கன்னி ராசிக்கு கண்டக சனி ஆரம்பம் ...பயம் வேண்டாம்... கவனம் தேவை !....
கண்டக சனி என்றால் என்ன?
- சனி சந்திரனுக்கு 7யில் வருவதை தான் கண்டக சனி என்று சொல்வார்கள். கண்டக சனி மன அமைதியின்மையை தருவார். என்று சொல்படுகிறது. எனவே இது நல்லது அல்ல.
- கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள்.
- அதாவது ராசிக்கு ஏழில் சனி சஞ்சரிக்கும் காலங்கள், உடல் உபாதைகள் 7ம் வீடு என்பது நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் (களத்திரம்) வாழ்க்கைத்துணை ஆகியவற்றை குறிப்பதால் அதை சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் மற்றும் படிப்பினையை கற்றுக்கொடுக்கும் இந்த கண்டக சனி எனலாம்.
- கண்டக சனி என்பது ஒரு செயலை செய்ய சிறப்பான சூழல் இருந்தாலும் அதற்கான முடிவையும் பலனையும் எட்ட பல சிரமங்களைப் பட வேண்டி வரும். இந்த காலத்தில் எண்ணியதை அதற்கான நேரத்தில் முடிப்பது சிரமம். திட்டமிட்ட சுப காரியங்கள் நடத்த முடியாமல் போகலாம்.
- எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் யோசித்து செயல்பட்டால் இச்சனிகாலத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
பொது கண்ணோட்டம்
- கன்னி ராசி பொறுத்தவரை சனி பகவான் 7வது வீட்டிற்குள் நுழைகிறது. இது சாதகமானது இல்லை மற்றும் உடல்நலம் மற்றும் உறவுகளை குறிப்பாக வாழ்க்கை துணை மற்றும் வாழ்க்கை துணை பெற்றோர்களை பாதிக்கலாம்.
- என்றாலும் குரு, ராகு மற்றும் கேது சாதகமாக இருப்பதால் சில பாதுகாப்பு உணர்வை வழங்கும்.
- ஜூலை முதல் நவம்பர் வரை குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இது வீட்டுச் சூழலைப் பாதிக்கும். இந்தக் கட்டத்தில் பொறுமையும், சூழ்நிலைகளை சாதுர்யமாகவும் கையாள்வதும் அவசியம்.
- இந்த காலகட்டத்தில் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, இந்த நேரத்தில் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், நெருங்கிய உறவுகளில் விரிசல்கள் ஏற்படலாம்.
- முன்னேற்றத்தில் தடைகள் மற்றும் தாமதங்களை சந்திக்கலாம். இந்த கடினமான காலத்தில் தன்னம்பிகையுடன் செயல்பட வேண்டியிருக்கும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்ளவது நல்லது.
- என்றாலும் காதல், கல்யாணத்தில் சிறு குழப்பம் இருந்தாலும் முடிவு நல்லபடியாக இருக்கும். அதாவது பல முயற்சிகள் எடுத்தாலும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் தடை ஏற்படலாம். ஆனால் பின்னர் சிறப்பாக நடக்கும்.
- அலைச்சல் அதிகரிக்கும் ஆனால் அதற்கான பலன்கள் அதிகமாக கிடைக்கும் எனவே கவலை வேண்டாம்.
- வயதை கணக்கில் கொண்டு தாய்க்கு உடல்நிலை பிரச்னை, உத்தியோகத்தில் பணியிட மாற்றம் போன்றவை ஏற்படும்.
- குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பூர்வீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
- கடன் எதாவது வாங்கினால் யோசித்து தான் செய்ய வேண்டும். கட்ட சிரமம் பட நேரிடும்.
- ஏழாம் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் மூன்றாம் பார்வையாக 9 ஆம் இடத்தை பார்ப்பதால் தந்தை உடல்நிலை உத்தியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
- புதிதாக இடம், மனை, வெளிநாட்டு பயணங்கள், முதலீடு, கடன் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. அல்லது தவிர்ப்பது நல்லது.
- உயர் அதிகாரிகளுடன் பேசும்போது சூழ்நிலையை உணர்ந்து கருத்துக்களை பகிர வேண்டும். மனதில் தோன்றியதை வெளிப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
- நண்பர்கள், பங்குதாரர்களுடன் சாதகமற்ற நிலை இருக்கும். கவனம் அவசியம்.
- வாகனப் பயணங்கள் மற்றும் கால்நடை தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
- என்றாலும் எதிர்காலம் குறித்த கவலைகள் மற்றும் தயக்கங்கள் குறையும். முயற்சிகளில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கி செயல்பாடுகளில் அனுபவங்கள் வெளிப்படும். தூக்கமின்மை பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
குடும்ப வாழ்க்கை
- சனி 7வது வீட்டில் நுழைந்தாலும், 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை சாதகமான ஆண்டாகவே இருக்கும். வாழ்க்கைத் துணை, குழந்தைகள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
- உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணத்தை முடிக்க இது ஒரு சிறந்த நேரம். மேலும் குடும்பத்தில் குழந்தை பிறப்பது போன்ற மன மகிழ்ச்சியான செய்தி வரும்.
- குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் கன்னி ராசிக்காரர்கள் மீண்டும் சேர்ந்து இருந்துஇணக்கமான வாழ்க்கையை நடத்த சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.
- மார்ச் 2026க்கு பிறகு வாக்கியில் கவனம் தேவை. பேச்சில் சிறு சிறு பிரச்னைகள் வரலாம். ஆனாலும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
- காதலில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம் என்று தான் சொல் வேண்டும். நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் செய்து கொள்ளவும் ஒரு சிறந்த நேரம். காதல், பெற்றோர்களின் ஆசியுடன் திருமணம் நடக்கும். பயன்படுத்தி கொள்ளவும்.
- குழந்தைக்காக காத்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மருத்துவ முறைகளை பயன் படுத்தி குழந்தை பாக்கியம் பெறவும் இது சிறந்த நேரம்.
- 2026 மற்றும் 2027ஆண்டு திருமணமான தம்பதிகள் அதிக சவால்களை சந்திக்க நேரிடலாம்.
- பொதுவாக இந்த பெயர்ச்சியின் முதல் பாதியில் குடும்ப உறவுகள் மேம்படும். பெண்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். என்றாலும் தாயின் சூழ்நிலையை புரிந்து செயல்பட வேண்டும்.
- வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையை நிலைநிறுத்துவது நல்லது. பெண்கள் வீட்டு சூழலை மாற்றுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
- சனி தனது 7ம் பார்வையாக 7ம் வீட்டை பார்ப்பதால் தந்தை உடல் ஆரோக்கிய பிரச்சனை அல்லது தந்தை விட்டு தூற தேசம் செல்லுதல் போன்றவை உண்டாகும். மேலும் சனி தனது 10வது பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் வீடு, நிலம், வாகனம் சார்ந்த ஆவனத்தில் சிக்கல் வரலாம். கவனம் அவசியம்
- மேலும் வாழ்க்கைத் துணையால் தொல்லை, சங்கடம் அதிகமாகும். சொந்த வாழ்வில் மிகவும் எதிர்பார்த்த வெற்றி கை நழுவிப் போகும்.
- கடன் வாங்க தூண்டும் அளவிற்கு செலவுகள் கட்டுக்கு அடங்கமல் போகலாம்.
- பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் ஆனால் பெரிய அளவு ஆதாயம் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.
- ஆன்மீக தெய்வம் சார்ந்த விஷயங்களில் கோவில் சார்ந்த விஷயங்களில் சலிப்பு ஏற்படும் காலமாக காணப்படுகிறது. கவன சிதறல் வேண்டாம்.
- நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், உறவினர்களின் பொறாமையால் பாதிப்புகள் உண்டாகும்.
- வெளிநாட்டிலிருந்து பண ஆதாயம் வெளிநாட்டிலிருந்து வியாபார தொடர்புகள் எதிர்பார்த்து இருப்பவர்கள் ஓரளவு நன்மை அடைவார்கள்.
ஆரோக்கியம்
- ஆரம்பத்தில் அதாவது இந்த வருடத்தில் 2025ம் ஆண்டில் ஆரோக்கியத்தில் எந்த ஒரு பெரிய பிரச்சனைகள் வராது.என்றாலும் மார்ச் 2026 தொடங்கும் பொது சில சிறிய பாதிப்புகள் தோன்றத் தொடங்கலாம். கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவுகள் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்கணிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். செரிமானம் அல்லது வயிறு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.
- ஜனவரி 2026 முதல் உடல் ஆரோக்கியத்தில் தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம் அல்லது சோர்வு ஏற்படலாம்.
- வாகனப் பயணங்களில் கவனம் அவசியம். வீண் சாகசங்களை தவிர்க்க வேண்டும்.
- அதிக பணிகளால் சோர்வு ஏறப்டாமல் இருக்க முறையான தூக்கம் மேற்கொள்ள வேண்டும். முறையான தூக்கம் மேற்கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சினையைத் தவிர்க்கலாம்
- மேலும் முழங்கால்கள் மற்றும் எலும்புகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- அதிகப்படியான சர்க்கரை உணவு மற்றும் ஆல்கஹால் தவிர்க்கவும்.
- உடல்நிலைல் பொறுத்தவரை வயதை அனுசரித்து ஆர்த்தோ, அடிவயிறு, கேஸ்டிரிக் பிரச்னை, ஒற்றை தலைவலி போன்றவை ஏற்படும்.
தொழில் மற்றும் நிதி நிலை
- உத்தியோகத்தைப் பொறுத்தவரை தடைகள் மற்றும் தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் மனம் என்றாலும் மனம் தளர வேண்டாம்.
- உத்தியோகத்தை பொறுத்து பணிகள் மலை போல குவியலாம் எனவே குறிப்பிட்ட காலத்தில் எல்லா பணிகளை முடிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
- இந்த காலகட்டத்தில் குறுக்குவழிகள் பலனைத் தராது என்பதை நினைவில் வைத்து கொள்ளவும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே வெகுமதியைப் பெற்றுத் தர முடியும்
- வியாபார கூட்டாளிகள் கடைசி நேரத்தில் முதலீடு இல்லை என்று கை விரிக்கும் சூழ்நிலை வரலாம் கூட்டாளிகளின் சந்தேகங்களை சரிசெய்வது மன அமைதியை ஏற்படுத்தும்
- வியாபாரத்தில் இலக்குகளை அடைய பல்வேறு அணுகுமுறைகள் உதவும் லாபத்தை மேம்படுத்த நுட்பங்களை புரிந்து கொள்ள வேண்டும் வெளிநாட்டு மற்றும் வெளியூர் கொள்முதல் நடவடிக்கையில் கவனம் அவசியம். அரசு உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது
- கலைத்துறையில் இருப்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழலும் அதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும் ஊதியம் மற்றும் நிலுவையில் இருந்து வந்த வரவுகள் கிடைக்கும் எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.
- சில சக ஊழியர்கள் அல்லது நெருங்கிய கூட்டாளிகள் உங்களை ஏமாற்றலாம் கவனம் அவசியம்.
- சமூகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் பழைய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் உயர் பொறுப்பில் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும் மேலும் ஆவணம் மற்றும் ஒப்பந்தங்களில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் தடைகள் நீங்கும் வரவுகளில் ஏற்பட்ட காலதாழ்வு படிப்படியாக குறையும் பலதரப்பட்ட மக்களிடமிருந்து ஒத்துழைப்புகள் கிடைக்கும்
- இந்த சனி பெயர்ச்சியில் வருமானம் சீராக இருக்கும் சேமிக்கவும் முடியும்என்றாலும் எதிர்பாராத செலவும் உண்டாகும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்
- ஊக வணிகம் மற்றும் சரக்கு வர்த்தகம் நேர்மறையான முடிவுகளைத் தரலாம், ஆனால் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் எச்சரிக்கை வேண்டும்
- புதனே பத்தாம் வீட்டுக்கும் அதிபதியாக வருவதால் தொழில், ஜீவனம், வெளிநாட்டு தொடர்பு, முயற்சிகளில் கவனம் இருந்தால், உங்களை நீங்களே பார்த்துக் கொள்வதன் மூலமாக ஏழாம் வீட்டு சனியின் தீய பலன்களை கடந்துவிடலாம்.
- கன்னி ராசி மாணவர்கள் வேகமாகவும் விவேகமாகவும் இயங்க வேண்டும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திவைக்க கூடாது
பரிகாரம்
- ஏழாம் வீட்டில் இருக்கக்கூடிய சனியின் பாதிப்பை குறைக்க பெருமாள் கோயில்களில் சென்று விஷ்ணு வழிபாடு செய்யலாம்
- மாற்றுத் திறனாளிகளுக்கு, துப்புரவுப் பணியாளர்களுக்கு, முதியவர்கள், கணவரை இழந்தவர்களுக்கு உதவி செய்வது நன்மை பயக்கும்
- ஹனுமான் சாலிசா மற்றும் கால பைரவ அஷ்டகம் கேட்பது மிகவும் நல்லது.
- திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதால் தம்பதிகள் இடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் அதிகரிக்கும்.
- நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரைக் கொடுக்கலாம்.
- முடிந்தால் திரநள்ளாறு சென்று, நல தீர்த்தில் நீராடும் சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றலாம்
- சனி கிழமை அன்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி, மேலும் அங்கு உள்ள சனி பகவானுக்கு நல்எண்ணெய் விளக்கு ஏற்றி வர கண்டக சனியின் தாக்கம் குறையும்
>