விருச்சிக ராசி - குரு பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் இரண்டாவது மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி ஆவார் . இந்த பெயர்ச்சியின் போது விருச்சிக ராசியின்  எட்டாவது வீட்டில் நுழைகிறார் . இந்த குரு பெயர்ச்சி 2025, உங்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்று  கருத முடியாது,, முக்கியமாக ,

கடன் கொடுக்கவோ வாங்கவோ இந்த சமயத்தில் கூடாது . என்னென்றால் பணம் கொடுக்கல் வாங்கலில்  வீண் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு.நிதி இழப்பு ஏற்படலாம்.

பணியிடத்தில் சில தடைகளை சந்திக்க வேண்டி வரும்.எனவே  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எட்டாம் வீட்டுக்கு வரும்  குருவால் உடல்நலக் குறைவு உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

வேலை செய்யும், அலுவலகத்தில் பணியில், சில தடைகள் இருந்தாலும்  ஏற்றத்துக்கான வாய்ப்புகள் வரும். எனவே அந்த  சமயத்திலும் தலை கனம் தவிர்த்து தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு பயண வாய்ப்பு வரலாம். பணி சம்மந்த பட்ட  விஷயங்களை, பற்றி  பிறரிடம் பேசுவதைத் தவிர்க்கவும்.

வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். தேவையற்ற ஆடம்பரத்திற்காக கடன்களை வாங்குவதை  தவிர்க்கவும். இதனால் சில பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சுபகாரியங்கள் ஈடேற குலதெய்வ வழிபாடு முக்கியம்.

வணிகத்தில் இருக்கும் விருச்சிக ராசிகாரர்களுக்கு அவர்கள் செய்யும் வர்த்தகத்தில் உழைப்புக்கு ஏற்றஉயர்வு கட்டாயம் உண்டு. என்றாலும்  கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு  நிதானம் முக்கியம்.

மேலும் புதிய முயற்சிகள் பெரிய வெற்றியை தராது. எனவே யோசித்து செயல்படவும்.வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். 

உற்றார் உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படும். மேலும் சனி சாதகமாக இல்லாததால்  தாயாருடன் மற்றும்  தாய்வழி உறவினர்களுடனும் கருத்து மோதல்கள் வரலாம். அல்லது தாயாரை பிரிந்து செல்ல நேரிடும். அல்லது தாயாரின் உடல்நிலை பாதிக்கலாம்.

அக்டோபரில் குரு ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சிப்பது அனைத்து பணிகளிலும் வெற்றியைத் தரும். அதிர்ஷ்டம் வலுவாக இருக்கும் மற்றும் நீங்கள் வெற்றியை அடைவீர்கள். வேலையில் மாற்றம் ஏற்பட்டு நல்ல பதவி உயர்வுடன் வேறு வேலை கிடைக்கலாம்.

அதன் வக்ர நிலையில் குரு மீண்டும் டிசம்பரில் எட்டாவது வீட்டிற்குள் நுழைவார். தற்போது பணம் மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

குரு பார்வையின் பலன்கள்



ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக முறையே இரண்டாம்    வீடு  , நான்காம்  வீடு மற்றும் ஆறாம்   வீடுகளை ,பார்க்கிறார்.

இந்த பார்வையால் மனதில் இருந்த வீண் பயங்கள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறையும்.இல்லத்தில் இனிய சூழல் நிலவும். உறவுகளிடையே உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும்

குரு பகவான் விருச்சிக ராசிக்கு  பன்னிரண்டாம் வீடு, இரண்டாம் வீடு மற்றும் நான்காம் வீடு பார்ப்பதால் வாழ்க்கை துணையின் வீட்டிலிருந்து சில நல்ல செய்திகள் வர வாய்ப்பு உண்டு.

ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக முறையே இரண்டாம்    வீடு  , நான்காம்  வீடு மற்றும் ஆறாம்   வீடுகளை ,பார்க்கிறார். அதாவது தனம்  மற்றும் குடும்ப ஸ்தானம், தாயார் ஸ்தானம் மற்றும் ரோக ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார் 

இந்த பார்வையால் மனதில் இருந்த வீண் பயங்கள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறையும்.இல்லத்தில் இனிய சூழல் நிலவும். உறவுகளிடையே உங்கள் பேச்சுதாய்ரர் ஸ்தானம்க்கு மரியாதை அதிகரிக்கும்

மேலும் குரு பகவான் விருச்சிக ராசிக்கு  பன்னிரண்டாம் வீடு, இரண்டாம் வீடு மற்றும் நான்காம் வீடு பார்ப்பதால் வாழ்க்கை துணையின் வீட்டிலிருந்து சில நல்ல செய்திகள் வர வாய்ப்பு உண்டு. அது மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.