விருச்சிக ராசி குரு பெயர்ச்சி
பொது பலன்கள் 2024-25
- இந்த பெயர்ச்சியில் குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது ஏழாம் இடத்திற்கு வருகிறார்.
- அவரது 5, 7, 9ம் பார்வைகள் ராசிக்கு முறையே பதினொன்று,ராசி மற்றும் மூன்றாம் இடங்களை பார்க்கிறார்.
- இது லாபத்தை அதிகரிக்கச் செய்யும், சகோதர வழியில் ஆதாயத்தை ஏற்படுத்தும்.
- பணியிடத்தில் பெருமை உயரும். மேலதிகாரிகள் ஆதரவினால் பதவி,ஊதியம் உயர வாய்ப்பு உண்டு. மிகச்சிறிய முயற்சி கூட மிகப் பெரிய அளவுக்கு வெற்றி கிடைக்கும்
- உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும்.
- புதிய பணிவாய்ப்பு எதிர்ப்பார்ப்பு போல் கூடிவரும்.
- அயல்நாட்டுப் பயண வாய்ப்பு சிலருக்கு உண்டு. பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் ஆதாயம் தரும்.
- இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும்.
- இளம்வயதினரின் பலகால கனவுகள் ஈடேறும். ஆடை, ஆபரணம், சொத்து சேரும்.
- எல்லா விதங்களிலும் வளர்ச்சியை, விரும்பும் மாற்றத்தை, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உயர்வும் இந்த பெயர்ச்சி கொடுக்கும்.
- தொழிலில் லாபம் சீராக வரத்தொடங்கும். அயல்நாட்டு வர்த்தகம் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் ஏற்பட்டால் கூட அவ்வபோது சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
- அரசியலில் இருப்பவர்களுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் உண்டு. சிலருக்கு புதிய பதவி, பொறுப்புகளால் பெருமை உண்டாகும்.
- அரசுப்பணி செய்பவர்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கிடும்.
- பெண்களுக்கு பணவரவு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும்.வாரிசுகளால் பெருமை உண்டு.
- எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள், சேமிப்புகளும் அதிகரிக்கும்.
- மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம்.
- கலை, படைப்புத் துறையினர் முயற்சிகளால் முன்னேறலாம். பழைய உறவுகளை உதாசீனப்படுத்த வேண்டாம். வாகனம் ஓட்டுவோர்க்கு போதுமான ஓய்வு முக்கியம்.
- மூன்றாம் நபரை குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம்
- யாருடைய கட்டாயத்திற்காகவும் தெரியாத தொழிலில் முதலீடு செய்யவேண்டாம்.
- உடல்நலத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். ஆனாலும் தலைவலி, கண்கள், பாதம், இடுப்பு, மூட்டு, உணவு செரியாமை உபாதைகள் வரலாம்.
விசாகம் 4 பாதம்
- இந்த குரு பெயர்ச்சியால் வாழ்வு வளம் பெறும்.
- துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவார்கள். நியாயமாகவும், நேர்மையாகவும எல்லா காரியங்களையும் செய்து முடிப்பார்கள்.
- வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும்.
- மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும்.
- ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்திதெளிவு உண்டாகும்.
- தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும்.
அனுஷம்
- இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும்.
- கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
- உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
- பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பார்கள்.
- விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும்.
- ஆன்மிக நாட்டம் ஏற்படும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும்.
- எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம்.
- திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கேட்டை
- இந்த குரு பெயர்ச்சியால் பூமி சம்பந்தமான துறையினருக்கு லாபம் உண்டாகும்.
- விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள்.
- ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும்.
- மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பார்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.
- புதிய பொறுப்புகளையும் பெறுவார்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
- கவனமாக பேசுவது அவசியம். எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சினைகளை உண்டாக்கலாம். கவனம் தேவை
பரிகாரம்
துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். மேலும் வீட்டு அருகில் இருக்கும் அம்மன் கோயிலில் அம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, வணங்கி வர தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்
.