சிம்ம ராசி குரு பெயர்ச்சி
பொது பலன்கள் 2024-25
- குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். அவரது விசேஷப் பார்வைகள் தனவாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம், ரண ருண ரோக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.
- இதனால் வாக்கு வன்மை அதிகரிக்கும். பூர்வீகப் பிரச்னைகள் தீரும்.தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்
- தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். மாற்றம் இல்லாதவர்களுக்கு செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும்.
- சிம்ம ராசிக்கு பத்தாம் இடத்தில் வரும் குரு பெயர்ச்சி வேலையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவார்.
- தொழில் காரகன் சனி களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.
- வேலை தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.
- அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் உயர்வு கட்டாயம் உண்டு . உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும்.
- அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள். வீட்டில் இன்சொல் பேசுவது அவசியம்
- ஆரோக்கியத்தில் படிப்படியான நிலையான முன்னேற்றம் இருக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும்.
- குருவின் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.
- அசையும் அசையா சொத்து சேரும். அத்துடன் செலவுகள் ஏற்படும். அதை சுப செலவுகளாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு உண்டாகும்
- சிலருக்கு வேலை தேடாமல் வேலை வாய்ப்பு கிடைக்கும் உண்டு, அதை ஏற்றுக் கொண்டால் அனுகூலமான பலன்களையே தரும்.
- வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத்தடைகள் நீங்கும்.
- அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.
- அரசாங்கப் பணிபுரிவோர் மேலான நன்மைகளைப் பெறுவர்.
- சினிமா, கலைத்துறையினர் வாய்ப்புகளை தொடர்ச்சியாக கிடைக்கும் .
- மாணவர்களுக்கு சோம்பலை தவீர்க்கவும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு சாதகமான வாய்ப்புகளும் கிடைக்கும்.
- வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது.
- சிம்ம ராசி பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சில விஷயங்களில் சோதனை காலமாக அமையும் ஆனால் அமைதியால் அதிக நன்மைகளைப் பெறலாம்.
- அவசியமில்லாத கடன் வாங்குவதை , கொடுப்பதை முடித்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது.
- மன அமைதியை கருத்தில் கொண்டு, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்
மகம்
- இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.
- பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பார்கள்.
- எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
- வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.
- கடிதப் போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கவலை குறையும்.
- சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
- நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும்.
- அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவார்கள். மனநிம்மதி உண்டாகும்.
பூரம்
- இந்த பெயர்ச்சியால் சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.
- நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
- வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.
- வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
- தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- பொதுவான விஷயங்களில் உங்கள் கருத்துக்களை மற்றவர்களால் ஏற்று கொள்ளப்படும் . வியாபாரப் போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.
உத்திரம் - 1 பாதம்
- இந்த குரு பெயர்ச்சியால் இவர்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.
- குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவார்கள்.
- அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும்.
- பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது மிகவும் நல்லது .
- எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும்.
- அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
- நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும்.
- கோபத்தால் சின்ன சின்ன சண்டைகள் ஏற்படலாம்.
- பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வருவது,
பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும், சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் திருவண்ணாமலை சுவாமி, அம்பாள் வழிபாடு ஆகியவை வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.