ஜோதிடம் பாடம் - 5 பக்கம் -4

கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :



எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.
புதன் 
1.  நட்சத்திரங்கள் : ஆயில்யம், கேட்டை, ரேவதி
2.  மொத்த திசை இருப்பு : 17 வருடம்
3.  தானியம் : பச்சைப்பயிறு
4.  புஷ்பம் :  வெண்காந்தல்
5.  நிறம் : பச்சை
6.  ஜாதி :  வைசிய ஜாதி
7.  வடிவம் : உயரமானவர்
8.   உடல் உறுப்பு : கழுத்து
9.  உலோகம் : பித்தளை
10.  மொழி :  தமிழ், கணிதம், சிற்பம், ஜோதிடம்
11.  ரத்தினம் :  மரகதம் (பச்சை)
12.  வஸ்திரம் : நல்ல பச்சை
13  தூப தீபம் : கற்பூரம்
14  வாகனம் :  குதிரை, நரி
15  மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு  3, 6, 8, 12 ஆகும்
16.  சமித்து : நாயுருவி
17.  சுவை : உவர்ப்பு
18   பஞ்பூதம் : வாயு கிரகம்
19  நாடி :  வாத நாடி
20.  திசை: வடக்கு
21.  அதிதேவதை : பெருமாள்
22  சஞ்சரிக்கும் கால அளவு :  1 மாதம்
23.  தன்மை : உபயக்கிரகம்
24  குணம் : தாமஸம்
25  ஆட்சி : மிதுனம், கன்னி  உச்சம் : கன்னி  , நீசம் : மீனம், மூல திரிகோணம் : கன்னி
26  நட்பு வீடுகள்:  ரிஷபம், சிம்மம், துலாம்
27  பகை வீடுகள்: கடகம், விருச்சிகம்
28  பார்வை :  7 பார்வை மட்டும்
29  பலன் தரும் காலம் :  காலம் முழுவதும்
30.  மாத்ருகாரகன் : மாதுலகாரகன் (வித்யாகாரகன்)
31.  தத்துவம் : அலி கிரகம்
புதன் லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் இருந்தால் :

அதாவது லக்கினத்தில் இருந்தால் புத்திசாலியாக இருப்பர். நல்ல பேச்ச  திறன் உடன்  பேச்சில் இனிமையும் இருக்கும். கலகலப்பானவர். வாழ்க்கை துணையிடம்  பிரியத்துடன் இருப்பர் உலக ஞனம் உடையவர்.

2-ம் வீட்டில் இருந்தால் :

பேச்சு நன்றாக இருக்கும் பொய் பேசுவதில் வல்லவராக இருப்பர்.இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். ஏஜென்சி தொழில் மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ பணம் சம்பாதிப்பர். சிலர் தான் கற்ற கல்வியைக் கொண்டு பணம் சம்பாதிப்பர். புதன்  ஒரு இரட்டைக் கிரக ஆகியதால் சிலருக்கு இரட்டை வருமானம் உண்டு.

3-ம் வீட்டில் இருந்தால் :

இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பர். சிலருக்கு  இரட்டை பிறப்பாக   இருக்கும் அமைப்பு உண்டு . சிலர் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி (இரட்டை வேஷம் ) பேசுவார்கள்.

4-ம் வீட்டில் இருந்தால் :

கல்வியில் நல்ல தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல நண்பர்கள் அமைவர்.  தாய்வழி உறவுகளால் உதவி கிடைக்கும். வாகனம், வீடு வாங்க யோகம் உண்டு. ஒரு வீடோ அல்லது ஒரு வாகனமோ வாங்க முயற்சி செய்தால் இரண்டாக வாங்கும் அமைப்பு சிலருக்கு ஏற்படும்.

5-ம் வீட்டில் இருந்தால் :

 நல்ல குணமுடையவர். ஆத்மஞானி,  வித்துவான், சிலர்  கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்று இருப்பர்  எழுதுவார். நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மற்றும்  பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும்.  தந்திர வேலைகள் செய்ய தெரிந்தவர்கள்

6-ம் வீட்டில் இருந்தால் :


எதற்கெடுத்தாலும் தர்க்கம் (விவாத சீலன்) செய்பவர். வியாதிகள் உடையவர்கள் புதன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாதிக்கப் பட்டிருந்தால் மன நோய்கள், நரம்புத் தளர்ச்சி நோய்கள் போன்ற உண்டாகும் . எதிரிகளை வெல்லும் தன்னமை உண்டு சிலரின் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மேலும் மாமனின் உதவி கிடைக்கும்.

7-ம் வீட்டில் இருந்தால் :

வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர். அவர் மூலம் வருமானம் வரும். பாவக்  கிரங்களுடன் சேர்ந்தால்  2-வது திருமணம் அமையும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் உண்டு. மிருதுவானவர். தன் தந்தையைக் காட்டிலும் சிறந்து விளங்குவர்

8-ம் வீட்டில் இருந்தால் :

மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர். கல்வியில் தடை ஏற்படும். நல்ல மனத்துடையவர், தைரியம் குறைந்தவர் . பூர்ண ஆயுள் உண்டு

9-ம் வீட்டில் இருந்தால் :

சிறந்த அறிவாளி. எதையும் அலசி, ஆராய்ந்து பார்க்கும் குணம் உடையவர். மிக வேடிக்கையாகவும், கெட்டிக்காரத்தனமாகவும் பேசி  பிறரை கவர்ந்து இழுக்கும் திறமை உண்டு . சுகம் உண்டாகும் . புத்திர சுகம் உண்டு. கல்வியில் சிறந்து விளங்கிவர்

10-ம் வீட்டில் இருந்தால் :

நேர்மை , மகிழ்ச்சியு உடையவராகவும் இருப்பர்.அளவான வார்த்தைகளை பேசுபவர். எல்லாக் கலைகளிலும் வித்தகனாக ( வித்தையறிந்தவர்) இருப்பர்.  காவிய கணித அறிந்தவர். புகழ், எடுத்த காரியத்தில் வெற்றி உடையவர்.கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பான். அரசாங்க வேலையில் இருப்பார்.  ஏஜென்சி தொழில் லாபம்  உண்டு

11-ம் வீட்டில் இருந்தால் :

அதிகம் படித்தவர்.கூர்மையான புத்தி உடையவர். செல்வந்தராகவும், மகிழ்ச்சி உள்ளவராகவும் இருப்பர். விசுவாசமான வேலைக்கரர்கள் கிடைப்பர். கடன் இல்லாதவர். நல்ல மூத்த சகோரர் உடையவர்கள் மேலும் அவர்கள் மூலம் வருமானம் உண்டு. செல்வந்தர் எல்லா விஷத்தையும் அறியும் ஆற்றல் உண்டு.பெரியவர்களின் அனுக்கிரகம் உண்டு. நல்ல புத்திரர் மற்றும் நண்பர்கள் அமைவர். பொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் இருந்தால் நல்ல  சாதனை படைப்பர்.

12-ம் வீட்டில் இருந்தால் :

சலன புத்தியும், நிலையற்ற தன்னமையும் உடையவர். கல்வி சிறப்பாக இருக்காது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பர்.பெண்களின் மேல் தீராத மோகமுடையவனாக இருப்பர் மேலும் தோல்வியாதி உள்ள பெண்கள் மற்றும்  தரம், வயதுவித்தியாசமின்றி பல பெண்களிடம் தொடர்பு அல்லது ஈடுபாடு கொண்டு இருப்பர் சிலர் பொருள் விரையமாகி வறுமையில் சிக்க நேரிடும். நல்ல துப்பறியும் திறன் இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்வர் (புதன் நிலை, மாற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வைகளால்  நேரமாறான பலன்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.குழப்பம் வேண்டாம் )

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது