கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.
சனி (Saturn - Sani)
சனி சில குறிப்புகள் :
1. நட்சத்திரங்கள் (stars) : பூசம், அனுஷம், உத்திரட்டாதி
2. மொத்த திசை இருப்பு : 19 வருடம்
3. தானியம் (Grain): எள்ளு (SESAME)
4. புஷ்பம் (Flower): கருங்குவளை
5. நிறம் (Color) : கருமை (Black)
6. ஜாதி (Caste) : சூத்திர ஜாதி
7. வடிவம் (Structure or Shape) : குள்ளமானவர்
8. உடல் உறுப்பு (Body Part) : தொடை, பாதம், கணுக்கால்
9. உலோகம் (Metal): இரும்பு (Iron)
10. மொழி (Language) : அந்நிய மொழிகள்
11. ரத்தினம் (Gems) : நீலம் (Blue Sapphire / Neelam)
12. வஸ்திரம் (Dress) : கருப்பு
13. தூப தீபம் : கரங்காலி
14. வாகனம் : காக்கை, எருமை
15. மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 8, 12 ஆகும்
16. சமித்து : வன்னி
17. சுவை (Taste) : கைப்பு
18 பஞ்பூதம் : ஆகாயகிரகம்
19 நாடி : வாத நாடி
20. திசை: (Direction: மேற்கு (West)
21. அதிதேவதை : எமன், ஐயப்பன்
22 சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/2 வருடங்கள்
23. தன்மை : உபயக்கிரகம்
24. குணம் : தாமஸம்
25. ஆட்சி : மகரம், கும்பம் உச்சம் : துலாம், நீசம் : மேஷம், மூல திரிகோணம் : கும்பம்
26. நட்பு வீடுகள்: ரிஷபம், மிதுனம்
27. பகை வீடுகள்: கடகம், சிம்மம், விருச்சிகம்
28. பார்வை : 3, 7 , 10 (3 , 10 விசேஷப் பார்வைகள் )
29. பலன் தரும் காலம் : பிற்காலம் (பிற்கூற்றில்)
30. மாத்ருகாரகன் : ஆயுள்காரகன்
31. தத்துவம் : அலி கிரகம்
12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :
லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் ( First House) இருந்தால் :
சனி லக்கினாதிபதி ஆனால் மிகவும் நல்லது ஆனால் ஆட்சியோ உச்சம் பெறாமல் இருப்பது பொதுவாக நல்லதல்ல. ஒல்லியான உருவம் இருக்கும். உடல் நலத்திற்குக் கேடு அதுவும் குழந்தைப் பருவத்தில் உடல் நலமின்மை இருக்கும் இருந்திருக்கும். சோம்பேறித்தனம் ,வித்தியாசமான பழக்க வழக்கங்கள் குறுகிய மனப்பன்மை , கொடுர சிந்தனைகள் கஞ்சத்தனம், உடல் குறைபாடு ஆகியவை உடையவர் மிக்கவர். வித்துவான்கள் . இடம் சம்மந்தப்பட்ட செல்வம் பெற்றவர்கள்
2-ம் வீட்டில் (Second House) இருந்தால் :
பணப்புழக்கம் மிகக் குறைவாக இருக்கும்.வேலைக்கேற்ற ஊதியம் கிட்டாது. குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்காது. பலருடன் கலந்து பழகத்தெரியாதவர். இவர்கள் பிறந்த குடுமப்த்திற்கு கவலைகள் இருக்கும். சேர்த்த பொருள்கள் நாசம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இரு திருமண யோகம், கல்வியில் தடை, கண்ணில் குறைப்பாடு , போதைக்கு அடிமையாக்குதல் , வினோதமான சொல்லில் வல்லமை, திக்கி பேசுதல் , அதிரடியாக பேசுதல் ஆகியவை உண்டு
3-ம் வீட்டில் (Third House) இருந்தால் :
நல்ல மனைவி அமைவர். நல்ல அறிவு , புத்திசாலித்தனம் உண்டு. தன் சுக வாழ்க்கைக்காக செல்வம் பெற்று இருப்பர் அல்லது சேர்ப்பர். தைரியமானவர். சிலருக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும். (5ம் வீட்டை பார்ப்பதால்)
4-ம் வீட்டில் (Fourth House) இருந்தால் :
சிலர் சிறிய வயதில் தாயாரிடமிருந்து பிரிவு அல்லது தாய்க்கு உபத்திரம் அல்லது தாய்க்குக் கண்டம் , வாயு உபத்திரவம், வீட்டாலும் வாகனத்தாலும் தொந்தரவு, சோம்பேரித்தனமான குணம், சொந்தக் காரர்கள் நடுவில் மரியாதை குறைவு, தனிமையை விரும்பும் குணம், பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்காமை , மகிழ்ச்சி இல்லாமை , திடீர் இழப்புக்கள், நல்ல சிந்தனை, கல்வியில் தடை ஆகியவை அமையும். வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்.
5-ம் வீட்டில் (Fifth House) இருந்தால் :
புத்திர தோஷம் உண்டு. தந்தைக்கும் தோஷம் உண்டு. குறிகிய மனப்பான்மை , எவர் உடனும் சகஜமாகப் பழகாத தன்மை, வித்தியாசமான கண்ணோட்டம் ஆகியவை இருக்கும். இவர்கள் சண்டாள சித்தர்கள் என்று சில ஜோதிட நூல் சொல்கிறது
6-ம் வீட்டில் (Sixth House) இருந்தால் :
நன்றாக வாதம் செய்பவர்.நன்றாக சாப்பிடுபவர். துணிச்சல்மிக்கவர். எதிரிகள் இல்லாதவர். பிடிவாதகாரர். சிலருக்கு ஆரோக்கியம் குறைப்பாடு இருக்கும் அதுவும் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும் புத்திசாலிதனமும் சுறுசுறுப்பும் உடையவர்
7-ம் வீட்டில் (Seventh House) இருந்தால் :
திருமணம் தாமதமாகும். திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்காது. தேச சஞ்சாரம் செய்ப்பவர் . நீண்ட வியாதிகள், பாவ சிந்தனைகள் உடையவர் அரசனை போல் வாழ்க்கை அமைந்தாலும் மன அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் இருக்கும் .
8-ம் வீட்டில் (8th House) இருந்தால் :
நீண்ட ஆயுள், சொற்பக் குழந்தைகள் , முன்கோபம், பிறரைக் குறை சொல்லும் குணம் , கெட்ட பழக்கம் மூச்சு பிரச்னை (ஆஸ்மா), பொருட் செலவு , குறைந்த நன்பர்கள் ஆகியவை உண்டு. வாழ்க்கை துணையின் பொருளாதாரம் சுகப்படாது. அடிக்கடி நோய் வர வாய்ப்புகள் அதிகம். விசுவாசம் அற்ற குழந்தைகள் சிலருக்கு அமையும் உறவினர்களின் உதவி கிடைக்காது
9-ம் வீட்டில் (Nineth House) இருந்தால் :
தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை, எந்த காரியத்தையும் செய்ய விருப்பமில்ல தன்மை, அகங்கராம் , பாவ செயல்கள் செய்யும் எண்ணம், மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் குணம், இறை நம்பிக்கை இல்லாமை, கஞ்சதனம் ஆகியவை இருக்கும். தகப்பனருடன் நல்ல உறவு இருக்காது. மேல் படிப்பில் மந்தத்தன்மை இருக்கும்.
10-ம் வீட்டில் (Tenth House) இருந்தால் :
நல்ல தனவான் . வைராக்கியமுடைவர்கள் தைரியமுடையவர் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச்சமமான பதவிகளில் இருக்க சிலருக்கு வாய்ப்பு உண்டு. சிலர் விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில் ஈடுப்பட்டு சிறந்து விளங்குவர்கள். தொழிலில் பல ஏற்றங்களும் இறக்கங்களும் இருக்கும். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பர். தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் ஆகியவை உண்டு
11-ம் வீட்டில் (Eleventh House) இருந்தால் :
செல்வம், ஐஸ்வரிய பிராப்தம், பூர்ண ஆயுள் , சத்திய குணம், நல்ல மனம் , குறைந்த நண்பர்கள் , நல்ல குழந்தை பாக்கியம்,அரசியல் ஆதாயம், வெற்றி, நல்ல படிப்பு, மரியாதை உண்டு. பொதுவாக இந்த இடத்தில் சனி இருப்பது மிகவும் நல்லது. வாழ்க்கையை அனுபவிக்கும் முனைப்பில் இருப்பர். சிலருக்கு பல இடங்கள் போன்ற சொத்துக்களும் வண்டி வாகன வசதிகள் மிகுதியாக இருக்கும்
12-ம் வீட்டில் (Twelveth House) இருந்தால்:
இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம் ஆகும் செல்வமும்,மகிழ்ச்சியும் இருக்காது. பலவித நோய்கள், எதிரிகள், நம்பிக்கையின்மை ஆகியவை இருக்கும். சிலர் அங்ககீனம் அல்லது உடற் குறைபாடு இருக்கும் . வியாபாரம் செய்தோ எதோ ஒரு வகையில் பணம் மொத்தத்தையும் இழக்கும் சூழ்நிலை அமையும்