கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.
கேது
கேது சில குறிப்புகள் :
1. நட்சத்திரங்கள்(Stars) : மகம், மூலம், அசுவனி
2. மொத்த திசை இருப்பு : 7 வருடம்
3. தானியம் (Grains) : கொள்ளு
4. புஷ்பம் (Flower) : செவ்வல்லி
5. நிறம் (Color) : சிவப்பு (red)
6. ஜாதி (caste): சங்கிரம ஜாதி
7. வடிவம் (Structure) : உயரமானவர்
8. உடல் உறுப்பு : கை , தோள்
9. உலோகம் (Metal) : துருக்கல்
10. மொழி(Language) : அந்நிய மொழிகள்
11. ரத்தினம் (Gems) : வைடூர்யம்
12. வஸ்திரம் : புள்ளிகள் (பல நிறங்கள்) உடைய சிவப்பு
13 தூப தீபம் : செம்மரம்
14 வாகனம் : சிங்கம்
15 மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 8, 12 ஆகும்
16. சமித்து : தர்ப்பை
17. சுவை (Taste) : உறைப்பு
18 பஞ்பூதம் : ஆகாயகிரகம்
19 நாடி : பித்த நாடி
20. திசை: வடமேற்கு
21. அதிதேவதை : கணபதி, சண்டிகேஸ்வர்
22 சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடங்கள்
23. தன்மை : சரக்கிரகம்
24 குணம் (Character) : தாமஸம் மகரம்
25 ஆட்சி : மீனம் உச்சம் : விருச்சிகம், நீசம் : ரிஷபம், மூல திரிகோணம் : விருச்சிகம்
(ராகு , கேதுக்கு சொந்த வீடு , உச்ச, நிச்ச வீடுகள் மற்றும் மூல திரிகோணம் கிடையாது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது)
26 நட்பு வீடுகள்: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம்,மீனம்
27 பகை வீடுகள்: கடகம், சிம்மம்
28 பார்வை : 7ம் மடடும்
29 பலன் தரும் காலம் : பிற்காலம் (பிற்கூற்றில்)
30. மாத்ருகாரகன் : மாதாமகாகாரகன் ( தாய்வழி அதாவது மாதர் வழி பாட்டன் வம்சம்)
31. தத்துவம் : அலி கிரகம்
12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.
லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் (First House) இருந்தால் :
விரக்தி மனப்பான்மையுடையவர், பற்றற்றவர. மெல்லிய சரீரமுடையவர். கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் உண்டு. அமைதியானவர். எதிரிகளால் , உடலிலும் பிரச்னை உண்டு. சனியின் வீடுகளான மகரம் கும்பம் வீடுகளில் இருந்தால் மிகவும் சிறப்பு. இந்த இரண்டு லக்கினமும் கேதுக்கு (கேது) மிகவும் உகந்தது.
2-ம் வீட்டில் (Second House) இருந்தால் :
கடுமையாகவும், கம்பிரமாகவும் பேசக் கூடியவர். பண நஷ்டம் ஏற்படக் கூடும். எதையாவது பிறரைப்பற்றி (குறையாக) பேசிக்கொண்டே இருப்பர் . கல்வி கெடும். குறுகிய கண்ணோட்டம் உடையவராக இருப்பர். குடும்பத்தில் குழப்பம், பிரச்னை, செய்வினை கோளாறு , நிம்மதி குறைவு போன்றவை இருக்கும். திருமணம் , குழந்தை பேறு கால தாமதமாகும். சபலம் உடையவர்
3-ம் வீட்டில் (Third House) இருந்தால் :
துணிச்சல் மிக்கவர்.உடல் பலம் பொருந்தியவர். தர்ம சிந்தனை இருக்கும். நல்ல குடும்பம், நல்ல உறவினர்கள் அமையும். இளைய சகோதர சகோதரிகள் நல்லதுல்ல. கல்வி தடை, விருப்பமின்மை இருக்கும். எந்த காரியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். மனதில் குறை இருக்கும். எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிப்பர் .
4-ம் வீட்டில் (Fourth House) இருந்தால் :
தாயாரால் அனுகூலமில்லை. வெளி நாட்டில் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கையில் பல தரப்பட்ட அனுபவங்கள் ஏற்படும். இதய சம்மந்தப் பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. தீய எண்ணங்களில் மனம் லயக்கும் . பிறரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டார். வாகனங்கள் வாங்குவதற்க்கு தடை, வாகனங்களால் பிரச்னை உண்டு.
5-ம் வீட்டில் (Fifth House) இருந்தால் :
உதாரண குணமுடையவர்கள். சபல புத்தியுடையவர்.அஜீரணக்கோளாறுகள், கெட்ட குணம், புத்தி கூர்மையின்மை இருக்கும் .5ல் கேது இருந்தால் சந்நியாச யோகம் என்று சில நூல்கள் கூறுகிறது. மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். குழந்த.ையின்மை அல்லது குழந்தைகளால் நன்மையின்மை ஏற்படும்
6-ம் வீட்டில் (Sixth House) இருந்தால் :
கேதுவிற்கு மிகவும் உகந்த இடம். புகழும், அதிகாரமும்,செல்வாக்கும் தேடிவரும். உயர் கல்வி, தர்மசிந்தனை , சொந்தபந்தங்களை நேசிக்கும் தன்மை, பலதுறைகளில் அறிவு , தைரியம்(Courage ), வித்தை ஆகியவை இருக்கும். எதிரிகள் இருக்க மாட்டார்கள். இன்பமான வாழ்ககை அமையும். அஜீரணக்கோளாறுகள் (Indigestion disorders) உண்டாகும்
7-ம் வீட்டில் (Seventh House) இருந்தால் :
திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. சிலருக்கு நோய்வாய்ப்பட்ட வாழ்க்கை துணை அமையும் இளமை கால வாழ்க்கை நன்றாக இருக்காது. வாழ்க்கையில் வளமை இன்றி மன அழுத்ததுடன் வாழ்வர். சோம்பல், முடபுத்தி, இருதாரம் , பொய் சொல்தல் ஆகியவை இருக்கும். விருச்சிக ராசியில் இருந்தால் எப்போதும் சுகம், தனலாபம் உண்டாகும்.
8-ம் வீட்டில் (8th House) இருந்தால் :
அறிவாளிகள் மேலும் மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவர். சிலருக்கு விபத்துகள் நேரிடும். சிலருக்கு உடம்பில் நோய்களால் புண்கள் வரலாம். தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் தோன்றும் . பொதுவாக ஆயுள்தோஷம் உண்டு. அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் ஆசை இந்த இடத்து கேது (Kethu) கொடுப்பர் . திருமண வாழ்வில் பிரச்சினை உண்டு திருமணம் கால தாமதமாகும் சிலருக்குப் புகழு, தலைமை ஏற்கும் தகுதி இருக்கும். விருச்சிகம், கன்னி, மேஷம், ரிஷபம், மிதுனத்தில் இருந்தால் அஷ்ட ஐஸ்வரியம் உண்டாகும்.
9-ம் வீட்டில் (Nineth House) இருந்தால் :
தகப்பனாருடன் நல்லுறவு இருக்காது. பிதூர்தோஷம் உண்டு . மிக்க தைரியம் உள்ளவராக இருப்பர். அதிருஷ்டமில்லதவர். நல்ல புத்திரர்கள், நண்பர்கள், தர்மம் செய்யும் குணம் உடையவர். மாறும் மன நிலை உடையவர். சிலருக்கு தெய்வ பக்தி இருக்காது.
10-ம் வீட்டில் (Tenth House) இருந்தால் :
உற்சாகமான மனம், நிறைந்த அறிவு, கலைகளில் ஈடுபாடு, இரக்க மனம் உடையவர். தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்தித்து நல்ல தன்னம்பிக்கையுடன் வெற்றிக் கொள்வர். சிலருக்கு தந்தை உடல்நலப் பிரச்னை அல்லது பணம் கஷ்டத்தில் இருப்பர். சௌரிய குறைவு, துக்கம் ஆகியவை உண்டாகும்.
11-ம் வீட்டில் (Eleventh House) இருந்தால் :
நல்ல பணவரவு , நண்பர்களின் உதவி, நல்ல குணம், எடுத்த காரியங்களில் வெற்றி, நல்ல பெயர், தர்ம செய்யும் குணம் போன்றவையுடன் சுகமாக வாழ்வர். சிலருக்கு சூதாட்டம், லாட்டரிச் சீட்டு அல்லது பங்கு சந்தை போன்றவற்றில் இருந்து பணம் வரும் வாய்ப்பு உண்டு. மூத்த சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை குறையும்
12-ம் வீட்டில் (Twelveth House) இருந்தால் :
12ல் கேது (kethu ) இருந்தால் சில ஜோதிட நூல்கள் கடைசி பிறவி என்று கூறுகிறது. மனம் அமைதியின்றி அலைபாயும்.. புண்ணிய தலங்களுக்க அடிக்கடி செல்வார். சிலர் பிறந்த நாட்டில் இருந்து தூர தேசங்களில் வசிக்க நேரிடும். பணசேமிப்பு இருக்காது இல்லற சுகபோகங்களில் ஈடுபாடு இருக்காது. பாதங்களில் நோய் ஏற்படக்கூடும். நல்ல திறமையாக வாதங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறுவர். பரம்பரை சொத்துக்கள் இழக்க நேரிலாம்