சனி பெயர்ச்சி- 2025- மேஷ ராசி
மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம் .. லாப சனி முடிந்து விட்டது...
ஏழரை சனி என்றால் என்ன?
- ஒவ்வொரு கிரகமும் 12 ராசிகளை சுற்றி வர சில காலங்கள் எடுத்து கொள்ளும், அதில் சனி பகவான் ஒரு முறை முழுவதுமாக சுற்றி வர 30 ஆண்டு காலம் ஆகும்.
- அப்படி ஒரு மனிதனின் வாழ்வில் ஏழரை சனி 30 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடும். அதில் முதல் முறை வருவதற்கு மங்கு சனி என்றும், இரண்டாவது முறை வருவதற்கு பொங்கு சனி என்றும், 3ம் முறையாக வருவதற்கு மரணச் சனி என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒரு ராசிக்கு முந்தைய ராசியில் சனி வந்து அமரும்போது ஏழரை சனி ஆரம்பிக்கிறது. சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார்.
- ஜென்ம ராசிக்கு முந்தைய ராசி அதாவது 12ம் இடத்தில் சனி வரும்போது ஏழரை சனி ஆரம்பம், அந்த இரண்டரை வருடம் இருக்கும் சனியை விரைய சனி ஆகும்
- அதுபோல் ஜென்ம ராசிக்கு சனி வந்து இருக்கும் இரண்டரை வருடம் ஜென்ம சனி என்று அழைக்கப்படுகிறது.
- ஜென்ம ராசிக்கு அடுத்த ராசி அதாவது இரண்டாமிடத்தில் சனி பெயர்ச்சியாகிஇருக்கும் அந்த இரண்டரை வருடத்தை பாத சனி என்று சொலப்படுகிறது.
- 30 வருடத்திற்கு ஒரு முறை சனி மீன ராசிக்கு வரும் போது, மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம் என்று அர்த்தம். ஒவ்வொருவருக்கு அதிக பட்சமாக 3 சுற்றுகள் சந்திக்க நேரிடும். இந்த சுற்று மேஷ ராசிகாருக்கு முதல் சுற்று என்றால் அதாவது 25 அல்லது 26 வயதுக்கு குறைவானவர்களுக்கு சனி தன் வழியில் வாழ்க்கை பாடத்தை கற்று தருவார். மிகவும் கடினமான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். அதாவது மங்கு சனி என்று சொல்வார்கள். மங்குசனி சிறிய வயதில் வருவதால் அறிவு, கல்வி, வேலை வாய்ப்பு அனைத்தையும் மங்க வைத்து விடும் அல்லது நல்லபடி அமைக்க வழியை வலியுடன் காட்டுவார் என்று சொல்லபடுகிறது.
- இரண்டாம் சுற்று என்றால் அதிக பட்சம் 30 வயதில் (சிலருக்கு 25 அல்லது வயதில்) வரும் ஏழரை சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். இந்த ஏழரை வருடத்தில் கஷ்டங்களை கொடுத்தாலும் பல அனுபவங்களையும், வாய்ப்புக்களையும் கொடுத்து உயர்த்தி விடும்
- முன்றாம் சுற்று என்றால் அதிக பட்சம் 60 வயதில் (சிலருக்கு 54 அல்லது 56 வயதில்) வரும் ஏழரை சனியை மரண சனி என்பார்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் கவனம் அவசியம் ஆகும்.
பொது கண்ணோட்டம்
- மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பகிறது என்றாலும் ஆரம்பத்தில் பொதுவாக பிரச்சனைகள் குறைவாக இருக்கும். 2025ம் ஆண்டை பொறுத்தவரை நன்றாகவே இருக்கும் எனலாம் பொதுவாக இந்த சனிப் பெயர்ச்சியின் மிகவும் சவாலான காலகட்டம் 2026ம் ஆண்டாக இருக்கலாம் என்று தான் சொல்ல முடியும் இந்த ஆண்டை பொறுத்தவரை இந்த ஆரம்ப காலகட்டத்தில்ஆன்மீக வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ள ஆண்டாகவேஇருக்கலாம்.இனி வரும் ஆண்டுகளில் எதிரிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள்.
- ஒருவரையும் நம்பி செயல்பட முடியாது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நேரமிது வீண்பழி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் விரயங்கள் சற்று அதிகமாக இருக்கும்.
- மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பது பிரச்னையை கொடுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் கவனமோடு செயல்பட வேண்டும்.
- பொதுவாக இந்த பெயர்ச்சி ஆன்மீக பலத்தை அதிகரிக்க செய்யும் என்று சொல்லாம்
- இந்த சனி பெயர்ச்சியின் போது மேஷ ராசிக்காரர்களுக்கு பல சாதகமான அம்சங்கள் என்றால் தொழிலில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் எந்தவொரு குறையும் இருக்காது. முதல் பகுதியில் குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலைத்து, பொருளாதாரத்தில் வளர்ச்சி காணலாம். நல்ல முயற்சிகள் ஏற்ற வெற்றி உண்டாகும், மேலும் வாழ்க்கையில் நிம்மதி உருவாகும்.
- என்றாலும் மேஷ ராசி ஏழரை சனி நடப்பதால் சவால்களும் வாய்ப்புகளும் நிறைந்த காலமாக இருக்கும். ஏழரை சனி ஆரம்ப காலம் என்பதால் எந்த முயற்சிகளிலும் திட்டமிட்டு செயல்படுவது மிக முக்கியம். வேலை, பொருளாதாரம், உறவுகள் போன்றவற்றில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசரமான முடிவுகளை தவிர்த்து, நீண்டகால விளைவுகளை கருதி கொண்டு செயல்பட வேண்டும்.
- ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் சனி பகவான் வக்ர நிலையில் இருக்கும் போது, பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
- மேஷ ராசிக்கு இந்த ஏழரை சனி காலம் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள கூடிய வகையில் அனுபவத்தை சனி கொடுப்பார்.
குடும்ப வாழ்க்கை
- மற்ற கிரகங்களின் கோசார பலன்களின் காரணமாக, சனிப்பெயர்ச்சிக்கு பிறகு அதாவது மார்ச் 2025 முதல் சில மாதங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் பிப்ரவரி 2026ம் ஆண்டு வரை குடும்ப விஷயங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அனுசரணையான பேச்சால், குடும்பத்தில் வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- பொதுவாக 2025ம் ஆண்டு குடும்ப வாழ்க்கை பொறுத்து சற்று சாதகமாக தான் இருக்கும் எனலாம்.
- என்றாலும் மார்ச் 2026 முதல் மார்ச் 2027 வரையிலான காலம் சவாலானதாக இருக்கலாம். இந்த சமயத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெரிதாக இருக்காது.
- குடும்ப அரசியல் தலை தூக்கும் என்பது குடும்ப உறவுகளிடம் மனம் திறந்து பேச வேண்டும். ஒளிவு மறைவு இன்றி பேசுவது பாதி பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், என்றாலும் பேச்சில் கவனம் தேவை.
- செய்ய நினைக்கும் சுப காரியங்கள் தள்ளி போகலாம் அல்லது தடையும் படலாம். இதனால் விரக்தி மற்றும் மன வேதனையை ஏற்படுத்தலாம். இதுவும் கடந்து போகும் என்று அமைதியாக விட்டுவிடுவது நல்லது.
- கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவன் மனைவி உறவு பாதிக்கப்படலாம். என்றாலும் சுமுகமாக பேசி அவற்றை தீர்த்துக் கொள்ளவும் முடியும்.
- அக்டோபர் 2027 முதல் தற்போதைய சனிப்பெயர்ச்சியின் கடைசி ஆறு மாதங்கள் குடும்பப் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க முடியாது என்றாலும் இந்த பிரச்சனைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் எனலாம்.
- பொதுவாக, இனி வரும் ஆண்டுகளில் பொறுமை மிகவும் அவசியம். குடும்பத்தின் தேவைகளைப் புரிந்து கொள்வதில் அதிக நேரம் செலவிட வேண்டும். சமரச பேச்சு வார்த்தை மூலம் உறவில் மோதல் வராமல் தடுக்கலாம்.
- மேலும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் நிறைகளைபார்க்க வேண்டும்.
- காதலை பொறுத்தவரை சனிப்பெயர்ச்சியின் முதல் கட்டத்தில், அதாவதுஆரம்பத்தில்சிறப்பாக இருக்கும்.
- காதல் உறவை திருமண உறவாக மாற்றும் எண்ணம் இருக்கும் பட்சத்தில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. சூழ்நிலையை பொறுமையுடன் கையாள வேண்டும்.
- புதிதாக திருமணமானவராக இருந்தால், ஜூலை 2025 முதல் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
- என்றாலும் சனி தனது மூன்றாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், பேச்சு திறன் மற்றும் அனுபவ அறிவு வெளிப்படும். பேச்சில் கவனம் இருந்தால் வாழ்க்கை துணையுடன் நிலவி வந்த மனக்கசப்புகள் குறைந்து நல்ல ஒற்றுமை ஏற்படும்.
ஆரோக்கியம்
- அதிக வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக கவலைகள், தூக்கம் இன்மை, பதற்றம் அதிகரிக்கும்.
- எதிர்பாராத மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வதை விட தயாராக இருக்க வேண்டும். காப்பீடுகளில் கவனம் அவசியம்.
- இந்த வருடம் ஆரோக்கிய பிரச்சனை குறைவாக இருக்கும். இது 2026ம் ஆண்டுக்கு பிறகு படி படியாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு கவனம் அவசியம்.
- உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க அவ்வப்போது மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.
- கண்களில் எரியும் உணர்வு, கண்களில் நீர் வடிதல், பார்வை இழப்பு, காலில் காயம், சுளுக்கு போன்ற சிறு சிறு பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்.
- மேலும் ஜீரண சக்தி குறையும் என்பதால் சிறுநீர் மற்றும் மலம் சம்மந்தப்பட்ட உறுப்புகளில் பிரச்சனைகள் தலை தூக்கும் என்பதால் கவனம் அவசியம். ஏற்கனவே பிரச்சனை இருந்தால் அது அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது. முடித்தளவு வெளி உணவை தவிர்க்கவும்.
தொழில் மற்றும் நிதி நிலை
- சனிக்கு 3, 7, 10 இடங்களை பார்ப்பார் அந்த வகையில் பன்னிரண்டாம் வீட்டிற்கு வரும் சனியின் பார்வைகள் மேஷ ராசியின்இரண்டாம் வீடு ஆறாம் வீடு மற்றும் ஒன்பதாம் வீடு ஆகிய வீடுகளில்விழுகிறது வெளியூர் பயணம் மற்றும் நீண்ட நாள் வெளிநாட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும் என்றாலும் செலவுகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும்
- வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்ட ஏதேனும் ஒரு தொழிலைச் செய்தாலோ அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலோ வெளிநாட்டு மூலங்களிலிருந்து பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு எனலாம்.
- கூட்டுத் தொழிலில் இருந்து விலகி சுய தொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
- இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து மனதை மகிழ்விக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளும் எண்ணமும், அதற்கு உண்டான சந்தர்ப்பமும் அமையும்.
- வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
- உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லையே என்று கவலை உண்டாகும்.
- சனிக்கு 3, 7, 10 இடங்களை பார்ப்பார் அந்த வகையில் பன்னிரண்டாம் வீட்டிற்கு வரும் சனியின் பார்வைகள் மேஷ ராசியின்இரண்டாம் வீடு ஆறாம் வீடு மற்றும் ஒன்பதாம் வீடு ஆகிய வீடுகளில்விழுகிறது வெளியூர் பயணம் மற்றும் நீண்ட நாள் வெளிநாட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும் என்றாலும் செலவுகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும்
- வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்ட ஏதேனும் ஒரு தொழிலைச் செய்தாலோ அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலோ வெளிநாட்டு மூலங்களிலிருந்து பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு எனலாம்.
- கூட்டுத் தொழிலில் இருந்து விலகி சுய தொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
- இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து மனதை மகிழ்விக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளும் எண்ணமும், அதற்கு உண்டான சந்தர்ப்பமும் அமையும்.
- வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
- உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லையே என்று கவலை உண்டாகும்.
பரிகாரம்
- ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமன் சாலிசாவைக் கேட்பது மிகவும் வலிமை பெற உதவும்.
- பௌர்ணமி நாட்களில் சத்தியநாராயண விரதத்தை மேற்கொள்வது மிகவும் நன்மை தரும்.
- முடிந்தவர்கள், சனிக்கிழமையும் துப்புரவு பணியாளர்களுக்கு காலனி, குடை, சாப்பாடு வாங்கி கொடுக்கலாம்.
- செவ்வாய்க் கிழமைகளில் அருகில் உள்ள கோவிலில் முருகன் வழிபாடு செய்வது நல்லது.
- உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
- நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு கொடுப்பது மிகவும் நல்லது.