Showing posts with label கடகம். Show all posts
Showing posts with label கடகம். Show all posts

கடக ராசி வருட பலன்கள் - 2025

கடக ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி ஆகும் சனி பெயர்ச்சியால் அஷ்டம சனி விலகுவதால் வாழ்கையில் இழந்தவைகள் மீண்டும் கிடைக்கும் காலம் ஆகும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு சனி பெயர்ச்சிக்கு பிறகு விடிவுகாலம் கிடைக்கும்.

ü 2025ம் ஆண்டு கடக ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை அடைந்து பணிகளை திறமையாக முடித்து வெற்றி காண்பார்கள்.

ü புத்திசாலித்தனமாக செயல்பட்டு விரும்பியவை மற்றும் தேவையானவற்றை பெறுவார்கள். பேச்சுக்களில் பொறுமை மிக்க அணுகுமுறை சிறந்த பலனை அளிக்கும்.

ü சிலருக்கு பூர்வீக சொத்துகளில் இருந்த சிக்கல்கள் தீரும். பழைய நண்பர்களின் சந்திப்பு குறித்து புதிய சிந்தனைகள் தோன்றும்.

ü பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப கருவிகளை வாங்குவதில் ஆர்வம் மேலோங்கும்.

ü 2025 புத்தாண்டில் வேலை தொடர்பான பயணங்கள் பல வகையில் நன்மையை தரும். பங்குச்சந்தை, ஊக வணிகம் உள்ளிட்ட விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். எதில் முதலீடு செய்தாலும் கூடுதல் கவனம் தேவை.

ü 2025-ம் ஆண்டில், கடக ராசிக்காரர்கள் முதலீடு அல்லது உறவு தொடர்பான எந்த முக்கிய முடிவை எடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

ü 2025 ஜூலை 13 முதல் 28 நவம்பர் 2025 வரை அதாவது சனி வக்கிர களத்தில் ஒரு விதமான அலட்சிய போக்கு இருக்கும். உறவுகளிடம் சில பிளவுகள் வர வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வாழ்க்கை துணையுடனான உறவை பாதிக்கலாம் எனவே பொறுமையாக இருக்க வேண்டும்.

ü ஏப்ரல் 2025 வரை, ஒன்பதாம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் நிலை சாதகமான பலன்கள் இருக்கும்.

ü நிழல் கிரகமாக ராகு எட்டாவது வீட்டிலும் கேது இரண்டாம் வீட்டிலும் இருக்கும்போது, முன்னேற்றம் குறையும் மற்றும் சிலருக்கு தோல்வியும் உண்டாகலாம். இது தவிர, ராகு மற்றும் கேதுவின் இந்த நிலை வாழ்க்கை துணையுடனான உறவை பலவீனப்படுத்தலாம். கவனம் கட்டாயம் வேண்டும்.

ü மே 2025 முதல் குரு உங்கள் ராசியின் பன்னிரண்டாவது வீட்டில் நுழைகிறார், இதன் காரணமாக ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்ல நிவாரணம் தரும்.

ü குரு சிறப்பாக இருந்தாலும் மார்ச் மாதம் வரை சனி பகவான் எட்டாவது வீட்டில் இருக்கிறார், இது இவர் மன அழுத்தத்தை தருவர் என்று தான் சொல்ல வேண்டும்.



தொழில்



ü ஏப்ரல் 2025 வரையிலான காலம் 2025 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். கடக வருட ராசி பலன் 2025, குரு கிரகம் உங்கள் பதினொன்றாவது வீட்டில் சாதகமான நிலையில் இருப்பதால் உங்கள் தொழில் முன்னேற்ற பாதையில் முன்னேறும். சனி ப் எட்டாவது வீட்டில் இருந்து மன அழுத்தத்தை தருவார்.

ü சனி பெயர்ச்சிக்கு பிறகு தொழிலில் இருந்த கடந்த கால பிரச்சனைகளுக்கு இந்த ஆண்டு முடிவு கிடைக்கும். இலக்கை நோக்கி பயணம் செய்வார்கள். இதற்காக கடினமாக உழைப்பார்கள்.

ü மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும்.

ü குருவின் பெயர்ச்சி காரணமாக சக ஊழியர்கள் மற்றும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் கடக ராசிகாரர்களுக்கு எதிராக நடக்கலாம்.

ü வேலை மாற்றத்திற்கு ஏற்ற ஒரு ஆண்டாக இந்த வருடம் இருக்கும். என்றாலும் மாற்றத்தை யோசித்து ஏற்று கொள்ளவும். எந்த சூழலையும் தைரியமாக கையாள பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ü தொழிலை பொறுத்தவரை ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் தொழிலை பொறுத்து இந்த ஆண்டு பலனை என்று பார்க்கும் போது ஒப்பீட்டளவில் சாதகமாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

ü குரு பெயர்ச்சிக்கு பிறகு உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியிடம் மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டு, பிடிவாதமாக இருந்தால், நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

ü என்றாலும் எதிரிகள் மற்றும் தொழில் போட்டியாளர்களை சமாளிக்க முடியும்.

ü சிலர் தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது வெளிநாடு செல்லவோ இந்த ஆண்டு சாதகமாக இருக்கும்.

ü கூட்டுத் தொழிலில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாகவும் லாபகரமாகவும் இருக்கும். நண்பர்கள் நிதி நெருக்கடிக்கு உதவுவார்கள்.

ü வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல லாபத்தை அனுபவிப்பார்கள். வணிகம் ஆண்டு முழுவதும் நிலையான வளர்ச்சி பெறும்.

குடும்ப வாழ்க்கை



ü ஏப்ரல் 2025 முதல், சனி பகவான் உங்கள் ஒன்பதாவது வீட்டில் அமர்வார். குடும்ப வாழ்க்கையில் முடிவுகள் சராசரியாக இருக்கும். என்றாலும் நிழல் கிரகமாக கேது இரண்டாவது வீட்டிலும் மற்றும் ராகு உங்கள் எட்டாவது வீட்டிலும் அமர்வார்கள். இது குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்கலாம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை பராமரிக்க அதிக கவனம் அவசியம்.

ü 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி சாதகமாக இருக்காது. 2025 ஆம் ஆண்டில், கடக ராசிக்காரர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம்.

ü மார்ச் மாதத்திற்கு பிறகு ஐந்தாம் வீட்டில் இருந்து சனியின் தாக்கம் விலகும். காதல் வாழ்க்கையை மேமபடும், ஏனென்றால் பழைய பிரச்சினைகள் அல்லது சிறிய விஷயங்களில் இருந்து வந்த வெறுப்பு உணர்வுகள் இனி கட்டாயம் குறையும்.

ü சனி பெயர்ச்சியின் காரணமாக காதல் வாழ்க்கையின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு கடந்த ஆண்டுவுடன் ஒப்பிட்டு பார்த்தால் சற்று சிறப்பாகவே இருக்கும்.

ü இந்த ஆண்டு திருமண விஷயங்களில் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை பொதுவாக திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ü வருடத்தின் நடுப்பகுதியில் ராகு கேதுவின் தாக்கம் காரணமாக குடும்ப உறவுகளிடையே பிரிவை ஏற்படுத்தக் கூடும். பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.போதை பழகத்திற்கு அடிமையகாமால் இருக்க வேண்டும்.

ü திருமணமான கடக ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டு அவர்களின் உறவுகளில் சில சவால்களை சந்திக்க நேரிடும். வலுவான உறவுகளை உருவாக்க ஒருவரையொருவர் ஆழமாக புரிந்து கொள்ள கொண்டு அனுசரித்து வாழ வேண்டும்.

ü திருமணத்திற்கு சரியான துணையை கண்டுபிடிப்பதில் வெற்றிகரமான ஆண்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ü காதல் வாழ்க்கை மற்றும் காதல் உறவுகளைப் பொறுத்தவரை, கடக ராசி 2025 இந்த ஆண்டு கலவையானதாக இருக்கும் என்று சொல்ல வேண்டும்.



நிதி நிலை - பொருளாதாரம்



ü மார்ச் மாதத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சனி பெயர்ச்சிக்கு பிறகு பொருளாதாரம் சற்று சிறப்பாக இருக்கும் எனலாம். கடந்த ஆண்டை விட 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நிதி நிலையில் சாதமாக இருக்கும்.

ü என்றாலும் நிதி பிரச்சினைகள் முற்றிலும் தீர்க்கப்படுமா என்பதில் சந்தேகம் இருக்கும். என்ன என்றால் மே மாதத்திற்குப் பிறகு, இரண்டாவது வீட்டில் கேதுவின் தாக்கம் தொடங்கும். மேலும் மே மாதத்தின் நடுப்பகுதி வரை லாப வீட்டில் இருந்த குரு 12ம் வீட்டிற்கு வருவதும் நல்லதல்ல.

ü என்றாலும் குரு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை லாப வீட்டில் இருக்கிறார். இது இவர்கள் செய்யும் கடின உழைப்புக்கு ஏற்றவாறு நல்ல லாபத்தைப் பெற செய்யும். இந்த வழியில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் நடுப்பகுதி வரையிலான காலம் சில நல்ல நிதி சாதனைகளை அளிக்கும் எனலாம்.

ü மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு செலவுகள் அதிகரிக்கலாம், அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிகள் தேவைப்படும். இருப்பினும்,இந்த ஆண்டு கடன் வாங்க விரும்பினால், கடன் கிடைக்க வாய்ப்புகள் உண்டு எனலாம்.

ü சனி பகவான் 10ஆம் பார்வையாக 6ஆம் வீட்டை பார்ப்பதால் கடன் சுமையில் இருந்து வெளியில் வந்தாலும் சுப கடன்கள் இருந்து கொண்டே இருக்கும்.

ü பணத்தை சரியாக கையாள வேண்டும். மேலும் திட்டமிட்டு செயல்பட வெற்றி நிச்சயம்.

கல்வி - படிப்பு



ü இந்த ஆண்டில் மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட சற்று கவனத்துடன் இருப்பது அவசியம். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும், இது தினசரி செயல்களில் புதிய அனுபவங்களைச் சேர்க்கும். புதிய நண்பர்களின் குணங்களை அறிந்த பின்பு நட்பு கொள்ளுவது நல்லது. சூழ்நிலையை உணர்ந்து, கருத்துக்களை வெளிப்படுத்துவது மாணவர்களின் நன்மதிப்பை கூட்டும்.

ü 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலம் கல்வியின் பார்வையில் சிறப்பாக இருக்கும். அறிவின் கிரகமான குரு பதினொன்றாவது வீட்டில் இருப்பதால் படிப்பில் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.

ü குருவின் ஆசீர்வாதத்தால், கல்வி சிறப்பாக இருக்கும் மற்றும் மகத்தான வெற்றியைப் பெற முடியும்.

ü சனிபகவான் எட்டாம் வீட்டில் அமர்வதால், படிப்பில் சிக்கலை சந்திக்க நேரிடலாம். ஏனெனில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

ü கல்வியின் கிரகமான புதன், 6 ஜூன் 2025 முதல் 22 ஜூன் 2025 வரையிலும், செப்டம்பர் 15, 2025 முதல் அக்டோபர் 3, 2025 வரையிலான காலகட்டத்தில் கல்வித் துறையில் சாதகமான பலன்களைத் தருவார்.

ü 2025, மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு, குரு பன்னிரண்டாவது வீட்டில் பெயர்ச்சிக்கிறார். இது பலவீனமான சூழ்நிலையாகக் கருதப்பட்டாலும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.

ü குரு பெயர்ச்சியால் சஞ்சலமான சிந்தனை உருவாக வாய்ப்பு உண்டு. அதை தடுக்க வேண்டியது, அவசியம், ஏனெனில் அவை ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்களை சமாளிப்பதில் புத்திசாலித்தனமான அணுகுமுறைகள் முக்கியம்.

ü கேதுவின் பெயர்ச்சி காரணமாக குடும்பத்தின் சூழ்நிலை சற்று குழப்பமாக இருக்கும். என்றாலும் கவனம் சிதறமால் பார்த்து கொள்ள வேண்டும்.

ü மாணவர்கள் படிப்பில் இருந்து கவனம் சிதற வாய்ப்பு உண்டு. உயர்கல்வி தொடர்பான பெரிய முடிவுகளை எடுக்க விரும்பினால், ஏப்ரல் 2025க்குள் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் மே 2025க்குப் பிறகு, படிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியம்



ü குரு உங்கள் பன்னிரண்டாவது வீட்டில் அமர்வதாலும் ,ராகு எட்டாவது வீட்டுக்கு வருவதால், 2025 ஆம் ஆண்டை கடக ராசிக்காரர்களின் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

ü ஆரோக்கியம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கடக ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டு கலவையான அல்லது சில நேரங்களில் பலவீனமான பிரச்சனைகளை தரக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

ü ஆரோக்கியத்தை பாதுகாக்க, இந்த ஆண்டில் சிறு சிறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். காரசாரமான உணவுகளை குறைத்துக் கொள்வது உடல் நலத்திற்கு சாதகமாகும். தொண்டையில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும்.

ü மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து குரு பன்னிரண்டாம் வீட்டில் பெயர்ச்சிப்பதால், உணவில் கவனக்குறைவாக இருந்தால், வயிறு மற்றும் இடுப்பு தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் முதுகு பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.

ü 2025-ம் ஆண்டு ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு அமைவதால் கண் சம்பந்தமான நோய்களும் தொந்தரவு தரக்கூடும்.

ü இந்த உடல்நலப் பிரச்சினைகள் அனைத்தும் கடக ராசிக்காரர்களின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியால் ஏற்படலாம். ஆண்டு முழுவதும் தொடரலாம். அதனால், தகுந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ü மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் உடல் பருமன் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.


பரிகாரங்கள்



ü சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதுதால் வரவுகளில் இருக்கும் தடைகளை நீங்கும் மேலும் விரும்பிய சுபகாரியங்கள் விரைவில் நிறைவேறும்.

ü ஒவ்வொரு புதன் கிழமையும் பெருமாள் வழிபாடு வருவது மிகவும் நல்லது.

ü குருக்கள், மகான்கள், பெரியவர்களுக்கு முடிந்த சேவைகள் செய்யது வரவும்.

ü முடிந்தால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் ஒரு முறை சென்று நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம்ஏற்றலாம். பல நன்மைகள் உண்டாகும்.

ü வீட்டுக்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு எள் தானம் செய்வதன் மூலமும் வாழ்கையில் உண்டாகும் பிரச்னைகள் நீங்கும்.

ü நெற்றியில் மஞ்சள் ஈட்டு கொள்ளலாம். அல்லது நல்ல காரியத்திற்கு போகும் போது மஞ்சள் கைக்குட்டை அல்லது ஆடை அணியலாம்.

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - கடகம்



குரோதி வருடம் - 2024-  கடகம்  

கடகம் ராசிக்குப் பத்தாம் இடத்தில் சூரியன் , குரு, மூன்றாம் இடத்தில் கேது, ஒன்பதாம் இடத்தில் புதன் சுக்ரன் ராகு சேர்க்கை, எட்டாம் இடத்தில் சனி, செவ்வாய் என்ற கிரக நிலை அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பை வைத்து பார்க்கும் பொதுவாக அற்புதமான பலன்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு  அமைகிறது


குடும்பத்தில் நிம்மதியும், தம்பதியர் இடைய அன்யோன்னியமும் உருவாகும். திருமணத்திற்கு காத்திருப்போருக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு, குழந்தைப் பேறும் அமையும் 

காதலர் தின ராசி பலன்கள் - கடகம்

 




குறிப்பு :

காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)

திருமணமானவர்கள் ராசி பலன்

கடக ராசியினர்  மிகவும் softன குணம் உடையவர்கள். வேலையில் உள்ள அழுத்தம் இருந்தாலும்  உங்கள் துணையின் அரவணைப்பு கிடைக்கும்.. உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பு உங்களை வாழ்வின் அனைத்து துக்கங்களையும் வலிகளையும் மறக்கச் செய்கிறது என்பதை நீங்கள் உணரலாம், மேலும் நீங்கள் காதல் படகில் ஒரு இனிமையான பயணத்தை அனுபவிப்பீர்கள். .

காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்

காதலர் தினத்திற்கான பெரிய திட்டங்களை உருவாக்குவதில் நீங்கள் மும்முரமாக இருக்கும்போது, உங்கள் துணையின் நோக்கங்களையும் கவனிக்க வேண்டியது அவசியம். அதிக நகைச்சுவை உணர்வு மிக்கவர்களான நீங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் தயாராகஇருப்பிர்கள். 

காதலை வெளிபாடுத்தல் :

காதலர் தினத்திற்கான பெரிய திட்டங்களை உருவாக்குவதில் நீங்கள் மும்முரமாக இருக்கும்போது, உங்கள் துணையின் நோக்கங்களையும் கவனிக்க வேண்டியது அவசியம். அதிக நகைச்சுவை உணர்வு மிக்கவர்களான நீங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் தயாராகஇருப்பிர்கள்.

ஏற்ற காதல் ராசிகார்கள் :

நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்         

  • விருச்சிகம் மற்றும் மீனமாக  இருந்தால் 80% - 90% நல்லது
  • கன்னி மற்றும் ரிஷபமாக இருந்தால் 70% - 80% நல்லது

என்ன பரிசு தரலாம்:

கடக ராசிகாரர்கள் மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் உணர்திறன் வாய்ந்தவர்கள். நீங்கள், உங்கள் துணை கடக ராசியாக இருக்கும் பட்சத்தில் இருவரின் படங்களைக் கொண்ட புகைப்பட ஆல்பங்கள் பரிசாக தரலாம். மெழுகுவர்த்தி விளக்கு இரவு உணவை ஏற்பட்டு செய்யலாம். உங்கள் துணைக்கு பிடித்ததை செய்யுங்கள்.

பொது பலன் :

காதலர் தினத்திற்கும் கடக ராசியினருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் உள்ளது. காதல் முறிவு வாராமல் பார்த்து கொள்ளங்கள். பறப்பதை பிடிக்க இருப்பதை இழக்க வேண்டாம்.



New Year - Love and marriage horoscope 2023 - 2

 


கடகம் Cancer

 2023 ஆண்டு கடக ராசிக்காரர்களின் உறவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் ஐந்தாம் வீட்டில் செவ்வாயின் பார்வை டென்ஷன் மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும் ஆனால் குருவின் அருள் உங்கள் உறவை காப்பாற்றி கொள்ளலாம். 
ஏப்ரல் மாதம் வரை பல பிரச்சனைகள் இருந்தாலும் உங்கள் உறவை பேணுவீர்கள். மே மாதத்தில் உறவில் பதற்றம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் வேலையின் தாக்கம் உங்கள் காதல் உறவில் சிறு சிறு அதிகரிக்கும். அதன் பிறகு உங்கள் உறவில் நீங்கள் நிறைய இணக்கத்தன்மையையும் உண்டாகும். ஜூன் மாதத்தில் உங்கள் உறவில்  நெருக்கம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் உறவை நல்ல முறையில் கொண்டு செல்ல நினைப்பீர்கள் மற்றும் திருமணம் தொடர்பான யோசனைகளும் வரலாம். ஆண்டின் கடைசி மாதம் உங்கள் உறவில் காதல் அதிகரிக்கும் மற்றும் உங்கள் அன்புக்குரியவருடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்
இந்த  ஆண்டில் ஆரம்பம் திருமண வாழ்க்கைக்கு சற்று சவாலானதாக இருக்கும் எனலாம். ஆண்டின் தொடக்கத்தில், சனி உங்கள் ஏழாவது வீட்டில் சுக்கிரனுடன் இருக்கிறார். இது நல்லது தான். உங்கள் திருமண உறவில் காதல் நன்றாக இருக்கும் ஆனால் சிறு சிறு பிரச்சனை உண்டு.
 அதன் பிறகு ஜனவரி 17 ஆம் தேதி சனி உங்கள் எட்டாம் வீட்டிற்கு மாறுகிறார் அங்கிருந்து உங்கள் இரண்டாவது வீட்டைப் பார்ப்பீர்கள் இந்த நேரத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் கவனம். மாமியார் பக்கத்திலும் உறவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். குரு பகவான் அருள் மட்டுமே உங்களை ஒரு சில சவால்களில் இருந்து காப்பாற்றும். 
மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் செவ்வாய் உங்கள் ராசியில் பெயர்ச்சிக்கும் போது ​​அந்த நேரம் திருமண வாழ்க்கையில் அதிக மன அழுத்தத்தை அதிகரிக்கும். அதன் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் உங்கள் முதல் வீட்டில் பெயர்ச்சித்து ஏழாவது வீட்டைப் பார்ப்பார். அந்த நேரம் ஈகோ மோதலின் நேரமாக இருக்கலாம் மற்றும் உங்கள் மனைவிக்கு இடையே மோதல் இருக்கலாம். ராகு-கேதுவின் தாக்கத்தால் குடும்ப வாழ்க்கையில் ஏற்கனவே டென்ஷன் இருக்கும். இதன் காரணமாக சற்று கவனம் செலுத்த வேண்டிய நேரம். இதன் பிறகு செவ்வாய் நான்காம் வீட்டில் இருப்பதால் சில பிரச்சனைகளும் ஏற்படும். அதன்பிறகு அக்டோபர் 30க்கு பிறகு ராகு உங்கள் ஒன்பதாம் வீட்டிலும் கேது மூன்றாவது வீட்டிலும் வரும்போது இந்தச் சவால்கள் சற்று குறையும். இந்த வருட இறுதியில் திருமண வாழ்வு மற்றும் சுற்றுலா பயணங்களில் மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கை துணையுடன் செல்லலாம்.
பொதுவாக அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது தான் உண்மை. பயம் வேண்டாம். அன்பால் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.

சிம்மம் Leo

சிம்ம ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் காதல் விவகாரங்களில் வெற்றியை எதிர்பார்க்கலாம். ஆண்டின் தொடக்கத்தில் சூரியன் புதனுடன் ஐந்தாவது வீட்டில் இருக்கிறார். இது உங்கள் அன்புக்குரியவரை அறிவார்ந்த நபராக வரையறுக்கும். அவர்களின் ஞானத்தால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். 

சனி ஆறாவது வீட்டைக் கடந்து ஏழாவது வீட்டில் நுழைவதால் முதல் காலாண்டு சற்று பலவீனமாக இருக்கும் மற்றும் குரு எட்டாவது வீட்டில் இருப்பார். ஆனால் ஏப்ரல் 22 அன்று குரு உங்கள் ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சித்த பிறகு குருவின் பார்வை விழும். உங்கள் ஐந்தாவது வீடு அந்த நேரம் உங்கள் காதல் உறவுக்கு இது மிகவும் சிறப்பாக இருக்கும். 
காதல் உறவுகளில் இருந்த கசப்பு மந்தமான தன்மை நீங்கி ஒருவரையொருவர் அன்பாகப் பார்க்கும் உணர்வு வளரும். அக்டோபர் 30 க்குப் பிறகு ராகு மேஷத்திலிருந்து மீனம் ராசிக்கு மாறும்போது குருவின் பார்வையில் உங்கள் திருமண வாய்ப்புகளை உருவாக்கலாம்.
2023-ம் ஆண்டு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனலாம். சனியின் தாக்கம் ஆறாம் வீட்டில் இருப்பதாலும் மற்றும் உங்களின் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாகவும் இருப்பதாலும் குரு பகவான் எட்டாவது வீட்டில் அமர்ந்திருப்பதாலும் ஆண்டின் ஆரம்பம் கண்டிப்பாக சற்று பலவீனமாகவே அதாவது சுமாராக இருக்கும். இதன் காரணமாக உங்கள் திருமண வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவை உங்கள் வாழ்க்கை துணையால் வரலாம்.
சனி உங்கள் ஏழாவது வீட்டிற்கு வரும் போது ​​அந்த நேரம் திருமண வாழ்க்கைக்கு சாதகமான பலன்களைத் தரும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியமும் வலுவாக இருக்கும்.உங்கள் இருவருக்கும் இடையே நல்ல பிணைப்பு காணப்படும் ஆனால் ஏப்ரல் 22 வரை குரு எட்டாவது வீட்டில் இருப்பதால் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதன் பிறகு ஏப்ரல் 22 அன்று குரு உங்கள் ஒன்பதாம் வீட்டிற்கு மாறும்போது ​​அது திருமண வாழ்க்கைக்கு சாதகமான காலமாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் உள்ள  இருந்த பிரச்சனைகள் குறையும். உங்களுக்கும் உங்கள் மாமியார் தரப்பிற்கும் இடையே நல்ல இணக்கம் இருக்கும் மற்றும் அவர்களின் தரப்பிலிருந்தும் சாத்தியமான ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். 
குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் வரலாம். குறிப்பாக நவம்பர் - டிசம்பர் மாதங்கள் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையுடன் புனித யாத்திரை அல்லது நல்ல இடத்திற்குச் செல்லலாம் மற்றும் இந்த நேரத்தில் குழந்தைகளைப் பெறுவதற்கான அழகான வாய்ப்புகள் உருவாகும்.

கன்னி – Virgo

2023 ஆம் ஆண்டில், கன்னி ராசிக்காரர்கள் காதல் உறவுகளில் சோதனைகள் குறையும். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ஐந்தாம் வீட்டில் சனியும் சுக்கிரனும் தங்கியிருப்பது உங்கள் உறவை வலுப்படுத்த பல வாய்ப்புகளைத் உதவும். உங்கள் உறவில் நீங்கள் உண்மையாக இருந்தால் உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் இடையிலான தூரம் குறைந்து உங்கள் காதல் செழிக்கும். அதே சமயம் ஜனவரி 17ம் தேதிக்கு பிறகு சனி பகவான் ஆறாம் வீட்டில் நுழையும் போது சின்ன சின்ன விஷயங்களில் டென்ஷன் அதிகமாகும். 
உங்கள் அன்புக்குரியவர்களும் சில காரணங்களால் உங்களை விட்டு விலகிச் செல்லலாம் ஆனாலும் உங்கள் உறவைப் பாதுக்கா உங்கள் அன்புக்குரியவர் கோபப்படாமல் இருத்தல் நல்லது. அதன் பிறகு  உங்கள் விட்டு கொடுக்கும் குணத்தால்  இந்த ஆண்டு குறிப்பாக ஜனவரி, ஏப்ரல், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காதல் அதிகரிக்கும். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குள் திருமணத்தை முன்மொழிந்தால் உங்களுக்கு திருமண யோகம் உண்டாகும்.
உங்கள் திருமண வாழ்க்கை ஆண்டின் ஆரம்பம் மிகவும் சாதகமாக இருக்கும். சனி பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து உங்களின் ஏழாவது வீட்டைப் பார்ப்பார், குரு தனது சொந்த ராசியில் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை ஏழாம் வீட்டில் இருக்கிறார். இந்த கிரக நிலை உங்கள் திருமணத்திற்கு அழகான யோகத்தை உருவாக்கும் மற்றும் நீங்கள் திருமணத்திற்கு தகுதியுடையவராக இருந்தால், ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரையிலான காலகட்டத்தில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். 
நீங்கள் ஒருவரை காதலித்தால் இந்த நேரத்தில் உங்கள் காதல் திருமணத்திற்கான வலுவான வாய்ப்பு இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால் இந்த நேரம் திருமண வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்கும். 
நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் சேர்ந்து உங்களின் அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள் இது உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக வழி நடத்தும் ஆனால் எட்டாம் வீட்டில் குரு இருப்பதால் சனி ஆறாம் வீட்டில் இருப்பதால் வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் கொஞ்சம் கெடுவதற்கான வாய்ப்பு உண்டு.
மேலும் எட்டாவது வீட்டில் குருவுடன் ராகுவும் இருப்பார். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் உங்கள் எட்டாம் வீட்டில் சூரியன் குரு மற்றும் ராகு ஆகிய மூன்று பெரிய கிரகங்களின் சேர்க்கை உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த  ஆண்டின் கடைசி மாதங்களில் சூழ்நிலை சாதகமாக இருக்கும்