மீனம் ராசி குரு பெயர்ச்சி
பொது பலன்கள் 2024-25
- இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தனவாக்கு ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இரண்டாம் வீட்டில், சுப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு, இந்த ஆண்டு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்துக்கு செல்கிறார். அவர் சப்தம ஸ்தானம் (7ம் வீடு ), பாக்கிய ஸ்தானம் (9ம் வீடு ), லாப ஸ்தானம் (11ம் வீடு ) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
- ராசிக்கு உப ஜெய ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி நடப்பதால், ள் பல விஷயங்களில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும்.
- கோபத்தை குறைத்துக் கொண்டு, பொறுமையாக, நிதானமாக பேசுவதும் அவசியம்.
- சிறப்பாக செயல்பட்டாலும், எதிர்பார்க்கும் ஆதாயங்கள் கிடைப்பதில் தாமதமாக நடக்கும்.
- குடும்பத்தில் அமைதி நிலவும், பூர்வீக சொத்து சேரும், வரவு சீராக இருக்கும். அதேசமயம் தலைகனம் தவிர்ப்பது அவசியம்.
- அலுவலகத்தில் நன்மைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம்.
- பிறரைக் குறைகூறுவதும் கூடாது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம்.
- பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், பொறுமை முக்கியம்.
- வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வார்த்தையில் கவனம் இல்லை என்றாலும் ஒற்றுமை காணமல் போகும். கவனம் அவசியம் .
- வாரிசுகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். வரவு சீரானாலும் செலவுகளும் சேர்ந்து வரும்.
- வீண் ஆடம்பரம்வேண்டாம்.
- கடன் தருவது, பெறுவதில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம்.
- கடின முயற்சிகளின் முலம் வெற்றி உண்டாகும்.
- சிறு தூர பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும்
- எதிர்பார்க்கும் மாறுதல்கள் தாமதமாக கிடைத்தாலும், நல்ல பதவிகள், கௌரவமான பதவிகள் கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.
- பல வகையான நெருக்கடிகள் இருந்தாலும், குருவின் பார்வை நல்ல முடிவுகளைத் தரும்.
- அரசு வழி அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். அரசியலில் இருப்போர்க்கு தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்படும்.
- மாணவர்கள் எதிர்கால நன்மைக்கு இப்போதே உத்தரவாதம் கிட்டும்.
- அரசுப்பணி புரிவோர், திறமைக்கு ஏற்ப உயர்வுகள் கிட்டும்.
- பெண்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. கடன் வாங்கவோ, குடுக்கவோ வேண்டாம்
- பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் மாற்றங்கள் கிடைக்கும்.
- வேற்று மொழி தொடர்பு, கமிஷன், ஏஜென்சி, போன்ற வேலைகளில் இருப்பவர்கள் நல்ல லாபம் பெற முடியும்.
- வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்
- இந்த குரு பெயர்ச்சியால் புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும்.
- குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும்.
- கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.
- பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது
உத்திரட்டாதி
- இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் யோகம் உண்டு. மனநிம்மதி கிடைக்கும்.
- காரிய வெற்றி உண்டாகும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும்.
- மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும்.
- புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது.
- வியாபாரிகளுக்கு காரிய தடை ஏற்படலாம். கவனம் தேவை. காரியங்கள் தாமதப்படும் என்றாலும் காரிய அனுகூலம் உண்டு.
- எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும்.
- கூட்டுத் தொழில் லாபம் அடையும்.
- கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும்.
- வெளியூர் சென்றுவர நேரிடலாம்.
ரேவதி
- இந்த குரு பெயர்ச்சியால் மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும்.
- எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும்.
- அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.
- பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும் என்றாலும் சாதகமான பலன்கள் உண்டாகும்.
- தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும்.
- புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.
- உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.
- குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும்.
- குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு
பரிகாரம்
மாரியம்மனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்
சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை தரும்