Showing posts with label கன்னி. Show all posts
Showing posts with label கன்னி. Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - கன்னி

கன்னி ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • குரு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.அதாவது  ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார். தனது 5, 7, 9 பார்வையாக  1, 3, 5 ஆகிய இடங்களை பார்க்கறார்.

  • இதனால் கடந்த பல மாதங்களாக ஏற்பட்ட மனக்குழப்பம், வீண் விரையம், அலைச்சல், தடைகள், பொருளாதார நெருக்கடி, உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். கன்னி ராசியினருக்கு ஜென்ம ராசியின் மீது குரு பகவானின் பார்வை விழுவது பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்கும். 

  • ரத்தபந்தங்களிடையே உங்கள் மதிப்பு உயரும், சுபகாரியத் தடைகள் நீங்கும். தொட்டவை துலங்கும். 

  • அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி, பொறுப்புகள் மனம்போல் கைகூடும். 

  • வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடிவரும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும்.

  • குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். 

  • அசையும் அசையா சொத்து சேரும். பழைய கடன்கள் பைசல் ஆகும்.

  • பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு சாதகமான சூழல் நிலவும்

  • சிறிய முயற்சி கூட மிக பெரிய அளவுக்கு பலன் தரும்

  • திருமணம் கைகூடும்.குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். 

  • செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். புதிய முயற்சிகள் ஏற்றத்தைத் தரும். 

  • அரசுவழிப் பாராட்டுகள் சிலருக்குக் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். 

  • உயரதிகாரிகளால் பாராட்டுகள் கிடைக்கும். அரசுப்பணியில் உள்ளவர்கள் நன்மைகள் அதிகரிக்கப் பெறுவார்கள். 

  • கலைஞர்கள், சினிமாத்துறையினர் கணிசமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். 

  • ஆரோக்கியம் மேம்பட்டும். ஆனாலும் சிலருக்கு ஹார்மோன் குறைபாடுகள்  வர வாய்ப்பு கவனம் தேவை .

  • தலை, முதுகு, கழிவு உறுப்பு, ரத்தத் தொற்று உபாதைகள் வரலாம்.

  • வாகனத்தை வேகமாக ஓட்டுவதை தவிர்க்கவும்.

  • உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.

  • கூட்டு தொழிலில், கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதேபோல, உறவினர்கள் இடையே ஏற்படும் பிரச்சனைகளை அனுசரித்து செல்வது பல விதங்களில் நன்மை தரும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள் 

  • இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். 

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். 

  • குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். 

  • கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவார்கள். 

  • உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.


அஸ்தம்

  • இந்த பெயர்ச்சியால் திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது மனநிம்மதி  தரும். 
  • அதிக முயற்சிசெய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் சிறந்த வாய்ப்புகள் கைகூடும்
  •  கவுரவம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். 
  • சகவியாபாரிகளுடன் ஒத்துப் போவார்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழி கிடைக்கும். 
  • உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.


சித்திரை - 1, 2 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் வீட்டை விட்டு வெளியே தங்கும் சூழல் வரலாம் . 

  • பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் . கடின உழைப்பும், புத்திசாதூர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். 

  • அதே போல் நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. என்றாலும்  சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள். 

  • சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மேலும்  பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். 

  • எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லாகாரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.


பரிகாரம்

அருகிலிருக்கும் ஐயப்பன்  சென்று வணங்குவதால்  சிக்கலான பிரச்சினைகள் தீரும். மேலும் நரசிம்மர் வழிபாடு , பைரவர் வழிபாடு நன்மைகள் தரும் 

Full Video



தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - கன்னி

  • இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கன்னி ராசிக்கு எட்டாமிடத்தில் குரு, சூரியன், ஜன்ம ராசியில் கேது, ஆறாம் இடத்தில் சனி, ஏழாம் இடத்தில் ராகு, புதன் சுக்கிரன் கிரக நிலை அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பின் படியும், மேலும் அடுத்து வரும் குரு பெயர்ச்சியின் படி இந்த ஆண்டு கன்னி ராசிகாரர்களுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.



  • மேலும் கன்னி ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு மிக மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும்



காதலர் தின ராசி பலன்கள் - கன்னி

 

குறிப்பு :

காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)

திருமணமானவர்கள் ராசி பலன்

உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளி இடம், திரைப்படம் அல்லது முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்விர்கள். இந்த காதலர் தினம் கொஞ்சம் சிறப்பாகவே இருக்கும். நீண்ட காலமாக இழந்த உங்கள் துணையின் அன்பை புரிந்து கொண்டு திரும்ப பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்
நண்பர்கள் தங்களின் சோக கதையை சொல்லி  புலம்பவர்கள். டென்சன் செய்வார்கள். உங்கள் குடும்பத்தை நீங்கள் கவனிங்கள். 

காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்

நீங்கள் இழந்த காதலை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மிகவும் சிறப்பான நாளாக அமையப் போகிறது.  

சிறப்பான உறவு அமையக்கூடிய ஒரு அர்த்தமுள்ள காலமாக இருக்கும். இது உறவுகளை வளர்க்கக் கூடிய மிக சிறப்பான காலம். காதல் மட்டுமல்லாமல் உறவை வளர்த்தல், அது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுதல் என பல இன்பமான நிகழ்வுகள் இருக்கும். இருப்பினும் இதெல்லாம் நடக்க அமைதியும், நம்பிக்கையும் தேவைப்படும்.

காதலை வெளிபாடுத்தல் :

மிக சிறந்த நாள். காதலுக்குரிய மிக சிறந்த காலம். நண்பர்களால் தொல்லை உண்டு. அறிவால் காதலை வெல்ல முடியாது என்பதை புரிந்த கொண்டு காதலால் காதலை  வெல்லவும். உங்கள் தவறான புரிதல்கள் அனைத்தும் சரியாகிவிடும். 

5யில் இருக்கும் சூரியன் உங்களுக்கு நன்மை செய்வார். அதிஷ்டமான நாள்

ஏற்ற காதல் ராசிகார்கள் :

நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்         

  • ரிஷபம் மற்றும் மகரமாக இருந்தால் 90% - 100% நல்லது
  • கடகம் மற்றும் விருச்சிகமாக இருந்தால் 80% - 90% நல்லது
  • கன்னி மற்றும் மிதுனமாக இருந்தால் 70% - 80% நல்லது

என்ன பரிசு தரலாம்:

கன்னி ராசிக்காரர்கள் சிறிய விசயங்களை விரும்புவார்கள். மேலும் சிறிய விசயங்களையும் பாராட்டுவதை விரும்புவர்கள் நீங்கள், உங்கள் துணை கன்னி ராசியாக இருக்கும் பட்சத்தில் உடல்நலம் குறித்த ஒரு புத்தகம், அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு செல்லப்பிராணி போன்ற பரிசாக தரலாம் 

பொது பலன் :

உங்கள் துணையுடன் உங்கள் நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். அன்பால் தான் காதலை வெல்ல முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் 


New Year - Love and marriage horoscope 2023 - 2

 


கடகம் Cancer

 2023 ஆண்டு கடக ராசிக்காரர்களின் உறவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் ஐந்தாம் வீட்டில் செவ்வாயின் பார்வை டென்ஷன் மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும் ஆனால் குருவின் அருள் உங்கள் உறவை காப்பாற்றி கொள்ளலாம். 
ஏப்ரல் மாதம் வரை பல பிரச்சனைகள் இருந்தாலும் உங்கள் உறவை பேணுவீர்கள். மே மாதத்தில் உறவில் பதற்றம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் வேலையின் தாக்கம் உங்கள் காதல் உறவில் சிறு சிறு அதிகரிக்கும். அதன் பிறகு உங்கள் உறவில் நீங்கள் நிறைய இணக்கத்தன்மையையும் உண்டாகும். ஜூன் மாதத்தில் உங்கள் உறவில்  நெருக்கம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் உறவை நல்ல முறையில் கொண்டு செல்ல நினைப்பீர்கள் மற்றும் திருமணம் தொடர்பான யோசனைகளும் வரலாம். ஆண்டின் கடைசி மாதம் உங்கள் உறவில் காதல் அதிகரிக்கும் மற்றும் உங்கள் அன்புக்குரியவருடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்
இந்த  ஆண்டில் ஆரம்பம் திருமண வாழ்க்கைக்கு சற்று சவாலானதாக இருக்கும் எனலாம். ஆண்டின் தொடக்கத்தில், சனி உங்கள் ஏழாவது வீட்டில் சுக்கிரனுடன் இருக்கிறார். இது நல்லது தான். உங்கள் திருமண உறவில் காதல் நன்றாக இருக்கும் ஆனால் சிறு சிறு பிரச்சனை உண்டு.
 அதன் பிறகு ஜனவரி 17 ஆம் தேதி சனி உங்கள் எட்டாம் வீட்டிற்கு மாறுகிறார் அங்கிருந்து உங்கள் இரண்டாவது வீட்டைப் பார்ப்பீர்கள் இந்த நேரத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் கவனம். மாமியார் பக்கத்திலும் உறவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். குரு பகவான் அருள் மட்டுமே உங்களை ஒரு சில சவால்களில் இருந்து காப்பாற்றும். 
மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் செவ்வாய் உங்கள் ராசியில் பெயர்ச்சிக்கும் போது ​​அந்த நேரம் திருமண வாழ்க்கையில் அதிக மன அழுத்தத்தை அதிகரிக்கும். அதன் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் உங்கள் முதல் வீட்டில் பெயர்ச்சித்து ஏழாவது வீட்டைப் பார்ப்பார். அந்த நேரம் ஈகோ மோதலின் நேரமாக இருக்கலாம் மற்றும் உங்கள் மனைவிக்கு இடையே மோதல் இருக்கலாம். ராகு-கேதுவின் தாக்கத்தால் குடும்ப வாழ்க்கையில் ஏற்கனவே டென்ஷன் இருக்கும். இதன் காரணமாக சற்று கவனம் செலுத்த வேண்டிய நேரம். இதன் பிறகு செவ்வாய் நான்காம் வீட்டில் இருப்பதால் சில பிரச்சனைகளும் ஏற்படும். அதன்பிறகு அக்டோபர் 30க்கு பிறகு ராகு உங்கள் ஒன்பதாம் வீட்டிலும் கேது மூன்றாவது வீட்டிலும் வரும்போது இந்தச் சவால்கள் சற்று குறையும். இந்த வருட இறுதியில் திருமண வாழ்வு மற்றும் சுற்றுலா பயணங்களில் மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கை துணையுடன் செல்லலாம்.
பொதுவாக அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது தான் உண்மை. பயம் வேண்டாம். அன்பால் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.

சிம்மம் Leo

சிம்ம ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் காதல் விவகாரங்களில் வெற்றியை எதிர்பார்க்கலாம். ஆண்டின் தொடக்கத்தில் சூரியன் புதனுடன் ஐந்தாவது வீட்டில் இருக்கிறார். இது உங்கள் அன்புக்குரியவரை அறிவார்ந்த நபராக வரையறுக்கும். அவர்களின் ஞானத்தால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். 

சனி ஆறாவது வீட்டைக் கடந்து ஏழாவது வீட்டில் நுழைவதால் முதல் காலாண்டு சற்று பலவீனமாக இருக்கும் மற்றும் குரு எட்டாவது வீட்டில் இருப்பார். ஆனால் ஏப்ரல் 22 அன்று குரு உங்கள் ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சித்த பிறகு குருவின் பார்வை விழும். உங்கள் ஐந்தாவது வீடு அந்த நேரம் உங்கள் காதல் உறவுக்கு இது மிகவும் சிறப்பாக இருக்கும். 
காதல் உறவுகளில் இருந்த கசப்பு மந்தமான தன்மை நீங்கி ஒருவரையொருவர் அன்பாகப் பார்க்கும் உணர்வு வளரும். அக்டோபர் 30 க்குப் பிறகு ராகு மேஷத்திலிருந்து மீனம் ராசிக்கு மாறும்போது குருவின் பார்வையில் உங்கள் திருமண வாய்ப்புகளை உருவாக்கலாம்.
2023-ம் ஆண்டு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனலாம். சனியின் தாக்கம் ஆறாம் வீட்டில் இருப்பதாலும் மற்றும் உங்களின் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாகவும் இருப்பதாலும் குரு பகவான் எட்டாவது வீட்டில் அமர்ந்திருப்பதாலும் ஆண்டின் ஆரம்பம் கண்டிப்பாக சற்று பலவீனமாகவே அதாவது சுமாராக இருக்கும். இதன் காரணமாக உங்கள் திருமண வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவை உங்கள் வாழ்க்கை துணையால் வரலாம்.
சனி உங்கள் ஏழாவது வீட்டிற்கு வரும் போது ​​அந்த நேரம் திருமண வாழ்க்கைக்கு சாதகமான பலன்களைத் தரும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியமும் வலுவாக இருக்கும்.உங்கள் இருவருக்கும் இடையே நல்ல பிணைப்பு காணப்படும் ஆனால் ஏப்ரல் 22 வரை குரு எட்டாவது வீட்டில் இருப்பதால் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதன் பிறகு ஏப்ரல் 22 அன்று குரு உங்கள் ஒன்பதாம் வீட்டிற்கு மாறும்போது ​​அது திருமண வாழ்க்கைக்கு சாதகமான காலமாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் உள்ள  இருந்த பிரச்சனைகள் குறையும். உங்களுக்கும் உங்கள் மாமியார் தரப்பிற்கும் இடையே நல்ல இணக்கம் இருக்கும் மற்றும் அவர்களின் தரப்பிலிருந்தும் சாத்தியமான ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். 
குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் வரலாம். குறிப்பாக நவம்பர் - டிசம்பர் மாதங்கள் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையுடன் புனித யாத்திரை அல்லது நல்ல இடத்திற்குச் செல்லலாம் மற்றும் இந்த நேரத்தில் குழந்தைகளைப் பெறுவதற்கான அழகான வாய்ப்புகள் உருவாகும்.

கன்னி – Virgo

2023 ஆம் ஆண்டில், கன்னி ராசிக்காரர்கள் காதல் உறவுகளில் சோதனைகள் குறையும். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ஐந்தாம் வீட்டில் சனியும் சுக்கிரனும் தங்கியிருப்பது உங்கள் உறவை வலுப்படுத்த பல வாய்ப்புகளைத் உதவும். உங்கள் உறவில் நீங்கள் உண்மையாக இருந்தால் உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் இடையிலான தூரம் குறைந்து உங்கள் காதல் செழிக்கும். அதே சமயம் ஜனவரி 17ம் தேதிக்கு பிறகு சனி பகவான் ஆறாம் வீட்டில் நுழையும் போது சின்ன சின்ன விஷயங்களில் டென்ஷன் அதிகமாகும். 
உங்கள் அன்புக்குரியவர்களும் சில காரணங்களால் உங்களை விட்டு விலகிச் செல்லலாம் ஆனாலும் உங்கள் உறவைப் பாதுக்கா உங்கள் அன்புக்குரியவர் கோபப்படாமல் இருத்தல் நல்லது. அதன் பிறகு  உங்கள் விட்டு கொடுக்கும் குணத்தால்  இந்த ஆண்டு குறிப்பாக ஜனவரி, ஏப்ரல், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காதல் அதிகரிக்கும். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குள் திருமணத்தை முன்மொழிந்தால் உங்களுக்கு திருமண யோகம் உண்டாகும்.
உங்கள் திருமண வாழ்க்கை ஆண்டின் ஆரம்பம் மிகவும் சாதகமாக இருக்கும். சனி பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து உங்களின் ஏழாவது வீட்டைப் பார்ப்பார், குரு தனது சொந்த ராசியில் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை ஏழாம் வீட்டில் இருக்கிறார். இந்த கிரக நிலை உங்கள் திருமணத்திற்கு அழகான யோகத்தை உருவாக்கும் மற்றும் நீங்கள் திருமணத்திற்கு தகுதியுடையவராக இருந்தால், ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரையிலான காலகட்டத்தில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். 
நீங்கள் ஒருவரை காதலித்தால் இந்த நேரத்தில் உங்கள் காதல் திருமணத்திற்கான வலுவான வாய்ப்பு இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால் இந்த நேரம் திருமண வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்கும். 
நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் சேர்ந்து உங்களின் அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள் இது உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக வழி நடத்தும் ஆனால் எட்டாம் வீட்டில் குரு இருப்பதால் சனி ஆறாம் வீட்டில் இருப்பதால் வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் கொஞ்சம் கெடுவதற்கான வாய்ப்பு உண்டு.
மேலும் எட்டாவது வீட்டில் குருவுடன் ராகுவும் இருப்பார். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் உங்கள் எட்டாம் வீட்டில் சூரியன் குரு மற்றும் ராகு ஆகிய மூன்று பெரிய கிரகங்களின் சேர்க்கை உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த  ஆண்டின் கடைசி மாதங்களில் சூழ்நிலை சாதகமாக இருக்கும்