பார்ப்பவருக்கு நல்ல வாய்ப்பு அமையும் 

🩺 ஆரோக்கிய பலன்கள்

👉 health பொறுத்தவரை  நல்லா இருக்கும்

✔️ stress குறையும்
✔️ immunity உயரும்
✔️ நல்ல தூக்கம் வரும் 
👉 மன அமைதி கிடைக்கும்
✨ positive mindset develop பண்ண முடியும்

என்றாலும் உணவில் கவனம் அவசியம் 

👉 அக்டோபர் 30, 2026க்கு பிறகு
👉 குரு பஞ்சம ஸ்தானமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகி 

👉 அங்கிருந்து 9ம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்கிறார்

இதனால்:
✔️ confidence boost ஆகும் 
✔️ ambition increase ஆகும் 

⚠️ ஆனால்:
👉 தேவையில்லாத அலைச்சல்  இருக்கும்

📅 ஜனவரி 2027க்கு பிறகு
👉 குரு வக்ரமாகி மீண்டும் கடக ராசிக்கு திரும்புவார்

👉 இந்த நல்ல பலனை இன்னும் strong ஆக்க:

✔️ ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்

👉 முடிந்தால்:
👉 கும்பகோணம் அருகே உள்ள
📍 திட்டை குருபகவான் கோவில்
👉 சென்று வழிபடலாம்

👉 இல்லையெனில்:
👉 அருகிலுள்ள சிவன் கோயிலில் குரு பகவானை வணங்கலாம்

👉 overall லா பார்த்தா…

🔥 இந்த குரு பெயர்ச்சி
மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு growth period!

✔️ பணம்
✔️ வேலை
✔️ குடும்பம்
✔️ வெளிநாடு

👉 எல்லாத்திலும்
gradual growth + stability உறுதி


👉 தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறும்ய மறக்காதீர்கள்! 
📌 இங்கு சொல்லப்பட்டவை பொதுவான ஜோதிட விளக்கங்கள்

காதலுக்கும் ராகு – கேது இடையிலான உறவு

ஜோதிடத்தில் காதலுக்கும் ராகு – கேது இடையிலான உறவு மிகவும் கர்மபூர்வமானதும், மர்மமானதும், வாழ்க்கையை மாற்றும் சக்தியுடனும் காணப்படுகிறது. ராகு – கேது நேரடி கிரகங்கள் அல்ல; இவை நிழல் கிரகங்கள் என்பதால், காதலில் சாதாரண பாதையைவிட விதி, கடந்த ஜென்ம பந்தம், திடீர் மாற்றங்கள் மற்றும் ஆழமான அனுபவங்களை வெளிப்படுத்துகின்றன.


🔥 ராகு – காதலில்

ஜோதிடத்தில் காதலைப் பொறுத்தவரை ராகு ஆசை, மயக்கம், வித்தியாசம் மற்றும் திடீர் ஈர்ப்பைக் குறிக்கிறார்.

ஒரு ஜாதகத்தில் ராகு நன்றாக இருந்தால்,

  • முதல் பார்வையிலேயே அதீத ஈர்ப்பு

  • சமூக விதிகளை மீறும் காதல்

  • காதலில் மயக்கம் மற்றும் அடிமை உணர்வு

  • ரகசிய காதல், மறைவு உறவுகள்

  • “இவர்தான் என் வாழ்க்கை” என்ற தீவிர உணர்வு

போன்ற அனுபவங்களை ஏற்படுத்தும்.

ஆனால், ராகு பாதிக்கப்பட்டிருந்தால்,

  • காதலில் ஏமாற்றம்

  • துரோகம்

  • தவறான நபரிடம் சிக்கிக் கொள்வது

  • குழப்பம் மற்றும் நிலையற்ற தன்மை

என்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ராகு மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்வை செய்தாலோ, காதலில் தீவிர ஆசை, காதல் மயக்கம் மற்றும் கட்டுப்பாடற்ற ஈர்ப்பு அதிகரிக்கும்.


🌙 கேது – காதலில்

ஜோதிடத்தில் காதலைப் பொறுத்தவரை கேது விரக்தி, ஆன்மீகம், விடுபாடு மற்றும் கடந்த கர்மாவைக் குறிக்கிறார்.

ஒரு ஜாதகத்தில் கேது நன்றாக இருந்தால்,

  • காதலில் ஆழமான கர்ம பந்தம்

  • காரணமில்லாத பாசம் அல்லது விலகல்

  • காதல் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாத நிலை

  • திடீரென உறவை முடித்துக் கொள்வது

  • உடல் காதலைவிட ஆன்மீக அல்லது மன இணைப்பு

என்பவற்றை காட்டும்.

ஆனால், கேது பாதிக்கப்பட்டிருந்தால்,

  • காதலில் தனிமை

  • உறவில் வெறுமை உணர்வு

  • திருமணத்தில் தாமதம் அல்லது விரக்தி

போன்ற நிலைகள் உருவாகலாம்.

கேது மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்வை செய்தாலோ, காதலில் தியாகம், ஒருதலைக் காதல் மற்றும் விரக்தி போன்ற அனுபவங்கள் ஏற்படலாம்.


🔔 முடிவுரை

காதலில் இன்பமும் வலியும், பந்தமும் விடுபாடும் ஒருசேர அனுபவிக்க வைக்கும் சக்தி ராகு மற்றும் கேதுவுக்கே உண்டு என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஒருவரின் காதல் வாழ்க்கையின் உண்மை தன்மையை அறிய, ஜாதகத்தில் ராகு – கேதுவின் நிலையை கவனமாக ஆராய வேண்டும்.

காதல் வாழ்க்கையில் சுக்கிரனின் பங்கு
காதல் வாழ்க்கையில் சந்திரனின் பங்கு
காதலுக்கும் புதனுக்கும் இடையிலான உறவு
காதல் வாழ்க்கையில் சூரியனின் பங்கு
காதல் வாழ்க்கையில் குருவின் பங்கு
காதல் வாழ்க்கையில் செவ்வாயின் பங்கு
காதல் வாழ்க்கையில் சனியின் பங்கு
காதல் வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு

காதலுக்கும் சனிக்கும் இடையிலான உறவு

ஜோதிடத்தில் காதலுக்கும் சனிக்கும் இடையிலான தொடர்பு மிகவும் ஆழமானதும் சவாலானதும் ஆகும். பொதுவாக சனி பகவான் ஒழுக்கம், பொறுமை, கட்டுப்பாடு மற்றும் கர்மாவை குறிக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். சுக்கிரன் காதலின் இன்பம், ஈர்ப்பு மற்றும் ரொமான்ஸைக் காட்டினாலும், சனி காதலில் பொறுப்பு, பொறுமை, கால தாமதம் மற்றும் கர்ம பந்தங்களை பிரதிபலிக்கிறார்.

காதல் விஷயத்தில் சனி குறிக்கும் அம்சங்கள்: கடந்த ஜென்ம பந்தங்கள், கடமை உணர்வுடன் கூடிய உறவுகள், தாமதமான காதல் அல்லது தாமத திருமணம், பொறுப்பு மற்றும் விசுவாசம், உடல் இன்பத்தை விட மன உறுதி மற்றும் நிலைத்தன்மை ஆகியவையாகும்.

ஒரு ஜாதகத்தில் காதலில் சனி வலுவாக இருந்தால், காதல் உடனடியாக உருவாகாது. ஆனால் அது உருவானால், நீண்ட காலம் நிலைத்து நிற்கும். உண்மையான அன்பு, துரோகம் செய்யாத மனப்பான்மை மற்றும் வாழ்க்கைத் துணை மீது அதிகமான கடமை உணர்வையும் சனி வழங்குகிறார்.

ஆனால், ஜாதகத்தில் சனி பாதிக்கப்பட்டிருந்தால், காதலில் தடை, பிரிவு, காதலால் மன வேதனை, ஒருதலைக் காதல், அன்பு கிடைக்காத உணர்வு மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் காதல் ஒரு “சுமை” போல உணரப்படும் நிலையும் உருவாகும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

சனியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்வை செய்தாலோ, பொதுவாக இது சவாலான யோகமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த அமைப்பில் காதல் மெதுவாக வளர்ந்து, திருமணமாகி, வாழ்க்கை முழுவதும் நிலைக்கும் வாய்ப்பும் உண்டு. வசதி மற்றும் இன்பம் குறைவாக இருந்தாலும், அந்த உறவு மிகவும் வலுவாகவும் நிலைத்ததாகவும் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

மொத்தத்தில், சனி காதலில் பொறுமை, பொறுப்பு மற்றும் கர்ம பந்தத்தை கற்றுத் தரும் கிரகமாக செயல்படுகிறார். காதல் இனிமையாக இருக்க சுக்கிரன் அவசியம்; ஆனால் அந்த காதல் நிலைத்திருக்க சனியின் சக்தி மிக முக்கியமானதாகும்.

காதல் வாழ்க்கையில் சுக்கிரனின் பங்கு
காதல் வாழ்க்கையில் சந்திரனின் பங்கு
காதலுக்கும் புதனுக்கும் இடையிலான உறவு
காதல் வாழ்க்கையில் சூரியனின் பங்கு
காதல் வாழ்க்கையில் குருவின் பங்கு
காதல் வாழ்க்கையில் செவ்வாயின் பங்கு
காதல் வாழ்க்கையில் சனியின் பங்கு
காதல் வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு

காதலுக்கும் செவ்வாய்க்கும் (Mars / குஜன்) இடையிலான உறவு

 

ஜோதிடத்தில் காதலுக்கும் செவ்வாய்க்கும் (Mars / குஜன்) இடையிலான உறவு மிகவும் தீவிரமும் சக்திவாய்ந்ததுமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் காதலில் ஆவேசம், துணிச்சல், உடல் ஈர்ப்பு மற்றும் பாதுகாப்பு மனநிலையை பிரதிபலிக்கும் முக்கிய கிரகமாக விளங்குகிறார்.

செவ்வாய் காதலில் காம ஈர்ப்பையும், தீவிரமான ஆசையையும் குறிக்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால், காதல் உறவில் பாசத்துடன் கூடிய தீவிரம் காணப்படும். ஒருவரை முதலில் அணுகுவது, காதலை வெளிப்படுத்துவது, உறவுக்காக போராடுவது போன்ற செயல்கள் அனைத்திற்கும் செவ்வாயின் தாக்கம் முக்கிய காரணமாகும். அதே சமயம், செவ்வாய் பலவீனமாக இருந்தால், காதலை வெளிப்படுத்தும் துணிச்சல் குறைய வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் காதலில் “என்னுடையவர்” என்ற பாதுகாப்பு உணர்வை உருவாக்குகிறது. ஆனால் இந்த தாக்கம் அளவுக்கு மீறினால், பொறாமை, உரிமை உணர்வு மற்றும் கட்டுப்படுத்தும் மனநிலை தோன்றக்கூடும். மேலும், செவ்வாய் சண்டைகளையும் குறிக்கும் கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் காதலில் செவ்வாய் தாக்கம் அதிகமாக இருந்தால், காதல் உறவு தீவிரமாக இருக்கும்; அதே நேரத்தில் சிறிய விஷயங்களுக்குக் கூட வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், உற்சாகமான காதல், வாழ்க்கைத் துணைக்காக போராடும் மனநிலை, வலுவான உடல் மற்றும் மன சக்தி, உறவில் பாதுகாப்பும் தீவிரமான பாசமும் காணப்படும். ஆனால், செவ்வாய் பாதிக்கப்பட்டிருந்தால், காதல் உறவில் அடிக்கடி மோதல்கள், திடீர் பிரிவுகள், திருமணத்தில் தாமதம் அல்லது மனக்கசப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

மொத்தத்தில், செவ்வாய் காதலில் தீவிரம், துணிச்சல் மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்கும் கிரகமாக செயல்படுகிறார். ஆனால் இந்த சக்தி சமநிலையுடன் செயல்பட்டால் மட்டுமே, காதல் உறவு ஆரோக்கியமாகவும் நீடித்ததாகவும் இருக்கும்.

காதல் வாழ்க்கையில் சுக்கிரனின் பங்கு
காதல் வாழ்க்கையில் சந்திரனின் பங்கு
காதலுக்கும் புதனுக்கும் இடையிலான உறவு
காதல் வாழ்க்கையில் சூரியனின் பங்கு
காதல் வாழ்க்கையில் குருவின் பங்கு
காதல் வாழ்க்கையில் செவ்வாயின் பங்கு
காதல் வாழ்க்கையில் சனியின் பங்கு
காதல் வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு

காதலுக்கும் சூரியனுக்கும் இடையிலான உறவு

 


ஜோதிடத்தில் காதலுக்கும் சூரியனுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானதும் அர்த்தமுள்ளதுமானதாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் காதலின் ஈர்ப்பு, இன்பம் மற்றும் ரொமான்ஸைக் குறித்தாலும், சூரியன் காதலில் “அடையாளம், கௌரவம், மரியாதை மற்றும் தன்னம்பிக்கை” ஆகியவற்றை பிரதிபலிக்கும் முக்கிய கிரகமாக விளங்குகிறார்.

சூரியன் ஆதிக்கம், அதிகாரம் மற்றும் தலைமைக் குணத்தை குறிக்கும் கிரகம். காதலில் வழிநடத்தும் தன்மை, முடிவெடுக்கும் திறன் மற்றும் உறவிற்கு ஒரு திசை கொடுக்கும் மனநிலை ஆகியவை சூரியனால் உருவாகின்றன.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், வெளிப்படையான காதல், குடும்பமும் சமூகமும் ஏற்றுக்கொள்ளும் உறவு மற்றும் மரியாதையுடன் கூடிய காதல் வாழ்க்கை அமையும். மேலும், சூரியன் காதலில் பாதுகாப்பு உணர்வையும் வழங்குகிறார். வாழ்க்கைத் துணைக்கு ஆதரவாக நிற்பது, பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது போன்ற பண்புகள் இந்த நிலையில் வெளிப்படும்.

ஒரு ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்தால், காதலில் தன்னம்பிக்கை குறைவு, அடிமைத்தனமான மனநிலை, வாழ்க்கைத் துணையால் அவமதிக்கப்படுதல், மறைமுகமான அல்லது கௌரவமற்ற உறவுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், உறவுகளில் “நான்” என்ற தனிப்பட்ட அடையாளம் இழக்கும் நிலையும் உருவாகலாம்.

இப்போது, சூரியன் பிற கிரகங்களுடன் சேரும்போதோ அல்லது அவற்றின் பார்வையைப் பெறும்போதோ, காதல் வாழ்க்கையில் ஏற்படும் பலன்களை பார்ப்போம்:

  • சூரியன் – சுக்கிரன் சேர்ந்தாலோ அல்லது பார்வை ஏற்பட்டாலோ, கௌரவமும் அரச மரியாதையும் கொண்ட காதல் அமையும்.

  • சூரியன் – சந்திரன் சேர்ந்தாலோ அல்லது பார்வை ஏற்பட்டாலோ, உணர்ச்சியும் மரியாதையும் இணைந்த உறவு உருவாகும்.

  • சூரியன் – செவ்வாய் சேர்ந்தாலோ அல்லது பார்வை ஏற்பட்டாலோ, தீவிரமான காதலும் ஈகோ மோதல்களும் காணப்படும்.

  • சூரியன் – சனி சேர்ந்தாலோ அல்லது பார்வை ஏற்பட்டாலோ, பொறுப்பான ஆனால் சவால்கள் நிறைந்த காதல் உறவு அமையும்.

மொத்தத்தில், சூரியன் காதலில் “யார் நான்?” என்ற அடையாளத்தை வழங்கும் கிரகமாக செயல்படுகிறார். காதல் இனிமையாக இருக்க சுக்கிரன் அவசியம்; ஆனால் அந்த காதல் மரியாதையுடன் நீடிக்க சூரியனின் நிலை வலுவாக இருக்க வேண்டும்.

காதல் வாழ்க்கையில் சுக்கிரனின் பங்கு
காதல் வாழ்க்கையில் சந்திரனின் பங்கு
காதலுக்கும் புதனுக்கும் இடையிலான உறவு
காதல் வாழ்க்கையில் சூரியனின் பங்கு
காதல் வாழ்க்கையில் குருவின் பங்கு
காதல் வாழ்க்கையில் செவ்வாயின் பங்கு
காதல் வாழ்க்கையில் சனியின் பங்கு
காதல் வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு

காதலுக்கும் குருவுக்கும் இடையிலான உறவு

காதலுக்கும் குருவுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குரு (குரு பகவான்) உயர்ந்த காதல், நெறிமுறை, நம்பிக்கை மற்றும் திருமண பந்தத்தை பிரதிபலிக்கும் முக்கிய கிரகமாக விளங்குகிறார்.

குரு காதலை உடல் ஈர்ப்பைத் தாண்டி, ஆன்மீகமும் நெறிமுறையும் கொண்ட உறவாக மாற்றுகிறார். உண்மையான பாசம், மரியாதை, பொறுப்பு, தர்மம் மற்றும் நேர்மை போன்ற உயர்ந்த பண்புகள் காதல் உறவில் உருவாவதற்கு குருவின் தாக்கம் முக்கிய காரணமாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு வலுவாக இருந்தால், காதல் உறவு திருமணமாக மாறும் வாய்ப்பு அதிகம். அந்த உறவு நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மையையும் பெறும். காதலில் நம்பிக்கை, மன்னிப்பு, பொறுமை மற்றும் புரிதலை வளர்க்கும் சக்தி குருவுக்கு உண்டு.

மேலும், காதல் உறவில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அவற்றை அமைதியாகவும் சமாதானமாகவும் தீர்க்கும் மனப்பக்குவத்தையும் குரு வழங்குகிறார். இதனால் காதல் உறவு சண்டைகளால் முறியாமல், திருமண வாழ்க்கையாக மலரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

ஆனால், குரு பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால், காதலில் தாமதம், உறவில் நம்பிக்கை குறைவு, திருமணம் தள்ளிப்போகுதல், காதல் உறவுகள் முறிந்து போகும் நிலை போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.

சுக்கிரன் காதலைத் தொடங்கி வைப்பார் என்றால், அந்த காதலை நிலைத்ததாக மாற்றி, மங்கலமான திருமண வாழ்வாக உருவாக்குபவர் குரு பகவான் ஆவார். பொதுவாகச் சொன்னால், காதலில் நிலைத்தன்மை, திருமண பாக்கியம் மற்றும் நல்ல புரிதலை வழங்கும் முக்கிய கிரகம் குருவே ஆகும்.

காதல் வாழ்க்கையில் சுக்கிரனின் பங்கு
காதல் வாழ்க்கையில் சந்திரனின் பங்கு
காதலுக்கும் புதனுக்கும் இடையிலான உறவு
காதல் வாழ்க்கையில் சூரியனின் பங்கு
காதல் வாழ்க்கையில் குருவின் பங்கு
காதல் வாழ்க்கையில் செவ்வாயின் பங்கு
காதல் வாழ்க்கையில் சனியின் பங்கு
காதல் வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு

காதலுக்கும் புதனுக்கும் இடையிலான உறவு


 காதல் உணர்ச்சியின் ஒரு பயணம் என்றால், அந்த பயணத்தை வழிநடத்துவது அறிவும் பேச்சும் தான்.

“காதலுக்கும் கிரகங்களுக்கும் இடையிலான உறவு” என்ற இந்த தொடரில், இன்று ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் காதல் வாழ்க்கை மற்றும் உறவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கிரகம் – புதன் – எப்படி செயல்படுகிறார் என்பதை பார்ப்போம்.

காதல் வெறும் உணர்ச்சியா? அல்லது பேச்சின் விளைவா?
உண்மையில் காதல் நிலைக்கவும் வளரவும் இரண்டும் அவசியம். காதலை உருவாக்குவது சுக்கிரன் என்றாலும், அந்த காதலை வளர்த்து நிலைநிறுத்துவது புதனின் பேச்சுத் திறனும் புத்திசாலித்தனமும் ஆகும்.

ஜோதிடத்தில் காதலுக்கும் புதனுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக சுக்கிரன் காதலுக்கான பிரதான கிரகமாக பார்க்கப்பட்டாலும், ஒரு உறவு மலரவும் நீடிக்கவும் புதன் இன்றியமையாத பங்கு வகிக்கிறார். காதல் வளர்ச்சிக்கு பேச்சுவார்த்தை, கருத்துப் பரிமாற்றம் மற்றும் புரிதல் மிக அவசியமானவை.

ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அவர் தனது உணர்வுகளை தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் வெளிப்படுத்துவார். புதன் பலமாக உள்ளவர்களின் காதல் உறவுகளில், காதலர்கள் ஒருவருக்கொருவர் திறந்த மனதுடன் பேசுவார்கள். நட்புக்கு ஏற்ற கிரகமாக புதன் கருதப்படுவதால், புதன் ஆதிக்கம் அதிகமுள்ள ஜாதகங்களில் காதல் முதலில் நட்பாகத் தொடங்கி, பின்னர் ஆழமான உறவாக மாறும்.

மேலும், புதன் அறிவை குறிக்கும் கிரகம். எனவே உடல் ஈர்ப்பை விட அறிவு, பேச்சுத் திறன் மற்றும் சிந்தனை ஒருமைப்பாடு போன்றவை காதலை உருவாக்கும். புதன் இளமை, சுறுசுறுப்பு மற்றும் நகைச்சுவை உணர்வைக் குறிக்கின்றதால், காதல் உறவில் சலிப்பு இல்லாமல் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும்.

ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டிருந்தால், காதல் வாழ்க்கையில் தவறான புரிதல்கள், தேவையற்ற வாக்குவாதங்கள், பொய் அல்லது மறைமுக நடத்தை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், ஒரு ஜாதகத்தில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருந்தாலோ, அல்லது ஒருவரை ஒருவர் பார்வை செய்தாலோ, காதலில் இனிமையான பேச்சு, ரொமான்ஸ், கவர்ச்சி மற்றும் வெற்றிகரமான காதல் உறவை வழங்கும் சிறந்த யோகமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த யோகத்தின் பலன்கள் எந்த வீட்டில் அமைந்துள்ளது என்பதனைப் பொறுத்து மாறுபடும்.

காதல் வாழ்க்கையில் சுக்கிரனின் பங்கு
காதல் வாழ்க்கையில் சந்திரனின் பங்கு
காதலுக்கும் புதனுக்கும் இடையிலான உறவு
காதல் வாழ்க்கையில் சூரியனின் பங்கு
காதல் வாழ்க்கையில் குருவின் பங்கு
காதல் வாழ்க்கையில் செவ்வாயின் பங்கு
காதல் வாழ்க்கையில் சனியின் பங்கு
காதல் வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு

காதலுக்கும் சந்திரனுக்கும் இடையிலான உறவு

ஜோதிடத்தில் காதலுக்கும் சந்திரனுக்கும் இடையிலான உறவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காதலுக்கு அடிப்படையானது மனம் என்பதால், மனித மனத்தை ஆளும் கிரகமான சந்திரன் காதல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

சந்திரன் மனித மனம், உணர்ச்சிகள், பாசம், உள்ளுணர்வு மற்றும் மன இணைப்பை பிரதிபலிக்கும் கிரகமாக விளங்குகிறார். ஒருவரின் காதல் எவ்வளவு ஆழமானது, உணர்ச்சிபூர்வமானதா என்பதை தீர்மானிப்பதும் சந்திரனே ஆகும். ஜோதிடத்தின் அடிப்படையில் சந்திரன் மனம், உணர்ச்சி, காதல் உணர்வு மற்றும் மனதளவிலான இணைப்பை குறிக்கிறார்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால், அவர்களுக்கு காதலில் அக்கறை, பரிவு, பாதுகாப்பு உணர்வு மற்றும் உண்மையான பாசம் அதிகமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகும் இவர்களின் காதல் குறையாமல் தொடரும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

ஆனால், சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால், சந்தேகம், பயம், மனக்குழப்பம் மற்றும் உணர்ச்சி ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்கும். இதனால் காதல் உறவுகளில் புரிதல் குறைவு மற்றும் மன வேதனை ஏற்படலாம்.

சந்திரனும் சுக்கிரனும் இணைந்திருந்தால், மென்மையான காதல், ரொமான்ஸ், இசை, கலை ரசனை மற்றும் காதலில் இனிமை அதிகரிக்கும். இவர்கள் உணர்ச்சிபூர்வமாகவும் காதலை அழகாக வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

அதே சமயம், சந்திரன் தீய கிரகங்களுடன் தொடர்பு பெற்றிருந்தால், காதலில் தாமதம், ஒருதலைக் காதல் அல்லது மன வேதனை போன்ற அனுபவங்கள் ஏற்படலாம். ஆனால் இதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியும், காதலின் உண்மை தன்மையை புரிந்துகொள்ளும் பக்குவமும் உருவாகும்.

எனவே, ஒருவரின் காதல் வாழ்க்கையின் உண்மை தன்மையை அறிய, ஜாதகத்தில் சந்திரனின் நிலையை ஆராய்வது மிகவும் அவசியம்.

காதல் வாழ்க்கையில் சுக்கிரனின் பங்கு
காதல் வாழ்க்கையில் சந்திரனின் பங்கு
காதலுக்கும் புதனுக்கும் இடையிலான உறவு
காதல் வாழ்க்கையில் சூரியனின் பங்கு
காதல் வாழ்க்கையில் குருவின் பங்கு
காதல் வாழ்க்கையில் செவ்வாயின் பங்கு
காதல் வாழ்க்கையில் சனியின் பங்கு
காதல் வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு

காதலுக்கும் சுக்கிரனுக்கும் இடையிலான உறவு

காதலுக்கான முக்கிய கிரகமாக சுக்கிரன் கருதப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே. காதல், ஈர்ப்பு மற்றும் சிற்றின்பம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் மிக முக்கியமான கிரகம் சுக்கிரனே ஆகும்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அவர் கவர்ச்சியானவராகவும், அன்பை அழகாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தக் கூடியவராகவும் இருப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும், சுக்கிரன் வலிமை பெற்றிருந்தால், உண்மையான காதல், இனிமையான உறவுகள் மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், சுக்கிரன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால், காதல் தோல்வி, பிரிவு, ஏமாற்றம் போன்ற அனுபவங்களை வாழ்க்கையில் சந்திக்க நேரிடலாம். இங்கு சுக்கிரன் பாதிப்பு என்பதன் பொருள், சுக்கிரன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருப்பது அல்லது அவற்றின் பார்வைக்கு உட்படுவது ஆகும்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ஏழாம் வீட்டுடன் தொடர்பு பெற்றிருந்தாலோ அல்லது ஏழாம் வீட்டில் இருந்தாலோ, அழகான வாழ்க்கைத் துணையும் சிறந்த திருமண வாழ்க்கையும் அமையும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

அதேபோல், சுக்கிரன் ஐந்தாம் வீட்டுடன் தொடர்பு பெற்றிருந்தாலோ அல்லது ஐந்தாம் வீட்டில் இருந்தாலோ, காதல் ஆர்வம், விளையாட்டுத்தனம் மற்றும் ரசனை அதிகமாக இருக்கும்.

மேலும், பதினொன்றாம் வீட்டில் இருக்கும் சுக்கிரன், திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஆடம்பர வசதிகளை வழங்குவார் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.

காதல் வாழ்க்கையில் சுக்கிரனின் பங்கு

காதலுக்கும் கிரகங்களுக்கும் இடையிலான உறவு


ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் காதல் வாழ்க்கை, ஈர்ப்பு மற்றும் திருமண உறவுகளைத் தீர்மானிப்பதில் கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் காதல், ஈர்ப்பு, திருமணம் மற்றும் உணர்ச்சிகளில் தனித்தனி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறப்படுகிறது. காதலுக்கும் கிரகங்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய முக்கியமான ஜோதிட தகவல்களை இப்போது பார்ப்போம்.

ஹஸ்ட்ரோ தமிழ், வியாசா ஸ்ரீயின் வணக்கம்.  



"காதலுக்கும் கிரகங்களுக்கும் இடையிலான உறவு" என்ற தலைப்பில் ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரது காதல் வாழ்க்கை மற்றும் உறவுகளைத் தீர்மானிப்பதில் கிரகங்கள் என்ன மாதிரி பங்கு வகிக்கின்றன என்று பார்ப்போம் 

ஜோதிடத்தின் படி, காதல் உறவுகளில் கிரகங்களின் தாக்கம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் காமத்திற்கும், குரு அன்பிற்கும் காரணமாக இருப்பதால், இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை, பார்வை மற்றும் பலம் ஆகியவை காதல், பிரிவு, ரகசிய உறவுகள் போன்ற பல விஷயங்களைத் தீர்மானிக்கின்றன. குறிப்பாக, குருவின் பார்வை இல்லாத காதல் வாழ்க்கை பல சிக்கல்களை எதிர்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. மேலும், சுக்கிரனும் புதனும் காதல் உறவுகளில் முக்கிய பங்கு வகிப்பதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது

காதல் வாழ்க்கையில் சுக்கிரனின் பங்கு
காதல் வாழ்க்கையில் சந்திரனின் பங்கு
காதலுக்கும் புதனுக்கும் இடையிலான உறவு
காதல் வாழ்க்கையில் சூரியனின் பங்கு
காதல் வாழ்க்கையில் குருவின் பங்கு
காதல் வாழ்க்கையில் செவ்வாயின் பங்கு
காதல் வாழ்க்கையில் சனியின் பங்கு
காதல் வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு