கடகம் ராசி - குரு பெயர்ச்சி - 2025

  


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

கடகத்திற்கு அஷ்டம் சனி முடிந்தது என்று மகிழ்ச்சியான விஷயம்  என்றாலும் குரு கடகத்திற்கு  11ம் வீட்டில் இருந்து 12ம் வீட்டுக்கு செல்வது அதாவது குரு 12ல் மறைவது நல்லது இல்லை.

12ம் வீட்டுக்கு வரும் குருவால் சுப விரயங்கள் உண்டாகும். வேலை வீடு, வாகனங்களை பொறுத்துவரை நன்றாக இருக்கும். நான்காம் வீடு, ஆறாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் சில செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வரும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். என்றாலும் அது மிக  சிரமத்தின் பேரில் நடக்கும். கடன் கொடுத்தாலும் திரும்பி வராது, கடன் அதிகம் வாங்கினால் திரும்ப செலுத்த முடியாது. எனவே இந்த காலகட்டத்தில் ணம் சார்ந்த விஷயங்களில்  கவனமாக இருங்கள். மேலும்  வீட்டில் களவு போகவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, கவனம் தேவை

வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகம் மற்றும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

குரு இராண்டாம் வீட்டை பார்ப்பதால் ராகு , கேது பெயர்ச்சியால் வரும் தொல்லைகளை களைவதுடன், குடும்ப வாழ்க்கையை முளுமையாக்குவார்.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்க , குடும்ப த்திற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.

காதலில் இருப்பவர்கள் , தங்கள் துணையிடம் வெளிபடையாக, மனம் திறந்து பேச வேண்டும்.

யாருக்காகவும், உங்களுக்கு தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். பங்குவர்த்தகம், சூதாட்டம், பந்தயங்களில் முதலீடு தவிர்ப்பது மிகவும் நல்லது.

பன்னிரண்டாவது வீட்டில் இருக்கும் குருவால் தொழிலில் புதிய இலக்குகள் மற்றும் லட்சியங்கள் தோன்றும். மேலும் வெளிநாட்டு  வேலை வாய்ப்புக்காக முயற்சி செய்பவருக்கு இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்கும்.

ஆடம்பர செலவுகளை தவிர்த்து, சேமிப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆன்மீகம் அல்லது கல்வி தொடர்பான தொழில்களில் இருப்பவர்களுக்கு  நிலையான வளர்ச்சி உண்டாகும்.

குரு பன்னிரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் போது ஆரோக்கியத்தில்  கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

குரு பார்வையின் பலன்கள்


12ம் வீட்டிற்கு   வரும் , குரு ,தனது 5, 7,ஒன்பதாம் பார்வையாக முறையே  4, 6, 8ம்  வீடுகளை பார்க்கிறார். அதாவது  தாய் ஸ்தானம், ரோகஸ்தானம் மற்றும்  துஸ்தானம்  பார்க்கிறார். இது மிகவும் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இது உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதே சமயம் எதிலும் முழுகவனம் செலுத்துவது மிக முக்கியம் ஆகும்.

நான்காம் வீட்டை குரு பார்ப்பதால் மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள்.அனைத்து வேலைகளிலும் முன்னேற்றம் உண்டாகும்.

அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் தொடர்ச்சியாக வரும். பணி சார்ந்த கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்