கும்ப ராசி - குரு பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு இரண்டாம் மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியாகும். குரு பெயர்ச்சி 2025 போது உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டில் குரு வருகிறார். இது மிகவும் சிறப்பு ஆகும்.குரு பெய்ரச்சியால் பல நன்மைகள் பெரும ராசியில் கும்ப ராசியும் ஒன்று ஆகும்.

இந்த பெயர்ச்சி உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகளை வழங்கும். திட்டங்களில் வெற்றி உண்டாகும் மற்றும் விரும்பிய ஆசைகள் நிறைவேறும்.

பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். உயரதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். பிறர் கட்டாயத்துக்காக அலுவலகப் பணி ரகசியம் எதையும் பகிர வேண்டாம்.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். மூன்றாம் நபர் தலையீட்டை முழுமையாகத் தவிருங்கள். பரஸ்பரம் மனம்விட்டுப் பேசுங்கள்.

பழைய கடன்களை  தீர்க்க முடியும். சுபகாரியங்கள் கைகூடி வரும். செய்யும் தொழிலில் ஏற்ற ஏற்படும். உழைப்புக்கு ஏற்ற வளர்ச்சி உண்டு.

புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல அருமையான காலகட்டம். நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கும்ப ராசி மாணவர்கள்  கல்வியில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். உயர்கல்வியிலும் உங்கள் வெற்றி அதிகரிக்கும்.

பணம் சம்பாதிக்க ஆசை அதிகமாகும். பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெற முடியும்.

அக்டோபர் மாதத்தில் குரு ஆறாவது வீட்டிற்குள் நுழையும் போது உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும் மற்றும் உங்கள் செலவுகளையும் அதிகரிக்கும். அதன்பிறகு டிசம்பர் மாதத்தில் குரு ஐந்தாவது வீட்டில் வக்ர நிலையில் நுழையும் போது ​​​​நீங்கள் காதல் உறவுகளில் உள்ள சிக்கல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் நிதி சவால்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில், வேலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

குரு பார்வையின் பலன்கள்



ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக, முறையே ஒன்பதாம்  வீடு  , பதினொன்றாம்   வீடு மற்றும் ராசியை  பார்க்கிறார். அதாவது தகப்பனர் ஸ்தானம், லாப ஸ்தானம் மற்றும் , ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம் ஆகிய ராசியை பார்க்கிறார். மிகவும் சிறப்பு ஆகும்

குரு பகவான் உங்களின் ஒன்பதாம் வீடு, பதினொன்றாம் வீடு மற்றும் முதல் வீட்டைப் பார்த்து உங்களில் நல்ல மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

மேலும் இந்த பார்வைகள்  உங்களுக்குப் பலவிதத்திலும் ஏற்றம் தரும் . அதேசமயம் எதிலும் வீண் தர்க்கமும் வேண்டாத ரோஷமும் தவிர்த்தால், நன்மைகள் நீடிக்கும்.