ஜோதிடம் பாடம் - 5 பக்கம் -6

கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

சுக்கிரன்

சுக்கிரன் சில குறிப்புகள் (Something About Venus-Sukiran):

  1.  நட்சத்திரங்கள் (Stars): பரணி, பூரம், பூராடம்
  2.  மொத்த திசை இருப்பு : 20 வருடம்
  3.  தானியம் (Grains): மொச்சை (one of the Beans)
  4.  புஷ்பம் (Flower): வெண்தாமரை (White Lotus)
  5.  நிறம் (Color): வெண்மை
  6.  ஜாதி (Caste) : பிராமண ஜாதி
  7.  வடிவம் (Structure or Shape) : சம உயரமானவர்
  8.  உடல் உறுப்பு : மர்ம ஸ்தானம்
  9.  உலோகம் (Metal) : வெள்ளி (Silver)
  10.  மொழி (Language) : சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
  11.  ரத்தினம் (Gem): வைரம (Diamond)்
  12.  வஸ்திரம் : வெண்பட்டு
  13.  தூப தீபம் : லவங்கம்
  14.  வாகனம் : குதிரை (Horse),மாடு (Cow), விமானம், கருடன்
  15.  மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 3, 8 ஆகும்
  16.  சமித்து : அத்தி
  17.  சுவை : புளிப்பு
  18.  பஞ்பூதம் : அப்புக்கிரகம்
  19.  நாடி : சிலோஷ்ம நாடி
  20.  திசை: தென்கிழக்கு
  21. அதிதேவதை : லஷ்மி, இந்திரன், வருணன்
  22. சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்
  23. தன்மை : ஸ்திரக்கிரகம்
  24. குணம் : ராஜசம்
  25. ஆட்சி : ரிஷபம், துலாம் உச்சம் : மீனம் , நீசம் : கன்னி , மூல திரிகோணம் : துலாம்
  26. நட்பு வீடுகள்: மிதுனம், தனுசு, மகரம், கும்பம்
  27. பகை வீடுகள்: கடகம், சிம்மம், தனுசு
  28. பார்வை : 7 மட்டும்
  29. பலன் தரும் காலம் : மத்திம காலம்
  30. மாத்ருகாரகன் : களத்திரகாரகன்
  31. தத்துவம் : பெண் கிரகம்


சுக்கிரன் 12 வீடுகளில் (Twelveth House) இருந்தால் பலன் விவரங்கள் :


லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் ( First House) இருந்தால் :


அதிக செல்வம், நயமான குணம், அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை ஆகியவை உண்டாகும்.

2-ம் வீட்டில் (Second House) இருந்தால் :


பணப் புழக்கம் , மிக இனிமையாகப் பேசும் தன்மை , வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம், அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு ஆகியவை அமையும். சிலருக்குப் பெண்களாலும், வாகனங்களாலும் வருமானம் உண்டு. சிலர் கதை கவிதை சொல்வதில் வல்லவராக இருப்பர். பாவக் கிரங்களின் சேர்க்கை அல்லது பலம் இழந்து இருந்தால் சிலருக்கு கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்புகள் , தீய பழக்க வழக்கம் ஆகியவை உண்டாகும்.

3-ம் வீட்டில் (Third House) இருந்தால் :


நல்ல வசதி வாய்ப்பு உண்டு. சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்யஅமைப்பு இருக்கும் பிரபு குணமுடையவர்.எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். புதிய செயல்கள் செய்வதில் ஆர்வமுடையவர்

4-ம் வீட்டில் (Fourth House) இருந்தால் :


சுகமான சொகுசான வாழ்க்கை அமையும். நல்ல அறிவாற்றல்,கல்வி, சொத்து சுகத்துடன் வாழ்வர் நல்ல புத்திரர்கள், வாழ்க்கை துணை , நண்பர்கள் அமைவர். தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். வாகன யோகம், தாயின் மீது தீவீரபக்தி, அமைதியானகுடும்ப வாழ்க்கை, நினைத்த காரியம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவை அமைய பெறுவர்

5-ம் வீட்டில் (Fifth House) இருந்தால் :


அழகானவர். சிறந்த விசேஷமான அறிவு உடையவர் .வாழ்கை துணையால் சுகம் , சந்தோஷமான மனநிலை, சிறு கலகம் செய்வதில் பிரியம் , வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, பெண் குழந்தை யோகம் ஆகியவை உண்டாகும்

6-ம் வீட்டில் (Sisth House) இருந்தால் :


விரோதிகளே இருக்கமாட்டார் ஆனால் ஆண்கள் இருந்தால் பெண்களாலும், பெண்கள் இருந்தால் ஆண்களும் ஏமாற்றப்படுவார்கள். தவறான அல்லது அதிகமான பாலியல் உறவுகளில் ஈடுபாடு உடையவராக இருப்பர். அதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகுபவராகவும் இருப்பர். உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதம் ஆகியவை உண்டாகும்.

7-ம் வீட்டில் (Seventh House) இருந்தால் :


மனதுக்கு இனிமையான வாழ்க்கை, சந்தோஷம் வசதி, வாய்ப்பு அமையும். காமம் மிகுந்தவராகவும், அழகானவராகவும், மக்களுக்கு பிரியமானவராகவும், கல்வியில் பிரியமுடையவராகவும் இருப்பர் குடும்பத்தின் மீது அக்கறை உடையவர்.

8-ம் வீட்டில் (8th House) இருந்தால் :


சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பது நல்லது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகின்றது. செல்வம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான சகல செளக்கியங்களும் கிடைக்கும். கணவன் அல்லது மனைவிக்குப் பண நிலைமை நன்றாக இருக்கும். தைரியசாலி. களத்திர சுகமில்லாதவர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு . சொல்ல தகாத வார்த்தைகளை பேசுபவர். தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். சிலருக்கு கண்களில் நோய் உண்டாகும்

9-ம் வீட்டில் (Nineth House) இருந்தால் :


நல்ல செல்வத்துடன் செளக்கியமான வாழ்க்கை அமைந்து அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பர். புத்திரர்களால் , வாழ்க்கை துணையால் ,தந்தையால் சுகம் , சொத்துக்கள் உண்டு. மகிழ்ச்சியான குடும்ப வாழ்கை, சமுதாயத்தில் நல்ல பெயர், வெளிநாடு, வெளியூர் பயணங்கள் உண்டு. தந்தைக்கு நல்ல ஆயுள் உண்டு.தர்ம எண்ணம் இருக்கும்

10-ம் வீட்டில் (Tenth House) இருந்தால் :


இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர். நல்ல செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பர். நாளுக்கு நாள் வாழ்க்கை வளர்ச்சி உண்டு. பெண்கள் நிறைந்த இடத்தில் வேலை செய்யும் அமைப்பு உண்டு. கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில், உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். யதார்த்தவாதியாக இருப்பர். பெண்களுக்கான அலங்காரப் பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவர். யாரையும் வசப்படுத்தக்கூடிய சக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவர்

11-ம் வீட்டில் (Eleventh House) இருந்தால் :


பணத்திலும் , லாபத்திலும் குறியாக இருப்பர்.உற்சாகமான மனநிலை உடையவர்கள் ஆடம்பரம் மிக்க, செளகரியங்கள் மிகுந்த வாழ்க்கை அமையும். புகழ், நிதி சாஸ்திரத்தில் நாட்டம், நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம் உண்டு சபலமுடையவர்கள் நண்பர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பர்

12-ம் வீட்டில் (Twelth House) இருந்தால் :


உறவினர்களால் நன்மை இல்லை. சுக வாழ்வு, உடல் உறவில் நாட்டம் , குல கல்வியில் நாட்டம் ஆகியவை இருக்கும். தன நாசம் உண்டு.வசதிகளைத் தேடி ஏங்கும் மனப்பான்மை உண்டாகும். குடும்ப வாழ்க்கை சிறக்காது. சிலருக்கு கண்பார்வை மங்கும் அபாயம் உண்டு.

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது


  சனி பற்றி அறிய