Showing posts with label ராகு. Show all posts
Showing posts with label ராகு. Show all posts

குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சிகள் - 2025

இந்த வருடம் சனி, குரு, ராகு மற்றும் கேது பெயர்ச்சிகள் நடைபெறும் ஒரு விஷேசமான வருடம் இந்த 2025ம் ஆண்டு என்லாம்.

குரு பெயர்ச்சி என்றால் என்ன??

ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது வழக்கம். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு ராசியில் இருக்கக் கூடிய கால அளவு மாறுபடும்.  குரு கிரகத்தின் கால அளவு 1 வருடம் ஆகும், பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாத சிலரும்  இந்த குரு, சனி மற்றும் ராகு , கேது பெயர்ச்சியின் பலன்களை பார்ப்பது உண்டு.  இது கோசார பலன் ஆகும், 

விதியை மாற்றும் வல்லமை குரு பகவானுக்கு உள்ளது என்பதால் குரு பெயர்ச்சியை அனைத்து ராசிகாரர்களும் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர் எனலாம். 

இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். 

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார். 

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார்.

மிதுன ராசி உபய ராசி ஆகும். அதன் படி குருக்கு புதன் பகை என்பதால் குரு என்பதால் சில உபத்தரவுகளை கொடுப்பார் என்றாலும் கூறவும் புதனும் நட்பு கிரகமே. மேலும் குருவின் பார்வைக்கு பலன் உண்டு  என்பதால் நல்லதும் நடக்கும்.  பொதுவாக குரு ஸ்தான பலன் பெறவில்லை என்றாலும் அவர் பார்வை அனைத்து துன்பங்களையும் போக்கும் என்று சொல்லப்படுகிறது.

எல்லா கிரகங்களுக்கும் பார்வைகள் உண்டு , அதாவது பொதுவாக எல்லா கிரகமும் 7ம் பார்வையாக 7ம் வீட்டில் பார்ப்பார்கள். ஆனால் சனிக்கும், குருவுக்கும் விசேஷ பார்வைகள் உண்டு.  

குரு தன் இருக்கும் வீட்டிலிருந்து 5,7,9ம் வீடுகளை பார்பார். 5 , 9ம் பார்வைகள் குருவின் விஷேச பார்வைகள் ஆகும், சரி, ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு செல்லும் குரு தனது 5,7,9ம் பார்வையாக துலாம், தனுசு, மற்றும் கும்பத்தை பார்க்க உள்ளார்.  "குரு பார்க்க கோடி புண்ணியம்" என்பார்கள். எனவே இந்த முன்று ராசிக்கும் நல்லது என்று தான் சொல்ல வேண்டும். 

மேலும் மறைவு  ஸ்தானம் ஆன எட்டு, 12ம் வீட்டில் இருந்து,, ஸ்தான பலன் கெட்டாலும் பார்வை படும் ஸ்தனங்களால் நல்லவை நடக்கும்.  பொதுவாக குரு 5,7,9 ஆம் வீடுகளில் இருப்பது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. 

ராகு , கேது பெயர்ச்சி என்றால் என்ன??

ராகு மற்றும் கேதுவை நிழல் கிரகங்கள் (shadow planets) என்று அழைப்பார்கள். இவை உண்மையில் கிரகங்கள் அல்ல, மாறாக, சூரியன் மற்றும் சந்திரனின் பாதையில் கிரகணம் ஏற்படும்போது உருவாகும் நிழல் புள்ளிகள் ஆகும். 

ராகு, கேது பெயர்ச்சி, பொதுவாக ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும்.அதாவது ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும்.

வேத ஜோதிடத்தில், ராகு,,கேதுவுக்கு எந்த ராசியும் ஒதுக்கப்படவில்லை.  எனவே அவர்கள் எந்த ராசிக்கும் அதிபதி அல்ல. எந்த ராசியில் ராகு, கேது இருக்கிறார்களோ அந்த ராசி தான் இவர்களின் வீடு ஆகும். 

ராகு, கேது பகை வீடு என்றால் சிம்மம் ஆகும்.  சில ஜோதிட புத்தகத்தில் சற்று மாறுபட்டு சொன்னாலும் சிம்மம் ராகு கேதுக்கு பகை வீடு என்பது அனைவரும்  சொல்லும் பொது கருத்து ஆகும்.  ராகு ராசியில் இருந்தால் ஏலாம் வீட்டில் கேது இருப்பார்.  சரியான  எதிரில் இருப்பார்கள்.  

பொதுவாக ராகு மற்றும் கேது கிரகம்  மூன்று, ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டில் இருந்தால் நல்ல பலன்களைத் தரும் என்று சொல்லப்படுகிறது.  அதே போல் ராசிக்கு  1, 2,7,எட்டாம் வீட்டில் இருப்பது நல்லது அல்ல என்றும் சொல்லப்பட்டு உள்ளது.  ராகு, கேதுக்கு பார்வைகள் கிடையாது .  என்றாலும் சில ஜோதிட நூல்களில் ராகு செவ்வாய் போலும், கேது சனியை போலும் பார்ப்பார்கள் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.,  மேலும் சில ஜோதிட நூல்களில் ராகு மற்றும் கேதுக்கும் விசேஷ பார்வைகள் உண்டு என்று சொல்வார்கள்.    

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 

குரு, ராகு மற்றும் கேது பெயர்ச்சி உங்கள் ராசியை என்ன செய்ய உள்ளது என்பதை பாப்போம்


ராகு




கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் - ராகு

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

ராகு (Rahu)


ராகு (Rahu)சில குறிப்புகள் :
  1. நட்சத்திரங்கள் : திருவாதிரை, சுவாதி, சதயம்
  2. மொத்த திசை இருப்பு : 18 வருடம்
  3. தானியம் : உளுந்து (உளுத்தம் பருப்பு )
  4. புஷ்பம் : மந்தாரை
  5. நிறம் : கருமை
  6. ஜாதி : சங்கிரம ஜாதி
  7. வடிவம் : உயரமானவர்
  8. உடல் உறுப்பு : தொடை, பாதம், கணுக்கால்
  9. உலோகம் : கருங்கல்
  10. மொழி : அந்நிய மொழிகள்
  11. ரத்தினம் : கோமேதகம்
  12. வஸ்திரம் : சித்திரங்கள் உடைய கருப்பு
  13. தூப தீபம் : கடுகு
  14. வாகனம் : ஆடு
  15. மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 8, 12 ஆகும்
  16. சமித்து : அறுகு
  17. சுவை : கைப்பு
  18. பஞ்பூதம் : ஆகாயகிரகம்
  19. நாடி : பித்த நாடி
  20. திசை: தென்மேற்கு
  21. அதிதேவதை : காளி, துர்க்கை, கருமாரியம்மன்
  22. சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடங்கள்
  23. தன்மை : சரக்கிரகம்
  24. குணம் : தாமஸம் மகரம்
  25. ஆட்சி : கன்னி உச்சம் : ரிஷபம், நீசம் : விருச்சிகம், மூல திரிகோணம் : ரிஷபம்
    (ராகு , கேதுக்கு சொந்த வீடு , உச்ச, நிச்ச வீடுகள் மற்றும் மூல திரிகோணம் கிடையாது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது)
  26. நட்பு வீடுகள்: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம்,மீனம்
  27. பகை வீடுகள்: கடகம், சிம்மம்
  28. பார்வை : 7ம் மடடும்
  29. பலன் தரும் காலம் : பிற்காலம் (பிற்கூற்றில்)
  30. மாத்ருகாரகன் : பிதாமகாகாரகன் ( பிதுர் பாட்டன் வம்சம்)
  31. தத்துவம் : பெண் கிரகம்

12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :

லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் இருந்தால் (Rahu in First house) :

மேலும் படிக்க ...