குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - கன்னி

கன்னி ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • குரு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.அதாவது  ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார். தனது 5, 7, 9 பார்வையாக  1, 3, 5 ஆகிய இடங்களை பார்க்கறார்.

  • இதனால் கடந்த பல மாதங்களாக ஏற்பட்ட மனக்குழப்பம், வீண் விரையம், அலைச்சல், தடைகள், பொருளாதார நெருக்கடி, உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். கன்னி ராசியினருக்கு ஜென்ம ராசியின் மீது குரு பகவானின் பார்வை விழுவது பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்கும். 

  • ரத்தபந்தங்களிடையே உங்கள் மதிப்பு உயரும், சுபகாரியத் தடைகள் நீங்கும். தொட்டவை துலங்கும். 

  • அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி, பொறுப்புகள் மனம்போல் கைகூடும். 

  • வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடிவரும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும்.

  • குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். 

  • அசையும் அசையா சொத்து சேரும். பழைய கடன்கள் பைசல் ஆகும்.

  • பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு சாதகமான சூழல் நிலவும்

  • சிறிய முயற்சி கூட மிக பெரிய அளவுக்கு பலன் தரும்

  • திருமணம் கைகூடும்.குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். 

  • செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். புதிய முயற்சிகள் ஏற்றத்தைத் தரும். 

  • அரசுவழிப் பாராட்டுகள் சிலருக்குக் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். 

  • உயரதிகாரிகளால் பாராட்டுகள் கிடைக்கும். அரசுப்பணியில் உள்ளவர்கள் நன்மைகள் அதிகரிக்கப் பெறுவார்கள். 

  • கலைஞர்கள், சினிமாத்துறையினர் கணிசமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். 

  • ஆரோக்கியம் மேம்பட்டும். ஆனாலும் சிலருக்கு ஹார்மோன் குறைபாடுகள்  வர வாய்ப்பு கவனம் தேவை .

  • தலை, முதுகு, கழிவு உறுப்பு, ரத்தத் தொற்று உபாதைகள் வரலாம்.

  • வாகனத்தை வேகமாக ஓட்டுவதை தவிர்க்கவும்.

  • உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.

  • கூட்டு தொழிலில், கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதேபோல, உறவினர்கள் இடையே ஏற்படும் பிரச்சனைகளை அனுசரித்து செல்வது பல விதங்களில் நன்மை தரும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள் 

  • இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். 

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். 

  • குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். 

  • கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவார்கள். 

  • உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.


அஸ்தம்

  • இந்த பெயர்ச்சியால் திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது மனநிம்மதி  தரும். 
  • அதிக முயற்சிசெய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் சிறந்த வாய்ப்புகள் கைகூடும்
  •  கவுரவம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். 
  • சகவியாபாரிகளுடன் ஒத்துப் போவார்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழி கிடைக்கும். 
  • உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.


சித்திரை - 1, 2 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் வீட்டை விட்டு வெளியே தங்கும் சூழல் வரலாம் . 

  • பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் . கடின உழைப்பும், புத்திசாதூர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். 

  • அதே போல் நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. என்றாலும்  சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள். 

  • சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மேலும்  பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். 

  • எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லாகாரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.


பரிகாரம்

அருகிலிருக்கும் ஐயப்பன்  சென்று வணங்குவதால்  சிக்கலான பிரச்சினைகள் தீரும். மேலும் நரசிம்மர் வழிபாடு , பைரவர் வழிபாடு நன்மைகள் தரும் 

Full Video