குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மகரம்

 

 மகரம்  ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு வருகிறார்.  பாக்கிய ஸ்தானம் (9ம்  வீடு),  லாப ஸ்தானம் (11ம்  வீடு)   ராசி (1ம்  வீடு) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • இந்த அமைப்பு சகல விதத்திலும் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும் எனக் காட்டுகிறது.
  • அலுவலகத்தில்  செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளுடன் கலந்துரையாடும் அளவுக்கு மரியாதை உயரும். 
  • இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். சிலருக்குப் பலகாலக் கனவாக இருந்த பணிவாய்ப்பு தேடிவரும். 
  • உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.  
  • வீட்டில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். 
  • மனம் போல வீடு, மனை, வாகன வசதிகள் உண்டாகும்.
  • ஏழரை சனி நடந்தால் கூட, குரு ஐந்தாம் வீட்டில் இருப்பதும் ம், குருவின் பார்வை ராசியின் மீது விழுவதும்  சனியின் நெருக்கடிகளையும் போக்கும்
  • மறைமுக எதிர்ப்புகள் குறையும், சட்ட சிக்கல்கள் தீரும். 
  • மன நிம்மதியுடன், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். 
  • பழைய கடன்கள் பைசலாகும். பணவரவை சேமித்து வைப்பது நல்லது .
  • அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். 
  • பெற்றோர் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். 
  • வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு தவிர்ப்பது நல்லது .
  • பெண்களுக்கு திடீர் யோகத்தால் பொருட் சேர்க்கை ஏற்படும். மேலும் உறவினர்கள், குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு பெருகும் 
  • செய்யும் தொழிலில்கஷ்டங்கள்  நீங்கி, லாபங்கள் அதிகரிக்கும்.  
  • அரசியலில் உள்ளவர்களுக்கு திடீர் பதவி, பொறுப்புகளால் பெருமை சேரும். 
  • பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. 
  • யாருக்கும் வாக்குறுதிகள்  தரவேண்டாம். 
  • அரசுப்பணியில் உள்ளோர் புதிய வாய்ப்புகளால் ஆதாயம் கிடைக்கும். 
  • மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும்.  
  • கலைஞர்கள், படைப்பாளிகள் காலம் கனிந்து வாய்ப்புகள் சிறப்பாக அமையும். 
  • உறவுகளிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 
  • வெளியூர், வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்
  • நரம்பு, அடிவயிறு, முதுகு, கால்கள், தொடை, இடுப்பு உபாதைகள் வரலாம்.

உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும் என்றாலும் பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும்.  
  • குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.
  • மனக் குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். 
  • பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும். 
  • எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

திருவோணம்

  • இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். 
  • எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். 
  • வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. 
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். 
  • புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். 
  • குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். 
  • கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.
  • குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். 
  • மற்றவர்கள் ஆலோசனை கேட்டாக இவர்களை நாடி வருவார்கள்.

அவிட்டம் - 1, 2 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். 
  • எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். 
  • புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும்  நல்லபடியாக முடிக்க முடியும் . 
  • புதிய சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும்   திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள்  கிடைக்கும். 
  • பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

பரிகாரம்

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். விநாயகருக்கு அருகம்புல்லை  சாத்தி வழிபட்டால் நல்லது தடை இன்றி நடைபெறும்