Showing posts with label உத்திரம். Show all posts
Showing posts with label உத்திரம். Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - கன்னி

கன்னி ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • குரு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.அதாவது  ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார். தனது 5, 7, 9 பார்வையாக  1, 3, 5 ஆகிய இடங்களை பார்க்கறார்.

  • இதனால் கடந்த பல மாதங்களாக ஏற்பட்ட மனக்குழப்பம், வீண் விரையம், அலைச்சல், தடைகள், பொருளாதார நெருக்கடி, உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். கன்னி ராசியினருக்கு ஜென்ம ராசியின் மீது குரு பகவானின் பார்வை விழுவது பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்கும். 

  • ரத்தபந்தங்களிடையே உங்கள் மதிப்பு உயரும், சுபகாரியத் தடைகள் நீங்கும். தொட்டவை துலங்கும். 

  • அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி, பொறுப்புகள் மனம்போல் கைகூடும். 

  • வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடிவரும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும்.

  • குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். 

  • அசையும் அசையா சொத்து சேரும். பழைய கடன்கள் பைசல் ஆகும்.

  • பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு சாதகமான சூழல் நிலவும்

  • சிறிய முயற்சி கூட மிக பெரிய அளவுக்கு பலன் தரும்

  • திருமணம் கைகூடும்.குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். 

  • செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். புதிய முயற்சிகள் ஏற்றத்தைத் தரும். 

  • அரசுவழிப் பாராட்டுகள் சிலருக்குக் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். 

  • உயரதிகாரிகளால் பாராட்டுகள் கிடைக்கும். அரசுப்பணியில் உள்ளவர்கள் நன்மைகள் அதிகரிக்கப் பெறுவார்கள். 

  • கலைஞர்கள், சினிமாத்துறையினர் கணிசமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். 

  • ஆரோக்கியம் மேம்பட்டும். ஆனாலும் சிலருக்கு ஹார்மோன் குறைபாடுகள்  வர வாய்ப்பு கவனம் தேவை .

  • தலை, முதுகு, கழிவு உறுப்பு, ரத்தத் தொற்று உபாதைகள் வரலாம்.

  • வாகனத்தை வேகமாக ஓட்டுவதை தவிர்க்கவும்.

  • உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.

  • கூட்டு தொழிலில், கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதேபோல, உறவினர்கள் இடையே ஏற்படும் பிரச்சனைகளை அனுசரித்து செல்வது பல விதங்களில் நன்மை தரும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள் 

  • இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். 

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். 

  • குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். 

  • கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவார்கள். 

  • உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.


அஸ்தம்

  • இந்த பெயர்ச்சியால் திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது மனநிம்மதி  தரும். 
  • அதிக முயற்சிசெய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் சிறந்த வாய்ப்புகள் கைகூடும்
  •  கவுரவம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். 
  • சகவியாபாரிகளுடன் ஒத்துப் போவார்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழி கிடைக்கும். 
  • உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.


சித்திரை - 1, 2 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் வீட்டை விட்டு வெளியே தங்கும் சூழல் வரலாம் . 

  • பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் . கடின உழைப்பும், புத்திசாதூர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். 

  • அதே போல் நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. என்றாலும்  சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள். 

  • சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மேலும்  பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். 

  • எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லாகாரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.


பரிகாரம்

அருகிலிருக்கும் ஐயப்பன்  சென்று வணங்குவதால்  சிக்கலான பிரச்சினைகள் தீரும். மேலும் நரசிம்மர் வழிபாடு , பைரவர் வழிபாடு நன்மைகள் தரும் 

Full Video



கன்னி லக்கினத்தின் பொது பலன்கள்

   




சில ஜோதிட நூல்கள் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் யோகம் என்பர்

கன்னி லக்கினம்- சுப சேர்க்கை

  • சில ஜோதிட நூல்கள் சுக்கிரன் துதியாதிபதியாகினும் கொல்லான் மேலும் சனி கொல்லவர் என்பர் 
  • வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் சித்திரை நட்சத்திரத்தில் வயிற்றில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது 
  • கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். (சனி கொல்லவான்  என்றும் சொல்லப்படுகிறது.)
  • புதன் மிகப் பெரிய யோகத்தை தருவார்.
  • எந்த தசை நடந்தாலும் அதில் வரும் சனி புக்தியோல், அந்தராத்தால் நல்ல பலன்களை அடையலாம் 
  • குரு, செவ்வாய், சந்திரன், சூரியன் மற்றும் கேதுவின் தசா வாழ்நாளில் வராமல் இருப்பது நல்லது.
  • குரு லாபாதிபதி சந்திரனுடன் சம்மந்தம் பெறும் பொழுது அசையும்-அசையா சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண வாழ்க்கையை தரும் மேலும் திருமண வாழ்வில் பாதகத்தையும், மாரகத்தையும் செய்ய தவறுவதில்லை.

பொது பலன்கள் 

  • அடக்கமானவன், தர்மவான், திறமைசாலி, ஆசாரமுடையவன், பிறால் தொழில் பெற்றவன், சனப்பிரியன், பின் வயதில் அதிக தனம் சம்பாத்தியமுடையவன், மனோவஞ்சகன், நன்மையையும், தீமையும் செய்ப்பவன்சிம்மம் என்ற உடன் அவற்றின் சின்னம் சிங்கம் என்பதால், இவர்கள் பேசுவது கனீர் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும். இந்த லக்னகாரர்கள் காடு மலை  சுற்றுவது மற்றும் தனிமை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். 
  • நிலையில்லாத தன்மை கொண்டவர்கள், ரகசிய மிக்கவர்.நிறையபேர் நோய்ப் பாதிப்பு இருக்கும், தோல் பிரச்னை இருக்கும், ஆரோக்கியத்தில் ஒருவித நடுக்கம் இருக்கும், பயம் இவர்களை துரத்தும்
  • கன்னி சின்னம்: ஒரு கன்னி பெண் கையில் விளக்கும் மற்றொரு கையில் நெற்கதிர் கொண்ட ஏந்தி இருப்பார்கள். கன்னியின் தன்மையும், ஒழுக்கமும், பொறுமையும் இவர்கள் உள்ளார்ந்து இருக்கும்.
  • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருப்பதுபோல் இவர்களின் குணம் மாறுபடும் . 
  • இவர்களின் மத்திய பருவத்தை விட குழந்தை பருவம் அதிக மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஆனாலும் வாழ்வின் மத்திய பகுதியில் இவர்கள் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களை காண்பார்கள். இதனால் நல்ல பேரும், புகழும் பெற்று விளங்குவார்கள். 
  • இவர்கள் மனதில் இருக்கும் விஷயங்களை பிறர் அறிந்து கொள்வது கடினம். நெருக்கமானவர்களிடம் மட்டுமே சகஜமாக பேசி பழகுவார்கள். 
  • உருண்டையான முகமும், நன்கு வடித்தெடுத்தாற் போன்ற உடற்கட்டும் அமைந்திருக்கும். மேலும் இந்த லக்கினகாரர்ர்கள் பலர் சிவந்த மேனியும், கறுமையான கண்களும் கேசமும் கொண்டு இருப்பார்கள். மிகவும் சுறுசுறுப்பானவர் லட்சியாவதியாகவும் இருப்பார்கள்
  • சற்று அடக்கமாகவே இருப்பார்கள். எதிலும் திறமைசாலிகளாக இருப்பார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இருக்கும். 
  • இவர்களது சாதுர்ய பேச்சால் நிறைய நண்பர்கள் கிடைக்க பெறுவார்கள். மெத்த படித்திருந்தாலும் மற்றவர்கள் தம்மை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் இருக்கும்.
  • அதிபதியாக புதன்  வருவதால் சென்சிடிவாக இருப்பதால் சட்டென்று முகம் காட்டுவார்கள். சின்னச் சின்ன அவமானங்களை பாசிட்டிவ்வாக மாற்றிக் கொள்வார்கள். 
  • ஏதோ சாதித்த உணர்வில் திரிந்து கொண்டிருப்பது தான் மிகப் பெரிய பலவீனம். பத்து படி மேலே ஏறினால் கொஞ்சம் தலை கிறுகிறுக்கும். அப்போதெல்லாம், ஜெயித்தவர்களின் வாழ்க்கையைப் பார்த்து அமைதியாக வேண்டும். 
  • பார்ப்பதற்கு மென்மையானவர் போல இருந்தாலும், அடிஆழத்தில் கனன்று கொண்டிருக்கும் ஒரு எரிமலையையே வைத்திருப்பார்கள். 
  • சிறிய உதவி செய்தால் கூட வாழ்வின் இறுதி வரையில் நினைவில் வைத்திருந்து சந்தர்ப்பம் பார்த்து கைமாறு செய்வார்கள் 
  • இவர்கள் பிறந்த பிறகு உங்கள் தந்தைக்கு சற்று வளர்ச்சி குறைவு ஏற்படும்.
  • வாழ்கையில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் கிடைக்கும் அதனால் சட்ட சிக்கல் வரும்.
  • இளமையான நபர்கள், புத்தி தந்திரம் உள்ளவர்கள், சமயோசித புத்தி உள்ளவர்கள்
  • புலிபாணி ஜோதிடம்- பாடல் - 27

    கன்னி லக்கினம்

    பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு

    பவுமனுமே திரிகோண மேறிநிற்க

    சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி

    சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு

    வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க

    வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்

    கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே

    கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே


    பொருள்:

    இப்பாடலில் கன்னி லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

    “கன்னி லக்னகாரர்களுக்கு குரு துன்பத்தை தருவார். என்றும் ஆனால் குருவும் சந்திரனும் திரிகோணத்தில் இருந்தால் மிகவும் நல்லது என்று சொல்கிறார் “


     விளக்கம்:

    கன்னியா லக்கினத்தில் உதித்த பேருக்கு குருவினால் வெகு துன்பம் வாய்த்திடும் உண்மையாகும். எவ்வாறெனில் பூர்வீக சொத்துகளும், நிலமும் சேதமாகும் என்பது உண்மையே, ஆனால் குருவும் மதியும் திரிகோண ஸ்தானத்தில் அமைவதில் பலனுண்டா? என நினைப்பின் எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ? எனினும் திருமகள் கணவனான திருமாலும் அவனது திருவான தேவியும் அவன் மனையில் வாழ்வார். அவர் தம் மனையில் தெய்வம் வாழும். எனவே இதனால் குற்றமில்லை என்பதை போகரது மாணாக்கனான புலிப்பாணி ஆகிய நான் இதைக் குறித்துச் சொன்னேன்.


    திருமண வாழ்க்கை

    • இவர்களிடம் பேச்சை விட செயலில் அதிக வேகம் இருக்கும். இவர்கள் கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடமும் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்டவர்களாக இருப்பார்கள்
    • கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்.
    • எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராக இருப்பார்.
    • பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் மிகுந்த யோகம் என்பது வந்து சேரும்.
    • பிறரை எடை போடுதல் குறைத்து கொண்டு (acceptance) ஏற்று  கொள்ளும் பழக்கத்தை பழகி கொள்ள வேண்டும். அதாவது படித்து புரிந்து கொண்டு படிப்பும் மனிதர்களும் ஒன்று அல்ல. மற்றவர்களை பற்றி  judgement செய்வதை குறைத்து கொண்டால் திருமண வாழ்வு சிறக்கும்
    • கன்னி லக்கினக்காரருக்கு மீன ராசி ஏழாமிடமாக வரும். திருமணம் ஏதோ ஒரு நிபந்தனையின் பேரில் அல்லது முக்கிய காரணத்தால் நடைபெறும். தெய்வானுகூலத்தால் தான் திருமண வாழ்வு நடந்து வரும். ஏதோ ஒருவித சிறுசிறு கவலைகள் இருவருக்குள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

    தொழில்

    • கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ம் அதிபதி புதன் பகவானாவார். லக்னாதிபதி புதன் பகவானே ஜீவனாதிபதியாகவும் இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் இவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 
    • சமயப் பணிகளில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். கடவுள் சம்பந்தமான பணிகளில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். 
    • அயல் நாடுகளுக்கு செல்லும் யோகம் இவர்களில் பல பேருக்கு உண்டு. 
    • இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பதிலும், பலவற்றைக் கற்பதிலும், மிகுந்த விருப்பம் இருக்கும்.
    • பெரும்பாலும் பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்களே
    • சுக்கிரனும், குருவும் நல்ல ஸ்தான பலத்தில் இருந்தால் கூட்டுத் தொழில், விவசாயம், ஏற்றுமதி இறக்குமதி, பல் தொழில் வித்தகர்களாக திகழ்வார்கள்.
    •  ஹீலிங் அல்லது மருத்துவத்தில் ஆர்வம் இருக்கும்.
    • புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று வலுப்பெற்றிருந்தால் கலை, இலக்கியம், சங்கீத துறையில் புகழ் பெறும் அமைப்பு உண்டாகும்.
    • சனி, புதன் சேர்க்கை பெற்று வலு இழந்திருந்தால் அடிமைத்தொழில் அமைப்பு, சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். 
    • கன்னி லக்னத்தில்  பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் முடிந்தவரை கூட்டு சேர்ந்து தொழில் செய்வதை தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதும், பிறரை சார்ந்து உத்தியோகம் செய்வதும் நல்லது
    • இந்த ஜாதகர்கள் நிறைய பேருக்கு விவசாயம் மற்றும்  ஆசிரியராக இருப்பார்கள்.
    • சொந்த தொழில் ஆர்வம் உண்டு. கூட்டு தொழில் வீழ்ச்சி உண்டு நண்பர்கள் மூலம் ஏமாற்றம் இருக்கும்
    • களத்திரம் வந்த பிறகு தொழில் மாற்றம் இருக்கும் வருமானம் படிப்படியாக உயரும்
    • உங்களுக்கு ரியல் எஸ்டேட் வாகனம் படிப்பு கற்று தருதல் மூலம் லாபம் கிடைக்கும் ஆனாலும்  கூட்டு தொழில் செய்தால் பாதிப்பு உப தொழில் ஆக செய்தால் லாபம் உண்டு.
    • உங்களுக்கு லாபம் எப்போதும் வெளி நபர்கள் மூலம் அல்லது வெளி மாநில நபர்கள் மூலம் கிடைக்கும்
    • இந்த  இலக்கினகாரர்கள் பெரும்பாலும் அறிவு சார்ந்த பணிகளிலேயே தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவார்கள்.
    • புதன், சுக்கிரன், சனி போன்ற நட்பு கிரக சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் சொந்தத்தொழில் செய்யும் யோகம், வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் அற்புத நிலை உண்டாகும்.
    • சனி, புதன் சேர்க்கை பெற்று வலு இழந்திருந்தால் அடிமைத்தொழில் அமைப்பு, சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

    கிரகங்கள்  

    சூரியன் :  கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் 12ம் அதிபதியாக விளங்குவதால் விரையம், அலைச்சல், பயணம் போன்ற கெடுபலனை தன் தசாவில்/புத்தியில் தருபவராக உள்ளார். இதனால் சூரியன் ஆட்சி அல்லது உச்சம் பெறுவது நல்லது அல்ல.

    சந்திரன் : 11ம் வீட்டுக்கு உரியவர். ஆனால் அவர் திசை நன்மையை தர மாட்டார்.  நீச சந்திரன் நல்லது என்று சில நூல்கள் மட்டும் சொல்கிறது.

    புதன் : இவர்  லக்கினாதிபதி  மற்றும் 10 க்கு உடையவர். எனவே யோகமானவர். பொதுவாக உடும்புப் பிடிபோல புதனின் அடிப்படை குணங்கள் இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் 

    செவ்வாய்: செவ்வாய் 3 , 8 உரியவர். யோகமில்லாதவர் மட்டும் இல்லை மாராகதிபதியும் ஆவார். முடிந்த வரை செவ்வாய் கிரகத்தால் கன்னி லக்கினகர்களுக்கு பிரச்னை ஏற்படும் 

    குரு: குரு 4, 7 க்கு உரியவர். புதன் குருக்கு பகை ஆகும். குரு நல்லவர் அல்ல. இந்த லக்கனக்காரர்களுக்கு ஒரு சிலருக்கு திருமண வாழ்க்கை  பாதிப்பு உண்டாக்குவார். குருவின் சுப பார்வை மட்டும் நன்மை தரும்.

    சுக்கிரன்: சுக்கிரன் 2, 9-கும் உரியவர். மிகவும் யோகமானவர். 2க்கு உரியவர் என்றாலும் காட்டாயம் கொல்ல மாட்டார். மிகுந்த நன்மை தருவார்
    சனி: சனி என்பவர் 5, 6கும் உரியவராக இருந்து நன்மை அளிப்பார். சிலருக்கு மாரகதிபதியும் ஆகிறார். 

    சூட்சுமங்கள்  

    • இவர்களுக்கு சுக்கிரன் யோகாரரே.
    • கன்னி லக்கின என்றால் சனி பகவான் சுக்கிர பகவான் இருவரும் நன்மைகள் அதிகம் செய்வார்கள். (5,9 அதிபதி என்பதால் )
    • கன்னி லக்னத்துக்கு லக்னம், மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது, பத்து, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்கும் கிரங்கல் நன்மைகளைச் செய்வார்
    •  11, 12 -ம் வீட்டில் இருக்கும் கேது அந்த வீட்டு அதிபதிகளான சூரிய, சந்திரர்களின் நிலையைப் பொறுத்து தனது தசை, புக்திகளில் ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூரமான இடங்களுக்கு அனுப்பி வைப்பார்.
    • செவ்வாய் மாராகதிபதி என்றாலும் சனியும் கொல்லவார் என்று சில நுல்கள் கூறுகின்றன
    • இவர்களுக்கு சுக்கிரன் யோகாரரே.
    • கன்னி லக்கின என்றால் சனி பகவான் சுக்கிர பகவான் இருவரும் நன்மைகள் அதிகம் செய்வார்கள். (5,9 அதிபதி என்பதால் )
    • கன்னி லக்னத்துக்கு லக்னம், மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது, பத்து, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்கும் கிரங்கல் நன்மைகளைச் செய்வார்
    •  11, 12 -ம் வீட்டில் இருக்கும் கேது அந்த வீட்டு அதிபதிகளான சூரிய, சந்திரர்களின் நிலையைப் பொறுத்து தனது தசை, புக்திகளில் ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூரமான இடங்களுக்கு அனுப்பி வைப்பார்.
    • செவ்வாய் மாராகதிபதி என்றாலும் சனியும் கொல்லவார் என்று சில நுல்கள் கூறுகின்றன

    தசா பலன்கள் - சூரியன் 

      கன்னி  லக்னத்திற்கு அதிபதி புதன்.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
      • கன்னி லக்கினத்திற்கு 12வீடு சிம்மம்.  ஆனால் சூரியன் சமமானவர். நல்ல ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருக்கும் பட்சம் நல்ல  பொருட் சேர்க்கை உண்டு. சந்திரன் யோகாரர் இல்லை மேலும் பகைவர் என்றாலும் சந்திர தசையில் 
      • வெளி நாடு, மாநிலம் அல்லது வெளி இடங்களில் படிப்புக்ககவோ அல்லது வேலை விஷயமாகவோ தங்க வேண்டி வரும். வெளி நாட்டுக்கு செல்ல எண்ணம் உள்ளவர்கள் இப்போது முயற்சி செய்யலாம்  
      • திருமணத்திற்கு காத்து இருப்பவருக்கு திருமணம் நடக்கும். மேலும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இருந்தால் தற்சமயம் முயற்சி செய்யும் பச்சத்தில் அது நல்லபடி முடியும். தொழில் சிறப்பாக இருக்கும். 
      • செலவுகள் அதிகரிக்கும். அதனால் டென்சன் உண்டாகும். சுபர் பார்வை சேர்க்கை இருக்கும் பட்சத்தில் அது சுப செலவாகவும் இருக்கும் 
      • குழந்தைகள் சார்ந்த விசயம் மற்றும் காதல் சார்ந்த விஷயம் மிகுந்த டென்சன் தரும். மண நிம்மதி இதனால் இழக்க நேரிடும். கலைஞர்க்கு  இது சிறப்பான தசை இல்லை  
    • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

     தசா பலன்கள் - சந்திரன் 

    கன்னி  லக்னத்திற்கு அதிபதி புதன். சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்.
    • கன்னி லக்கினக்காரர்களுக்கு கடகம்  11 ம் இடம் என்பதால் சந்திரன் லாபாதிபதி என்பதால் சந்திர தசை சாதகமான பலன் தரும் எனலாம். சந்திரன் புதனுக்கு பகை என்றாலும் யோகமில்லதவர் என்றாலும் சந்திர தசையில் நல்ல பலனே தருவார் 
    • சந்திரன் 12ம் வீட்டில் இருந்தாலும் 12ம் அதிபதி சேர்க்கையோ தொடர்போ உண்டாகி இருந்தால் வெளியூர், வெளிநாடு பயணம், பயணமும் அதன் சார்ந்த விஷயங்கள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும்.
    • சந்திரன் நீசம் பெற்றோ, பகை பெற்றோ அமையப் பெற்று திசை நடைபெற்றாலும் சர்ப கிரகமும் என வர்ணிக்கப்படும் ராகு கேது சேர்க்கை பெற்று அமையப் பெற்று திசை நடைபெற்றாலும் மன குழப்பம், ஜல தொடர்புள்ள நோய்கள், பொருளாதார நெருக்கடி, தைரியம் இல்லாத நிலை உண்டாகும்.
    • வயதுக்கு ஏற்றவாறு முன்னேற்றம் உண்டாகும். திருமண வயது உள்ளாவருக்கு திருமணம் உண்டாகும் சூழல் அமையும். 
    • சந்திரன் சுபருடன் தொடர்பில் இருந்தால் மட்டும் நல்லது நடக்கும். இல்லை என்றால் குழப்பத்துடன் நல்ல விசயங்க்கள் நடக்கும் வாய்ப்பு உண்டாகும்.
    • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

    தசா பலன்கள் -  செவ்வாய் 


    சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும். 

    • கன்னி  லக்னத்திற்கு அதிபதி புதன். செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • செவ்வாய் 3 மற்றும் 8 க்கு உரியவர். நட்பு கிரகம். மேலும் அவர் மாரகதிபதி. செவ்வாய் புதன் பகை கிரகம். எனவே இந்த திசை நல்ல திசை கிடையாது 
    • மனைவி மற்றும் தாயார் வழியில் பிரச்சனைகள் தருவதாகவும் பொருளாதாரத்தில் இழப்பை  ஏற்படுத்துவதாகவும் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் முன்னேற்றம் உண்டாகும்
    • கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். கோபத்தினால் சில பிரச்சனைகளை வந்து போகும். வம்பு வழக்கு வர வாய்ப்பு அதிகம் 
    • கணவன்-மனைவியரிடையே அந்நியோன்னியம் சற்று குறைவாகவே இருக்கும் 
    • கன்னி  லக்கினகாரர்களுக்கு செவ்வாய் திசை வரமல் இருப்பது மிகவும் நல்லது. ஆனாலும் முதல் 3 வருடங்கள் சுமாரான  நல்ல பலன்களை தரவார் .
    • செவ்வாய் நன்றாக இருந்து சுப்பர் பார்த்தால் திடீர் அதிஷ்டம் உண்டாகும். சிலருக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு உண்டாகும்
    •  கட்டுபடுத்த வேண்டும். கோபத்தினால் சில பிரச்சனைகளை வந்து போகும்.
    • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
    தசா பலன்கள் -  புதன் 
      கன்னி  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

      • புதன்  கன்னி லக்கினத்திற்கு லக்கினதிபதியும்,10க்கு உடையவராக இருப்பதால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், உயர்வான அதிகாரம் பெற்று வாழம் அமைப்பு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு, புதுமையான வீடு, ஆடை ஆபரண கேர்க்கை போன்ற நற்பலன்கள் உண்டாகும் 
      • லக்கினாதிபதி என்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். புகழ் உண்டாகும். ஆற்றல், செய்திறன் மேம்படும். 
      • 10க்கு உடையவராக இருப்பதால் வேலை அல்லது தொழிலுக்கு முயற்சி செய்பவர்கள் நல்ல வேலை அல்லது தொழில் அமையும். நல்ல வேலை அல்லது தொழிலில் இருபவர்களுக்கு மேலும் முன்னேற்றம் கிடைக்கும் 
      • புத்தி, அறிவு மேம்படும். உடல் உழைப்பு விட முளை உழைப்பு உள்ள தொழில் இருப்பவர்கள் மேம்படுவார்கள் 
      • ஆனால் புதன் தீய கிரகத்துடன் சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் நல்லது நடக்கும் என்று சொல்ல முடியாது
      • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

       தசா பலன்கள் -  குரு  


        கன்னி லக்னத்திற்கு அதிபதி புதன். குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

        • இவர்  4 மற்றும் 7 க்கு உரியவர். குரு பகை கிரகம்.  பொதுவாக கன்னி லக்கினகாரர்களுக்கு குரு தசை அவ்வளவு சிறப்பாக இருக்காது. கட்டாயம் யோக பலனைத் தரமாட்டார். எனினும் குரு முழு சுப கிரகம் என்பதால் நல்ல பலன்களைத் தராவிட்டாலும், பெரியளவில் எந்த ஒரு கெடு பலனையும் தரமாட்டார்
        • கன்னி லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு குரு மறைதல் மிகவும் நல்லது. மேலும் லக்கினாதிபதி அல்லது யோக கிரகத்தின் பார்வை பெறும் போது குரு தசையின் பாதிப்பு குறையும் 
        • தொழிலுக்காக கடன் வாங்கும் சூழல் வரும். விரயம் இருப்பதால் கவனத்துடன் கையாள வேண்டும் .
        • விரயம், கடன் ஏற்படும். முத்த சகோதர சார்ந்த விசயங்களில் நல்லது நடக்கும். வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை வராது. ஆனால் கடன் வாங்கி செலவு சூழல் வரும்
        • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

        தசா பலன்கள் - சுக்கிரன்  

          கன்னி  லக்னத்திற்கு அதிபதி புதன். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
          • சுக்கிரன் 2 மற்றும் 9 க்கும் அதிபதி ஆவார். மிகவும் யோகமான தசை ஆகும் 
          • இந்த லக்னக்காரர்களுக்குச் சுக்கிரதசை வரும்போது, கலைகளில் ஆர்வம் இருக்கும். 
          • தன ஸ்தானத்துக்கும் பாக்கிய ஸ்தானத்துக்கும் அதிபதியாகிறார். வரவு - செலவு மிகவும் அதிகமாக இருக்கும்.
          • எல்லோரும் இவரைப் புகழ்வார்கள். ஆனால், அதற்கான தகுதி இவர்களுக்குப் பெரிதாக இருக்காது. 
          • ஏதேனும் புதிய வருமான ஆதாரத்தை உயர்த்த முயற்சித்திருந்தால், இப்போது சாதகமான பலன் கிடைக்கும். இந்த வருமானம்  நிதி நிலையை பலப்படுத்தும்.
          • விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சுப பயணம் மேற்கொள்வார்கள்.
          • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் - சனி 

            கன்னி லக்னத்திற்கு அதிபதி புதன்.  சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்.
            • கன்னி  லக்னத்திற்கு சனி 5, 6, க்கு உரியவர். சமமானவர். நல்லது அதிகமாக நடக்கும். திடீர் அதிஷ்டம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. 
            • கன்னி லக்னத்திற்கு  20 வயதை ஒட்டி சனி திசை நடந்து , அடுத்து லக்னாதிபதி திசை,  யோகாதிபதியான சுக்கிர திசை அடுத்தடுத்து வரும் பொழுது வாழ்வில் உன்னத நிலைக்கு ஓட்டிச் செல்லும். 
            • ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சுகபோக வாழ்க்கை, பகைவரை வெல்லும் ஆற்றல், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகள், வெளியூர் பயணங்களால் சம்பாதிக்கும் யோகம், போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்
            • சனி பலமாக இருந்தால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் மேன்மை, அரசு வழியில் அனுகூலம், வண்டி வாகனம் அசையா சொத்துக்கள் சேரும் யோகம், நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
            • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  ராகு  

              கன்னி லக்னத்திற்கு அதிபதி புதன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • சூரியனுக்கு சந்திரனுக்கு  ராகு பகை. அந்த வகையில் பார்த்தால் ராகு திசை நல்ல திசை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 
              • வேற்று நாடு, மாநிலம் செல்ல நேரிடலாம். அத்தகைய மக்கள் தொடர்பு கிடைக்கும்.
              • திடீர் அதிஷ்டம் அடிக்கும் எனவே ஆசைகள் அதிகமாகும். இது நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆசையை குறைத்து கொள்ள வேண்டும் 
              • சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் பல கருத்து வேறுபாடுகள் வந்து நிம்மதியை கெடுக்கும். ஆனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள இருக்கும். அதனால் செலவும் உண்டு. 
              • கலைஞர்களுக்கு சிறப்பாக இருக்கும். இளைய சகோதரத்துவம் சிறப்பாக இருக்கும் 
              • குழந்தைகளால் தொல்லை இருக்கும். எந்த வயது குழந்தையைக் இருந்தாலும் அவர்களால் நிம்மதி குறையும் 
              • தொழிலில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டு.
              • இந்த திசை நடக்கும் போது எந்த கெட்ட பழக்கத்தையும் பழக வேண்டாம். பல பிரச்சனைகளை பார்க்க நேரிடும். இழப்பும் உண்டாகும்.
              • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              தசா பலன்கள் -  கேது  

                கன்னி லக்னத்திற்கு அதிபதி புதன். கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                • புதனுக்கு  கேது  நட்பு . இவர்களுக்கு கேது திசை மிக நல்ல திசை இல்லை . கன்னி லக்ன காரர்களுக்கு சுமாரான பலன்களையே செய்வார்
                • கன்னி லக்னத்துக்கு லக்னம், மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது, பத்து, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்கும் இவர் நன்மைகளைச் செய்வார்.
                •  11, 12 -ம் வீட்டில் இருக்கும் கேது அந்த வீட்டு அதிபதிகளான சூரிய, சந்திரர்களின் நிலையைப் பொறுத்து தனது தசை, புக்திகளில் ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூரமான இடங்களுக்கு அனுப்பி வைப்பார். 
                • செவ்வாய் போல் கேது என்பதன் அடிப்படையில் கன்னி  லக்னத்துக்கு செவ்வாய் அட்டமாதிபதியாக விளங்குவதால் கேது சுபபலனைத் தர இயலாதவராக உள்ளார். 
                • சில நூல்களில்  மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு இடங்களில் இருக்கும் ராகு நன்மைகளைச் செய்வார் என்றும் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு பாவங்களில் இருக்கும் கேது நன்மைகளைச் செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                கன்னி லக்கினம்  – நட்சத்திரம் 


                கன்னி லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது கன்னி லக்கின பலன்கள்  பார்ப்போம்.
                இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 

                கன்னி லக்கினம்  – உத்திரம் 2, 3, 4ம்  பாதம்   

                உத்திரம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  புதன், சூரியன் தாக்கத்துடன் இருப்பார்.

                உத்தரத்தின் அதிபதி சூரியன் ஆவார்.இந்த உத்திரம் நட்சத்திரத்தில் 2,3,4 ம் பாதத்தில் லக்கினம் அமைந்திருப்பவர்கள் நேர்மை மிக்கவர்கள், பலவானாகவும்,   வறியவன், உடலில் எதாவது குறைபாடு இருக்கும், குற்றமுடன் உள்ளம் அலைபாயும், கல்வி சிறந்தவன், முன்கோபியாகவும் இருப்பார்கள், எந்தவித எதிர்பார்ப்பும்  இல்லாமல் மற்றவருக்கு உதவுவார்கள், பெண் மீது அன்பு கொண்டவன், சுத்தமற்றவன், உற்றார் உறவினரிடம் பாசம் இருக்கும், ரகசியம் இருக்கும், பெருஞ்சுயநலவாதி,  பேசுவதில் நேர்மை தெரியும், அதிர்ஷ்டசாலி, நன்றி மறக்கமாட்டார், யாரையாவது சார்ந்து இருப்பான், பேசுவதில் குதர்க்கம் தெரியும்

                கன்னி லக்கினம்  – அஸ்தம் 

                அஸ்தம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  புதன், சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.

                இந்த நட்சத்திரம் உடைபடாத நட்சத்திரம். சந்திரன் அதிபதி. இந்த நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்திருப்பவர்கள் அறியப் பண்பு மிக்கவர், இதமாகப் பேசுவார்கள்,  உத்தமர், அன்னை அரவணைப்பு குறைவாக இருக்கும், தெளிந்தவன், கலைகளை ரசிப்பவன், அதிகம் பேசுவான், கூச்ச சுபாவம், அமைதி மிக்கவர், விட்டுக்கொடுத்து  வாழ்வார்கள், வியாதி இருந்துகொண்டு இருக்கும், பகையுணர்ச்சி கொண்டவர், சூதுவாது கொண்டவன், வியாபாரி, தர்மவான், உண்மையானவன், புகழுடையவன், எந்த சண்டையிலும் சேரமாட்டார்கள், சந்தோஷமாக இருப்பான், அறநெறியானவன்.

                கன்னி லக்கினம்  – சித்திரை 1, 2   

                சித்திரை  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சந்திரன், புதன் தாக்கத்தில்  இருப்பார்.

                சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆவார். இந்த சித்திரை நட்சத்திரத்தில் 1,2 ம் பாதத்தில் லக்கனம் அமைந்திருப்பவர்கள் விரிவாக பேசும் தன்மை  கொண்டவன், தவம் பிடிக்கும், சமூக விரோத செயல்களைச் செய்வார், சிலருக்கு வறுமையில் இருப்பார்கள், நெடிந்துயரம் தோற்றம், மனம் ஒரு ஓட்டம் கொண்டது,  கண்ணில் குறைபாடு ஏற்படும், அலைந்து திரிபவன், ஒப்பற்ற பேச்சாளி, உடலை கவனமாகப் பார்த்துக்கொள்வான், அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் ஆர்வம் மிக்கவர்,  பிடிவாதம் இருக்கும்.மேற்கொண்ட அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும். இவற்றில் எந்தெந்த கிரகம் சேர்க்கை பார்வை பெற்றிருக்கிறது என்று பார்க்கவேண்டும். ஜாதகருக்கு அவரவர் ஜாதக  கட்டமும் தசை புத்தியும் கன்னி லக்கினத்திற்கு ஏற்ப கிரகங்களால் நல்லது கெட்டதும் என்று அதற்கேற்ப அதற்குரிய கிரகங்கள் ஆட்சி, உச்சம், மறைவு பெற்றால்  நன்மைகள் கிட்டும்.


                மந்திரம் 

                கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய கோவிந்தன் துதி மனதார சொல்லி வருவது நல்லது 


                ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,
                வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,
                தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
                மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.
                செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,
                நெடியானே ! வேங்கடவா ! நின்கோயி லின்வாசல்
                அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
                படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !
                 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



                சிம்ம லக்கினத்தின் பொது பலன்கள்

                  





                சில ஜோதிட நூல்கள் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் யோகம் என்பர்

                 சிம்மம் லக்கினம்- சுப சேர்க்கை


                          • குரு + சூரியன்
                          • செவ்வாய் + சுக்கிரன்  (சில நூல்கள் கூறுகின்றன) 
                          • சூரியனை குரு பார்த்தல் 
                          • குருவை  சூரியன் பார்த்தல் 
                  • சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் இருந்தால் நல்லது. 
                  • சூரியனின் மகன் சனி. இருவர்க்கும் ஆகாது. பகை. மேலும் சனி மரகத்தையோ , அதற்கு ஒப்பான கண்டதையோ தனது திசையில் தருவார். 
                  • புதன், சுக்கிரன், ராகு, கேது மறைந்தால் நல்லது. சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும் 

                  பொது பலன்கள் 


                  • கம்பிரமானவன், நல்ல பசியுடையவன், திட புத்தியுள்ளவன், பக்தியுடையவன், கபடி, வசியமுடையவன், கோபமுடையவன், தைரியவான் 
                  • சிம்மம் என்ற உடன் அவற்றின் சின்னம் சிங்கம் என்பதால், இவர்கள் பேசுவது கனீர் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும். இந்த லக்னகாரர்கள் காடு மலை  சுற்றுவது மற்றும் தனிமை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். 
                  • சிங்கம்  சின்னம்: பெயருக்கேற்ப பல சமயங்களில் மற்றவர்களுக்கு சிம்ம ஸ்வரூபமாகவே விளங்குவார்கள். 
                  • தலைமை பண்பு, உயரிய மதிப்பு மிக்க இடத்தை விரும்புவார்கள். கலங்காத இதயத்தை கொண்டவர்கள்.
                  • பிறரை அலட்சியமாக எண்ணுபவர்கள். அதே வேளையில் பொது நேர்மையை வாழ்வில் கொள்வார்கள்.
                  • பொதுவாக எதிலும் தலைவணங்கி கால் பிடித்து முன்னேற இயலாது இவர்களுக்கு.
                  • நாலு பேர்கள் சபையில் மதிக்க வேண்டும் என்பதற்காக வேண்டியாவது சில உதவிகளை செய்வதுண்டு. தனியாக கேட்டால் உதவி செய்யாவிடினும் சபையில் கேட்டால் முடியாது என மறுக்க மாட்டார்கள்.
                  • எந்த நிலையில் இருந்தாலும் தனக்கு கீழ் ஒரு சிறிய கூட்டத்தை கட்டமைத்து இருப்பார்கள். கட்டிட தொழிலாளி நிலை ஆயினும் குறைந்த பட்சம் மேஸ்திரி ரேஞ்சுக்கு இருக்க முனைவார்கள்.
                  • மனைவிக்கு முழுமைமாக கட்டுபட்டவர்கள் இந்த லக்னகாரர்கள் .மனைவியின் அன்பிற்கு அடங்கி போவதில் பெரும் விருப்பம் கொள்வார்கள்.
                  • பெற்றோர்களில் யாராவது ஒருவரின் அன்பே இவர்களுக்கு முழுமையாக கிடைக்கும்.சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும்.பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திட புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் முன் கோபியாகவும் இருப்பார்கள் 
                  • சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் வசதி வாய்புகளுடன் நன்றாக வாழ்வார்கள்.
                  • இவர்களிடம் கோபமும், பிடிவாத குணமும் அதிகம் இருக்கும். அதுவே இவர்களின் பலமும், பலவீனமும் ஆகும். 
                  • இவர்கள் கவர்ச்சியான மற்றும் எடுப்பான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
                  • கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர்கள். எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையாக நடக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்.
                  • சிம்ம லக்னத்தில் பிறந்த நீங்கள், உணர்ச்சிவசப்பட மாட்டார்கள் . வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக எடுத்துக் கொள்வார்கள்.
                  • சில சமயங்களில் சில்லறைத்தனமாகவும் நடந்து கொள்வார்கள். இது இவர்களின் பெரிய  பலவீனமாகம் ஆகும் 

                  புலிபாணி ஜோதிடம்- பாடல் - 26

                  சிம்ம லக்கினம்

                  பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு

                  பவுமனுமே திரிகோண மேறிநிற்க

                  சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி

                  சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு

                  வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க

                  வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்

                  கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே

                  கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே


                  பொருள்:

                  இப்பாடலில் சிம்ம லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

                  “சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் திரிகோணம் எனப்படும் 1, 5,7 யில் இருந்தால் மட்டும் மிக நல்ல பலனை தருவார் என்றும் மற்ற ஸ்தானங்களில் இருந்தால் துன்பம் ஏற்படும் தன் குருவான போக மகா முனிவரின் பேரருளால் கூறுகிறது.“

                   விளக்கம்:

                  சிம்மத்தில் பிறந்த அதாவது சிம்ம லக்கின ஜாதகருக்கு செவ்வாய் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும்: செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும். இவையும் சிவப்பரம்பொருளின் பேரருளே ஆகும். ஆனால் அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும். எனது சற்குருவாகிய போக மகாமுனிவரின் பேரருளால் கூறினேன். இக்குறிப்பினை அறிந்து ஜாதகனுக்குப் பலன் கூறுவாயாக.

                  குறிப்பு:

                  செவ்வாயுடன் சனி கூடினால் பாதக தன்மை அதிகமாக தருவார். கம்பீரமானவர், நல்ல பசி உடையவர், திட புத்தியுள்ளவர், பக்தியுடையவர், கபடி, ஜன வசியம் உடையவர், கோபம் உடையவர், தைரியமானவர். 

                  சில ஜோதிட நூல்கள் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் யோகம் என்று கூறுகிறது 


                  திருமண வாழ்க்கை

                  • 6, 7க்குடையவர்  சனி. 7 – ஆம் அதிபதி உச்சமாகியிருந்தால் வரும் வாழ்க்கைத் துணையால்  பேரும் புகழும் கிடைக்கும்.
                  • மனைவிக்கு முழுமைமாக கட்டுபட்டவர்கள் இந்த லக்னகாரர்கள். மனைவியின் அன்பிற்கு அடங்கி போவதில் பெரும் விருப்பம் கொள்வார்கள்.
                  • சிம்ம லக்ன ஆண்கள் வீட்டில் மனைவி ராஜ்ஜியம் எனில் சிம்ம லக்ன பெண்கள் வீட்டில் கணவன் அதிகாரம் கிடையாது.அதே வேளையில் கணவன் மீது பிணைப்பு , ஈர்ப்பு உண்டுதான்.
                  • திருமணம் நடந்த பிறகு தந்தை அல்லது மைத்துனர் ஒரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
                  • வாழ்க்கை துணைக்கு கோவம் அதிகம் இருக்கும் மேலும் அவர்கள் அவர்களின் இளைய உடன்பிறப்புக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்
                  • சிலர் திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார். 
                  • வாழ்க்கைத் துணை கடும் உழைப்பாளிகள் இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
                  • வாழ்க்கைத் துணை வாய் மூடி மௌனியாக வெளிப்படையாகப் பேசாத அழுத்தம் கொண்டவராக இருப்பார்.

                  தொழில்


                  • சிம்ம லக்னத்திற்கு தனக்காரகன்  அதாவது ஜீவனாதிபதி சுக்கிரன் கலை காரகன் என்பதாலும், சுக்கிரனே 3ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.
                  • மற்ற லக்னகாரர்களை விட இவர்களுக்கு அமானுஷ்ய சக்தி எளிதாக கிட்டும். குறி சொல்லுதல், சாமியாடிகள் போன்ற ஆத்ம தொடர்புள்ள அமைப்புகள் சிம்மத்திற்கு உண்டு. 
                  • வர்த்தகம் , அரசு துறை அரசு சார்ந்த பிற ஆதாயத்துறை, நேரடி கள அரசியல் என இவை அனைத்திலும் விருப்பம் உள்ளவர்கள்.
                  • பாடல், இசை, சொற்பொழிவு, ஆன்மீகம் இவற்றில் விருப்பம் உண்டு.
                  • பத்தாம் அதிபதியாக சுக்கிரன் பலமாக இருந்து புதன், குரு, சனி மூவரும் ஆகிய கிரகங்களின் யோக அம்சங்கள் சேரும் போது வியாபாரம், கூட்டுத் தொழில் லாபகரமாக அமையும்.
                  • அரசு சம்பந்தப்பட்ட துறை, பெருந்தன்மை குணம், கௌரவமான  பதவிகள், அறிவாற்றல், பேச்சாற்றல், நேரம் தவறாதவர்கள், எழுத்தாற்றல் ஆகியவை சம்மந்தப்பட்ட தொழில் செய்யவார்கள்.
                  • லக்னாதிபதி சூரியன் 10ம் வீட்டில் பலம் பெற்று செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்
                  • செவ்வாய் பலமாக அமைந்திருந்தால் நல்ல நிர்வாகியாக பணிபுரிந்து எந்தத் துறையில் செயல்பட்டாலும், அதில் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக விளங்க முடியும். 
                  •  சுக்கிரன் மறைவு ஸ்தானங்களிலிருந்தாலோ சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் இருந்தாலோ உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும்
                  • சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று பகை வீடுகளில் அமைந்தால் நிலையான ஜீவனம் இல்லாமல அடிமைத் தொழில் செய்யக்கூடிய அமைப்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
                  • உங்களுக்கு சுய முயற்சி மூலம் உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகம் எவ்வளவு சிறப்பாக செய்தாலும் அதில் உங்கள் பெயர் எப்போதும் பாதிப்பு இருக்கும்
                  • ரகசியமாக பணம் உதவி அல்லது உத்தியோகம் பெற பணம் கொடுத்தால் அது பிரச்சனை ஆகி விடும்
                  • இவர்களை பொறுத்தவரை படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது
                  • சற்று முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப் போவது கடினமாகும். தொழில் எதிரிகளால் பிரச்சனை உண்டாகும்

                  கிரகங்கள்  

                  சூரியன் : லக்கினாதிபதியாகிய சூரியன் கண்டிப்பாக வலுத்திருக்க வேண்டும். நீசம் பெறின் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி தவிப்பார்கள் 

                  சந்திரன் : 12ம் வீட்டுக்கு உரியவர். ஆனாலும் நட்பு கிரகம் தான். ஆனாலும் மனோகாரகன் சந்திரன் விரய ஸ்தானாதிபதி ஆவதால் அவர் 3, 6, 8ல் மறைதல் நலம்

                  புதன் : இவர்  2 மற்றும் 11 க்கு உடையவர். யோகமில்லாதவர். ஆனாலும் 8வீட்டில்  அமர்ந்து நீசபங்கம் பெறுதல் சிறப்பு. அப்போது மட்டும் நல்லது செய்வார். மற்ற இடங்களில் இருந்தால் புதன் திசையில் மாராகத்திற்கு ஒப்பான கண்டம் கொடுப்பார்.

                  செவ்வாய்: செவ்வாய் 4, 9 உரியவர். யோககாரரே. ஆனால் ஸ்திர லக்கினத்திற்கு  9ம் வீட்டு அதிபதி  பாதகாதிபதி. எனினும் செவ்வாய்  சிம்மத்திற்கு பாதகம் செய்வதில்லை பதிலாக நன்மையே  செய்வார்

                  குரு: குரு 5, 8 க்கு உரியவர். மற்றும் யோகதிபதி ஆவார். ஆனாலும் முழு நன்மை  தரமுடியாது இவர் சுக்கிரனோடு சேர்ந்தால் மரணத்திற்கு நிகரான துன்பத்தை அவரின் தசா புத்திகளில் தருவார்

                  சுக்கிரன்: சுக்கிரன் 3, 10-கும் உரியவர். சுகத்தையும் லாபதிபதியாகவும் செயல்படுவர் இருந்தாலும் சுக்கிரன் தன் தசா புத்திக்காலங்களில் பாதகத்தை செய்வார்

                  சனி: சனி 6, 7, க்கு உடையவர். பகை ஆவரர். தசா புத்திக்காலங்களில் மாரகத்திற்கு சமமான பாதகத்தை தருவார்கள். சிலருக்கு மராகத்தையும் தர வல்லவர். 

                  சூட்சுமங்கள்  


                  • இவர்களுக்கு குரு 5 மற்றும் 8 உடையவர் என்றாலும் குரு யோகாரரே.
                  • ராகு கேதுவைத் தவிர மற்ற கிரகங்களை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.ராகு மற்றும் கேதுக்களிடம் சூரியன் தன்னுடைய வலிமையை இழக்கும். 
                  • சூரியனுடன் சனி, ராகு, கேது சேர்ந்தால் நல்லது அல்ல.
                  • செவ்வாய் யோகாரரே. ஆனாலும் அவர் திரிகோணத்தில் இருந்தால் மட்டுமே நல்லது செய்வவார். மற்ற இடங்களில் இருந்தால் துன்பத்தை கொடுக்கவும் தயங்க மாட்டார்
                  • சனி பகை கிரகம் என்றாலும் ஆறுக்குடையவர் என்ற வகையில்  சனி உச்சம் பெற்றால் நல்லதே நடக்கும்.

                  தசா பலன்கள் - சூரியன் 

                  சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன்.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                  • லக்கினாதிபதி சூரியன் என்பதால் நல்லதே நடக்கும். ஆனால் சூரியன் கெடக் கூடாது.
                  • சுபச்செயல்கள் கைகூடும். பொருட்சேர்க்கை உண்டாகும்.
                  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
                  • புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.மனதில் புதுவிதமான லட்சியம் உண்டாகும்.
                  • அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
                  • தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.வெளியூர்
                  • தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும். 
                  • சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் அந்தஸ்தையும் வெற்றியையும் பெறும் வாய்ப்பு வரும். 
                  • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

                   தசா பலன்கள் - சந்திரன் 

                  சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                  • சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்னாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திர திசையில் அடையலாம். 
                  • சந்திரன் பலம் பெற்று இருந்தால் நல்ல மன வலிமை, தைரியம் துணிவு உண்டாகும். 
                  • சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும், வளர்பிறைச் சந்திரனாக இருந்து 2, 11 ஆகிய ஸ்தானங்களில் அமைந்திருந்தாலும், நட்பு கிரக சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தாலும், அரசாங்க வழியில் அனுகூலம், பெயர், புகழ் உயர கூடிய அமைப்பு, திருமண சுப காரியங்கள் நடைபெறும் யோகம், சிறப்பான புத்திர பாக்கியம் அமையும் வாய்ப்பு, பூமி, மனை, வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகும்..
                  • சந்திரன் கெட்டு இருக்கும் பட்சத்திம் பண விரயங்கள், மனக்குழப்பங்கள், எதிலும் தெளிவாக செயல்பட முடியாத நிலை, மனதில் துக்கம், கவலை போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
                  • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                  தசா பலன்கள் -  செவ்வாய் 


                  சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 

                  • செவ்வாய் 4 மற்றும் 9 க்கு உரியவர். நட்பு கிரகம். மேலும் சிம்மம் ஸ்திர வீடு. 9 க்கு உரியவர்பாதகாதிபதி ஆனாலும் நன்மையே செய்வார் 
                  • சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயமே  யோக காலம் ஆகும்.
                  • பதவி உயர்வு, சொகுசு வாகனம் வாங்குதல் போன்றவை  இந்த திசையில் எளிதில் கை கூடும். 
                  • பொதுவாக செவ்வாய் பலமிழந்து அமையப் பெற்று திசை நடைபெற்றால் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு, வீண் வம்பு வழக்குகள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். 
                  • பொதுவாக இந்த திசை காலத்தில் உறவினர்களிடம் பிரச்சனை உண்டாகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன்னென்றால் செவ்வாய் பாதகதிபதியும் ஆவார்.
                  • கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். கோபத்தினால் சில பிரச்சனைகளை வந்து போகும்.
                  • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
                  தசா பலன்கள் -  புதன் 
                    சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

                    • புதன்  சிம்ம லக்னத்திற்கு 2,11க்கு உடையவராக இருப்பதால் வருமானம், குடும்பம், வாக்கு, வித்தை போன்றவற்றையும், லாபத்தையும் தந்தாலும் புதன் இரண்டில் உச்சம் பெற்று அமர்ந்து இருந்து அவருக்கு புதன் தசா நடைபெற்றால் அவர் தன் வாழ்க்கைத் துணையை இழக்க நேரிடும் . 
                    • 10ல்  புதன் பலம் பெறும் போது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்திரிகைத் துறை, புத்தக பதிப்பு, சொந்தமாக தொழில் இருப்பவர்கள் நல்ல நிலையும், சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
                    • யோகம் இல்லாதவராகினும் புதன் திசையில் சிம்ம லக்கினகாரருக்கு நன்மையே செய்வார் என்பது தான் உண்மை
                    • பேச்சியால் லாபம் உண்டு. எந்த முயற்சியிலும் வெற்றி உண்டு. முத்த சகோதரத்வம் சிறப்பாக இருக்கும் 
                    • இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு திருமணம் நடைப்பெறும்.
                    • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                     தசா பலன்கள் -  குரு  


                      சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 

                      • இவர்  5 மற்றும் 8 க்கு உரியவர். குரு நட்பு கிரகம்.  மேலும் இவர் யோகாரார்கள் ஆவார் 
                      • சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயமே  யோக காலம் ஆகும்.
                      • எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும் 
                      • உத்தியோகத்தில் இடமாற்றம் சாதகமாக அமையும்.
                      • திருமணத்திற்கு காத்து கொண்டு இருபவருக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் எதிர் பார்ப்பவருக்கு குழந்தை பாக்கியமும் கிட்டும். வயதுக்கு ஏற்ற நல்லது நடக்கும்.
                      •  தந்தை, தந்தைவழியில் நன்மை கிடைக்கும். 
                      • திரிகோண ஸ்தான 5ஆம் வீட்டிற்கும், மறைவு ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாவதால் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே குரு திசையில் முதலில் 60% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 40% தீமையான பலன்களும் தரவல்லார்.
                      • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                      தசா பலன்கள் - சுக்கிரன்  

                        சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                        • சுக்கிரன் 3 மற்றும் 10 க்கும் அதிபதி ஆவார்.  சூரியனுக்கு சுக்கிரன் பகை தன்மை வரும் ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய சிம்ம லக்னத்திற்கு 3,8ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும், எனவே மாரகாதிபதி தன்மையும் பெறுவதால் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் சுக்கிரனே 
                        • காமம் சார்ந்த விசயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வியாதி, வழக்கு போன்றவை வரும் 
                        • யாருக்கும் கடன் தர வேண்டாம். தாய் மாமன் , வேலையில் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும். உல்லாசம்  என்ற பெயரில் உடலையும் , பெயரையும் கெடுத்து கொள்ள வேண்டாம் 
                        • சுக்கிரன் வலிமையாகத் தனியாக இருக்கும் அமைப்பில் முழுமையாக நன்மைகளைத் தர மாட்டார். இதுபோன்ற அமைப்பில் தனது வீடு, வாகனம், காம சுகம் போன்ற காரகத்துவங்களைக் கொடுத்து கெடுப்பார்.
                        • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                        தசா பலன்கள் - சனி 

                          சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                          • சிம்ம லக்னத்திற்கு சனி 6,  7 க்கு உரியவர். மேலும் நல்லவர் கிடையாது. இவரே மராகாதிபதியும் ஆவார்.
                          • சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் சனி தசை அல்லது புத்தி சிம்ம சொப்பனமாகத் தான் இருக்கும்.
                          • சனி ஏழாம் வீட்டிற்கு அதிபதி என்பதால் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் போது சசமகா யோகத்தை தருகிறார். சச மகா யோகம் பெற்றிருப்பவர்கள் சனி தசை நடக்கும்போது  தலைமை பதவியை சனி தருவார். 
                          •  சனி தனது திசையில் 30% நன்மையான பலன்களும் 70% தீமையான பலன்களையும் தரவல்லார் என்றாலும் திருமண வாழ்க்கை தீர்மானிப்பவர் அவரே.
                          •  சனி தசையின் பொது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.  திருமண போன்ற சுப காரியங்கள் கைகூடும்
                          • சூரியன் பலமாக இருந்தால் அரசு வழியில் அதிகாரமிக்க பதவிகளை பெறும் அமைப்பு, ஆடை, ஆபரண சேர்க்கை, தந்தைவழியில் சிறப்பு, உறவினர்களால் உதவி, எடுக்கும் காரியங்களில் வெற்றி, உடல்நிலையில் மேன்மை, தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் உண்டாகும்.
                          • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                          தசா பலன்கள் -  ராகு  

                            சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                            • சூரியனுக்கு சந்திரனுக்கு  ராகு பகை. அந்த வகையில் பார்த்தால் ராகு திசை நல்ல திசை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 
                            • வேற்று நாடு, மாநிலம் செல்ல நேரிடலாம். அத்தகைய மக்கள் தொடர்பு கிடைக்கும்.
                            • திடீர் அதிஷ்டம் அடிக்கும் எனவே ஆசைகள் அதிகமாகும். இது நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆசையை குறைத்து கொள்ள வேண்டும் 
                            • சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் பல கருத்து வேறுபாடுகள் வந்து நிம்மதியை கெடுக்கும். ஆனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள இருக்கும். அதனால் செலவும் உண்டு. 
                            • கலைஞர்களுக்கு சிறப்பாக இருக்கும். இளைய சகோதரத்துவம் சிறப்பாக இருக்கும் 
                            • குழந்தைகளால் தொல்லை இருக்கும். எந்த வயது குழந்தையைக் இருந்தாலும் அவர்களால் நிம்மதி குறையும் 
                            • தொழிலில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டு.
                            • இந்த திசை நடக்கும் போது எந்த கெட்ட பழக்கத்தையும் பழக வேண்டாம். பல பிரச்சனைகளை பார்க்க நேரிடும். இழப்பும் உண்டாகும்.
                            • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                            தசா பலன்கள் -  கேது  

                              சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                              • சூரியனுக்கு  கேது  பகை. இவர்களுக்கு கேது திசை நல்ல திசை இல்லை . 
                              • கேது திசை வரும் போது சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் கேது கெடுதல் செய்வதில்லை. சுப வீடுகளில் கேது இருக்கும் போது வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் நன்மை மட்டும்  செய்வார்.
                              • கலகங்கள், பிரச்சனைகள், பண பிரச்சனைகள், உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஜாதக படி துறவறம் போகும் அமைப்பு இருக்கும் பட்சத்தில் இந்த திசை துறவறம் ஏற்பார்கள் 
                              • வேலையில் மாற்றம், வீடு மாற்றம், மன மாற்றம் என சிறிய மாற்றங்களை கேது ஏற்படுத்துவார்.
                              • கேது நீச்ச ராசியான ரிஷபத்தில் இருந்தால், இந்த திசையில் கெட்ட எண்ணம், கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்களை தேடி கொள்வார்கள்
                              • குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருக்கவும். 
                              • கேது இருக்கும் வீட்டு அதிபதி உச்சம், ஆட்சி பெற்றால் மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பாக இருக்கும் 
                              • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                              சிம்மம் லக்கினம்  – நட்சத்திரம் 


                              சிம்ம  லக்கினத்தில்  உள்ள நட்சத்திரங்கள் மகம், பூரம், உத்திரம் 1 பாதம்    ஆகியவை அடங்கும். இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
                              அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம் 

                              சிம்மம் லக்கினம்  – மகம்   

                              மகம் நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன் , கேது   தாக்கத்துடன் இருப்பார்.

                              மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள் என்பது உண்மை தான். இது கேது நட்சத்திரம். அவர்களுக்கு என்று ஒரு வரைமுறை வைத்திருப்பார்கள். இந்த  நட்சத்திரத்தில் லக்கினம் அமையப்பெற்றால் நற்பண்பாளர்கள், மனைவி சொல்வதை கேட்பார்கள், சிந்தித்து செயலில் இறங்குவான், மனக்கவலை இருக்கும், எந்நேரம் வியாதி  உடலில் இருக்கும், பரிசுத்தமானவர்கள், சாந்தசொரூபன், அதிக ஆசைகொண்டவன், தீயால் வடு உள்ளவன், களிப்புடையவன், செந்நிற அல்லது தங்க நிற விழியுடையவன், நெஞ்சழுத்தம் கொண்டவன், தோல் வியாதி கொஞ்சம் துன்பப்படுவதும், பேசுவதில் இனிமையிருக்கும், மற்றவர்கள் பார்க்கும் பொழுது கொஞ்சம் பயங்கரமாக இருப்பார்கள்,  ஆற்றல் மிக்கவர்கள், கொஞ்சம் கபட புத்தி இருக்கும்

                              சிம்மம் லக்கினம்  – பூரம்   

                              பூரம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன் , சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.

                              இது ஒரு சுக்கிரன் நட்சத்திரம். இந்த நட்சத்திர சாரத்தில் லக்கனம் கொண்டு பிறப்பவர்கள் பலரால் அறியப்படுபவனாயிருப்பான், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், வீரன்,  வாணிகன், மதுர வார்த்தை பேசுபவன், பொன் பொருள் ஆசை இருக்கும், விவசாயி, பண்பாளன், குடியானவன், கோபக்காரன், ஒழுக்க வெறிகொண்டவன், சிறிய இல்லத்தில்  வசிப்பவன், சதா நீர்வேட்கை இருக்கும், வடு உடலில் இருக்கும், ரகசியம் மனதில் தங்காது, அதி உன்னதமானவன், நன்மைகள் பெறுபவன், பிறரை இகழ்வான், தெய்வ  வழிபாடு குறைவு, பெரும் செல்வம் இருக்காது, புகழாளன், தேவையற்ற கவலை கொள்பவன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போகலாம்

                              சிம்மம் லக்கினம்  – உத்திரம் - 1  

                              உத்திரம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சூரியனின் முழு தாக்கத்தில்  இருப்பார்.

                              உத்திரம் முதல் பாதத்தில் பிறப்பவன் கற்கண்டைப்போல இனிமையாகப் பேசுபவன், புகழுடையவன், நன்னடத்தை கொண்டவன், பயப்படமாட்டான், இடம் பொருள்  ஏவல் அறிந்து நடப்பவன், உற்றார் மீது அதிக பாசம் கொண்டவன், நெருப்பாக தெரிவான் அனல் அன்பானவன். நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இருக்கும். ‘தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத குணமும் உண்டு. குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டிருப்பார்கள். எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார்கள்

                              மந்திரம் 

                              சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய அனுமன் துதி மனதார சொல்லி வருவது நல்லது

                              விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
                              உறைவார் முடிவே உணரா முதலோன்
                              கரைவார் நிறைவே கருதாதவன் போல்
                              உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

                              கண்டேன் ஒரு சீதையையே
                              கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்
                              வென்றேன் எனவே விழைந்தானையே நான்
                              கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !

                              சரமே தொளையா சகமே மறவா
                              சரீரா அனுமா ஜமதக் கினிநீ
                              உரமே உறவே உறவோய் பெரியோய்
                              உயர்வே அருள்வாய் திருமாருதியே !

                               

                              ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



                              சூரியன்




                              இலக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் இலக்கினாதிபதி நல்ல கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலும் நல்லத்தையே செய்யும். இலக்கினாதிபதி ஒருபாப கிரகத்துடன் சேர்ந்து இருந்து, இலக்கினத்தில் ராகு இருப்பாரேயாகில் அவருக்கு தாழ்மை உணர்வு இருக்கும். சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை வரண்ட கிரகங்களாகும். இவை ஒருவரின் இலக்கினத்திலே இருப்பாரேயாகில் அவர் சற்று ஒல்லியான உருவம் கொண்டவராக இருப்பர். ஒருவரின் இலக்கினம் சரராசியாக இருந்து, அதன் அதிபர் சர ராசியில் இருந்தால் அவர் அதிகம் வெளியூர்ப்பயணம் செய்து பணம் சம்பாதிப்பார் எனக் கொள்ளலாம். ஒருவருக்கு இலக்கினத்தில் பல பாப கிரகங்கள் இருப்பாரேயாகில் அவர் வாழ்க்கையில் பல துக்ககரமான சம்பவங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். இலக்கினத்திற்கு இருபுறமும் ராகுவும், சனியும் அதாவது 12, 2 ஸ்தானங்களில் இருப்பார்களேயாகில் அவர்களுக்கு திருட்டு பயம் இருக்கும்.

                              கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :-சூரியன்
                              எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

                              சூரியன்


                              சூரியன் சில குறிப்புகள் :

                              1 நட்சத்திரங்கள் : கிருத்திகை , உத்திரம், உத்திராடம்
                              2. மொத்த திசை இருப்பு : 6 வருடம்
                              3. தானியம் : கோதுமை
                              4. புஷ்பம் : செந்தாமரை
                              5. நிறம் : சிவப்பு
                              6. ஜாதி : பிராமண ஜாதி
                              7. வடிவம் : சம உயரமானவர்
                              8. உடல் உறுப்பு : தலை
                              9. உலோகம் : தாமிரம்
                              10. மொழி : சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
                              11. ரத்தினம் : மாணிக்கம்
                              12. வஸ்திரம் : சிவப்பு (ரத்த நிறம்)
                              13 தூப தீபம் : சந்தனம்
                              14 வாகனம் : மயில், தேர்
                              15 மறைவு ஸ்தானம் (சிறப்பு விதி) : லக்கனத்திற்கு 8, 12 ஆகும்
                              16. சமித்து : எருக்கு
                              17. சுவை : கார்ப்பு
                              18 பஞ்பூதம் : தேயுக் கிரகம்
                              19 நாடி : பித்த நாடி
                              20. திசை: கிழக்கு
                              21. அதிதேவதை : சிவன்
                              22 சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்
                              23. தன்மை : ஸ்திர கிரகம்
                              24 குணம் : தாமஸம்
                              25 ஆட்சி : சிம்மம் , உச்சம் : மேஷம் , நீசம் : துலாம் , மூல திரிகோணம் : சிம்மம்
                              26 நட்பு வீடுகள்: விருசசிகம், தனுசு, கடகம், மீனம்
                              27 பகை வீடுகள்: ரிஷபம், மகரம், கும்பம்
                              28 பார்வை : 7 ம் மட்டும்
                              29 பலன் தரும் காலம் : ஆரம்ப காலம்
                              30. பித்ருகாரகன் (உடல் காரகன் ) (தந்தை காரகன்)
                              31. தத்துவம் : ஆண் கிரகம்

                              லக்கினத்தில் இருந்து

                              1-ம் வீட்டில் இருந்தால் (Rahu in First house) :

                              மேலும் படிக்க ...