Showing posts with label சுவாதி. Show all posts
Showing posts with label சுவாதி. Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - துலாம்

 

துலாம் ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது  எட்டாம் இடத்திற்கு வருகிறார்.துலா ராசியின் விரைய , தனவாக்கு மற்றும் சுக ஸ்தானம் அதாவது ராசிக்கு முறையே பன்னிரண்டு, இரண்டு, நான்காம் இடங்களை  பார்க்கிறார்.

  • இந்த அமைப்பின் காரணமாக உங்கள் முயற்சிகள் பலிதமாகும், வாக்கில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். 

  • எட்டில் குரு மறைவது பொதுவாக எதிர்மறையான விளைவுகளை, தாமதங்களை ஏற்படுத்தினாலும், துலாம் ராசிக்கு குரு மறைவு ஸ்தானத்தில் இருப்பது பல விஷயங்களில் சாதகமான பலன்களைத் தரும். 

  • ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் உண்டு. தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம்

  • அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். 

  • பதவி, ஊதியம் உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரலாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு தடைப்பட்டால் தளரவேண்டாம், அது நன்மைக்கே. 

  • வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். 

  • தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. பெண்கள் திடீர் அதிர்ஷ்டம்  வரும்  

  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிறிய முயற்சி கூட மிக பெரிய அளவுக்கு பலன் தரும். 

  • திருமணத்திற்கு காத்திருக்கும் துலாம் ராசியினருக்கு மிகச் சுலபமாக திருமணம் கைகூடும், காதலிப்பவர்களுக்கு திருமணம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும், குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். 

  • விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ பெறவோ வேண்டாம்.  பிறமொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் தவிருங்கள்.

  • வருமானத்திற்கு குறைவே இல்லை என்றால் கூட தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது. 

  • தொழில் மட்டும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு சில நெருக்கடிகளும் போட்டியும் இருந்தால் கூட, அதனை மிக எளிதாக எதிர்கொள்ளும் சூழலும் ஏற்படும். 

  • கூட்டு தொழில் செய்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

  • தொழில் வேலை விசயங்களில், புதிய முயற்சிக்கு  வெற்றி  கிடைக்கும். யாரேனும் ஒருவர்  உதவிக்கரம் நீட்டுவார். பணியிடத்தில் புரமோசன் கிடைக்கும். 

  • தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். அது தொடர்ச்சியாக இருக்க உழைப்பு மிக முக்கியம். 

  • தேவையற்ற  கடன்களைத் தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்கள் முகஸ்துதி நபர்களை ஒதுக்குவது முக்கியம்.

  • அரசுப்பணியில் உள்ளோர், நிதானமாகச் செயல்படுவது நல்லது. 

  • பணத்தைக் கையாள்வோர் நிதானத்துடன் இருப்பது முக்கியம். 

  • கலைஞர்கள், சினிமாத் துறையினர் வாய்ப்புகள்  வரும். 

  • மாணவர்களுக்கு மதிப்பு உயரும். 

  • இரவில் வெளி இடங்களில் தங்க வேண்டாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். 

  • ஏதேனும் நோய்வாய்ப்பட்டவர்கள் முறையாக மருந்து மாத்திரைகள், மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொண்டு உடல்நலத்தை கவனித்துக் கொள்வது அவசியம். 

  • நரம்பு, எலும்பு, முதுகுத் தண்டுவடம், கண், பற்களில் உபாதை வரலாம். 
 

சித்திரை 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். 

  • நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். ஆனாலும்  பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. 

  • பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம். 

  • தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். 

  • அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். 

  • எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். 

  • மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

சுவாதி


  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.

  •  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும்.  

  • சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது, மனதுக்கு இதமளிக்கும். 

  • பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. சற்று நிதானமாக பேசுவது நன்மை தரும். 

  • பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். 

  • அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும். 

  • நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. 

  • சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்


  • இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். 

  • பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். 

  • தேவையில்லாத பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. 

  • பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வால் அனைவருக்கும்  நன்மைகள் செய்து மனம் மகிழ்சசி  அடையும் 

  • பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை. 

  • சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை. வேலைகள் எளிமையாக தோன்றும். 

  • விருந்து கேளிக்கைகளில் கலந்துகொள்ளும் சுழல் வரும் . நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

பரிகாரம்  

குலதெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். காக்கைக்கு தினமும் சாதம் வைத்து வரவும் நல்லது. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு, சகல நன்மையும் தரும்

ராகு




கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் - ராகு

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

ராகு (Rahu)


ராகு (Rahu)சில குறிப்புகள் :
  1. நட்சத்திரங்கள் : திருவாதிரை, சுவாதி, சதயம்
  2. மொத்த திசை இருப்பு : 18 வருடம்
  3. தானியம் : உளுந்து (உளுத்தம் பருப்பு )
  4. புஷ்பம் : மந்தாரை
  5. நிறம் : கருமை
  6. ஜாதி : சங்கிரம ஜாதி
  7. வடிவம் : உயரமானவர்
  8. உடல் உறுப்பு : தொடை, பாதம், கணுக்கால்
  9. உலோகம் : கருங்கல்
  10. மொழி : அந்நிய மொழிகள்
  11. ரத்தினம் : கோமேதகம்
  12. வஸ்திரம் : சித்திரங்கள் உடைய கருப்பு
  13. தூப தீபம் : கடுகு
  14. வாகனம் : ஆடு
  15. மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 8, 12 ஆகும்
  16. சமித்து : அறுகு
  17. சுவை : கைப்பு
  18. பஞ்பூதம் : ஆகாயகிரகம்
  19. நாடி : பித்த நாடி
  20. திசை: தென்மேற்கு
  21. அதிதேவதை : காளி, துர்க்கை, கருமாரியம்மன்
  22. சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடங்கள்
  23. தன்மை : சரக்கிரகம்
  24. குணம் : தாமஸம் மகரம்
  25. ஆட்சி : கன்னி உச்சம் : ரிஷபம், நீசம் : விருச்சிகம், மூல திரிகோணம் : ரிஷபம்
    (ராகு , கேதுக்கு சொந்த வீடு , உச்ச, நிச்ச வீடுகள் மற்றும் மூல திரிகோணம் கிடையாது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது)
  26. நட்பு வீடுகள்: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம்,மீனம்
  27. பகை வீடுகள்: கடகம், சிம்மம்
  28. பார்வை : 7ம் மடடும்
  29. பலன் தரும் காலம் : பிற்காலம் (பிற்கூற்றில்)
  30. மாத்ருகாரகன் : பிதாமகாகாரகன் ( பிதுர் பாட்டன் வம்சம்)
  31. தத்துவம் : பெண் கிரகம்

12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :

லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் இருந்தால் (Rahu in First house) :

மேலும் படிக்க ...