Showing posts with label sathyam. Show all posts
Showing posts with label sathyam. Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - கும்பம்

கும்பம்  ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது நான்காம் இடத்திற்கு வருகிறார். அவர் அஷ்டம ஆயுள் ஸ்தானம் (8ம் வீடு ),தொழில் ஸ்தானம் (10ம் வீடு ), விரைய ஸ்தானம்(12ம் வீடு ) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • கடந்த காலத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். 
  • பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து வாங்கும் யோகம் சிலருக்கு அமையும். 
  • ஒரு சிலருக்கு சொத்து வாங்குவதில் இருந்து வந்த தடை விலகும். 
  • வாழ்க்கை மேம்படும். அம்மா வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். 
  • உடல்நலம் சீராகும், தொழிலமைப்பு ஏற்றம் பெறும். 
  • பணவரவு இருந்தாலும் செலவுகள் சேர்ந்து வரும். 
  • பணி செய்யும் இடத்தில்  பாராட்டுகள் கிடைக்கும். சிலருக்கு தொழில் நிரந்தரமாகி மகிழ்ச்சி சேர்க்கும். 
  • பல கால எதிர்பார்ப்புகளான ஊதியம், பதவி உயர்வு கிட்டும். 
  • திட்டம்  இடுதலும் , நேரம் தவறாமையும் உயர்வுகளை உறுதியாக்கும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். 
  • தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், பெரிய முயற்சிகள், முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 
  • அரசியலில் உள்ளவர்கள் அடக்கத்துடன் இருப்பதே நல்லது. 
  • அரசுப்பணி புரிபவர்கள் தொடர்ச்சியாக வளர்ச்சி உண்டு 
  • கலைஞர்கள், சினிமாத்துறையினர் கவனத்தை சிதற விட கூடாது.
  • பெண்களுக்கு பூர்வீக சொத்து சேரும். ஆனாலும் உடல் ரீதியான உபாதைகள் ஏற்படலாம் என்பதால் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை
  • பணிபுரியும் பெண்களுக்கு, வேலை பளு அதிகரித்து, சில நெருக்கடிகளும் ஏற்படலாம். இருப்பினும் உங்கள் கடின உழைப்புக்கு உரிய வெகுமதிகள் கிடைக்கும். 
  • வீட்டில் இருப்போரிடம்  விட்டுக் கொடுத்தல் முக்கியம். வார்த்தைகளில் கவனம் தேவை. உறவுகளால் சகாயம் உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். 
  • குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம். 
  • உடனிருப்போருடன் வீண் தர்க்கம் வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது.
  • குரு பெயர்ச்சியால் பெரிய பாதகங்கள் இல்லை என்றாலும்  இதர கிரகங்களின் சஞ்சாரம் மூலம் குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம்
  •  ஒற்றைத் தலைவலி, சுவாசக் கோளாறுகள், அடிவயிறு உபாதை, ரத்த அழுத்த மாற்றம் வரலாம்.

அவிட்டம் - 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் , இவர்கள் செய்த வேலைகளை  தாங்கள்  செய்ததாகக் கூறி, மற்றவர்கள் நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை. 
  • வியாபாரிகள் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவர்கள். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம். 
  • உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். . வெளியூர் பயணங்களால் லாபம் உண்டு. 
  • விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் படியான லாபத்துடன் கூடிய விற்பனை இருக்கும். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 
  • வேலையில் திருப்தி உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள்.

சதயம்

  • இந்த குரு பெயர்ச்சியால் எந்த காரியத்திலும் கவனம் தேவை. 
  • பெரியவர்களிடம் நற்பெயர் எடுப்பதால்  மகிழ்ச்சி உண்டாகும். 
  • மனம் தெளிவடையும்.  பணவரத்து அதிகரிக்கும். 
  • எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். எதிர்ப்புகள் விலகும். 
  • நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 
  • விரும்பிய காரியங்களை செய்வதுடன், அதற்கு நல்ல  சாதகமான பலன் கிடைக்கும் .
  • புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 
  • தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.
  • வியாபார போட்டிகள் குறையும். 
  • பழைய பாக்கிகள் வசூலாகும்.  
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.

பூரட்டாதி - 1, 2, 3 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். 
  • கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 
  • பிள்ளைகள்,  சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுபார்கள், அதனால்  சந்தோஷம் உண்டாகும். 
  • இடம், வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பார்கள். 
  • பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். 
  • ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டு  
  • வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்

விநாயகரை  வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். 
சனிக்கிழமை அன்று விநாயகருக்கு  தேங்காய் மாலை சாத்தி வழிபட உடல் ஆரோக்கியம் சிறப்பாகும்