கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.
ராகு (Rahu)
ராகு (Rahu)சில குறிப்புகள் :
- நட்சத்திரங்கள் : திருவாதிரை, சுவாதி, சதயம்
- மொத்த திசை இருப்பு : 18 வருடம்
- தானியம் : உளுந்து (உளுத்தம் பருப்பு )
- புஷ்பம் : மந்தாரை
- நிறம் : கருமை
- ஜாதி : சங்கிரம ஜாதி
- வடிவம் : உயரமானவர்
- உடல் உறுப்பு : தொடை, பாதம், கணுக்கால்
- உலோகம் : கருங்கல்
- மொழி : அந்நிய மொழிகள்
- ரத்தினம் : கோமேதகம்
- வஸ்திரம் : சித்திரங்கள் உடைய கருப்பு
- தூப தீபம் : கடுகு
- வாகனம் : ஆடு
- மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 8, 12 ஆகும்
- சமித்து : அறுகு
- சுவை : கைப்பு
- பஞ்பூதம் : ஆகாயகிரகம்
- நாடி : பித்த நாடி
- திசை: தென்மேற்கு
- அதிதேவதை : காளி, துர்க்கை, கருமாரியம்மன்
- சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடங்கள்
- தன்மை : சரக்கிரகம்
- குணம் : தாமஸம் மகரம்
- ஆட்சி : கன்னி உச்சம் : ரிஷபம், நீசம் : விருச்சிகம், மூல திரிகோணம் : ரிஷபம்
(ராகு , கேதுக்கு சொந்த வீடு , உச்ச, நிச்ச வீடுகள் மற்றும் மூல திரிகோணம் கிடையாது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது) - நட்பு வீடுகள்: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம்,மீனம்
- பகை வீடுகள்: கடகம், சிம்மம்
- பார்வை : 7ம் மடடும்
- பலன் தரும் காலம் : பிற்காலம் (பிற்கூற்றில்)
- மாத்ருகாரகன் : பிதாமகாகாரகன் ( பிதுர் பாட்டன் வம்சம்)
- தத்துவம் : பெண் கிரகம்
12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.
லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் (Rahu in First house) :
பல வியாதிகள் உடையவர். விவாதம் செய்வதில் கெட்டிக்காரர் . வாழ்க்கை துணையின் மூலம் பிரச்னைகளும், வாழ்க்கை துணையின் உடல் நல பாதிப்பும் இருக்கும். சிலருக்கு நீண்ட ஆயுள், சொத்து சுகம் இருக்காது. சிலர் மன நோயால் பாதிக்க படலாம்
2-ம் வீட்டில் இருந்தால் (Rahu in Second house) :
குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கண்பார்வையில் கோளாறு ஏற்படும். விஷ நாக்கு உடையவர்கள். குறைந்த அளவே செல்வம் அல்லது கடனில் செல்வம் மூழ்கும் நிலை இருக்கும். சாதுரியமும் , சாமர்த்தியமும் , கோபமும் உடையவர். (ராகுவுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோதான் நன்மை ஏற்படும்.)
3-ம் வீட்டில் இருந்தால் (Rahu in 3rd house) :
தைரியசாலியாகவும் ,மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றலுடைவராகவும் நீண்ட ஆயுளுடன் , வீண் செலவு செயப்பவராகவும் இருப்பர். வாழ்க்கைத் துனைவி, குழந்தைகள், வீட்டில் செல்வம் இவை அனைத்தும் திருப்தி தரும் வகையில் அமையும். தொழில் சம்மந்தமாக வெளிநாட்டு பயணம் அமையும். வெளிநாட்டு நண்பர்கள் மூலம் லாபம் உண்டு.
4-ம் வீட்டில் இருந்தால் (Rahu in 4th house) :
முட்டாள்தனமான காரியங்கள் செய்வர், நம்பகத்தன்மை இல்லாது நடந்து கொள்வர். சுகமில்லாதவர்கள். தாயாரால் அனுகூலம் இல்லை.தாயின் உடல் நலனில் அதிக பாதிப்பு ஏற்படும் . இதய சம்மந்தப்பட்ட பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. இடம், சொத்துக்களில் பிரச்னை, வில்லங்கங்கள், பஞ்சாயத்துகள் இருக்கும். பகைகள் உண்டாகும். சிலருக்கு தரித்திர நிலை உண்டாகும். உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படாது. ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். சிலருக்கு ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு மன அமைதி இல்லாமல், ஒருவிதமான சோகத்தை வைத்துக்கொண்டே வாழ்பவர்களாக இருப்பர் .
5-ம் வீட்டில் இருந்தால் (Rahu in 5th house) :
தொடங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது முதலில் தோல்வியடைந்து கடும் முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும்.நெருங்கிய சொந்த பந்தத்திற்கு அதிகமாக செலவு செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் . சிலருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருக்கலாம். திருமண வாழ்க்கையில் அல்லது காதலில் சிக்கினாலும் பிரச்சினை ஏற்படும். சுயநலவாதிகள். கோபக்காரர்கள் .
6-ம் வீட்டில் இருந்தால் (Rahu in 6th house) :
நீண்ட ஆயுள் உடையவர்.மாறாத வியாதி உடையவர்கள். அவ்வப்போது எதிரிகளின் தொல்லைகளும் இருக்கும். வாழ்க்கையில் ஆரம்பத்தில் கஷ்டத்தையும், பிற்பகுதியில் சந்தோஷத்தையும் இந்த ராகு கொடுக்கும் . நண்ப்ர்களால் , மனைவியால் அதிகமான ஆதாயம் உண்டு. சாப்பாட்டில் பிரியம் இருக்கும் ராகுவுடன் சந்திரனும், சனியும் சேர்ந்திருந்தால், ஆசாமி ஊழல் பேர்வழியாக இருப்பர்.மூட நம்பிக்கை இருக்கும்
7-ம் வீட்டில் இருந்தால் (Rahu in 7th house) :
திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. சிலருடைய வாழ்க்கை துணைக்கு மனைவி வியாதி உள்ளவராக இருப்பர். சிலருக்கு பூர்வக சொத்துகள் கை விட்டு போகும் வாய்ப்பு உள்ளது. சிலர் ஊதாரியாகவும் , அடிக்கடி வியாதிகளால் கஷ்ட படுபவராகவும் , மகிழ்ச்சி இல்லாதவராகவும் இருப்பர். எந்த ஒரு செயலிலும் முதலில் தோல்வி ஏற்பட்டாலும் விடா முயற்சியின் மூலம் வெற்றி பெற்றுபவராக இருப்பர் அடிக்கடி பயணங்கள் ஏற்படும்.
8-ம் வீட்டில் இருந்தால் (Rahu in 8th house) :
பல தொந்தரவுகள் இருந்து வரும். பொதுவாழ்வில் நற்பெயர் இருக்காது. ராகுவுடன் சந்திரனும் கூட இருந்தால் மன நோயால் பீடிக்கப்படுவர். அடிக்கடி பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். சதா வாக்குவாதம், விதண்டாவாதம் அல்லது சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும். மேலும் அந்த சூழ்நிலையில் தோல்வி மட்டும் அமையும்.பெண்கள் சிலருக்கு மாதவிடாய் பிரச்னையும், ஆண்களுக்கு மூல நோய் பிரச்னையும் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத அதிஷ்டம் ஏற்படும். அந்த அதிஷ்டத்தை மற்றவர்கள் அனுபவிப்பர் .
9-ம் வீட்டில் இருந்தால் (Rahu in 9th house) :
இது தகப்பனருக்கு நல்லது அல்ல. பூர்விக சொத்துக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும். சிலர் கடவுள் மேலும், அவர் சார்ந்துள்ள மதத்தின் பேரிலும் அவ்வளவு நம்பிக்கை இருக்காது. நல்ல புத்தி, புகழ்ச்சி, நல்ல தயாள குணம், கீர்த்தி, அடக்கமான குணம் ஆகியவை உண்டு. ஞாபகசக்தி உடையவர்களாகவும், தன் கையில் எடுத்துக் கொள்ளும் காரியத்தை சிறப்பாக முடிப்பவர்களாகவும் வாக்குவாதத்தில் வெற்றி பெறுபவராகவும் இருப்பர். அடுத்தவரின் குறைகளை கண்டுபிடித்து குறை கூறுபவராக இருப்பர்
10-ம் வீட்டில் இருந்தால் (Rahu in 10th house) :
காம இச்சை அதிகம் உடையவாராக இருப்பர் எல்லா கலைகளையும் கற்றும் திறன் உண்டு. கை தேர்ந்த கலைஞர்களாக இருப்பர்.இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வம் இருக்கும். புத்திர சுகமில்லதவர். குரூர குணம், அதிக ஆசை, அற்பசுகம், அஜாக்கிரதையால் தன நஷ்டம் , நடன சங்கிதத்தில் ஆர்வம் ஆகியவை உண்டு. செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவர். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவராக இருப்பர் . எல்லா வகையான செளகரியங்களையும் (comforts) பெற்றவனாக இருப்பர்
11-ம் வீட்டில் இருந்தால் (Rahu in 11th house) :
11லில் ராகு இருப்பது நல்லது. சிலர் ராணுவத்தில்(Army) சேர்ந்து பணியாற்றி புகழ் பெற்று வாழ்வர். சிலர் வெளி நாடுகளில்(Foreign) வணிகம் அல்லது வேலை செய்து பெரும் பொருள் ஈட்டுவர். நல்ல கல்வி, செல்வம், புகழ், நீண்ட ஆயுள், செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் அறியும் அல்லது கற்கும் திறமை வளமான வாழ்க்கை, சுகம், நல்ல வலுவான உடல் ஆகியவை பெற்று இருப்பர். நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் பெற்று இருப்பர். முத்த சகோதரர்கள் நல்லது அல்ல. மூத்த சகோதரரை தவிர மற்ற உறவுகளுக்கிடையே சுமூகமான உறவு இருக்கும்
12-ம் வீட்டில் இருந்தால் (Rahu in 12th house) :
நல்ல வளமான வாழ்க்கைஅமையும் .சிலர் ஒழுக்கமற்றவனாக இருப்பர். ஆனாலும், பலருக்கு உதவும் மனப்பான்மை பெற்று இருப்பர். சிலருக்கு கண் பார்வைக் குறைபாடுகள், ஆண் வாரிசு இல்லாமை, உடலில் உபாதைகள் , வயிற்று நோய் இருக்கும். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் திடீர் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு செய்யும் காரியம் பலன் அளிக்கமால் போகலாம்.
(இதுபோல் பாவ கிரகங்களின் பலன் சொல்லும் போது கிரகங்களின் நிலை (ஆட்சி, உச்சம், நிச்சம் ) ஆராய்ந்து தான் பலன் சொல்ல வேண்டும்.)