சனி பெயர்ச்சி- 2025- மிதுன ராசி


மிதுன  ராசிக்கு கர்ம சனி ஆரம்பம்.

கர்ம சனி சனி என்றால் என்ன?

  • சனி பகவான் ஜீவ காரகன் மற்றும் கர்ம அதிபதி. ஆதலால் கர்மாவை நிர்ணயிப்பதில் சனி பகவானுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஒரு ராசிக்கு 10ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்ம சனி என்று அழைக்கப்படும். 10ஆவது இடம் என்பது கர்ம ஸ்தானம் அல்லது தொழில் ஸ்தானம் ஆகும்.
  • கர்ம சனியைப் பொறுத்த வரையில் நன்மைகள் பெரும்பாலும் நடக்காது என்று தான் சொல்லப்படுகிறது. கர்மச் சனி காலங்களில் நன்மைகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும், தீமைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.
  • பல தடை, தாமதங்களைத் தாண்டி தான் வாழ்க்கையில் முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். ஆனால் கிடைக்கும் என்பது தான் சிறப்பு அம்சம் ஆகும்.
  • சிலருக்கு அடிமையாக இருக்க கூடிய சூழல் கூட உருவாகலாம். திடீரென்று வேலை போகும்.தொழிலில் கடினமான சூழல் இருப்பினும் லாபம் உண்டாகும்.
  • உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஜீவனத்தில் பிரச்சனை கூட வரலாம். பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். நிதி நெருக்கடியால் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பம். பிரச்சனை மேல் பிரச்சனை வரலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
  • பயப்பட வேண்டாம். இந்த கர்ம சனி பொறுப்புணர்ச்சி அதிகரிக்க செய்யும். பயனுள்ள காரியங்களைச் செய்ய துண்டும்.
  • திறமையை பயன்படுத்தி கடினமாக உழைப்பதன் மூலம் முயற்சிகளுக்கான பாராட்டும் அங்கீகாரமும்கட்டாயம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும். அது போல் சனி எந்த ராசிக்கு கர்ம சனியாக வருகிறார் என்பதை பொறுத்து நல்ல பலன்களை வாரி வழங்குவார்.

பொது கண்ணோட்டம்

  • சனி பெயர்ச்சிக்கு பிறகு மிதுன ராசிக்கு கர்ம சனி ஆரம்பகிறது. மிதுன ராசிக்கு சனி அஷ்டமாதிபதியாக இருந்தாலும், அவர்தான் பாக்கியாதிபதியும் ஆவரே. பாக்கியாதிபதி ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் வீட்டுக்கு வருவது தர்ம கர்மாதிபதி யோகம். அதனால் ..
  • என்றாலும் 2025 முதல் ஜூன் 2025 வரை, எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் உங்கள் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் பல விஷயங்கள் தவறாக நடக்கக்கூடும். உடல்நலப் பிரச்சினைகள், அதிகரித்த மன அழுத்த நிலைகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம்.
  • படிக்கும் மாணவர்கள் நண்பர்களின் விசயங்களில் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ,  நல்ல  முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும். பல விஷயங்கள்  சாதகமாக மாறத் தொடங்கும், மேலும் கடின உழைப்பு பஏற்ற பலன் உண்டு. ஆச்சரியப்படும் விதமாக,  விரும்பும்  கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைக்கும்.  உங்கள் சாதனைகளைப் பற்றி  குடும்பத்தினர் பெருமைப்படுவார்கள்.
  • இது நாள் வரை கைகூடாத முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உங்கள் திறமையை அனைவரும் பாராட்டி அங்கீகரிப்பார்கள். பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தைரியம் அதிகரிக்கும்.
  • உள்நாடு மற்றும் வெளிநாடு இரண்டிலும் சிறப்பான வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உறுதியாக நடக்கும்.
  • என்றாலும் 10ம் இடத்தில்  இருக்கும் சனி தனது 3,7,10ம்  பார்வையாக 2, 4 மற்றும் 7 ஆம் வீடுகளை பார்ப்பார். சனி பார்வை துக்கத்தின் தரத்தை குறைக்கும். மேலும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு இடையூறுகளையும் தரும்.
  • தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் கடின உழைப்பு அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்
  • குடும்ப உறவுகள் இனிமையாக இருந்தாலும் சில சமயங்களில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். மனதில் சில குழப்பங்கள் உண்டாகலாம், ஆனால் உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும். மேலும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த பணம் விரைவில் வந்து சேரும்.
  • குடும்பத்தில், குறிப்பாக மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து, ஒற்றுமை நிலவும்.
  • பலருக்கு வேலை செய்யும் இடத்தில் இடத்தில் ஏற்பட்டு வந்த அழுத்தங்கள் குறைந்து, சாதகமான  சூழல் அமையும்.
  • பொதுவாக தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது உங்களுடைய மதிப்பை உயர்த்தும்.
  • தாய் வீட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சம வயதினரிடம் போட்டி மனப்பான்மையை விட்டுவிட்டு அன்புடன் பழக வேண்டும்.

குடும்ப வாழ்க்கை

  • திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை கண்டு கொள்ளலாம். திருமணம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கைகூடும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும்.
  • தந்தையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் தாயுடன் சுமுக உறவை பராமரிப்பது கடினமாக இருக்கலாம். எனவே பொறுமையாக செயல்பட வேண்டும்.
  • சனி 7ம் வீட்டை பார்ப்பதால், வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். வெளி ஊர் பயணங்களால் குடும்பத்தை பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம்.
  • எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம். ஜூலை 2026க்கு மேல் சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், புதிய வீட்டை வாங்கிச் செல்வதற்கும் சிறந்த நேரம் என்று சொல்லாம்.
  • காதலில் இருப்பவர்கள் 2026ம் ஆண்டின்  முதல் பாதியில் உணர்ச்சி, அதிர்ச்சி, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படலாம்.
  • என்றாலும் பிற்பகுதியில் நல்ல சுமுகமான வாய்ப்புகள் வரும். அதை கவனமாகப் பயன்படுத்திக் கொள்வதும், உறவைப் பாதுகாக்க விரைவில் திருமணம் செய்யது கொள்ளவது
  • இந்தக் காலகட்டம் திருமணத்திற்கு ஒரு நல்ல காலமாகும் பெற்றோர்களின் சம்மந்தமும் கிடைக்கும் எனலாம்.
  • மிதுன ராசி பெண்களை பொறுத்தவரை தாயுடன் சிறிய சண்டைகள் ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • தம்பதியினர் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, மனதில் ஏற்படும் குழப்பங்களை வெளிப்படுத்தி தீர்வு காண்பதால் மன நிம்மதி கிடைக்கும் என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.
  • உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும். வீட்டில் சில மாற்றங்களை மேற்கொள்ள விரும்பும் நிலை உண்டாகலாம்.
  • வெளியூர் பயணத்தின் போது கவனம் அவசியம்
  • பொதுவாக, சனி பகவான் பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும். ஆனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள்  ஏற்படும்.

>ஆரோக்கியம்

  • இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் சந்திக்கும் , சாத்தியம் உண்டு. எனவே ஆரோக்கியத்திற்கு மிகுந்த  முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
  • மேலும் தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
  • வயதான மிதுன ராசிக்காரர்களின் உடல் நிலை சீராக நேரம் எடுக்கலாம். குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது அவசியம்.
  • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யும் சூழ்நிலை வரலாம். அறுவை சிகிச்சை அவசியமா என்று நன்கு ஆராய்ந்து பிறகு முடிவு எடுக்கவும்.
  • உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை கட்டாயம் தேவை.
  • ஜூலை 2025 மற்றும் நவம்பர் 2025 மாதங்களுக்கு இடையில்குடும்பத்தில் உள்ள  வயதானவர்கள், குறிப்பாக பெற்றோரின் ஆரோக்கியத்தை அக்கறை மிக அவசியம்.
  • என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும். இந்த சனி பெயர்ச்சியை பொறுத்தவரை, உடல் ஆரோக்கியத்தில் , சோதனையான கட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்  என்று சொல்ல முடியாது .

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழம். பணிபுரியும் இடத்தில் இருந்த அழுத்தங்கள் மற்றும் மனக்கசப்புகள்  குறையத் தொடங்கும்.
  • சக ஊழியர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகும். பணி மாற்றம் தொடர்பான தாமதங்கள் நீங்கி, எதிர்பார்த்த பதவியை பெறலாம்.
  • அதே போல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஊதியம் விரைவில் கிடைக்கும். நீதித்துறை சார்ந்த விஷயங்களில்  நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • பொதுவாக உத்யோகத்தில் நல்ல உயர்வு, மாற்றம் வரும். பதவி, சம்பளம் உயர்வு வரும்.
  • சொந்தத் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். கூட்டாளிகளுடன் நெருக்கமாகப் பழகி, சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் வியாபாரத்தை சிறப்பாக்க முடியும்.
  • வாகன சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். கைத்தொழில் செய்பவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் என்றாலும் வருமானம் சுமாராக தான் இருக்கும்.
  • சமூக சேவை துறையில் உள்ளவர்களுக்கு பொதுமக்களின்  ஆதரவை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு  தொண்டர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகி ஒற்றுமை ஏற்படும். பொறுமையாக இருந்து தொடர்ந்து உழைப்பதன் மூலம் வெற்றி கட்டாயம் கிடைக்கும்.
  • உத்தியோகத்தை பொறுத்தவரை முன்னேற்றங்கள் இருந்தாலும் சில சவால்களை சந்திக்க நேரும். எனவே  கடின உழைப்பு அவசியம் தேவை.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும் என்றாலும் மிகுந்த  கவனமுடன் செயல்பட வேண்டும். முதலீடு மட்டும் இன்றி பணம் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. முதலீட்டில் புதியவர்களை நம்புவதை தவிர்க்கவும்.
  • என்றாலும் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும். திடீர் நிதி ஆதாயங்கள்  ஏற்படும். செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும்.
  • சனி பகவான்பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும் என்று தன் சொல்ல வேண்டும்.
  • பொதுவாக சனி பெயர்ச்சி 2025 போது மிதுன ராசிகார்ர்களின்  தொழிலில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும்.

பரிகாரம்

  • சனிக்கிழமையன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தானம் செய்வதும், முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்வதும் நல்லது.
  • சனிக்கிழமைகளில் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும் செய்தால் கர்ம சனியின் சிரம்மங்கள் குறையும்
  • சனி காயத்ரீ மந்திரத்தை 108 உச்சரிப்பதால் சனி பகவானின் அருள் பெறலாம்.
  • சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்த்து, நாய்கள், பறவைகளுக்கு முக்கியாக காக்கைக்கு உணவு கொடுக்கலாம்.
  • மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நிதி நிலையில் உள்ள சிரமங்கள் குறையும்.
  • யோகா மற்றும் தியானம் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.