மேஷ ராசி ராகு - கேது பெயர்ச்சி - 2025

  



இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 



இந்த பெயர்ச்சியில்  ராகு, மேஷ ராசிக்கு 11ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மேஷ ராசியின்  5ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

 ராகு , கேது பெயர்ச்சி பொது பலன்கள்

  • இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சியை பொறுத்தவரை மேஷ ராசிகாரர்களுக்கு வேலை வாய்ப்பு பொறுத்தவரை  வேலையில் நல்ல முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
  • மேலும்  வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து வருமானம் கூடும். எனவே பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.
  • சிலருக்கு சில தடைகள் வரலாம், கவனமாக இருக்க வேண்டும். ம் ராகு கேது பெயர்ச்சி சிலருக்கு சில தடைகள், சவால்களை தரலாம், எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும்  உங்கள் வேலையை சரியாக திட்டமிட்டு செய்வதும், அர்ப்பணிப்புடன் செய்வதும் அவசியம்.
  • 11 ஆம் வீட்டில் ராகு புதிய நட்புகள் அமையும் ,  தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடும். என்றாலும் குருட்டு நம்பிக்கையில் ஆபத்தானா வியாபார முடிவுகளை தவிர்க்க வேண்டும்.
  • 5 ஆம் வீட்டில் கேது இருப்பதால் காதல் உறவுகளில் சில தவறான புரிதால் சற்று  இடைவெளி ஏற்படலாம். குழந்தைகளை கவலைகள் உண்டாகும் 
  • மேஷ ராசியில் உள்ள மாணவர்கள் இந்த பெயர்ச்ச   கலவையான பலன்களை தரும் எனலாம். உயர்கல்வி அல்லது படைப்புத் துறைகளில் ஈடுபடுபவர்கள்.  தங்களின் வேலைகளை  தள்ளிப்போடுவதைத் தவிர்த்தால் சிறந்து விளங்க வாய்ப்புகள் உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மேஷ ராசி மாணவரகள்  கூடுதல் கவனம் செலுத்துவேண்டும்.
  • உங்களுக்கும், உங்கள் வாழ்க்கை துணை இடையே ஆதரவாகவும் இணக்கமாகவும் இருக்கும். சில தம்பதிகளுக்கு கருத்தரிப்பதில் சிறிது தாமதம் ஆகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
  • குடும்ப வாழ்க்கை செழித்தோங்கும் என்றாலும்  காதல் உறவுகள் தற்போது நிறைவாக இருக்காது. காதல் துணையை தேர்ந்து எடுக்கும் போது சற்று கவனம் அவசியம்.

மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராகு பதினொன்றாவது வீட்டில் கும்பத்தில் பெயர்ச்சிக்கிறார். பதினொன்றாவது வீட்டில் ராகு மிகவும் சாதகமாக கருதப்படுவதால், உங்கள் ராசிக்கு மிகவும் சாதகமான பெயர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். 
ராகு  மனதில் உள்ள ஆசை மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற உதவுவார்.   நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த திட்டங்கள் இப்போது சீராக செயல்பட  தொடங்கும். 
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மேலும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதையும் விரும்புவீர்கள் என்று தான் சொல்ல வேண்டும் . புதிய நண்பர்களை ஏற்று கொள்ளும் முன் அவர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தவறானவரின் நட்பு வர வாய்ப்பு உண்டு.
குடும்ப வாழ்க்கையை விட உங்கள் நண்பரகளின்  வட்டத்திற்கு அதிக முக்கியத்துவம்கொடுப்பதால்  குடும்பத்தை விட வீட்டிற்கு வெளியே அதிக நேரம்செலவிடுவீர்கள்.
இதனால் உடல்நலத்தில் அக்கறை காட்ட மாட்டீர்கள். எனவே உடல் நிலை பாதிக்க படல்லாம்.
வணிகர்கள் ராகுவின் இந்த பெயர்ச்சியால் சாதகமான பலன்களைப் பெறலாம் மற்றும் பொருளாதார நிலையம்  வலுவடையும். என்றாலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும்.
வேலைக்கு செல்லும் மேஷ ராசிகாரர்களுக்கு பணியில் பல  வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு . மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை கிடைக்கும்.

மேஷ ராசிக்கு கேது  வீடு ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சியாக போகிறார். எனவே கேதுவின் பெயர்ச்சி மேஷ ராசிக்கு  சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
படைப்பாற்றல், சுய வெளிப்பாடு மற்றும் அன்பு மூலம் ஆன்மீக விழிப்புணர்வை இந்த கேது பெயர்ச்சியால் நடைபெறும் .
தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் மிகவும் உண்மையான மற்றும் நிறைவான முடிவுகளை எடுக்கும் திறனை கேது தருவார்.
என்றாலும் குழந்தைகளின் விஷயத்தில்  எச்சிரிக்கை உணர்வு வேண்டும்.
கேது 5 ஆம் வீட்டில் இருப்பதால் ஆரோக்கியற்ற உணவுகளை உண்ண துண்டும். இதனால் ஆரோக்கியம் பாதிக்கலாம். கவனம் அவசியம்.
கேது பற்றின்மை கொண்ட கிரகம் என்பதால், அனைவருக்கும் சேவை செய்யும் மனபான்மையை  வளர்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும்.
.