Showing posts with label மிருகசீரிஷம். Show all posts
Showing posts with label மிருகசீரிஷம். Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - சிம்மம்


 சிம்ம ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25


  • குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். அவரது விசேஷப் பார்வைகள் தனவாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம், ரண ருண ரோக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

  • இதனால்  வாக்கு வன்மை அதிகரிக்கும். பூர்வீகப் பிரச்னைகள் தீரும்.தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்

  • தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். மாற்றம் இல்லாதவர்களுக்கு செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும்.

  • சிம்ம ராசிக்கு பத்தாம் இடத்தில் வரும் குரு பெயர்ச்சி வேலையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். 

  • தொழில் காரகன் சனி களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

  • வேலை தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். 

  • அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் உயர்வு கட்டாயம் உண்டு . உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும். 

  • அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள். வீட்டில் இன்சொல் பேசுவது அவசியம் 

  • ஆரோக்கியத்தில் படிப்படியான நிலையான முன்னேற்றம் இருக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும்.

  • குருவின் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். 

  • அசையும் அசையா சொத்து சேரும். அத்துடன்  செலவுகள் ஏற்படும். அதை சுப செலவுகளாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு உண்டாகும் 

  • சிலருக்கு வேலை தேடாமல்  வேலை வாய்ப்பு கிடைக்கும் உண்டு, அதை ஏற்றுக் கொண்டால்  அனுகூலமான பலன்களையே  தரும். 

  • வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத்தடைகள் நீங்கும்.  

  • அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும். 

  • அரசாங்கப் பணிபுரிவோர் மேலான நன்மைகளைப் பெறுவர். 

  • சினிமா, கலைத்துறையினர் வாய்ப்புகளை தொடர்ச்சியாக கிடைக்கும் . 

  • மாணவர்களுக்கு சோம்பலை தவீர்க்கவும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு சாதகமான வாய்ப்புகளும்  கிடைக்கும்.

  • வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது.  

  • சிம்ம ராசி பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சில விஷயங்களில் சோதனை காலமாக அமையும் ஆனால்  அமைதியால் அதிக நன்மைகளைப் பெறலாம். 

  • அவசியமில்லாத கடன் வாங்குவதை , கொடுப்பதை முடித்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது.

  • மன அமைதியை கருத்தில் கொண்டு, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

மகம்

  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். 

  • பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். 

  • எதிலும் கவனமாக இருப்பது நல்லது. 

  • வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும்.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. 

  • கடிதப் போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கவலை குறையும். 

  • சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். 

  • நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். 

  • அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவார்கள். மனநிம்மதி உண்டாகும்.

பூரம்  

  • இந்த பெயர்ச்சியால் சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. 

  • நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

  • வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். 

  • வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

  • தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

  • பொதுவான விஷயங்களில்  உங்கள் கருத்துக்களை மற்றவர்களால் ஏற்று கொள்ளப்படும் . வியாபாரப் போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.

உத்திரம்  - 1 பாதம்

  • இந்த குரு பெயர்ச்சியால் இவர்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

  • குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவார்கள். 

  • அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். 

  • பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது மிகவும் நல்லது .

  • எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். 

  • அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். 

  • நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். 

  • கோபத்தால் சின்ன சின்ன  சண்டைகள் ஏற்படலாம். 

  • பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.


பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வருவது, பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும், சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் திருவண்ணாமலை சுவாமி, அம்பாள் வழிபாடு ஆகியவை  வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்

Full Video 





குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - கடகம்

கடக ராசி குரு பெயர்ச்சி 
பொது பலன்கள் 2024-25

  • இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் கடக ராசிக்கு பதினொன்றாம் இடத்துக்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 3, 5, 7ம்  இடங்களில் பதிகின்றன. 

  • இந்த அமைப்பினால் கடக ராசியின்  சகோதர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானங்கள் விசேஷ நன்மை பெறுகின்றன. 

  • இதனால், வீடு, வாகனம் சேரும், பழைய வழக்குகள் சுமுகமாகத் தீர்வாகும். 

  • தம்பதியரிடையே இருந்த விரிசல்கள் நீங்கும் என்றாலும் தேவையற்ற தர்க்கம் தவிர்ப்பது நல்லது. 

  • அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். மனம் விரும்பிய வேலை மாற்றம், பதவி உயர்வு, இடம் மாற்றம், ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும்

  • தொழில் வியாபாரம் பெரிய அளவு வளரும், நல்ல லாபம் ஈட்டுவார்கள். போட்டி பொறாமை விலகும்

  • குழந்தை பாக்கியம், திருமணம் கைகூடும். காரிய தடை நீங்கும்

  • பண வரவு, பொருளாதாரம் மேம்படும்

  • எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.

  • தொழிலில் உழைப்புக்கு ஏற்ற லாபத்தை அடைய முடியும்

  • வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரும்.  பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம்

  • யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். 

  • அரசியலில் இருப்பவர்கள் அடக்கத்தால் அதீத நன்மை பெறலாம். பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். 

  • அரசாங்கத் துறையில் உள்ளோர் மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். 

  • பெண்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும், யோகமான பலன்கள் கிடைக்கும். மேலும்  குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

  • மாணவர்கள் மறதியை விரட்ட, கவனத்துடன்  படியுங்கள்.  

  • சினிமா, கலைத்துறையினர் முயற்சிகளால் முன்னேற்றம் காணலாம். 

  • யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். 

  • அஷ்டம சனியின் தாக்கம்  இருக்கும் எனவே எல்லா விஷயங்களில் பொறுமை தேவை. பயணத்தில் உடைமைகள் பத்திரம்.

  • அஜீரணம், தூக்கமின்மை,அலர்ஜி, தலைவலி உபாதைகள் வரலாம்.

புனர்பூசம் 4ம் பாதம்

  • இந்த குரு பெயர்ச்சியால் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவார்கள். 

  • பயணம் செல்ல நேரலாம். மனதுக்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். 

  • பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். 

  • ஆனாலும் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் அதிக கவனம் தேவை. 

  • கவனத்துடன் செயல்படுவது  பதவி உயர்வு மற்றும் செயலில்  வெற்றி ஆகியவை  தேடி வரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வருவதோடு சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். 

  • மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.


பூசம்

  • இந்த குரு பெயர்ச்சி தொழில் செய்பவர்களின் தங்களின் ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் அவசியம். கவனத்துடன் செயல்பட்டால் லாபம் உண்டாகும். 

  • மேலும் கடின உழைப்பு  வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவலை தேவை எல்லை கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

  • சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். 

  • உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். 

  • மனதைரியத்தால் வெற்றி காண முடியும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். 

  • விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வார்கள். கடன் பிரச்சினை குறையும். 

  • வீண் அலைச்சல் மற்றும்  பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும், சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெற்று வெற்றியும் காண்வார்கள்


ஆயில்யம் 

  • இந்த பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவார்கள். வீண் செலவை இவர்களே உண்டாக்குவார். 

  • வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். 

  • பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். 

  • ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 

  • தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.

  • புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். 

  • உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். 

  • உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.


பரிகாரம் 

அம்மன் வழிபாடு, மற்றும்  புற்று அம்மன் கோவிலுக்கு சென்று வேப்பிலை சாற்றி வழிபட  எல்லா துன்பங்களும் நீங்குவதோடு எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்

Full Video


 


குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மிதுனம்

 


மிதுன ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • விரைய ஸ்தானத்திற்கு வரப்போகும் குருவால்  சில சோதனைகள் நடந்தாலும் நன்மைகளும் அதிகம் நடைபெறும்.

  • வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும், புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

  • குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றி கொள்ள வேண்டும் 

  • விரைய ஸ்தானத்திற்கு வரப்போகும் குரு, இந்த அமைப்பில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 4,6,8ம் இடங்களை பார்க்கறார். 

  • இதனால் முன்னேற்றத் தடைகள் நீங்கும், மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அதேசமயம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

  • அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். 

  • எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்று கொள்ளங்கள். நல்லதே நடக்கும்.

  • பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது 

  • வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். 

  • கடன் தருவது, பெறுவதை மிக கவனம் தேவை. சீனிமாத்துறையினர் வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள். 

  • பெண்கள் சமையலறையில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம். 

  • அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். 

  • தொழிலமைப்பில் லாபம் சீராகும்,பணிபுரியும் யாரிடமும் வீண் தகராறு வேண்டாம்.

  • தொழிலில், வியாபாரம் தொய்வின்றி செல்லும், பெயரும், புகழும் கிடைக்கும் 

  • அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே நல்லது. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு.

  • அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்கு  சீரான நன்மைகளை கிடைக்கும்.

  • முதலிட்டில் கவனம் தேவை, உழைப்பு கான பலன் உடனடியாக கிடைக்காது 

  • தூக்கம் பாதிக்கும், உடல் நலனில் அக்கரை தேவை 

  • மாணவர்கள் நன்கு படித்து , அவர்களின் மதிப்பெண் உயரும்.

  • கலைஞர்கள், சிறிய பயணத்தில்  கவனம் தேவை .

  • காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம்.

மிருகசீரிஷம்  3,4 ம் பாதங்கள்

மிருகசீரிஷம் 3,4 ம் பாதங்களில்  பிறந்த   மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

  • சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும்.

  • பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். 

  • விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வார்கள். 

  • உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவார்கள்.

  • உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பார்கள்.
  

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த   மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

  • தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.

  • பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

  • எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

  • மனதிருப்தியுடன் செயலாற்றுவார்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். 

  • கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
  •   

புனர்பூசம்  1,2,3 ம் பாதங்கள்

புனர்பூசம்  1,2,3 ம் பாதங்களில்  பிறந்த   மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • இந்த குரு பெயர்ச்சியால் பாராட்டு கிடைக்கும். ஆனாலும் மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். 

  • ஆன்மீக நாட்டமும், மன தைரியமும்  உற்சாகத்தைக் கொடுக்கும்.

  • தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவார்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். 

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.

  • புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

  • குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். 


பரிகாரம் 

புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மதுரை மீனாட்சி,  விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.


Full Video 



செவ்வாய்




கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :-செவ்வாய்

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

செவ்வாய்


செவ்வாய் (அங்காரகன்) சில குறிப்புகள் :

1. நட்சத்திரங்கள் : மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
2. மொத்த திசை இருப்பு : 7 வருடம்
3. தானியம் : துவரை
4. புஷ்பம் : சண்பகம்
5. நிறம் : சிவப்பு
6. ஜாதி : க்ஷத்திரிய ஜாதி
7. வடிவம் : குள்ளமானவர்
8. உடல் உறுப்பு : கை,தோள்
9. உலோகம் : செம்பு
10. மொழி : தெலுங்கு, தமிழ்
11. ரத்தினம் : பவளம்
12. வஸ்திரம் : நல்ல சிவப்பு (பவள நிறம் )
13 தூப தீபம் : குங்கிலியம்
14 வாகனம் : செம்போத்து (அன்னம்), சேவல்
15 மறைவு ஸ்தானம் (சிறப்பு விதி) : லக்கனத்திற்கு 8, 12 ஆகும்
16. சமித்து : கருங்காலி
17. சுவை : உறைப்பு
18 பஞ்பூதம் : பிருதிவிக் கிரகம்
19 நாடி : பித்த நாடி
20. திசை: தெற்கு
21. அதிதேவதை : முருகர்
22 சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 மாதம்
23. தன்மை : சர கிரகம்
24 குணம் : ராஜசம்
25 ஆட்சி : மேஷம், விருச்சிகம் , உச்சம் : மகரம் , நீசம் : கடகம் , மூல திரிகோணம் : மேஷம்
26 நட்பு வீடுகள்: சிம்மம், தனுசு, மீனம்
27 பகை வீடுகள்: மிதுனம், கன்னி
28 பார்வை : 4, 7 , 8 (4 , 8 விசேஷப் பார்வைகள் )
29 பலன் தரும் காலம் : ஆரம்ப காலம்
30. மாத்ருகாரகன் : ப்ராத்ருகாரகன் (சகோதர காரகன்)
31. தத்துவம் : ஆண் கிரகம்


லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் (Rahu in First house) :

மேலும் படிக்க ...