கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :
இலக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் இலக்கினாதிபதி நல்ல கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலும் நல்லத்தையே செய்யும். இலக்கினாதிபதி ஒருபாப கிரகத்துடன் சேர்ந்து இருந்து, இலக்கினத்தில் ராகு இருப்பாரேயாகில் அவருக்கு தாழ்மை உணர்வு இருக்கும். சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை வரண்ட கிரகங்களாகும். இவை ஒருவரின் இலக்கினத்திலே இருப்பாரேயாகில் அவர் சற்று ஒல்லியான உருவம் கொண்டவராக இருப்பர். ஒருவரின் இலக்கினம் சரராசியாக இருந்து, அதன் அதிபர் சர ராசியில் இருந்தால் அவர் அதிகம் வெளியூர்ப்பயணம் செய்து பணம் சம்பாதிப்பார் எனக் கொள்ளலாம். ஒருவருக்கு இலக்கினத்தில் பல பாப கிரகங்கள் இருப்பாரேயாகில் அவர் வாழ்க்கையில் பல துக்ககரமான சம்பவங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். இலக்கினத்திற்கு இருபுறமும் ராகுவும், சனியும் அதாவது 12, 2 ஸ்தானங்களில் இருப்பார்களேயாகில் அவர்களுக்கு திருட்டு பயம் இருக்கும்.
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

சூரியன்
சூரியன் சில குறிப்புகள் :
1. நட்சத்திரங்கள் : கிருத்திகை , உத்திரம், உத்திராடம்
2. மொத்த திசை இருப்பு : 6 வருடம்
3. தானியம் : கோதுமை
4. புஷ்பம் : செந்தாமரை
5. நிறம் : சிவப்பு
6. ஜாதி : பிராமண ஜாதி
7. வடிவம் : சம உயரமானவர்
8. உடல் உறுப்பு : தலை
9. உலோகம் : தாமிரம்
10. மொழி : சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
11. ரத்தினம் : மாணிக்கம்
12. வஸ்திரம் : சிவப்பு (ரத்த நிறம்)
13 தூப தீபம் : சந்தனம்
14 வாகனம் : மயில், தேர்
15 மறைவு ஸ்தானம் (சிறப்பு விதி) : லக்கனத்திற்கு 8, 12 ஆகும்
16. சமித்து : எருக்கு
17. சுவை : கார்ப்பு
18 பஞ்பூதம் : தேயுக் கிரகம்
19 நாடி : பித்த நாடி
20. திசை: கிழக்கு
21. அதிதேவதை : சிவன்
22 சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்
23. தன்மை : ஸ்திர கிரகம்
24 குணம் : தாமஸம்
25 ஆட்சி : சிம்மம் , உச்சம் : மேஷம் , நீசம் : துலாம் , மூல திரிகோணம் : சிம்மம்
26 நட்பு வீடுகள்: விருசசிகம், தனுசு, கடகம், மீனம்
27 பகை வீடுகள்: ரிஷபம், மகரம், கும்பம்
28 பார்வை : 7 ம் மட்டும்
29 பலன் தரும் காலம் : ஆரம்ப காலம்
30. பித்ருகாரகன் (உடல் காரகன் ) (தந்தை காரகன்)
லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
(அதாவது லக்கினத்தில்) கோபக்காரர். சிலர் சோம்பல் உடையவர். துணிச்சல் உடையவராக இருப்பர் தங்களைப் பற்றிய உயர்வு மனப்பான்மை உடையவர் இரக்க சிந்தனை, பொறுமை குறைவாக இருக்கும். காரிய வெற்றி உண்டு. மத்திம வயதில் கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படு வாய்ப்பு உண்டு. நல்ல உடல் அமைப்பு இருக்கும்
2 -ம் வீட்டில் இருந்தால் :
2-ம் வீட்டில் சூரியன் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல: கஷ்டத்தின்பேரில்தான் பணம் சம்பாதிக்க முடியும். நல்ல கிரகங்கள் பார்வை இருந்தால்தான் பண வரவு சரளமாக இருக்கும்.
கல்வியில் தடை, முரட்டு குணம், பொருள் சேதம் , வாழ்க்கை துணையோடு எப்போதும் ஒரு மனவருத்தம் என்று இருக்கும்.(மேஷம், சிம்மம் போன்ற ராசிகளாக இருந்தால் நன்மையான பலன்கள் ஏற்படும்)
3-ம் வீட்டில் இருந்தால் :
உடல் உறுதியுடன் ,வசீகரமான தோற்றத்துடன் இருப்பர் தியாக மனப்பான்மை,அதீத துணிச்சல், எதிரிகளை வெற்றிக் கொள்ளும் திறமை உடையவராக இருப்பர் உறவுகள் ,இளைய சகோதர உறவுகள் சிறப்பாக இருக்காது.சிறந்த பொருட் சேர்க்கையும் உண்டாகும்
4 -ம் வீட்டில் இருந்தால் :
பிதுராஜித சொத்துக்கள் கிடைக்க வழியுண்டு. வேதாந்தத்திலும், மற்றும் புதிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு. சிலருக்கு இதய பாதிப்பு, மன அமைதி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் சிலருக்கு தீய நண்பர்களின் சகவாசத்தால் தனது முன்னோர்களின் சொத்துக்களை இழக்க நேரிடும்.

5-ம் வீட்டில் இருந்தால் :
மிகுந்த அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் மிக்க நபராக இருப்பார். எந்த ஒரு தீமையான விஷயங்களையும் எதிர்த்து போராடி வெற்றி பெறக்கூடியவராவார். இயற்கை மிகுந்த இடங்களுக்கு உதாரணத்திற்கு காடுகளில் பயணம் செல்லக்கூடிய அமைப்பும் விருப்பமும் இருக்கும்.பொருளாதார நிலை சாதாரணமாகவே இருக்கும். மகன்களுடன் உறவு சுமுகமாக இருக்காது

6-ம் வீட்டில் இருந்தால் :
எதிரிகளால் சில தொல்லைகள் உண்டு ஆனால் அதை எதிர்த்து போராடி வெற்றி பெறக் கூடிய திறமையும் இருக்கும். ஆரோக்கியமான உடலையும், சிறந்த செரிமான சக்தியையும்ன் இருக்கும். சிலருக்கு அரசாங்கத்தால் கவுரவிக்கப்படக்கூடிய அமைப்பும் இருக்கும். சிலர் சிறந்த அரசியல்வாதியாக இருப்பார் . எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பார் . ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவுகள் ஏற்படும். சூரியனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து கூட்டாக இருந்தால் நீண்ட, தீர்க்க முடியாத வியாதிகள் உண்டாகும்.
சூரியனுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்திருந்தால் அல்லது பார்த்தால், ஜாதகன் நிர்வாகத் திறமை உள்ளவனாகவும் செல்வந்தனாக இருப்பார் சூரியன் சனியின் பார்வை பெற்றால், இதய நோய்கள் உடையவராகவே அல்லது மத்திமத்தில் இதய நோய்கள் உண்டாகுவதற்கு வாய்ப்பு உண்டு

7-ம் வீட்டில் இருந்தால் :
திருமண வாழ்க்கை சுகப்படாது. பெண்களுக்கு இருந்தால் இந்த மனக்கசப்பு விவாக ரத்து வரைக்கும் போய்விடும். பெண்கள் மீது அதிக மோகங்கொண்டவராகவும், அதன் காரணமாக பல பிரச்சனைகளை அவர் சந்திக்கக்கூடிய நிலை ஏற்படும்.சாதாரணமான மற்றும் முன்னேற்றம் இல்லாத வாழ்க்கை அமைய பெறுவார் .சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று பொருளீட்டும் வாய்ப்புகள் வரும். உடல் நல குறைவு ஏற்படும்.

8-ம் வீட்டில் இருந்தால் :
8-ம் வீடு மறைவு ஸ்தானமாதலால் நல்லதுல்ல . ஆயுள் குறைவு, அரசாங்கத்திடமிருந்து உதவியின்மை, தகப்பனாருக்குத் தோஷம், கண் நோய், மனக் குழப்பம், செலவு ஆகியவை ஏற்படும். பல சூழ்நிலைகளில் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையில் விரத்தி ஏற்படும். கண் பார்வை சம்மந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்படும்.

9-ம் வீட்டில் இருந்தால் :
சூரியனும் , 9ம் வீடும் தகப்பனாரைக் குறிக்கிறது. பொதுவாக ஒரு கிரகம் எதற்குக் காரகம் வகிக்கிறதோ அந்தக் காரகத்தைக் குறிக்கும் வீட்டில் அந்த கிரகம் இருப்பது நல்லது அல்ல. இது பிதுர்தோஷம் ஆகும். எனவே தகப்பனாருக்கு நல்லது அல்ல. சூரியன், புதன் சேர்ந்து இருந்தால் படிப்பில் வல்லவர்களாக இருப்பர்.புத்திர பாக்கியம் , செல்வம், உறவினர்கள் பெற்று இருப்பர். சிலருக்கு பெரியவர்களிடம் மரியாதை மற்றும் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு இருக்கும் . மேலும் சிலர் தர்மம் இல்லாமல் தவறான அறிவியலாளராக இருப்பர்.

10-ம் வீட்டில் இருந்தால் :
சூரியன் தனியாக நல்ல நிலையில் இருந்தால் பலவிதமான நன்மைகள் ஏற்படும். மேலும் அவர் தொட்டதெல்லாம் துலங்கும். எடுத்துச் செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும். செழிப்பான, மகிழ்ச்சியானவாழ்க்கை கிடைக்கும். அது பத்தாம் இடத்தின் அதிபதி மற்றும் சூரியனுடைய தசா அல்லது புத்திகளில் அபரிதமாகக் கிடைக்கும். உயர்கல்வி , தந்தை வழி செல்வம் ஆகியவை அமைய பெறுவர். உடல் மற்றும் மனோ பலமிக்கவராக , விரமிக்கவராகவும் இருப்பர் . சிலருக்கு வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய யோகம் உண்டு.

11-ம் வீட்டில் இருந்தால் :
திக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும். செல்வத்துடன் நல்ல கல்வி அறிவுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர். மனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று வசதியான வாழ்க்கை அமைய பெறுவார் கொள்கைக் குன்றாக இருப்பான். இவர்களுக்கு கீழ் வேலை செய்கிறவர்களின் திறனால் இவருக்கு பேரும், புகழும் கிட்டும். ஒரே நேரத்தில் பல விதமான தொழில்களில் ஈடுபட்டு அதில் மிகுந்த செல்வத்தை ஈட்டுவார். சமூகத்தால் மதிக்கப்படக்கூடிய நிலைக்கு உயர்வர் . சிலருக்கு அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்

12-ம் வீட்டில் இருந்தால் :
இது நல்லதுல்ல . இளமையில் அல்லது முதுமையில் ஏழ்மை நிலையை அமையும். மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு திருட்டு எண்ணம், மற்றும் பாவங்களைச் செய்யக்கூடியவராக மேலும் ஒழுக்கமற்ற, கெட்ட, பாவகரமான வாழ்க்கை வாழ நேரிடும். தோல்விகளை அதிகமாகச் சந்திப்பர். இழிவான செயல்கள் அல்லது வேலைகளில் ஈடுபவர். உடல் உறுப்பில் ஊனம் இருக்க வாய்ப்பு உள்ளது. சுறுசுறுப்பானவராக இருப்பர் . ஆனால் சுப கிரகம் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் நல்ல பலனை தரும் . இது பொது பலன் மட்டும் தான் . குழப்பம் வேண்டாம்