ரிஷப ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  



இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 



இந்த பெயர்ச்சியில்  ராகு, ரிஷப  ராசிக்கு 10ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மேஷ ராசியின்  4ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்


  • இந்த ராகு மற்றும் கேது  பெயர்ச்சி காலக்கட்டத்தில்  ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். பொதுவாக ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்கு நன்றாக இருக்கும் என்றாலும் தவறான புரிதல்களால் தாயுடனான உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கவனம் அவசியம். மேலும் வாழ்க்கை  துணையைச் அனுசரித்தும் நடந்து கொள்வதின் மூலம் உறவு வலுப்படும். மேலும் தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
  • இந்த பெயர்ச்சி தந்தை மற்றும் அவர்களது உடன்பிறப்புகளுக்கு இடையே அதிக ஆதரவையும் புரிதலையும் தரும்.
  • இந்த பெயர்ச்சியில் , பொருளாதாரத்தை பொறுத்தவரை இந்த பெயர்ச்சி நன்மை தான் தரும் என்று சொல்லாம். என்றாலும் நிலத்தில் முதலீடு செய்யும் முன் யோசிக்கவும். எச்சிரிக்கை அவசியம்.
  • மேலும்  தொழில்  முயற்சிகள் சீராக இயங்கும் மற்றும் இந்த காலகட்டத்தில் லாபம் ஈட்ட முடியும். மேலும் முந்தைய நிதி சிக்கல்களுக்கு இந்த பெயர்ச்சியில் நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் வெளிநாட்டில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும் 
  • தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் வெற்றி பெற இரண்டிற்கும் சமமான உரிமையை கொடுக்க வேண்டும்.  ரிஷப ராசி பெண்களுக்கு ஆளுமை திறமை அதிகரிக்கும்.
  • காதல் உறவுகளில் தவறான புரிதள் வர வாய்ப்பு உள்ளது. அதற்கு கட்டாயம் தீர்வு காண வேண்டும். அலச்சியம் வேண்டாம்.
  • ரிஷப ராசி மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் கல்வி கற்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலகட்டம் சாதகமாக  மேலும் தொழில் சார்ந்த கல்வி கற்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் வரும் பயன்படுத்தி கொள்ளவும்.
  • வியாபாரிகள்  தங்கள் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதில் கவனம் தேவை. மேலும் வியாபாரத்தில் திடீர் முடிவுகள் தவிர்க்கவும்.
  • மன அமைதிக்கு ஆன்மிகம் உதவும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். மேலும் பொருள் சார்ந்த விஷயத்தில் உங்களின் விருப்பங்களை சமன் படுத்த இது உதவும்.


  • ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு பத்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். பத்தாம் வீட்டில் ராகு இருப்பது நல்ல பலனைத் தருவதாகக் கருதப்பட்டாலும், உங்கள் பணியிடத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
  • மேலும் ராகு உங்களை குறுக்குவழிகளைப் பின்பற்றச் செய்வார். வேலையில் தவறுகள் செய்யும் வாய்ப்புகளை அதிகரிக்கும் மற்றும் அவசரமாக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேலையை மற்றவர்களுக்கு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டிய அவசியம்.
  • மற்றவர்களுக்கு கடினமான பணி என்றாலும் நீங்கள் எந்த வேலையை எடுத்தாலும், அதை நீங்கள் விரைவாக முடித்துவிடுவீர்கள்
  • ரிஷப ராசிக்கு  2025ல் ராகுவின் மாற்றத்தால் பல விதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.  மேலும் பணியிடத்தில் உங்களின் வேலைகள் சிறப்பான வெற்றி இலக்கை அடைய முடியும். 
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். என்றாலும் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.  குடும்பத்துக்கு நேரங்கள் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

  • கேது   நான்காவது வீட்டில் பெயர்ச்சிக்கும் போது குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற பதற்றம் மற்றும் தவறான புரிதல்கள் அதிகரிப்பதால், குடும்ப சூழ்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். 
  • தாயார் உடல்நலக் குறைவால் சிரமப்படக்கூடும். மேலும் இந்த கேது பெயர்ச்சி போது  மார்பு அல்லது நுரையீரல் தொற்று ஏற்படலாம். கவனம் அவசியம்.
  • 4 ஆம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால், ரிஷப ராசி மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவதில் குறைபாடு அல்லது  சில உணர்ச்சி ரீதியான கவனச்சிதறல்கள் ஏற்படக்கூடும், இதனால் மாணவர்கள் ஒழுக்கமாகவும், இலக்கை நோக்கியும் இருப்பது அவசியம். 
  • இந்த  கேது பெயர்சசியால்  வியாபாரத்தில் நீண்டகால வெற்றியைத் தக்கவைக்க வாடிக்கையாளர் திருப்தி படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மேலும் இந்த  கேது  உங்களின் சுயபரிசோதனை, தியானம் மற்றும் உள் அமைதிக்கான தேடலை வளர்க்கிறார் புனித யாத்திரை மேற்கொள்ள இது ஒரு சாதகமான நேரம் ஆகும்.